Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
music director amresh – Touring Talkies https://touringtalkies.co Tue, 19 Jan 2021 06:42:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png music director amresh – Touring Talkies https://touringtalkies.co 32 32 “இனிமேல் கரெக்ட் டயத்துக்கு வருவேன்…”- இசையமைப்பாளர் அம்ரிஷின் பேச்சு..! https://touringtalkies.co/i-will-come-to-the-correct-time-from-now-on-composer-amrishs-speech/ Tue, 19 Jan 2021 06:40:41 +0000 https://touringtalkies.co/?p=12256 ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, இயக்குநர் மஸ்தான், நாயகன், நாயகி, ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளி ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொள்ள […]

The post “இனிமேல் கரெக்ட் டயத்துக்கு வருவேன்…”- இசையமைப்பாளர் அம்ரிஷின் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, இயக்குநர் மஸ்தான், நாயகன், நாயகி, ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளி ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த பிரபல இசையமைப்பாளரான அம்ரிஷ் நிகழ்ச்சி துவங்கிய பிறகு கடைசியாக வந்து சேர்ந்தார்.

இதைத் தன் பேச்சில் குறிப்பிட்டுப் பேசிய அம்ரிஷ் “தான் இனிமேல் சீக்கிரமாக பட விழாக்களுக்கு வருவேன்…” என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி பேசும்போது, “தயாரிப்பாளர் இப்படத்தை தன்னுடைய சொந்த செலவில் வெளியிடவுள்ளார். ஆர்.வி.உதயகுமார் கூறியதுபோல சங்கத்தில் இருப்பவர்கள் இங்கு இருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு இப்படத்தை வெளியிட சங்கம் உதவி செய்யும்…” என்றார்.

நடிகரும், இயக்குநருமான ‘போஸ்‘ வெங்கட் பேசும்போது, “விருதுகள் பல பெற்றும், சிறந்த விமர்சனங்களைப் பெற்றும் நான் இயக்கிய ‘கன்னி மாடம்’ திரைப்படம் ஏன் வெற்றியடையவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. அதை நினைத்தால் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சிறிய படங்களுக்கு ஆதரவு தருவோம் என்று சொல்வதைவிட செயலில் காட்டினால்தான் அப்படம் வெற்றியடையும்…” என்றார்.

இசையாமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது, “கடந்த வருடம் எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்தது. நிறைய இழப்புகளை சந்தித்திருப்போம். நான் எனது தந்தையை இழந்தேன். மாஸ்டர்’ திரையரங்குகளில் நுழைந்ததும் கொரோனா வெளியே சென்றுவிட்டது.

ஒரு படம், இரண்டு படம் இசையமைத்துவிட்டாலே நாங்கள் தாமதமாக வருவோம். ஆனால், மலையாளத்தில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்துவிட்டு மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கும் இசையமைப்பாளர் வி.தஷியை வாழ்த்துகிறேன். அவரை நான் இனிமேல் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன்…” என்றார்.

The post “இனிமேல் கரெக்ட் டயத்துக்கு வருவேன்…”- இசையமைப்பாளர் அம்ரிஷின் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>