Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
liger movie – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 Aug 2022 10:26:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png liger movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘லைகர்’ படத்தை விமர்சித்ததற்காக நடிகையை ‘ஆண்ட்டி’ என்றழைத்து கலாய்க்கும் ரசிகர்கள் https://touringtalkies.co/fans-are-calling-the-actress-aunty-for-criticizing-the-film-liger/ Sat, 27 Aug 2022 10:26:04 +0000 https://touringtalkies.co/?p=24046 ‘லைகா’ படத்தைக் கலாய்த்ததற்காக தெலுங்குலகின் பிரபல தொகுப்பாளினியும், ‘புஷ்பா’ பட  நடிகையுமான அனசுயா பரத்வாஜை விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ‘ஆண்ட்டி’ என்று அழைத்து பதில் கலாய்ப்பு செய்து வருகிறார்கள். விஜய் தேவரகொண்டா நடித்து, இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கிய ‘லைகர்’ படம் நேற்று வெளியானது. முதல் காட்சியில் இருந்தே இந்தப் படம் மோசமான விமர்சனங்களைத்தான் பெற்று வருகிறது. பல நெட்டிசன்கள் இந்த படம் குறித்து மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை அனசூயாவும் […]

The post ‘லைகர்’ படத்தை விமர்சித்ததற்காக நடிகையை ‘ஆண்ட்டி’ என்றழைத்து கலாய்க்கும் ரசிகர்கள் appeared first on Touring Talkies.

]]>
லைகா’ படத்தைக் கலாய்த்ததற்காக தெலுங்குலகின் பிரபல தொகுப்பாளினியும், ‘புஷ்பா’ பட  நடிகையுமான அனசுயா பரத்வாஜை விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ஆண்ட்டி’ என்று அழைத்து பதில் கலாய்ப்பு செய்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டா நடித்து, இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கிய ‘லைகர்’ படம் நேற்று வெளியானது. முதல் காட்சியில் இருந்தே இந்தப் படம் மோசமான விமர்சனங்களைத்தான் பெற்று வருகிறது. பல நெட்டிசன்கள் இந்த படம் குறித்து மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை அனசூயாவும் இந்தப் படத்தை விமர்சித்து ட்வீட் செய்தார். இதனால், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் கோபமாகி, அனசூயாவுக்கு எதிராக அவரின் வயதை குறிப்பிட்டு ‘ஆன்ட்டி’ என கூறி டிவிட்டரில் கலாய்க்க துவங்கினர். இதனால் ‘#Aunty’ என்கிற ஹாஷ்டேக்கும் நேற்றைக்கு டிவிட்டர் கிரவுண்ட்டில் ட்ரெண்ட் ஆகியது.

இதனால் கோபமான நடிகை அனுசுயா  ‘என்னை அவமானப்படுத்திய வார்த்தைகளை உங்கள் ஹீரோவுக்கு அனுப்புங்கள்’ என்று கமெண்ட் போட்டு எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினார். இதனால், அனசூயா மீதான ட்ரோலிங் நிற்காமல் மேலும், மேலும் உயர்ந்தது.

“இப்படி என்னை தொடர்ந்து ட்ரோல் செய்பவர்களின் ட்விட்டர் பதிவை,  ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். என் வயதை குறிப்பிட்டு, என்னை ‘ஆன்ட்டி’ என்று அழைப்பவர்கள்  அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்வேன். இதுவே உங்களுக்கு கடைசி எச்சரிக்கை…” என்று உச்சக்கட்ட கோபத்தில் டிவீட் செய்தார் அனுசுயா.

ஆனாலும் இதையும் கண்டு கொள்ளாத விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் இன்னும் ஆவேசமாய் இணையத்தில் அனுசுயாவைத் தாக்கி வருகிறார்கள்.

The post ‘லைகர்’ படத்தை விமர்சித்ததற்காக நடிகையை ‘ஆண்ட்டி’ என்றழைத்து கலாய்க்கும் ரசிகர்கள் appeared first on Touring Talkies.

]]>
“தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” – விஜய் தேவரகொண்டா பேச்சு https://touringtalkies.co/i-am-interested-in-acting-in-tamil-films-vijay-devarakonda-speech/ Sun, 14 Aug 2022 08:07:12 +0000 https://touringtalkies.co/?p=23751 பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம் தயாரித்துள்ள படம்  ‘லைகர்’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம்  – பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா, பேனர்கள் – Puri Connects […]

The post “தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” – விஜய் தேவரகொண்டா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து  Puri connects நிறுவனம் தயாரித்துள்ள படம்  லைகர்’.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்  – பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா, பேனர்கள் – Puri Connects மற்றும் Dharma Productions, ஒளிப்பதிவு – விஷ்ணு சர்மா, கலை இயக்கம் – ஜானி ஷேக் பாஷா, படத் தொகுப்பு – ஜுனைத் சித்திக், சண்டை பயிற்சி இயக்கம் – கிச்சா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த பான் இந்தியா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 இதன் தமிழ் பதிப்பை தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான R.K.சுரேஷ் தனது Studio 9 நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார்.

பட வெளியீட்டை ஒட்டி  இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கிண்டியில் உள்ள ரஹமத் பிளாஸா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R.K.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R.K.சுரேஷ் பேசும்போது, “விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்தப் படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும். இனி விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப்படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.

நாயகி அனன்யா பாண்டே பேசும்போது, “நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை  தமிழில் சொல்ல கற்றுக் கொண்டு வந்தேன். இந்தப் படம் மிகப் பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது. இப்படத்தை பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசும்போது, “நான் தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா’ படத்தின்போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப் படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது.

நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா.ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன். வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். இந்த லைகர்’ பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தை தரும் நன்றி…” என்றார்.

The post “தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” – விஜய் தேவரகொண்டா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா https://touringtalkies.co/vijay-devarakonda-make-anue-pose-for-liger-movie/ Sun, 03 Jul 2022 08:03:40 +0000 https://touringtalkies.co/?p=22993 விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படமான ‘LIGER’(Saala Crossbreed) படத்திலிருந்து  ஒரு அசத்தலான, மிரட்டலான போஸ்டர் நேற்றைக்கு வெளியாகியுள்ளது..! Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions ஆகிய நிறுவனங்கள் இனைந்து இந்த ‘லைகர்’ படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டாவும், […]

The post ‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.

]]>
விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படமான LIGER’(Saala Crossbreed) படத்திலிருந்து  ஒரு அசத்தலான, மிரட்டலான போஸ்டர் நேற்றைக்கு வெளியாகியுள்ளது..!

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions ஆகிய நிறுவனங்கள் இனைந்து இந்த லைகர்’ படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டாவும், இவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டேவும் நடிக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கம் – ஜானி சையிக் பாட்ஷா, பட தொகுப்பு- ஜுனைத் சித்திக், எழுத்து, இயக்கம் – பூரி ஜெகன்நாத்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சினிமா அனுபவத்தை அளிக்கும்விதமாக, ரத்தம், வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை உருக்கி,  இந்த மாஸ் ஆக்‌ஷன் எண்டெர்டெயினர் உருவாக்கப்பட்டுள்ளது.

துணிச்சலான கதை சொல்லலுக்காக இந்தப் படம் நீண்ட காலமாக ரசிகர்கள் நினைவில் இருக்கும். படத்தில் MMA ஃபைட்டராக நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா உண்மையில் தன்னுடைய மிகப் பெரிய உழைப்பை தந்துள்ளார்.

உலகம் போற்றும் லெஜண்ட்டான மைக் டைசன் இத்திரைப்படத்தில் ஒரு வலிமையான பாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வதேச அடையாளமாக விளங்கும் மைக்  டைசனின் பிறந்த நாள் சிறப்பு வீடியோவில், அவரது பணிவான குணமும் மற்றும் அவர் படக் குழுவுடன்  நெருக்கமாக இருந்தவிதமும் பலரின் இதயங்களை வென்றது.

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த லைகர்’ படம் கருதப்படுகிறது. மேலும், படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிலும் படக் குழுவினரின் எதிர்பார்ப்புகள் மேலும், மேலும் அதிகமாக்கி கொண்டே போகிறது.

நேற்றைக்கு வெளியான விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் சாலா கிராஸ்பிரீட் Saala Cross breed போஸ்டர் மிரட்டலாகவும் அசத்தலான தாக்கத்தையும் தருகிறது .

விஜய் தேவரகொண்டாவின் அனைத்து திறமைகளைும் ஒட்டு மொத்தமாக வெளிக்காட்டும்படி, தயாரிப்பாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளனர், போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கிட்டத்தட்ட நிர்வாணமான தனது உடலமைப்பைக் காட்டியுள்ளார். இப்படி போஸ் கொடுக்க ஒருவருக்கு தைரியம் வேண்டும்தான்.

விஜய் தேவரகொண்டா மிகவும் துணிச்சலானவர். தான் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தனது படங்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதை இந்தச் செயலின் மூலம் அவர் காட்டியுள்ளார்.

இந்தப் படக் குழு சமீபத்தில் மும்பையில் ஒரு பாடலை பதிவு செய்தது. படக் குழுவினர் படத்திற்கான விளம்பரங்களைத் விரைவில் தொடங்கவுள்ளனர். அடுத்தடுத்து தொடர் அப்டேட்களுடன் வர தயாராக இருக்கின்றனர்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன் மொழி இந்திய திரைப்படமான இந்த லைகர்’ படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The post ‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.

]]>