Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
keerthy suresh – Touring Talkies https://touringtalkies.co Fri, 24 Nov 2023 00:22:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png keerthy suresh – Touring Talkies https://touringtalkies.co 32 32 கேரளா பெண்களின் கிரிக்கெட் போட்டி தூதராக கீர்த்தி சுரேஷ்! https://touringtalkies.co/keerthy-suresh-as-kerala-womens-cricket-tournament-ambassador/ Thu, 23 Nov 2023 00:19:04 +0000 https://touringtalkies.co/?p=38207   தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள், கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) தனது மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமித்த முதல் நிகழ்வாக இது அமைகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா T20I போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் வெகு விமரிசையாக தொடங்கி வைத்தார், மேலும் விழாவில் கலந்து கொண்ட கேரளாவைச் […]

The post கேரளா பெண்களின் கிரிக்கெட் போட்டி தூதராக கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
 

தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள், கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) தனது மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமித்த முதல் நிகழ்வாக இது அமைகிறது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா T20I போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் வெகு விமரிசையாக தொடங்கி வைத்தார், மேலும் விழாவில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்தவரும் தேசிய அணியில் இடம்பெற்ற வீரரும் ஆன ‘மின்னு மணி’யையும் கௌரவித்தார்.

 

உள்நாட்டுப் போட்டிகளில் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் முதல் தர மற்றும் சூப்பர் லீக் கட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றதற்காக அவர்களை வாழ்த்தினார்.  மேலும் 2017-18 ஆம் ஆண்டில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய T-20 சாம்பியன்ஷிப்பை வென்றது பற்றியும் கேட்டறிந்தார் கீர்த்தி சுரேஷ்.

The post கேரளா பெண்களின் கிரிக்கெட் போட்டி தூதராக கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
அன்பை கொட்டுங்கள் ‘’கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ,! https://touringtalkies.co/thanks-to-those-who-trolled-me-keerthy-suresh-posted-a-video/ Wed, 15 Nov 2023 23:54:37 +0000 https://touringtalkies.co/?p=37953 கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘பைலட்ஸ்’ மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அடுத்து 2013-ம் ஆண்டு இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சர்கார்’ மற்றும் விக்ரம்,ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன்  இணைந்து நடித்துள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையான ’மகா நடிகை’ சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். […]

The post அன்பை கொட்டுங்கள் ‘’கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ,! appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘பைலட்ஸ்’ மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அடுத்து 2013-ம் ஆண்டு இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘பைரவா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சர்கார்’ மற்றும் விக்ரம்,ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன்  இணைந்து நடித்துள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையான ’மகா நடிகை’

சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். கடைசியாக தமிழில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அவர் திரையுலகில் நடிகையாக நுழைந்து  10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திரையுலகில் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னுடைய அப்பா – அம்மாவுக்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். என் குரு ப்ரியதர்ஷனுக்கு நான் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

10 ஆண்டுகள் நிறைவு செய்தாலும், இப்போதுதான் தொடங்கியிருப்பது போல உணர்கிறேன். இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி. என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்களின் விமர்சனங்களும் எனது வளர்ச்சிக்கு உதவியுள்ளது” என்றார். அவர் நடிப்பில் அடுத்து ‘சைரன்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அன்பை கொட்டுங்கள் ‘’கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ,! appeared first on Touring Talkies.

]]>
மீனவப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் https://touringtalkies.co/keerthy-suresh-to-act-as-fisherwoman/ Wed, 23 Aug 2023 04:19:43 +0000 https://touringtalkies.co/?p=35577 பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக ‘கஸ்டடி’ படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இவர், ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ படங்களை இயக்கியவர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகிறது. மீனவர்களின் வாழ்க்கையை பற்றிய இந்தப் படத்துக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மீனவ கிராமத்துக்குச் சென்ற நாக சைதன்யா அவர்களுடன் கடந்த சில நாட்களுக்கு […]

The post மீனவப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் appeared first on Touring Talkies.

]]>
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக ‘கஸ்டடி’ படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இவர், ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ படங்களை இயக்கியவர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை உருவாகிறது. மீனவர்களின் வாழ்க்கையை பற்றிய இந்தப் படத்துக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மீனவ கிராமத்துக்குச் சென்ற நாக சைதன்யா அவர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் உரையாடினார். இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

The post மீனவப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் appeared first on Touring Talkies.

]]>
கீர்த்தி சுரேஷின் ‘கண்ணிவெடி’ https://touringtalkies.co/keerthy-suresh-new-film-kannivedi-pooja/ Sun, 16 Jul 2023 00:15:10 +0000 https://touringtalkies.co/?p=34419 தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்கான ‘போலா சங்கர்’ படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 11-ல் வெளியாகிறது. தமிழில் ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தில் கதாநாயகியாகவும் ‘கே.ஜி.எஃப்’ படத்தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃப்லிம்ஸ் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘ரகு தாத்தா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். மேலும் சந்துரு இயக்கும் படத்திலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் […]

The post கீர்த்தி சுரேஷின் ‘கண்ணிவெடி’ appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்கான ‘போலா சங்கர்’ படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 11-ல் வெளியாகிறது.

தமிழில் ஜெயம் ரவியின் ‘சைரன்’ படத்தில் கதாநாயகியாகவும் ‘கே.ஜி.எஃப்’ படத்தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃப்லிம்ஸ் தமிழில் தயாரிக்கும் முதல் படமான ‘ரகு தாத்தா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். மேலும் சந்துரு இயக்கும் படத்திலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கணேஷ் ராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘கண்ணிவெடி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜே ரக்‌ஷன், நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

The post கீர்த்தி சுரேஷின் ‘கண்ணிவெடி’ appeared first on Touring Talkies.

]]>
கவிஞர் கீர்த்தி சுரேஷ்.. பாராட்டிய கமல் https://touringtalkies.co/poet-keerthy-suresh-appreciated-by-kamal/ Tue, 04 Jul 2023 01:04:56 +0000 https://touringtalkies.co/?p=34058 சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, “நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் புத்திசாலியான பெண், அழகு மட்டும் இருக்க கூடாது, அறிவும் இரக்க வேண்டும். இது கீர்த்தி சுரேஷூக்கு இருக்கிறது” என்று பாராட்டி இருந்தார். இப்படி கீர்த்தி சுரேஷ் குறித்து கமலின் இந்த பாராட்டு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. கமலின் பாராட்டு குறித்து பேசிய சினிமா பத்திரிக்கையாளர் ராஜூ,” கீர்த்தி சுரேஷ் இயல்பாகவே கவிஞர். மலையாளத்தில் சில […]

The post கவிஞர் கீர்த்தி சுரேஷ்.. பாராட்டிய கமல் appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, “நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் புத்திசாலியான பெண், அழகு மட்டும் இருக்க கூடாது, அறிவும் இரக்க வேண்டும். இது கீர்த்தி சுரேஷூக்கு இருக்கிறது” என்று பாராட்டி இருந்தார்.

இப்படி கீர்த்தி சுரேஷ் குறித்து கமலின் இந்த பாராட்டு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

கமலின் பாராட்டு குறித்து பேசிய சினிமா பத்திரிக்கையாளர் ராஜூ,” கீர்த்தி சுரேஷ் இயல்பாகவே கவிஞர். மலையாளத்தில் சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய கவிதை பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா போல் படத்தின் ஷாட்டுக்கு இடையில் புத்தகங்கள் படிப்பார். இதெல்லாம் தெரிந்துதான் கமல்ஹாசன் அவரை பாராட்டியிருப்பார்” என கூறியுள்ளார்.

The post கவிஞர் கீர்த்தி சுரேஷ்.. பாராட்டிய கமல் appeared first on Touring Talkies.

]]>
அரசியலுக்கு வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்! https://touringtalkies.co/actress-keerthy-suresh-is-coming-to-politics/ Sun, 25 Jun 2023 05:16:53 +0000 https://touringtalkies.co/?p=33766 தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக நடித்த ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் வந்தார். தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. இப்போது, சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது. இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட […]

The post அரசியலுக்கு வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடைசியாக நடித்த ‘தேங்க் யூ’, ‘கஸ்டடி’ படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதில் ‘கஸ்டடி’ படம் மூலம் தமிழுக்கும் அவர் வந்தார். தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை.

இப்போது, சந்து மொண்டேட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.

இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி,  தனக்கு அரசியலில் விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். விளையாட்டுக்காக சொன்னாரா, உண்மையாக சொன்னாரா; அப்படி வந்தால் கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா… எந்த மாநில அரசியலுக்குள் வருவார்.. அல்லது தேசிய கட்சியில் இணைவாரா.. என்பது தெரியவில்லை.

படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கார்த்திகேயா 2’ வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்தப் படத்தையும் பான் இந்தியா முறையில் வெளியிட உள்ளனர்.

The post அரசியலுக்கு வருகிறாராம் நடிகை கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பேச மறுத்த கீர்த்தி சுரேஷ்! https://touringtalkies.co/keerthy-suresh-answer-when-reported-asked-to-speak-in-tamil-tirupatih/ Wed, 31 May 2023 00:19:03 +0000 https://touringtalkies.co/?p=32991 தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம், தமிழில் பேசுமாறு செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், ‘திருப்பதியில் இருக்கேனே’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார். இந்தப்  வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

The post தமிழில் பேச மறுத்த கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம், தமிழில் பேசுமாறு செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், ‘திருப்பதியில் இருக்கேனே’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார். இந்தப்  வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

The post தமிழில் பேச மறுத்த கீர்த்தி சுரேஷ்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஆனார் கீர்த்தி சுரேஷ் சகோதரி! https://touringtalkies.co/keerthy-sureshs-sister-became-the-director/ Sat, 27 May 2023 03:06:44 +0000 https://touringtalkies.co/?p=32842 நடிகை மேனகா தமிழில் நிறைய படங்களில் நடித்தவர்.  இவரது மகள்தான் கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளும், கீர்த்தி சுரேஷின் சகோதரியுமான ரேவதி சுரேஷ் தற்போது இயக்குநராகி உள்ளார். தமிழ், மலையாள பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் பிரியதர்ஷனிடம் சில வருடங்களாக ரேவதி சுரேஷ் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், புதிய குறும்படம் ஒன்றை ரேவதி சுரேஷ் இயக்கி உள்ளார். ‘தேங்க் யூ’ என்ற இந்த  படத்தின் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தனது […]

The post இயக்குநர் ஆனார் கீர்த்தி சுரேஷ் சகோதரி! appeared first on Touring Talkies.

]]>
நடிகை மேனகா தமிழில் நிறைய படங்களில் நடித்தவர்.  இவரது மகள்தான் கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளும், கீர்த்தி சுரேஷின் சகோதரியுமான ரேவதி சுரேஷ் தற்போது இயக்குநராகி உள்ளார்.

தமிழ், மலையாள பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் பிரியதர்ஷனிடம் சில வருடங்களாக ரேவதி சுரேஷ் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், புதிய குறும்படம் ஒன்றை ரேவதி சுரேஷ் இயக்கி உள்ளார்.

‘தேங்க் யூ’ என்ற இந்த  படத்தின் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மேலும் இயக்குநரான தனது  சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரேவதி சுரேஷ் ஏற்கனவே மலையாள படம் ஒன்றை தயாரித்துள்ளார். குறும்பட டைரக்டராகி உள்ள ரேவதி சுரேஷ் விரைவில் திரைப்படம்  இயக்கவும்  தயாராகி வருகிறார்.

The post இயக்குநர் ஆனார் கீர்த்தி சுரேஷ் சகோதரி! appeared first on Touring Talkies.

]]>
கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஸ்! https://touringtalkies.co/keerthy-suresh-hot/ Wed, 17 May 2023 16:58:30 +0000 https://touringtalkies.co/?p=32522 The post கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>

The post கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
 சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ் https://touringtalkies.co/keerthy-suresh-praises-actress-samantha/ Tue, 18 Apr 2023 00:40:36 +0000 https://touringtalkies.co/?p=31673 தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக […]

The post  சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ் appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது சமந்தா குறித்த கேள்விக்கு, “நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

The post  சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ் appeared first on Touring Talkies.

]]>