Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
nadigar thilagam sivaji ganesan – Touring Talkies https://touringtalkies.co Mon, 19 Apr 2021 11:44:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png nadigar thilagam sivaji ganesan – Touring Talkies https://touringtalkies.co 32 32 பத்மினியின் திருமணத்தில் கலந்து கொள்ளாத கதாநாயகன் https://touringtalkies.co/the-leading-hero-who-did-not-attend-his-co-star-heroine-padminis-wedding/ Mon, 19 Apr 2021 11:43:12 +0000 https://touringtalkies.co/?p=14499 தமிழ்ச் சினிமா வரலாறு – 42 பிரபல படத் தயாரிப்பாளரும் கண்ணதாசனின் மூத்த சகோதரருமான      ஏ.எல்.சீனிவாசன், கலைவாணர் என்.எஸ்..கிருஷ்ணனுடன் இணைந்து தயாரித்த படம் ‘பணம்’. சிவாஜி அறிமுகமான படமான ‘பராசக்தி’  படம் படப்பிடிப்பில் இருந்தபோதே ‘பணம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.  சிவாஜி கணேசனுடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பத்மினி, சிவாஜியுடன்  ஜோடி சேர்ந்த முதல் படம்  ‘பணம்’தான். அதற்கு முன்னரே ‘மணமகள்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார் பத்மினி. […]

The post பத்மினியின் திருமணத்தில் கலந்து கொள்ளாத கதாநாயகன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்ச் சினிமா வரலாறு – 42

பிரபல படத் தயாரிப்பாளரும் கண்ணதாசனின் மூத்த சகோதரருமான      ஏ.எல்.சீனிவாசன், கலைவாணர் என்.எஸ்..கிருஷ்ணனுடன் இணைந்து தயாரித்த படம் ‘பணம்’.

சிவாஜி அறிமுகமான படமான ‘பராசக்தி’  படம் படப்பிடிப்பில் இருந்தபோதே ‘பணம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். 

சிவாஜி கணேசனுடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பத்மினி, சிவாஜியுடன்  ஜோடி சேர்ந்த முதல் படம்  ‘பணம்’தான். அதற்கு முன்னரே ‘மணமகள்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார் பத்மினி.

‘பணம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலே பத்மினியை சந்தித்தபோது, “உங்கள் படங்கள் எல்லாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன். ‘மணமகள்’ திரைப்படத்தில் உங்கள் நடிப்பு ரொம்பவும் பிரமாதமாக இருந்தது. உங்களை மாதிரி நடிகைகளோடு எல்லாம் சேர்ந்து நடிப்பேன் என்று நான் கனவுகூட கண்டதில்லை…” என்றார் சிவாஜி.

சிவாஜியின் அந்த பாராட்டுக்ககளை சிரித்தபடியே ஏற்றுக் கொண்ட பத்மினி, “கணேஷ், இப்போது சினிமா உலகில் இளம் கதாநாயகர்களே இல்லை. அந்தக் குறையைப் போக்கும்விதத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களது முதல் படமான ‘பராசக்தி’ பற்றி இப்போதே எல்லோரும் பரபரப்பாக பேசுகிறார்கள். அதனால் எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பெரிய நடிகராக நிச்சயம் புகழ் பெறுவீர்கள்…” என்று அவரைப் பாராட்டினார்.

அப்படி அறிமுகமான அந்த சிவாஜி கணேசன்-பத்மினி ஜோடிதான் பின்னர்  திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு ஜோடியாக அமைந்தது.

‘பணம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் சிவாஜியின் திருமணம் நிச்சயம் ஆனது. சுவாமி மலையில் நடைபெற்ற அந்த  திருமணத்திற்கு முதல் நாள் ‘பணம்’ படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சி சிவாஜி-பத்மினி ஆகிய இருவரின் திருமணக் காட்சி.

அந்தத் திருமணம் நடைபெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பத்மினியின்  திருமணமும் அவர் சிவாஜியுடன் நடித்துக் கொண்டிருந்த ‘செந்தாமரை’ படத்தின் படப்பிடிப்பின்போதுதான் நடைபெற்றது.

‘செந்தாமரை’ படம் முடிவடைய பத்மினி மற்றும் அவரது சகோதரி லலிதா ஆகியோரின் திருமணங்கள் ஒரு வகையில் காரணமாக அமைந்தன என்றுகூட சொல்லலாம்.

ஏ.எல்.சீனிவாசனை மிகவும் கவர்ந்த இயக்குநர்களில் ஏ.பீம்சிங்கும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் இயக்கத்திலே சிவாஜி கணேசன், பத்மினி ஜோடியாக நடித்த ‘பணம்’ படத்தைத் தயாரித்த அவர் அந்த படத்தைத் தயாரிக்கும்போதே  பீம்சிங்  இயக்கத்திலே ஒரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால்  என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், பீம்சிங்குக்கும் அப்போது கருத்து வேறுபாடு இருந்ததால் ஏ.எல். சீனிவாசனால் உடனடியாக அதைச் செயல்படுத்த முடியவில்லை.

ஆகவே ‘பணம்’ படம் வெளியான பின்னர் பீம்சிங் இயக்கத்திலே ‘செந்தாமரை’ என்ற படத்தைத் தொடங்கினார் அவர்.

சிவாஜிகணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய  மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிக்க லலிதா, பத்மினி. ராகினி ஆகிய  திருவாங்கூர் சகோதரிகள் மூவரும் நடித்த அந்தப் படத்தில் சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு, பி.ஆர்.பந்துலு என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் இடம் பெற்றிருந்தது.

அந்தப் படத்தை ஆரம்பித்தபோது  பல வருட காலம் அந்தப் படம் தயாரிப்பில் இருக்கப் போகிறது என்று யாருக்குமே தெரியாது.

அந்தப் படத்தில் கதாநாயகிகளாக நடித்த லலிதா, பத்மினி ஆகிய இருவருக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடைவடைதற்கு முன்பே  திருமணம் நடந்துவிட்டது. அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகாமல் இருந்திருந்தால் அந்தப் படம் வெளிவர  இன்னும்கூட தாமதமாகியிருக்கக் கூடும்.

1957-ம் ஆண்டு ஜனவரி 23-ம்தேதி அன்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த லலிதா அதற்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துவிடவே  ‘செந்தாமரை’ படத்திலே  லலிதா சம்பந்தப்பட்டிருந்த  காட்சிகளை எல்லாம் அவசரம் அவசரமாக படமாக்கி முடித்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஏ.எல்.சீனிவாசன்.

அதற்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பிலே தேக்கம் ஏற்பட்டது. ஏறக்குறைய நான்காண்டுகள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு  நடைபெறாமல் இருந்த சூழ்நிலையில் அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த பத்மினிக்கும், டாக்டர் ராமச்சந்திரனுக்கும் திருமணம் நிச்சயமானது.

1961-ம் ஆண்டு மே மாதம்  25-ம் தேதி அவர்களது திருமணத்தை நடத்த பத்மினியின் தாயார் முடிவு செய்தார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று முடிவெடுத்த பத்மினி அப்போது தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்புகளை எல்லாம் அவசரம் அவசரமாக முடித்தார்.

இனி பத்மினி நடிக்க மாட்டார் என்பது தெரிந்ததும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடிப்பதற்காக மீண்டும் ‘செந்தாமரை’ படத்தின் படப்பிடிப்பு  அவசரமாக தொடங்கியது.

திருமணத்திற்கு முன்னர்  பல படங்களில் நடித்து முடிக்க வேண்டியிருந்ததால் வேறு வழியில்லாமல் இரவு பகலாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்  பத்மினி.

இருபத்தி ஐந்தாம் தேதி நடக்கவிருந்த திருமணத்திற்காக இருபத்தி நான்காம் தேதி விமானம் மூலம் கொச்சி புறப்பட்ட பத்மினி அன்று விடியற்காலைவரை  ‘செந்தாமரை’ படத்தின் படப்பிடிப்பில் சிவாஜியோடு கலந்து கொண்டார்.

காலை 10-40 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொச்சிக்குப் புறப்பட்ட பத்மினியை வழியனுப்ப சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 25 ஆயிரம் பேருக்கு மேல் கூடியிருந்தனர். விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு, பூரண கும்பத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. டைரக்டர் கே.சுப்பிரமணியம் ஏற்பாடு செய்திருந்த பல நாதசுரக் கலைஞர்கள் நாதசுரம் வாசிக்க நூற்றுக்கணக்கான பெண்கள்  பத்மினிக்கு ஆரத்தி எடுத்தனர். மாலைகள் வந்து குவிந்தன.

விமான நிலையத்தில் கூடியிருந்த கூட்டத்தையும், தன் மீது ரசிகர்கள் கொண்டிருந்த அன்பையும் கண்ட பத்மினி, நெகிழ்ந்து போய் கண் கலங்கினார். கை கூப்பி வணங்கி, ‘போய் வருகிறேன்’ என்றார். பேச முடியாமல் அவரது நா தழுதழுத்தது. அவரது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக்  கொட்டியது. கண்களைத் துடைத்துக் கொண்டு. கை அசைத்தபடி  ரசிகர்களிடம் விடைபெற்றுக் கொண்டு  விமானத்தில் ஏறினார் பத்மினி.

குருவாயூரில் நடைபெற்ற அவரது திருமணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கே குவிந்தனர்.

திருமணத்தைத் தொடர்ந்து பத்மினி-ராமச்சந்திரன் தம்பதிகளின் திருமண வரவேற்பு சென்னை அண்ணா சாலையில் இப்போது ஹயாத் ஹோட்டல் இருக்கும்  இடத்தில் அப்போது அமைந்திருந்த ஆபட்ஸ்பரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மூதறிஞர் ராஜாஜி, இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த அந்தத் திருமண வரவேற்பில் பத்மினிக்கு வாழ்த்து தெரிவிக்க மொத்தத் திரையுலகமும் குவிந்தது.. முக்கியமான ஒரு கதாநாயகனைத் தவிர.

அந்தக் கதாநாயகன் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன்தான்…!

The post பத்மினியின் திருமணத்தில் கலந்து கொள்ளாத கதாநாயகன் appeared first on Touring Talkies.

]]>