Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Murali Ramasamy – Touring Talkies https://touringtalkies.co Wed, 07 Sep 2022 16:24:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Murali Ramasamy – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை https://touringtalkies.co/demand-for-tax-exemption-for-the-movie-ponniyien-selvan/ Wed, 07 Sep 2022 16:23:36 +0000 https://touringtalkies.co/?p=24383 ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தென்னிந்திய  திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசும்போது, “இந்தப் ‘பொன்னியின் செல்வன்’ படம் மிக அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி. […]

The post ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தென்னிந்திய  திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசும்போது, “இந்தப் ‘பொன்னியின் செல்வன்’ படம் மிக அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி. இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

நமது வரலாற்றை, மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். இப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.

The post ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கும்படி கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
VPF கட்டணம் 3000 ரூபாயாகக் குறைப்பு – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி தகவல்..! https://touringtalkies.co/vpf-fees-reduced-to-3000-rupees-for-screening-in-theatres/ Fri, 01 Jan 2021 09:01:21 +0000 https://touringtalkies.co/?p=11639 புதிய திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட வசூலிக்கப்படும் திரையிடல் கட்டணம் 3000 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னையில் நடைபெற்ற ‘மாயத்திரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார். அவர் பேசும்போது, “இதுநாள்வரையிலும் தமிழக அரசின் பொறுப்பில் இருந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நி்ர்வாகம் நேற்றைக்குத்தான் முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாங்களும் நேற்றுதான் அனைத்துப் பொறுப்புக்களையும் பெற்றுக் கொண்டோம். இப்படி முறைப்படியான பொறுப்புக்கு […]

The post VPF கட்டணம் 3000 ரூபாயாகக் குறைப்பு – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி தகவல்..! appeared first on Touring Talkies.

]]>
புதிய திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட வசூலிக்கப்படும் திரையிடல் கட்டணம் 3000 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி தெரிவித்துள்ளார்.

இன்று காலை சென்னையில் நடைபெற்ற ‘மாயத்திரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் பேசும்போது, “இதுநாள்வரையிலும் தமிழக அரசின் பொறுப்பில் இருந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நி்ர்வாகம் நேற்றைக்குத்தான் முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாங்களும் நேற்றுதான் அனைத்துப் பொறுப்புக்களையும் பெற்றுக் கொண்டோம்.

இப்படி முறைப்படியான பொறுப்புக்கு வந்த பிறகு நாங்கள் கலந்து கொள்ளும் முதல் திரைப்பட நிகழ்ச்சி இதுதான்.

இந்த வாரத்தில் வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக கியூப் நிறுவனத்துடன் பல கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அதன் விளைவாக தற்போது தியேட்டர்களில் படத்தை வெளியிட ஆகும் திரையிடல் கட்டணம் மூவாயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது எங்களது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவுதான். விரைவில் முழுமையாக இந்தக் கட்டணத்தில் இருந்து விடுபடுவதற்கான வேலைகளை சங்கம் செய்யும்..” என்றார்.

The post VPF கட்டணம் 3000 ரூபாயாகக் குறைப்பு – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி தகவல்..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! https://touringtalkies.co/tfpc-election-2020-result/ Mon, 23 Nov 2020 06:11:40 +0000 https://touringtalkies.co/?p=10310 நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் : மொத்தம் பதிவான வாக்குகள்-1050 ராமசாமி @முரளி-557 டி.ராஜேந்தர்-388 தேனப்பன்-88 செல்லாதவை-17 துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வாக்குகள் விபரம் […]

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! appeared first on Touring Talkies.

]]>
நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் :

மொத்தம் பதிவான வாக்குகள்-1050

ராமசாமி @முரளி-557

டி.ராஜேந்தர்-388

தேனப்பன்-88

செல்லாதவை-17

துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்குகள் விபரம் :

கதிரேசன் – 493

R.K.சுரேஷ் – 419

P.T.செல்வகுமார் – 305

பாண்டியன் – 277

சிங்காரவேலன் – 193

முருகன் – 110

மதியழகன் – 50

பொருளாளர் பதவிக்கான தேர்தலில் சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விபரம் :

சந்திர பிரகாஷ் ஜெயின் – 407

K.ராஜன் — 382

J.S.K சதீஷ்குமார் – 233

கெளரவ செயலாளர் பதவிக்கான தேர்தலில் ராதாகிருஷ்ணனும், மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர்.

துணைத் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற கதிரேசன், சுயேட்சையாக போட்டியிட்டவர்.

கெளரவ செயலாளர்களில் ஒருவராக வெற்றி பெற்ற மன்னன், டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட்டவர்.

மற்றைய வெற்றியாளர்கள் அனைவரும் முரளி அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்

1) ஆர்.வி.உதயகுமார் – 598

2) அழகன் தமிழ்மணி – 470

3) மனோபாலா – 431

4) கே.பி.பிலிம்ஸ் பாலு – 425

5) மனோஜ்குமார் – 420

6) ஷக்தி சிதம்பரம் – 419

7) செளந்தரபாண்டியன் – 414

8) ஆர்.மாதேஷ் – 397

9) விஜயமுரளி – 396

10) ஏ.எல்.உதயா – 394

11) பைஜா டோம் – 366

12) டேவிட் ராஜ் – 352

13) பாபு கணேஷ் – 343

14) ராஜேஸ்வரி வேந்தன் – 341

15) ஏ.எம்.ரத்னம் – 339

16) அன்பாலயா கே.பிரபாகரன் – 326

17) K.K.ராஜ்சிற்பி – 326

18) வி.பழனிவேல் – 310

19) எஸ்.ராமச்சந்திரன் – 308

20) பிரைமுஸ்தாஸ் – 297

21) வீ.சரவணன் – 283

இவர்களில்,

1. அழகன் தமிழ் மணி (EC-7)
2. K.பாலு (EC-11)
3. G.M.டேவிட் ராஜ் (EC-15)
4. R. மாதேஷ் (EC-32)
5. பழனிவேல் (EC-40)
6. ராஜேஸ்வரி வேந்தன் (EC-53)
7. K.K.ராஜ்சிற்பி (EC-55)
8. S.ராமசந்திரன் (EC-57)
9. S.சௌந்தரபாண்டியன் (EC-74)
10. N.விஜயமுரளி (EC-89)
11. A.L.உதயா (EC-92)
12. R.V.உதயகுமார் (EC-93) – ஆகிய 12 பேர் முரளியின் ‘தயாரிப்பாளரின் நலன் காக்கும் அணி’யைச் சேர்ந்தவர்கள்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் முரளி அணியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

The post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! https://touringtalkies.co/tamil-film-producers-council-election-2020-news/ Sat, 24 Oct 2020 11:19:52 +0000 https://touringtalkies.co/?p=9225 அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு. ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது […]

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.

ஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ  செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.

“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.

விநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.

ஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.

பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.

எனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.

The post தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..! appeared first on Touring Talkies.

]]>