Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
michael royappan – Touring Talkies https://touringtalkies.co Thu, 26 Aug 2021 06:28:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png michael royappan – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிம்பு-மைக்கேல் ராயப்பன் பிரச்சினை முடிவுக்கு வந்தது..! https://touringtalkies.co/simbu-michael-royappan-issue-solved-in-tfpc/ Thu, 26 Aug 2021 06:27:40 +0000 https://touringtalkies.co/?p=17335 நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த மறைமுகத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கோரி பல வருடங்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை காரணமாகத்தான் சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பிற்கு பிரச்சினை எழுந்தது. பெப்சி […]

The post சிம்பு-மைக்கேல் ராயப்பன் பிரச்சினை முடிவுக்கு வந்தது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த மறைமுகத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கோரி பல வருடங்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தப் பிரச்சினை காரணமாகத்தான் சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பிற்கு பிரச்சினை எழுந்தது. பெப்சி முதலில் அனுமதி மறுத்துவிட்டு பின்பு அனுமதி கொடுக்க.. பெப்சிக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் பெரும் பிரச்சினை எழுந்தது.

இதற்கடுத்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை வந்தவர் “இது கோர்ட்டில் உள்ள விஷயம். இதனால் இதில் எந்தப் பேச்சுவார்த்தையையும் யாரும் நடத்தக் கூடாது. இது குறித்து நாங்கள் கோர்ட்டில் புகார் செய்வோம்..” என்று தயாரிப்பாளர் சங்கத்தினரை எச்சரித்துவிட்டு சென்றார்.

ஆனாலும் இதில் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று தயாரிப்பாளர்சங்கம் உறுதியுடன் இருந்தது. பெப்சி அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கு ஆட்களை அனுப்பினால் அடுத்தடுத்து வேறு தொழிலாளர்களை வைத்துக் கொண்டும், சம்பளத்தைக் குறைத்தும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வந்திருக்கிறது.

இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் நெருக்கடி முற்றியது. அவரும் அந்தச் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதால் சங்கத்தின் முடிவை நீங்கள் ஏற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிம்பு மைக்கேல் ராயப்பனுக்குத் தர வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகைக்கு நானே பொறுப்பு. அந்தத் தொகையை நான் தருகிறேன் என்று கடிதம் மூலமாக ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்திடம் சமர்ப்பித்திருக்கிறார்.

இதையடுத்து சிம்பு படத்துக்கு எதிரான மறைமுகத் தடையை தயாரிப்பாளர் சங்கம் விலக்கிக் கொண்டுவிட்டதாம்.

நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினையை இரு தரப்பினரும் அங்கேயே பார்த்துக் கொள்ளட்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒதுங்கிவிட்டனர்.

சிம்பு வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ‘பத்து தல’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

The post சிம்பு-மைக்கேல் ராயப்பன் பிரச்சினை முடிவுக்கு வந்தது..! appeared first on Touring Talkies.

]]>