Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kannada cinema – Touring Talkies https://touringtalkies.co Mon, 27 May 2024 10:10:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kannada cinema – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஆடியோ உரிமமே இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள “கேடி: தி டெவில்” திரைப்படம்! https://touringtalkies.co/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf/ Mon, 27 May 2024 10:08:00 +0000 https://touringtalkies.co/?p=43927 இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்குப் மத்தியில் KVN Productions தயாரிப்பில் உருவாகும் திரைப்படம்”கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்” இப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வரவிருக்கிறது. இந்த ஆக்சன் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகுந்து இருக்கிறது. 1970களில் பெங்களூரில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆடியோ உரிமைகள் மட்டும், ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான ஆனந்த் ஆடியோ நிறுவனம் இந்த உரிமைகளை பெற்றுள்ளது. இப்படம் வெளியாவதற்கு ரசிகர்கள் […]

The post ஆடியோ உரிமமே இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள “கேடி: தி டெவில்” திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்குப் மத்தியில் KVN Productions தயாரிப்பில் உருவாகும் திரைப்படம்”கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்” இப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வரவிருக்கிறது. இந்த ஆக்சன் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகுந்து இருக்கிறது.

1970களில் பெங்களூரில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஆடியோ உரிமைகள் மட்டும், ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான ஆனந்த் ஆடியோ நிறுவனம் இந்த உரிமைகளை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதன் முதல் பாடல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களாக இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படம் பான்-இந்தியா அளவில், ஒரு புதுமையான திரை அனுபவமாக உருவாகியுள்ளது.

“கேடி – தி டெவில்” 1970களின் பெங்களூர் நகரின் தெருக்களை மீண்டும் நம் கண்முன் கொண்டுவரும், வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையாக கொண்ட பரபரப்பான சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது.KVN Productions வழங்கும் “கேடி – தி டெவில்” படத்தை இயக்குனர் பிரேம் இயக்கியுள்ளார். இந்த பன்மொழி திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

The post ஆடியோ உரிமமே இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள “கேடி: தி டெவில்” திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/ Thu, 16 May 2024 11:55:36 +0000 https://touringtalkies.co/?p=43094 நடிகை அனுஷ்கா 2005ஆம் ஆண்டு தெலுங்கில் சூப்பர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அவர் வரவேற்பையும் புகழையும் அருந்ததி படத்தில் நடித்ததனால் பெற்றார். அந்த பேய் படத்தில் அவருடைய நடிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றது. ஹீரோவுக்கு இணையாக அவர் பெற்ற வரவேற்பும் குறிப்பிடத்தக்கது. அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முக்கிய கதாநாயகியாக வலம் வந்ததால், அவருக்கு அதிகமான பாராட்டுகள் கிடைத்தன. அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியாக இருந்தார். அதன் […]

The post அனுஷ்காவுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகை அனுஷ்கா 2005ஆம் ஆண்டு தெலுங்கில் சூப்பர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அவர் வரவேற்பையும் புகழையும் அருந்ததி படத்தில் நடித்ததனால் பெற்றார். அந்த பேய் படத்தில் அவருடைய நடிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றது. ஹீரோவுக்கு இணையாக அவர் பெற்ற வரவேற்பும் குறிப்பிடத்தக்கது. அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முக்கிய கதாநாயகியாக வலம் வந்ததால், அவருக்கு அதிகமான பாராட்டுகள் கிடைத்தன.

அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியாக இருந்தார். அதன் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரு பாகங்களும் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்த படத்தில் அனுஷ்காவின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டு மழையை பொழிய செய்தது.

அனுஷ்கா சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தார்.பின்னர் நீண்ட நாடுகள் கழித்து அவர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த ஆண்டு வெளியானது.ஜவான் படத்துடன் ஒரே நேரத்தில் வந்ததால், ரசிகர்களால் இவரின் படத்துக்கு எதிர்பார்ப்பு குறைந்தது. ஆனால், அது ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது.

இந்நிலையில் 42 வயதான அனுஷ்கா இன்னும் திருமணம் செய்யவில்லை.அவர் பிரபாஸை காதலித்தார் என்ற பேச்சு இருந்தது, ஆனால் அவர் இதுவரை மௌனமாகவே இருந்தார்.தற்போதைய தகவலின்படி, கர்நாடக திரையுலகத்தில் பிரபலமான தயாரிப்பாளருடன் அனுஷ்கா திருமணம் செய்யவிருப்பாதகவும் மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அனுஷ்காவுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கன்னட சினிமாவில் கால் பதிக்கிறாரா நயன்தாரா? யாஷ்க்கு அக்காவாக நடிக்க கேட்ட டபுள் சம்பளம்… https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/ Thu, 09 May 2024 06:23:39 +0000 https://touringtalkies.co/?p=42536 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.என்னதான் பாலிவுட்டில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே நயன்தாரா கமிட் ஆகியுள்ளார். அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்த கீதா மோகன்தாஸ் […]

The post கன்னட சினிமாவில் கால் பதிக்கிறாரா நயன்தாரா? யாஷ்க்கு அக்காவாக நடிக்க கேட்ட டபுள் சம்பளம்… appeared first on Touring Talkies.

]]>
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.என்னதான் பாலிவுட்டில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி என இரண்டு தமிழ் படங்கள் மட்டுமே நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.

அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்த கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் யஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

டாக்ஸிக் படத்தில் யாஷ்க்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் தற்போது விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கரீனா கபூருக்கு பதிலாக நடிகை நயன்தாராவை யஷ்ஷின் அக்காவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் இந்த படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நயன்தாரா தற்போது அவருடைய சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளார்.புதிய படங்களுக்கு 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.கேஜிஎஃப் பட நாயகன் யஷ் படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 20 கோடி ரூபாய் சம்பளம் நயன்தாரா கேட்டதாக கூறப்படும் நிலையில் அந்த கதாபாத்திரம் படத்திற்கே முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நயன்தாரா கேட்கும் தொகையைக் கொடுத்து நடிக்க வைப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post கன்னட சினிமாவில் கால் பதிக்கிறாரா நயன்தாரா? யாஷ்க்கு அக்காவாக நடிக்க கேட்ட டபுள் சம்பளம்… appeared first on Touring Talkies.

]]>
ஓட்டுப்போட வந்த கேஜிஎஃப் ராக்கி! யாஷ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்… https://touringtalkies.co/%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d/ Sat, 27 Apr 2024 10:55:00 +0000 https://touringtalkies.co/?p=41539 யாஷ்-ஐ இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய திரைப்படம் தான் கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.கேஜிஎஃப் 3 படத்தின் அப்டேட்களை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். தற்போது நடிகர் யாஷ் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் அடுத்ததாக டாக்ஸிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான யுவா […]

The post ஓட்டுப்போட வந்த கேஜிஎஃப் ராக்கி! யாஷ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்… appeared first on Touring Talkies.

]]>
யாஷ்-ஐ இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய திரைப்படம் தான் கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.கேஜிஎஃப் 3 படத்தின் அப்டேட்களை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

தற்போது நடிகர் யாஷ் நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் அடுத்ததாக டாக்ஸிக் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான யுவா என்ற‌ திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. மற்றபடி கன்னடத்தில் திரைப்படங்களின் இந்த வருட நிலை மந்தமாக உள்ளது.

கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடைந்த நிலையில் கர்நாடகாவில் பிரபலமான நட்சத்திரங்களான பிரகாஷ் ராஜ், யாஷ், கிச்சா சுதீப் உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர்.

அதே போல கேரளாவிலும் நடந்த வாக்குப்பதிவில் மம்மூட்டி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.நடிகர் யாஷ் வாக்கு செலுத்திய பின்னர் மீடியாவை சந்தித்து அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கேஜிஎஃப் படத்தின் ஹீரோ என்ட்ரி போல வந்த அவரை ரசிகர்கள் வெள்ளம் சூழ்ந்து கொண்டது.நடிகர் ரஜினிகாந்தின் பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதம் கதம் என சொல்லும்போது கொடுக்கும் போஸ்-ஐ ஓட்டுப் போட்ட விரலை கொண்டு யாஷ் காட்டியுள்ளார்.

The post ஓட்டுப்போட வந்த கேஜிஎஃப் ராக்கி! யாஷ் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி போஸ்… appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/ Thu, 25 Apr 2024 13:07:10 +0000 https://touringtalkies.co/?p=41415 ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியபோது தான் அதிரடியாக வெளியானது வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி.இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி […]

The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியபோது தான் அதிரடியாக வெளியானது வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி.இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதே கூலி தலைப்பில் அமிதாப் பச்சன் ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.

அதாவது அவர், தமிழில் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளிவந்த கூலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை அதோபோல் அமிதாப் பச்சன் கூலி என்கிற பெயரில் ஹிந்தியில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.

அந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அச்சமயத்தில் ஃபைட் மாஸ்டர் அமிதாப் பச்சனை எட்டி உதைக்க போது அமிதாப் அருகில் இருக்கக்கூடிய நாற்காலியில் விழ வேண்டும் அப்படி உதைக்கும் போது அமிதாப் பச்சனை சற்று ஃபைட் மாஸ்டர் கொஞ்சம் ஓங்கி மிதிக்க அமிதாப் நேராக சென்று அந்த சேரில் விழுந்தார். அப்போது அந்த சேரின் ஏதோ ஒரு கூர்மையான பகுதி அமிதாப்பின் விலா எலும்பில் குத்தி ரத்தமாக வடிந்துள்ளது.

அப்படியே மயக்க நிலைக்கு சென்ற அமிதாப் பச்சனை கண்டு படக்குழுவும் அதிர்ச்சியாகியது அந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான மருத்துவ வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து வசதி உடனடியாக இல்லை. அமிதாப் பச்சன்க்கு ஏற்பட்ட விபத்து பற்றி விஷயத்தை அறிந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு ப்ரைவேட் ஹெலிகாப்டரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்து அமிதாப்பை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினார்.இந்த விபத்தால் மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் எனவும் அப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது எனவும் பகிர்ந்து உள்ளார்.

The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.

]]>
“குல தெய்வங்களின் கதைதான் இந்தப் படம்” – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி https://touringtalkies.co/this-film-is-the-story-of-clan-gods-gandhara-director-rishabh-shetty-interview/ Sat, 15 Oct 2022 14:49:05 +0000 https://touringtalkies.co/?p=25463 ‘கே.ஜி.எஃப்.’ பிரம்மாண்டமான வெற்றிப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

The post “குல தெய்வங்களின் கதைதான் இந்தப் படம்” – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி appeared first on Touring Talkies.

]]>
கே.ஜி.எஃப்.’ பிரம்மாண்டமான வெற்றிப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’.

இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கிறார். இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார்

அப்போது அவர் பேசும்போது, “இந்தக் ‘காந்தாரா’ அடர்ந்த வனத்தினூடாக இருக்கும் மர்மமான பகுதி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கர்நாடகாவில் இது குறித்த நம்பிக்கை இருந்து வருகிறது.  மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். இந்தப் படத்தை என்னுடைய சொந்த ஊரில்தான் படப்பிடிப்பு நடத்தினேன். நான் சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ… அதனைத்தான் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன்.

அப்பொழுது இருந்த சமூகம்… மக்களின் நம்பிக்கை… நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்திதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்கள்’ என்றும், ‘குல தெய்வங்களும்’ உண்டு. அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்தான் நாங்கள்.

காவல் தெய்வங்கள்தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன்.

இந்தக் ‘காந்தாரா’ படத்தில் இடம் பெற்றிருப்பதுபோல் நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.  இது தற்போது எம்மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதைவிட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன்.

இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்திதான் இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என்றார்.

The post “குல தெய்வங்களின் கதைதான் இந்தப் படம்” – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேட்டி appeared first on Touring Talkies.

]]>