Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
local sarakku – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 00:25:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png local sarakku – Touring Talkies https://touringtalkies.co 32 32 லோக்கல் சரக்கு விமர்சனம் https://touringtalkies.co/local-sarakku-review/ Sun, 28 Jan 2024 00:25:03 +0000 https://touringtalkies.co/?p=39499 குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர். சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல் தனது தங்கை சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.மேலும் அவருக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா துணை நடிகையாக இருக்கும் கதாநாயகி உபாசனா தினேஷின் எதிர் வீட்டில் குடி வருகிறார். அவரிடமும் அவ்வப்போது 200 […]

The post லோக்கல் சரக்கு விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர்.

சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல் தனது தங்கை சம்பாதிக்கும் பணத்தில் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.மேலும் அவருக்கு தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா துணை நடிகையாக இருக்கும் கதாநாயகி உபாசனா தினேஷின் எதிர் வீட்டில் குடி வருகிறார். அவரிடமும் அவ்வப்போது 200 ரூபாய் வாங்கி குடிக்கிறார். இவை அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது தங்கை வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதே லோக்கல் சரக்கு படத்தின் கதை.

நடன கலைஞர் தினேஷ் ஒரு குடிகாரராக  வருகிறார். இமேஜ் குறித்து கவலைப்படாமல் நடித்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.  தவிர நிஜ குடிகாரரை கண் முன் நிறுத்துகிறார்.

தினசரி ஒவ்வொருவரிடம் வித்தியாச வித்தியாசமாக காரணங்களைக் கூறி, கடன் வாங்கி அவரது நண்பர் யோகி பாபு உடன் குடிக்கும் காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.

அவரது நண்பராக  யோகி பாபு வருகிறார். இருவரது காமெடி  காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி உள்ளன.

கதாநாயகி உபாசனா.  நடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்துகிறார். இவர்களை தவிர வினோதினி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ் ஆகியோர்  படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

இடைவேளையில்  வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் படமாக பார்க்கும் போது அவை பெரிதாக தெரியவில்லை. படத்தின் இறுதியில் ஒரு நல்ல கருத்தை சொல்ல முயற்சித்துள்ளனர்.

குடிகாரனை யாரும் திருத்த முடியாது அவனே நினைத்தால் தான் திருந்த முடியும் போன்ற வசனங்களும் சிறப்பு.

இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசை, கே.எஸ்.பழநியின் ஒளிப்பதிவு, ஜே.எப்.கேஸ்ட்ரோவின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.

ஆண்கள் குடிக்க… அதனால் பெண்கள் படும் பாட்டை சிறப்பாக சொல்லி இருக்கிறது படம். ஆகவே அனைரும் பார்க்க வேண்டிய படம்.

 

The post லோக்கல் சரக்கு விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>