Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
manmatha leelai movie – Touring Talkies https://touringtalkies.co Sun, 23 Jan 2022 15:58:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png manmatha leelai movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “மன்மத லீலை’ டைட்டிலுக்கு 50 லட்சம் கேட்டதை நிரூபிக்க முடியுமா..?” – கே.பி. ரசிகர் மன்றம் சவால்..! https://touringtalkies.co/can-you-prove-that-you-asked-for-rs-50-lakh-for-the-title-manmadha-leela-k-p-fan-forum-challenge/ Sun, 23 Jan 2022 15:57:39 +0000 https://touringtalkies.co/?p=20377 “மன்மத லீலை டைட்டிலை தருவதற்கு 50 லட்சம் ரூபாய் கேட்டார்கள் என்று தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சிங்காரவேலன் கூறியதை நிரூபிக்க முடியுமா..?” என்று கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் செயலாளரான பாபு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது : “மன்மத லீலை’ திரைப்பட பெயர் பதிவு சம்மந்தமாக, திரு.சிங்காரவேலன் அவர்கள் பேசிய 2-வது ஆடியோ பதிவில் மீண்டும், மீண்டும் பொய்யான தகவல்களைப் பேசியுள்ளார். மேலும், இந்திய தமிழ் திரைப்பட உலகிற்கு இயக்குநராக, திரு.கே.பாலசந்தர் […]

The post “மன்மத லீலை’ டைட்டிலுக்கு 50 லட்சம் கேட்டதை நிரூபிக்க முடியுமா..?” – கே.பி. ரசிகர் மன்றம் சவால்..! appeared first on Touring Talkies.

]]>
மன்மத லீலை டைட்டிலை தருவதற்கு 50 லட்சம் ரூபாய் கேட்டார்கள் என்று தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சிங்காரவேலன் கூறியதை நிரூபிக்க முடியுமா..?” என்று கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் செயலாளரான பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“மன்மத லீலை’ திரைப்பட பெயர் பதிவு சம்மந்தமாக, திரு.சிங்காரவேலன் அவர்கள் பேசிய 2-வது ஆடியோ பதிவில் மீண்டும், மீண்டும் பொய்யான தகவல்களைப் பேசியுள்ளார்.

மேலும், இந்திய தமிழ் திரைப்பட உலகிற்கு இயக்குநராக, திரு.கே.பாலசந்தர் என்கிற ஒரு மாமனிதரை தொடர்ந்து சூப்பர் ஹிட் இயக்குநராக கொடுத்த மிக பிரபலமான கலா கேந்திரா’ என்கிற திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தையும், அதன் தயாரிப்பாளர்களையும், பொது சமூக வலைத்தளங்களில் தரைக்குறைவாக பேசி இருப்பது ஒரு இளம் தயாரிப்பாளரான திரு.சிங்கார வேலன் அவர்களுக்கு நாகரீகமாக பேச தெரியவில்லையே என கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக வருத்தப்படுகிறோம்.

திரு.சிங்காரவேலன் 2-வது ஆடியோவில் தரக்குறைவாக பேசியிருப்பது முன்னாள் மூத்த தயாரிப்பாளர்களையும் சேர்த்து பேசியதற்கு சமமாகும்.

திரு.கே.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்ட திரைப்படங்கள் ஆகும்.

எதிர் நீச்சல்’, ‘நூல் வேலி’, ‘வெள்ளி விழா’, ‘இரு கோடுகள்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘அரங்கேற்றம்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அவர்கள்’, ‘அபூர்வராகங்கள்’, ‘நிழல் நிஜமாகிறது’, ‘தில்லு முல்லு’, ‘மழலை பட்டாளம்’, ‘ருத்ர தாண்டவம்’, ‘மன்மத லீலை’ என்று பல திரைப்படங்களை கலாகேந்திரா நிறுவனம் தயாரித்துள்ளது.

திரு.சிங்காரவேலன் அவர்களே, மீண்டும் ஒரு பொய்யான தகவலை 2-வது ஆடியோவில் பதிவு செய்துள்ளீர்கள். மன்மத லீலை’ டைட்டில் பெயர், உரிமைக்காக தயாரிப்பாளரை அனுகியபோது, அவர்கள் ஜம்பது லட்சம் ரூபாய் பெரிய தொகையாக கேட்டதாக சொல்லிருக்கிறீர்கள். யார் கேட்டார்கள் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா..?

இன்றைக்கும் அகில இந்திய ராயல்டி அதிகபடியான தொகை, தென்னிந்திய பிலிம் சேம்பரிடம் இருக்கு. அந்த பணத்தைக்கூட கலா கேந்திரா நிறுவனத்தினர் இன்னும் வாங்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

மேலும், தற்போது இந்த ‘மன்மத லீலை’ படத்தை இயக்கி உள்ள இயக்குநர் திரு.வெங்கட்பிரபு அவர்கள், “இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தமில்லாதவர் ஏன் இப்படி தேவையில்லாததை ஆடீயோவில் பேசி வருகிறார்” என்று கேட்டுள்ளாரே..?

திரு.சிங்காரவேலன் அவர்களே, இனிமேல் நீங்கள் இயக்குநர்  திரு.வெங்கட் பிரபு அவர்களிடம் அனுமதி கடிதம் பெற்று இந்த விவாதத்தில் பேசுங்கள்.

“பாபு யார், அவர் எதற்கு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அறிக்கை கொடுக்கிறார் என்று தெரியவில்லை என கேள்வி கேட்டுள்ளீர்கள். என்னைப் பத்தி தெரிய வேண்டுமா?.. மிகப் பெரிய பெயர் பெற்ற தயாரிப்பாளர்களிடம் இந்த பாபு யார்? இவருக்கும் இந்த திரையுலகத்துக்கும் என்ன சம்மந்தம்? என கேட்டு தெரிந்துக் கொண்டு இந்த கேள்வியை கேட்கவும். இயக்குநர், திரு.வெங்கட் பிரபுவின் தந்தையிடம் கேட்டாலே நான் யார் என்பதை சொல்வார்.

முதலில் நீங்கள் மூத்த தயாரிப்பாளர்களை பொது சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக, மட்டமாக, பொய்யான தகவல்களை பேசாதீர்கள்.

கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களையும், கவிதாலயா நிறுவனத்தையும், இயக்குநர் திரு.கே.பாலசந்தர் அவர்களைப் பற்றியும் தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டாம்.

கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களிடம் மன்மத லீலை’ டைட்டில் உரிமையை முறைப்படி, இப்போது தயாரித்துள்ள தயாரிப்பாளரும், இயக்குநர் திரு.வெங்கட் பிரபு அவர்களும் சமாதானமாகப் பேசி படத்தின் பெயர் உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.” என்று அந்த அறிக்கையில் பாபு தெரிவித்துள்ளார்.

The post “மன்மத லீலை’ டைட்டிலுக்கு 50 லட்சம் கேட்டதை நிரூபிக்க முடியுமா..?” – கே.பி. ரசிகர் மன்றம் சவால்..! appeared first on Touring Talkies.

]]>