Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
music release – Touring Talkies https://touringtalkies.co Tue, 19 Sep 2023 02:11:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png music release – Touring Talkies https://touringtalkies.co 32 32 லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா!    ரசிகர்களுக்கு கட்டுப்பாடு! https://touringtalkies.co/music-release-of-leo-movie-will-be-held-on-30th-restrictions-imposed-on-fans/ Tue, 19 Sep 2023 02:11:12 +0000 https://touringtalkies.co/?p=36363 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் […]

The post லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா!    ரசிகர்களுக்கு கட்டுப்பாடு! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஜய் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகள் மாவட்டத்திற்கு 200 பேர் அழைக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சொந்த வாகனங்களில் ரசிகர்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா அரங்கின் வெளியே பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதி பெற்று பேனர் வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா!    ரசிகர்களுக்கு கட்டுப்பாடு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதி அறிவிப்பு https://touringtalkies.co/actor-vijay-starrer-leo-music-release-date-announced/ Thu, 24 Aug 2023 03:51:54 +0000 https://touringtalkies.co/?p=35605 மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். அவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் […]

The post விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார்.

அவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி டிரண்டிங்கில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ‘லியோ’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 23-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பிரபலங்கள், ரசிகர்கள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் அடுத்தவாரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 1,500 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சி தொடங்குவது மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விஜய் நடிக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
சிம்பு படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு https://touringtalkies.co/simbu-movie-music-release-date-announcement/ Wed, 15 Mar 2023 23:30:23 +0000 https://touringtalkies.co/?p=30644 சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. […]

The post சிம்பு படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18ம் தேதி மாலை 5மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

The post சிம்பு படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>