Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
manickam narayanan – Touring Talkies https://touringtalkies.co Fri, 04 Nov 2022 18:44:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png manickam narayanan – Touring Talkies https://touringtalkies.co 32 32 அட்லீயின் ‘ஜவான்’ படத்தின் மீதும் காப்பி புகார்..! https://touringtalkies.co/copy-complaint-on-atlees-jawan-film-too/ Fri, 04 Nov 2022 18:43:18 +0000 https://touringtalkies.co/?p=26581 அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடித்த ‘பேரரசு’ படத்தின் கதை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.   இந்தப் படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என்று இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது, அதில் […]

The post அட்லீயின் ‘ஜவான்’ படத்தின் மீதும் காப்பி புகார்..! appeared first on Touring Talkies.

]]>
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடித்த ‘பேரரசு’ படத்தின் கதை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.  

இந்தப் படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என்று இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது, அதில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வித்தியாசமான கோணத்தில் முகம் காட்டியிருந்தார் ஷாருக்கான். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தின் கதை விஜய்காந்த் நடித்த ‘பேரரசு’ திரைப்படத்தின் கதையை தழுவி இருப்பதாக கூறி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

2006-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான பேரரசு’ திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்திற்கு மாணிக்கம் நாராயணன் பணம் கொடுத்திருந்தார். ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் தனது பட உரிமைகளை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் விற்றுவிட்டது.

இந்தப் புகார் மீதான விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

The post அட்லீயின் ‘ஜவான்’ படத்தின் மீதும் காப்பி புகார்..! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசனுடன் நடிக்க பிரகாஷ்ராஜ் விதித்த வித்தியாசமான நிபந்தனை..! https://touringtalkies.co/prakashraj-has-imposed-a-different-condition-to-act-with-kamalhaasan/ Tue, 02 Feb 2021 15:54:27 +0000 https://touringtalkies.co/?p=12691 ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிகப் பணம் வேண்டும். நிறைய வசதி, வாய்ப்புகள் செய்து தர வேண்டும் என்றெல்லாம் நடிகர், நடிகைகள் கேட்பதுதான் வழக்கம். ஆனால், எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். 2002-ம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசன்தான் இந்தப் படத்தின் நாயகன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டருக்கு பல அருண் பாண்டியன் […]

The post கமல்ஹாசனுடன் நடிக்க பிரகாஷ்ராஜ் விதித்த வித்தியாசமான நிபந்தனை..! appeared first on Touring Talkies.

]]>
ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிகப் பணம் வேண்டும். நிறைய வசதி, வாய்ப்புகள் செய்து தர வேண்டும் என்றெல்லாம் நடிகர், நடிகைகள் கேட்பதுதான் வழக்கம்.

ஆனால், எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

2002-ம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசன்தான் இந்தப் படத்தின் நாயகன் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டருக்கு பல அருண் பாண்டியன் முதற்கொண்டு பல நடிகர்களை முதலில் தொடர்பு கொண்டு பேசியும் யாரும் அமையாததால் கடைசியாக பிரகாஷ்ராஜை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தொடர்பு கொண்டு நடிக்கக் கேட்டிருக்கிறார்.

அப்போது பிரகாஷ்ராஜ், “நான் வந்து நடிக்கிறேன். பணம் பற்றியெல்லாம் பிரச்சினையில்லை. ஒரே ஒரு நிபந்தனைதான். இந்தப் படத்தில் நான் சொன்ன டயத்துக்கு வந்து நிற்பேன். நடிப்பேன். ஆனால் நடிகர் கமல்ஹாசனுக்காக ஒரு நிமிடம்கூட காத்திருக்க மாட்டேன். அப்படி காத்திருந்த நேர்ந்தால் போய்க்கிட்டேயிருப்பேன்…” என்றாராம்.

இந்தக் கதாபாத்திரத்திற்கு பிரகாஷ்ராஜைவிட்டால் வேறு ஆளில்லை என்கிற நிலைமை அப்போது இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் இதற்கு ஒத்துக் கொண்டாராம்.

கூடவே படத்தின் நாயகனான நடிகர் கமல்ஹாசனிடமும் இதைப் போய் சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனும் பெருந்தன்மையாக இதை ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து பிரகாஷ்ராஜூடன் நடிக்கவிருந்த நாட்களில் முன்னதாகவே வந்திருந்து பிரச்சினையில்லாமல் நடித்துக் கொடுத்தாராம் கமல்ஹாசன்..!

நடிகர்களின் ஈகோ பிரச்சினை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்று பாருங்கள்.

The post கமல்ஹாசனுடன் நடிக்க பிரகாஷ்ராஜ் விதித்த வித்தியாசமான நிபந்தனை..! appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் மணிரத்னத்தால் தெருவுக்கு வந்தேன்…” – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனின் அனுபவம்..! https://touringtalkies.co/i-came-to-the-street-by-director-mani-ratnam-producer-manikkam-narayanans-experience/ Mon, 01 Feb 2021 06:49:47 +0000 https://touringtalkies.co/?p=12635 2002-ம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை விநியோகம் செய்ததால் வைத்திருந்த பணம் முழுவதையும் இழந்து, தான் நடுத்தெருவுக்கு வந்ததாக சொல்கிறார் செவன்த் சேனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன். இது குறித்து அவர் அளித்திருக்கும் சமீபத்திய வீடியோ பேட்டியில், “2001-ம் ஆண்டு ஜூலை மாதம் மணிரத்னம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைத் துவக்கினார். மணிரத்னம் பெரிய இயக்குநர். சுஹாசினியும் எனக்கு பிரண்ட். அதனால் நான் தயாரித்த முந்தின படமான ‘சீனு’ படத்துலவிட்டதை இந்தப் படத்தை வாங்கி […]

The post “இயக்குநர் மணிரத்னத்தால் தெருவுக்கு வந்தேன்…” – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனின் அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>
2002-ம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை விநியோகம் செய்ததால் வைத்திருந்த பணம் முழுவதையும் இழந்து, தான் நடுத்தெருவுக்கு வந்ததாக சொல்கிறார் செவன்த் சேனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன்.

இது குறித்து அவர் அளித்திருக்கும் சமீபத்திய வீடியோ பேட்டியில், “2001-ம் ஆண்டு ஜூலை மாதம் மணிரத்னம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைத் துவக்கினார். மணிரத்னம் பெரிய இயக்குநர். சுஹாசினியும் எனக்கு பிரண்ட். அதனால் நான் தயாரித்த முந்தின படமான ‘சீனு’ படத்துலவிட்டதை இந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்தாவது தப்பிச்சுக்கலாம்ன்னு நினைச்சேன்.

சென்னை, செங்கல்பட்டு ஏரியா, உள்ளிட்ட தமிழகத்தில் 5 முக்கிய ஏரியாக்களின் விநியோக உரிமையை 1 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு மணிரத்னத்திடம் வாங்கி விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்தேன். இந்தப் பணத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக நான் அவர்கிட்ட கொடுத்திட்டிருந்தேன்.  அ்ப்போது அவருடைய தம்பி சீனிவாசன்தான் நிர்வாகத்தைப் பார்த்துக்கிட்டாரு.

2001 ஜூலையில் ஆரம்பித்த படம் உடனேயே அந்த வருஷத்துக்குள்ளேயே ரிலீஸாகும்ன்னு நினைச்சேன். ஆனால், படத்தைத் தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தாரு மணிரத்னம். இதுனால எனக்கு நிறைய நெருக்கடிகள். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் விநியோகஸ்தரா தியேட்டர்களை புக் செய்வதில் எனக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.

அந்த வருஷமும் முடிஞ்சு அடுத்த வருஷம் 2002 பிப்ரவரி 14-ம் தேதியன்று ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை ரிலீஸ் செய்றதா சொன்னாரு மணிரத்னம். அதற்கு முந்தின நாள்தான் படத்தை எங்களுக்குப் போட்டுக் காட்டினாங்க. ‘அபிராமி’ தியேட்டர்ல ஸ்பெஷல் ஷோ. படத்தைப் பார்த்தவுடனேயே ‘இந்தப் படம் ஓடாது’ன்னு எனக்குத் தெரிஞ்சது.

மணிரத்னம் சிறந்த இயக்குநர்தான். இந்தப் படமும் சிறந்த படம்தான். ஆனால், அவார்டு படம். இதுல போயி இவ்வளவு பணத்தை முதலீடா போட்டுட்டோமேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.

நான் வருத்தப்பட்ட மாதிரியேதான் நடந்துச்சு. திருவண்ணாமலைல ஒரு தியேட்டர்ல சீட்டையே கிழிச்சிட்டாங்களாம் ரசிகர்கள். அதுக்கு என்கிட்ட காசு கேட்டாங்க அந்தத் தியேட்டர்காரங்க. படப் பெட்டிகளும் மூணே நாள்ல திரும்பி வந்துச்சு.. 17 பெட்டிகள் திரும்பி வந்துச்சு.. அதையெல்லாம் மணிரத்னம் ஆபீஸுக்கு அனுப்பினேன். அதை அவங்க வாங்க மாட்டேன்னுட்டாங்க. அதை வைக்கக்கூட என் ஆபீஸ்ல இடமில்லை.

அதோடு தியேட்டர்காரங்க ரீபண்ட் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களைச் சமாளிக்கிறதுக்காக பத்து நாள் நான் தலைமறைவானேன். என் வாழ்க்கைலேயே இப்படி ஓடி ஒளியற மாதிரி சூழல் வந்தது, இந்தப் படத்தினாலதான்.

மலேசியாவுக்கு ஓடிப் போய் பதுங்கி.. அங்கேயிருந்துகிட்டே பணத்தைப் புரட்டி திரும்பவும் சென்னைக்கு வந்தேன். தியேட்டர்காரர்களைக் கூப்பிட்டு, “என்னால யாருக்கும் நஷ்டம் வரக் கூடாது”ன்னு சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.

1 கோடியே 58 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கின அந்தப் படம், மொத்தமா எனக்கு சம்பாதித்துக் கொடுத்த படம் வெறும் 26 லட்சத்து 50 ஆயிரம்தான். மீதி 1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம்.

மணிரத்னத்திடம் இதைப் பற்றிச் சொல்லி பணம் கேட்டப்போ அவர் பணத்தைத் திருப்பித் தர மாட்டேன்னுட்டாரு. அப்புறம் கவுன்சில்ல புகார் கொடுத்து சிந்தாமணி முருகேசன் எனக்காக பெரிய பஞ்சாயத்து பண்ணினார். “20 லட்சம் ரூபாய்தான் தர முடியும்”ன்னு சொன்னாங்க. அதையும் அவங்க தயாரிச்ச ‘பைவ் ஸ்டார்’ படத்தோட ரைட்ஸை கொடுத்தாங்க. அதை நான் 30 லட்சம் ரூபாய்க்கு வித்தேன். இந்த ஒரே படத்தால அந்த நேரத்துல எல்லாத்தையும் இழந்துட்டு, தெருவுக்கே வந்துட்டேன்…!” என்று பெரும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

The post “இயக்குநர் மணிரத்னத்தால் தெருவுக்கு வந்தேன்…” – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனின் அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>