Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
krishna – Touring Talkies https://touringtalkies.co Tue, 10 Oct 2023 07:43:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png krishna – Touring Talkies https://touringtalkies.co 32 32 ” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! https://touringtalkies.co/a-lion-is-a-lion-kesari-krishna-giving-tough-to-leo-vijay/ Tue, 10 Oct 2023 07:43:23 +0000 https://touringtalkies.co/?p=37003 தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பகவந்த் கேசரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகும் இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. […]

The post ” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்துக்கு ‘பகவந்த் கேசரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகும் இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைத்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

பாலகிருஷ்ணா தனது மகளை ஆர்மியில் சேர்க்க கடுமையான பயிற்சிகளை கொடுக்கிறார். பொதுவாக கதையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ‘மாஸ்’ மசாலாவாக உருவாகும் பாலகிருஷ்ணா படங்களில் நடுவே இப்படத்தில் கதை இருப்பதாக தெரிவது ஆறுதல்.

பாலகிருஷ்ணாவின் மகளான ஸ்ரீலீலா முதல் 1 நிமிடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். அடுத்து பாலகிருஷ்ணா ரசிகர்களுக்காகவே ‘பஞ்ச்’ ஆக்‌ஷன் காட்சிகள் அணிவகுக்கப்பட்டுள்ளன. “மகளுக்கு முன் தந்தை நிற்பது அனைத்து கடவுள்களும் ஒன்று சேர்ந்து நிற்பது போல” என்ற வசனம் படம் அப்பா – மகளுக்கானது என்பதை உறுதி செய்கிறது.

“சிங்கம் எந்த இடத்தில் நுழைந்தாலும் அது சிங்கம் தான்; ஒருபோதும் பூனையாகாது” என பஞ்ச் பேசுகிறார் பாலகிருஷ்ணா.

இந்த படம், லியோ வெளியாகும் 19ம் தேதி வெளியாகி மோதத்தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ” சிங்கம் சிங்கம்தாம்ல!”: ‘லியோ’வுடன் மோதும் ‘பகவந்த்கேசரி’! appeared first on Touring Talkies.

]]>
விமர்சனம்: பத்துதல https://touringtalkies.co/pathu-thala-review/ Thu, 30 Mar 2023 11:13:38 +0000 https://touringtalkies.co/?p=31121 கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  ளிவந்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சிம்பு  கோலோச்சி வருகிறார். துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்து அவன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் […]

The post விமர்சனம்: பத்துதல appeared first on Touring Talkies.

]]>
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  ளிவந்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சிம்பு  கோலோச்சி வருகிறார். துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனன் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்து அவன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் கவுதம் கார்த்திக் ரகசிய காவல் அதிகாரியாக சிம்புவின் கோட்டையான கன்னியாகுமாரிக்கு செல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல. ஆனால் கொஞ்சம் கூட அந்த சயால் தெரியாமல் அழகாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா. சில காட்சிகள் மஃப்ட்டி படத்தில் இடம்பெற்றதாக இருந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைக்கதையை தான், தனது இயக்கத்தின் மூலம் திரையில் நமக்கு காட்டியுள்ளார்.

ஏ.ஜி. ராவணனாக வரும் சிலம்பரசன் மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரத்தை சிம்பு தாங்கிய விதம் பாராட்டுக்குரியது. கன்னடத்தில் இந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்த சிவராஜ்குமார் நடிப்பு மிரட்டல் என்றால், அதை விட ஒரு படி மேலாகவே சிம்பு பத்து தல படத்தில் கலக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக கவுதம் கார்த்திக், நிதானமான நடிப்பை திரையில் காட்டியுள்ளார். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி திரைக்கதையின் ஓட்டத்திற்கு முக்கிய காரணமாக தன்னுடைய கதாபாத்திரம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.

வில்லனாக வரும் கவுதம் மேனன் நடிப்பு அசத்தல். அரசியல்வாதியின் ஆசை எப்படி இருக்கும் அதற்காக அரசியல்வாதி என்ன செய்வார்கள் என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி தொய்வு இல்லாமல் செல்ல சிம்புவின் நடிப்பு காரணமாக இருந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு திரையரங்கில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை செம மாஸ். குறிப்பாக இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி இரண்டிலும் பட்டையை கிளப்பிவிட்டார்.
ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பலமாக அமைத்துள்ளது. அதே போல் ஸ்டண்ட் மற்றொரு பிளஸ் பாயிண்ட். மேலும் சிம்புவிற்கு எழுதிய மாஸ் வசனங்கள். அதுமட்டுமின்றி அரசியல் குறித்து பேசப்பட்ட வசனங்களும் அருமை. எடிட்டிங் முதல் பாதியில் சில தொய்வு, மற்றபடி  சிறப்பாகவே இருக்கிறது.

The post விமர்சனம்: பத்துதல appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..! https://touringtalkies.co/the-shooting-of-simbus-pathu-thala-in-four-stages-has-been-completed/ Wed, 19 Oct 2022 18:05:03 +0000 https://touringtalkies.co/?p=25705 நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்குதான் இந்த ‘பத்து தல’ படம். நிழல் உலக தாதாவை தேடிப் போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதைதான் இந்தப் படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் மிக அதிக வசூலை அள்ளியதும் இந்தப் படம்தான். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K. […]

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்குதான் இந்த ‘பத்து தல’ படம்.

நிழல் உலக தாதாவை தேடிப் போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதைதான் இந்தப் படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் மிக அதிக வசூலை அள்ளியதும் இந்தப் படம்தான்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K. E. ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரவீன் K. L. படத் தொகுப்பு  செய்கிறார்.

இந்தப் படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இயக்குநர் கௌதம் மேனன், சிம்புவுக்கு வில்லனாக நடிக்கிறார்.

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாம் கட்டப் படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்துள்ளது. அந்தப் படப்பிடிப்பின் நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

மேலும் இயக்குநர் கிருஷ்ணாவும், நாயகன் சிம்புவும் ஆற்றின் கரையில் பேசுவது போலவும், கௌதம் கார்த்திக்கும், சிம்புவும், இயக்குநர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இந்தப் பத்து தல’ திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

The post சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..! appeared first on Touring Talkies.

]]>