Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
mansoor ali khan – Touring Talkies https://touringtalkies.co Tue, 21 Nov 2023 17:59:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png mansoor ali khan – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா https://touringtalkies.co/one-should-respect-fellow-artists-in-cinema-bharathiraja/ Mon, 20 Nov 2023 21:04:31 +0000 https://touringtalkies.co/?p=38101   பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டுக்கத் தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.   இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த […]

The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.

]]>
 

பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டுக்கத் தக்கது.

அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

சில மேடைகள்…சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது.

நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை  பற்றி பேசியிருக்கிறார்.

இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.

 

மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள… உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.

கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ,  வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

என தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில் அந்த அறிக்கையில் பாரதிராஜா கூ றியுள்ளார்,

The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.

]]>
ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!:  மன்சூர் அலிகான் அதிரடி https://touringtalkies.co/mansoor-ali-khan-says-mgr-is-the-only-superstar/ Tue, 29 Aug 2023 01:23:55 +0000 https://touringtalkies.co/?p=35753 சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இதனை இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆக 27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் மன்சூர் அலிகானிடம் செய்தியாளர்கள் […]

The post ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!:  மன்சூர் அலிகான் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இதனை இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆக 27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் மன்சூர் அலிகானிடம் செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

“யாரை யாருடன் ஒப்பிட்டாலும் அவரவர் அவரவர் இடத்தில் இருக்கின்றனர். அடுத்து இளமையாக இருப்பவர்கள் மேலே வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான். அது எம்ஜிஆர் மட்டுமே” இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.

சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கை – பருந்து குறித்து ரஜினி கூறிய குட்டிக் கதை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து யார் உண்மையான சூப்பர்ஸ்டார் என்று இரு தரப்பு ரசிகர்களிடையே ஆன்லைன் மோதல் ஏற்பட்டது.

The post ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் தான்!:  மன்சூர் அலிகான் அதிரடி appeared first on Touring Talkies.

]]>