Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Kattil – Touring Talkies https://touringtalkies.co Tue, 07 Nov 2023 10:54:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Kattil – Touring Talkies https://touringtalkies.co 32 32 “பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகின்றன!”:  ‘கட்டில்’ பட விழாவில் வைரமுத்து காட்டம் https://touringtalkies.co/kattil-vairamuthu-oo-lll/ Tue, 07 Nov 2023 10:43:39 +0000 https://touringtalkies.co/?p=37625 Maple Leafs Productions தயாரிக்க, இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.  எடிட்டர் பி.லெனனின் கதை திரைக்கதை எழுத, வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். இவ்விழாவினில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது: “தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர். என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக  பயணித்து வருகிறார் அவர் என் அன்புக்குரியவர். அவர் இயக்கி நடித்துள்ள கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் […]

The post “பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகின்றன!”:  ‘கட்டில்’ பட விழாவில் வைரமுத்து காட்டம் appeared first on Touring Talkies.

]]>
Maple Leafs Productions தயாரிக்க, இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.  எடிட்டர் பி.லெனனின் கதை திரைக்கதை எழுத, வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர்.

இவ்விழாவினில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது:

“தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர். என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக  பயணித்து வருகிறார் அவர் என் அன்புக்குரியவர்.

அவர் இயக்கி நடித்துள்ள கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும்.

பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள்  ஆனால் இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு .இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும்  என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதற்குத்தான் ஆசைப்படுகிறோம்.

கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன், அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன், விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார், ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு  நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார்.

காட்டில் சிங்கம், புலி போன்ற வலிய விலங்குகள் மட்டுமல்ல.. எளிய சிறு விலங்குகளும் வாழும். அதே போல கட்டில் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகி வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறும்.  வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று வைரமுத்து பேசினார்.

The post “பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகின்றன!”:  ‘கட்டில்’ பட விழாவில் வைரமுத்து காட்டம் appeared first on Touring Talkies.

]]>
கட்டில் படத்தின் வயவா-ப்ரோமோ https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8d/ Fri, 20 Jan 2023 08:47:59 +0000 https://touringtalkies.co/?p=29653 இன்று வெளியாகும் கட்டில் திரைப்பட இரண்டாம் பாடல் வயவா ப்ரோமோ வெளியாகியுள்ளது. இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கட்டில். பாரம்பரியத்தின் பெருமையை கூறும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தற்போது கட்டில் திரைப்படத்தின் வெள்ளிக்கிழமை இன்று மாலை 5 மணிக்கு ரிலிசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வயவா பாடலுக்கான Promo Song வெளியிடப்பட்டுள்ளது.

The post கட்டில் படத்தின் வயவா-ப்ரோமோ appeared first on Touring Talkies.

]]>

இன்று வெளியாகும் கட்டில் திரைப்பட இரண்டாம் பாடல் வயவா ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கட்டில். பாரம்பரியத்தின் பெருமையை கூறும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். தற்போது கட்டில் திரைப்படத்தின் வெள்ளிக்கிழமை இன்று மாலை 5 மணிக்கு ரிலிசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வயவா பாடலுக்கான Promo Song வெளியிடப்பட்டுள்ளது.

The post கட்டில் படத்தின் வயவா-ப்ரோமோ appeared first on Touring Talkies.

]]>
நான்கு மொழிகளிலும் அசத்திய பாடகர் சித்ஸ்ரீராம்! https://touringtalkies.co/sid-sriram-sung-a-song-4-language-kattil/ Wed, 04 Jan 2023 02:26:15 +0000 https://touringtalkies.co/?p=29143 இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள திரைப்படம், கட்டில். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையில் வைரமுத்து (தமிழுக்கு) பாடல்களை எழுதி உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு செய்தி தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், பாடகர் சித்ஶ்ரீராம்  தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பாடிய, கோவிலிலே.. பாடல் வெளியிடப்பட்டது. வெளியான பதினைந்து மணி நேரத்தில், 14 லட்சம் […]

The post நான்கு மொழிகளிலும் அசத்திய பாடகர் சித்ஸ்ரீராம்! appeared first on Touring Talkies.

]]>
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள திரைப்படம், கட்டில். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையில் வைரமுத்து (தமிழுக்கு) பாடல்களை எழுதி உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு செய்தி தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதில், பாடகர் சித்ஶ்ரீராம்  தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பாடிய, கோவிலிலே.. பாடல் வெளியிடப்பட்டது.

வெளியான பதினைந்து மணி நேரத்தில், 14 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இது குறித்து சித்ஸ்ரீராம்,”மிகவும் உணர்வு மிக்க பாடல்களாக நான்கு மொழிகளிலும் அமைந்துள்ளது. நான் மிகவும் நேசித்து மிகுந்த ஈடுபாடு கொண்டு இதில் பாடியுள்ளேன். படமும் பாடலும் நான்கு மொழிகளில் வெற்றிபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து பாடலை கேளுங்கள்.. பாருங்கள்..:

The post நான்கு மொழிகளிலும் அசத்திய பாடகர் சித்ஸ்ரீராம்! appeared first on Touring Talkies.

]]>
4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! https://touringtalkies.co/4-5-16-21-record-breaking-kattil-songs-released/ Fri, 30 Dec 2022 03:36:55 +0000 https://touringtalkies.co/?p=29010 நடிகர், இயக்குநர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ர் இ.வி.கணேஷ்பாபு ‘ஆட்டோகிராஃப்’, ‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘ஆனந்தபுரத்து வீடு’,‘மொழி’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் தனித்துவப் பாணியில் முத்திரை பதித்துள்ளார். இவர் நடித்து, இயக்கி தயாரித்துள்ள படம், ‘கட்டில்’. எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியர் ஷ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் […]

The post 4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
நடிகர், இயக்குநர், கவிஞர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ர் இ.வி.கணேஷ்பாபு ‘ஆட்டோகிராஃப்’, ‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘ஆனந்தபுரத்து வீடு’,‘மொழி’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் தனித்துவப் பாணியில் முத்திரை பதித்துள்ளார்.

இவர் நடித்து, இயக்கி தயாரித்துள்ள படம், ‘கட்டில்’.

எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியர் ஷ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கட்டில்’ திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு, மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளது.

படத்துக்கு இசை அமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, பாடல் எழுதியிருக்கும் வைரமுத்து, இயக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு மூவரும் இணைந்து பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

4 மொழிகளில் 5 பாடலாசிரியர்கள் எழுத 16 பாடல்களை 21 பாடகர்கள் பாடியுள்ளனர். இந்த பாடல்களின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

The post 4 /5/ 16/ 21: சாதனை படைத்த ‘கட்டில்’ பாடல்கள் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>