Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
neelam productions – Touring Talkies https://touringtalkies.co Sat, 01 Jan 2022 07:31:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png neelam productions – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரைட்டர் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/writer-movie-review/ Thu, 30 Dec 2021 09:24:16 +0000 https://touringtalkies.co/?p=20003 தொடர்ந்து மானுட விடுதலையைப் பேசும் படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ‘ரைட்டர்’. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ப்ராங்க்ளின் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். தனது உதவியாளர்கள் படம் செய்வதற்கான முழுத் தகுதியோடு இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரஞ்சித் தயங்குவதே இல்லை. அந்த வகையில் அவருக்கு ஒரு நீல வணக்கம். ரைட்டரின் கதை என்ன? காவல் துறையில் எழுத்தர் பணி என்பது மிக முக்கியமான […]

The post ரைட்டர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
தொடர்ந்து மானுட விடுதலையைப் பேசும் படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ‘ரைட்டர்’.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ப்ராங்க்ளின் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனது உதவியாளர்கள் படம் செய்வதற்கான முழுத் தகுதியோடு இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரஞ்சித் தயங்குவதே இல்லை. அந்த வகையில் அவருக்கு ஒரு நீல வணக்கம்.

ரைட்டரின் கதை என்ன?

காவல் துறையில் எழுத்தர் பணி என்பது மிக முக்கியமான பணி. அந்தப் பணியை மிக நேர்மையாக செய்து வருகிறார் திருச்சி அருகேயிருக்கும் திருவெறும்பூர் காவல் நிலைய எழுத்தரான சமுத்திரக்கனி. அவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவியோடு காலந்தள்ளுவதே இந்தக் காலத்தில் குதிரைக் கொம்பு. இரு மனைவிகள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? ஆனால் சமுத்திரக்கனி எமோஷ்னலாக இருவரிடம் பாசக்காரராக இருக்கிறார்.

காவல் துறைக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு யூனியன் வேண்டும் என்பது சமுத்திரக்கனியின் கனவு.  அதற்காக அவர் சலிப்பின்றி கோர்ட் வாசல் ஏறுகிறார். ஆனால் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட்டிற்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. போஸ் வெங்கட் சமுத்திரக்கனியை சென்னையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு டிரான்ஸ்பர் செய்து விடுகிறார்.

சென்னையில் பணியில் சேர வரும் சமுத்திரக்கனிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஒரு லாட்ஜில் ஒரு இளைஞனை அடைத்து வைத்து அங்கு கனியை காவல் இருக்கச் சொல்கிறார்கள். அந்த இளைஞன் மீது எந்தத் தவறும் இல்லை என்று சமுத்திரக்கனிக்கு தெரிய வருவது.

மேலும், அந்த இளைஞன் வசமாக காவல்துறை வைத்த பொறியில் சிக்க சமுத்திரக்கனியும் ஒரு காரணமாக இருக்கிறார்.   அந்த குற்றவுணர்ச்சி அவரைத் துன்புறுத்த  இளைஞனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார். அவர் முயற்சி பலித்ததா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

போலீஸ் ஸ்டேசன் ரைட்டராக சமுத்திரக்கனி கதைக்கேற்றபடி தன் உடலையும், உடல் மொழியையும் மாற்றியிருக்கிறார். அவர் நடிப்பில் சின்ன மெனக்கெடல் தெரிகிறது.

அப்பாவி இளைஞனாக வரும் ஹரி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மெட்ராஸ்’ படத்தில் ஜானியாக நடித்தவர்தான் இந்த ஹரி. தொடர்ந்து இவர் கவனம் ஈர்த்து வருகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமான கேரக்டர்  சுப்பிரமணிய சிவா. ஹரியின் அண்ணனாக அப்பாவி கிறிஸ்துவனாக வாழ்ந்திருக்கிறார். மிக தேர்ந்த நடிப்பு அவருடையது. படத்தில் சில காட்சிகளில் பார்வையாளர்களுக்கு கண்ணீர் பொங்கும் என்றால் அதற்கு காரணம் சுப்பிரமணிய சிவாவின் நடிப்புதான். இனிய சில காட்சிகள் என்றாலும் நல்ல நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வடமாநில காவல் உயரதிகாரியாக நடித்தவர் மிரட்டி இருக்கிறார். அதேபோல் கவிதா பாரதி கேரக்டரும் அருமை.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பராவாயில்லை. சின்ன பட்ஜெட் என்ற தாக்கம் எங்கும் தெரியாத வகையில் கேமராமேன் ஷாட்களை அமைத்துள்ளார்.

முன் பாதியில் படம் சற்று மெதுவாக மூவ் ஆவது சின்ன மைனஸ். பின் பாதியில் படம் சரசரவென பறக்கிறது. முக்கியமாக காவல் துறையில் நடக்கும் தீண்டாமையை கண் முன்னே கொண்டு வந்த வகையில் இந்த ‘ரைட்டர்’ ஈர்க்கிறார்.

RATING : 4 / 5

The post ரைட்டர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
அடுத்தப் பரபரப்பை உருவாக்கப் போகிறது பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ திரைப்படம் https://touringtalkies.co/writer-movie-release-on-december-24/ Thu, 09 Dec 2021 06:41:39 +0000 https://touringtalkies.co/?p=19733 இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது ‘ரைட்டர்’ திரைப்படத்தின் டீசர். இப்படத்தை ‘லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்’ மற்றும் ‘கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தில் இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தை […]

The post அடுத்தப் பரபரப்பை உருவாக்கப் போகிறது பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது ‘ரைட்டர்’ திரைப்படத்தின் டீசர்.

இப்படத்தை லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ்’ மற்றும் ‘கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தில் இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவரிக்கும்விதமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.

The post அடுத்தப் பரபரப்பை உருவாக்கப் போகிறது பா.ரஞ்சித்தின் ‘ரைட்டர்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ படத்தின் டீஸர் https://touringtalkies.co/kuthirai-vaal-movie-teaser/ Fri, 23 Oct 2020 10:46:51 +0000 https://touringtalkies.co/?p=9161 The post கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>

The post கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>