Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kamal haasan – Touring Talkies https://touringtalkies.co Tue, 07 May 2024 05:27:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kamal haasan – Touring Talkies https://touringtalkies.co 32 32 தக் லைஃப் படத்தில் களமிறங்கும் மற்றொரு பிரபலம்… நாளை வெளியாகும் அசத்தல் அப்டேட்! https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b1/ Tue, 07 May 2024 05:27:53 +0000 https://touringtalkies.co/?p=42336 இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தான் தக் லைஃப். நாயகன் படத்தை தொடர்ந்து 36 ஆண்டுகள் பிறகு மீண்டும் கமல்ஹாசன் மணிரத்னம் இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்ல் இருந்து ஃபோட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. வெளியான இந்த புகைப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் உள்ளனர்.அதில் கமல்ஹாசனின் சத்யா பட […]

The post தக் லைஃப் படத்தில் களமிறங்கும் மற்றொரு பிரபலம்… நாளை வெளியாகும் அசத்தல் அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தான் தக் லைஃப். நாயகன் படத்தை தொடர்ந்து 36 ஆண்டுகள் பிறகு மீண்டும் கமல்ஹாசன் மணிரத்னம் இணைந்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்ல் இருந்து ஃபோட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

வெளியான இந்த புகைப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் உள்ளனர்.அதில் கமல்ஹாசனின் சத்யா பட லுக்கில் கமல் காணப்படுகிறார். முன்னதாக வெளியான இந்தப் படத்தின் டைட்டில் பிரமோவில் நீண்ட தாடி மற்றும் தலைமுடியுடன் காணப்பட்ட கமல்ஹாசன், தற்போது ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் நியூ லுக்கில் இருக்கிறார்.

தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்திருந்த சூழலில் அவர்கள் இருவரும் படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.தற்போது ராஜ்கமல் இன்டர்நேஷனல் பதிவுகளில் இவர்கள் இருவரின் பெயர்கள் டேக்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதை காணும் போதே இவர்கள் இருவரும் நடிக்க வாய்பில்லை என்றவாறு கூறப்படுகிறது.

அதே சமயம் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு இந்த படத்தில் களமிறங்கியுள்ள சூழலில் ஜெயம் ரவிக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இதில் அரவிந்த்சாமி, அசோக் செல்வன் ஆகியோர் இப்படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படக்குழு சார்பில் நாளை வெளியாகவுள்ள அப்டேட்டில் ஜெயம் ரவிக்கு பதிலாக படத்தில் இணையுள்ள நடிகர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post தக் லைஃப் படத்தில் களமிறங்கும் மற்றொரு பிரபலம்… நாளை வெளியாகும் அசத்தல் அப்டேட்! appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? https://touringtalkies.co/%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87/ Sat, 04 May 2024 12:24:48 +0000 https://touringtalkies.co/?p=42203 பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் இப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் திரைப்படத்தில் இந்தியன் 2 படம் தொடர் சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு செய்தார்கள்.பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் […]

The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.

]]>
பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் இப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் திரைப்படத்தில் இந்தியன் 2 படம் தொடர் சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு செய்தார்கள்.பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என கூறப்படுகிறது.

அதாவது அந்த பாடல் இந்த படத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர் சங்கர்.மிகப்பெரிய செலவில் அப்படாலை எடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி உள்ள நிலையில் இது குறித்து‌லைக்கா-விடம் பேசிய போது அவர் அந்தப் பாடலை வேண்டாம் என சொன்னதாக சொல்லப்படுகிறது.

இப்போது நிதி நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் பநீங்கள் சொல்றபடி எல்லாம் ஒரு பாட்டுக்காக அவ்வளவு செலவு பண்ண வாய்ப்பு இல்லை என கூறிய இயக்குனர் சங்கர்-க்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளதாம்.இதனால் இந்த பாடல் இல்லாமல் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண முடியாத நிலைமையில் சங்கர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்பிரச்சனையை சரி செய்து பாடலை உள்ளே கொண்டு வந்து படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறாராம் ஆனால் இப்படம் கடைசி வரை வருமா வராதா என ரசிகர்கள் கேள்விகளை குவித்து வருகின்றனர்.

The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்… உத்தமவில்லன் பட விவகாரம்! https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b9%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/ Fri, 03 May 2024 06:18:45 +0000 https://touringtalkies.co/?p=42060 கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் உத்தமவில்லன்.கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன்.இந்தப் படத்தின் கதை வித்தியாசமான வகையில் உயிரிழக்கும் தருவாயில் ஒரு கலைஞன் தன்னுடைய கடைசி ஆசையாக தான் விரும்பும் கதைக்களத்தில் நடிப்பதாக இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இயக்குனருய் தயாரிப்பாளருமான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் உத்தமவில்லன் படத்தை தயாரித்திருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்ததைப் போல இல்லாமல் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு […]

The post கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்… உத்தமவில்லன் பட விவகாரம்! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் உத்தமவில்லன்.கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன்.இந்தப் படத்தின் கதை வித்தியாசமான வகையில் உயிரிழக்கும் தருவாயில் ஒரு கலைஞன் தன்னுடைய கடைசி ஆசையாக தான் விரும்பும் கதைக்களத்தில் நடிப்பதாக இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இயக்குனருய் தயாரிப்பாளருமான லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் உத்தமவில்லன் படத்தை தயாரித்திருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்ததைப் போல இல்லாமல் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்ததாக சொல்லப்பட்டது.

கிட்டத்தட்ட படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை நடிகர் கமல்ஹாசன் இது குறித்து எந்த விதமான பதிலும் ‌தகவலும் அளிக்காமல் இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது,‌ தயாரிப்பாளர் சங்கம் நடிகர் கமல்ஹாசனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர் உறுதியளித்தப்படி தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்று இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்… உத்தமவில்லன் பட விவகாரம்! appeared first on Touring Talkies.

]]>
பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 !‌ எப்போ எங்க தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5/ Mon, 29 Apr 2024 10:24:03 +0000 https://touringtalkies.co/?p=41645 நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்குப் பிறகு, அவர் அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக, இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன. நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம்ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் […]

The post பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 !‌ எப்போ எங்க தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்குப் பிறகு, அவர் அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக, இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.

நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம்
ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்தப் படத்தில் ஒரு பாடல் படமாக்கம் இன்னும் முடியாமல் இருப்பதால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.இந்தியன் படத்தை போல இந்தியன் 2 படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, படக்குழு சார்பில் தகவல்கள் என்ன என்றால், மே 16ஆம் தேதியன்று, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் தனது படங்களை மட்டுமல்லாமல், இசை வெளியீடுகளையும் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடுவார். அந்த வகையில், இந்த படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

The post பிரமாண்ட இசைவெளியீட்டு விழாவிற்கு தயாராகும் இந்தியன் 2 !‌ எப்போ எங்க தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Tue, 16 Apr 2024 08:24:18 +0000 https://touringtalkies.co/?p=41019 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம். இப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை முடித்துவிட்டார் கமல்.இந்த ஆண்டிலேயே இந்தியன் 2 ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.தக் லைஃப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், […]

The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம். இப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை முடித்துவிட்டார் கமல்.இந்த ஆண்டிலேயே இந்தியன் 2 ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.தக் லைஃப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் திட்டமிடப்பட்டது.ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

இந்நிலையில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் அடுத்தடுத்து படங்களில் இருந்து விலகினர்.ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் வெகுவாக நடந்த நிலையில் எடுக்கப்பட்ட படத்தின் நீளத்தால் இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டாக உருவாகியுள்ளது.

இதற்கிடையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவிக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி இப்படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் இணையவுள்ளதாகவும் அதேசமயம் சிம்புவும் இந்தப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவுகின்றது.தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.

]]>
தள்ளி போன கல்கி 2898-ஏடி! காத்திருப்பில் ரசிகர்கள்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-2898-%e0%ae%8f%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Thu, 11 Apr 2024 11:21:35 +0000 https://touringtalkies.co/?p=40887 மிகவும் பிரமாண்டமாக இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கல்கி 2898-ஏடி. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இந்த திரைப்படம் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்படத்தினாகன இசையை அமைக்கிறார்.வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. […]

The post தள்ளி போன கல்கி 2898-ஏடி! காத்திருப்பில் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
மிகவும் பிரமாண்டமாக இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கல்கி 2898-ஏடி. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.பான் இந்தியா படமாக வெளிவரவுள்ள இந்த திரைப்படம் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இப்படத்தினாகன இசையை அமைக்கிறார்.வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

செயின் ஃபிக்சன் திரைக்கதையாக இப்படம் தயாராகிறது.இதற்கு முன்னர் ‘கல்கி 2898- ஏடி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரையும் ஈர்த்தது.அதேபோல் ஒரு புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்த வீடியோவும் வெளியாகி பெரிதும் கவர்ந்தது.

வருகின்ற மே 9ல் இப்படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஆனால் ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைப்பெற உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளி போய் படம் வெளிவர தாமதமாகி ஆகியுள்ளது.அதே சமயம் பெரும் காத்திருப்பை ஏற்படுத்தியுள்ள கல்கி 2898-ஏடி படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி வரும் ஏப்ரல் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

The post தள்ளி போன கல்கி 2898-ஏடி! காத்திருப்பில் ரசிகர்கள்… appeared first on Touring Talkies.

]]>
திருமணம் எப்போது? – நடிகை ஸ்ருதிஹாசன் பதில் https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%b8/ Wed, 27 Mar 2024 07:46:56 +0000 https://touringtalkies.co/?p=40321 சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுருதி ஹாசன், தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பிரமாண்ட தயாரிப்பில் வெளியான ‘சலார்’ இந்திப் படத்தில் நாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன், அவ்வப்போது பாடல் எழுதி பாடி இசை அமைக்கவும் செய்தார். இந்த நிலையில் அவரது தந்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘இனிமேல்’ என்கிற இசை ஆல்பத்திற்கு இசையமைத்து பாடியவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அதில் […]

The post திருமணம் எப்போது? – நடிகை ஸ்ருதிஹாசன் பதில் appeared first on Touring Talkies.

]]>
சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுருதி ஹாசன், தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பிரமாண்ட தயாரிப்பில் வெளியான ‘சலார்’ இந்திப் படத்தில் நாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன், அவ்வப்போது பாடல் எழுதி பாடி இசை அமைக்கவும் செய்தார்.

இந்த நிலையில் அவரது தந்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘இனிமேல்’ என்கிற இசை ஆல்பத்திற்கு இசையமைத்து பாடியவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அதில் நெருக்கமாகவும் நடித்திருந்தார்.

அந்த இசை ஆல்பத்தில் காதல், திருமணம், சண்டை என்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இனிமேல்’ இசை ஆல்பம் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜுடன் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம், ” உங்கள் திருமணம் எப்போது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

“எப்போது திருமணம் என்று தெரியவில்லை. எனக்கு இப்போது அதில் ஆர்வம் இல்லை” என்று ஸ்ருதிஹாசன் பதிலளித்தார்.

திருமணம் என்ற கேள்வி வந்தாலே நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் சற்று கோபத்துடன் தான் பதில் அளிப்பார். இந்த முறை அவர் கோபப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட “ஏன் நடிகைகளிடம் மட்டும் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். வேறு கேள்வி இல்லையா?” என்பது போல பேசி இருந்தார்.

நடிகை சுருதி ஹாசனுக்கு இப்போது 38 வயதாகிறது. அவர் சாந்தனு ஹசாரி என்பவரை காதலித்து வந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

The post திருமணம் எப்போது? – நடிகை ஸ்ருதிஹாசன் பதில் appeared first on Touring Talkies.

]]>
ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… https://touringtalkies.co/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95/ Sat, 23 Mar 2024 05:20:16 +0000 https://touringtalkies.co/?p=40096 பல கால இடைவெளிக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் மீண்டும் இணைந்துள்ளனர்.மணிரத்தினம் கமல் கூட்டணியில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தோடு தக் லைஃப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், தக் லைஃப்” படம் பற்றிய சில அப்டேட்கள் கிடைத்துள்ளது. உலக நாயகன் கமல் மட்டும் இன்றி அவருடன் நடிகை திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், விருமாண்டி பட அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது […]

The post ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
பல கால இடைவெளிக்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்தினம் மீண்டும் இணைந்துள்ளனர்.மணிரத்தினம் கமல் கூட்டணியில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தோடு தக் லைஃப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், தக் லைஃப்” படம் பற்றிய சில அப்டேட்கள் கிடைத்துள்ளது.

உலக நாயகன் கமல் மட்டும் இன்றி அவருடன் நடிகை திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், விருமாண்டி பட அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது ‘தக் லைஃப்’ படத்தினை பற்றிய அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியாய் அமைந்தது. கமலின் மார்கெட் வேல்யூ டாப் ஆக செல்ல காரணம் விக்ரம் திரைப்படத்தின் சூப்பரான வசூல் தான்.நடிகர் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் அசத்தும் உலகநாயகன் கமல், விக்ரம் படத்தினை தொடர்ந்து யாரோடு இவர் இணைய போகிறார் என எதிர்பார்பு இருந்து வந்தது.

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்திற்கு கமிட் ஆனார். இந்தியன்-2 படப்பிடிப்பை முடித்துவிட்ட கமல் நீண்ட கால இடைவெளிக்கு பின் மணி ரத்னத்துடன் இணைந்து அவரின் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த அன்று முதல் இன்று வரை கொண்டாடும் டாப் கிளாசிக் திரைப்படம் தான் நாயகன். இதைவிட பலமடங்கு எதிர்பார்ப்பு இந்த தக் லைஃப் படத்தின் மீது எழுந்துள்ளது.

தக் லைஃப் படத்தின் அப்டேட் என்னவென்றால் ஒரு கதாப்பாத்திரம் என்றாலே உலக நாயகன் நடிப்பில் துவம்சம் செய்வார் தற்போது மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் என்றால் சொல்லவா வேண்டும்.இந்த அப்டேட் தெரிந்த ரசிகர்கள் தக் லைஃப் படத்தின் கொண்டாட்டத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

The post ஒன்றல்ல மூன்று ! கமலின் ‘தக் லைஃப்’ லீக்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் https://touringtalkies.co/kamal-haasan-maniratnam-thug-life-shooting-started/ Wed, 24 Jan 2024 02:15:01 +0000 https://touringtalkies.co/?p=39368 ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் […]

The post மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் appeared first on Touring Talkies.

]]>
‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இதற்கான அப்டேட்டை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிடும் என்று தெரிகிறது.

இப்படத்தைத் தவிர ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார்.

The post மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம் appeared first on Touring Talkies.

]]>
“எங்களுக்கு முன் இப்படி நட்பு கொண்டவர் எவரும் இல்லை!: ரஜினி குறித்து கமல்! https://touringtalkies.co/kamal-haasan-wins-the-best-playback-singer-and-best-actor-tamil-for-vikram-at-siima-awards/ Mon, 18 Sep 2023 07:23:08 +0000 https://touringtalkies.co/?p=36337 துபாயில் ‘சீமா விருது விழா2023’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் (விக்ரம்), சிறந்த பின்னணி பாடகர் (பத்தல பத்தல) விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற பின் பேசிய நடிகர் கமல்ஹாசன் “நான் 13, 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் கூறினேன். ‘ரஜினியைப்போலவும், என்னைப்போலவும் நட்பு கொண்டவர்கள் இதற்கு முன்பு இருந்த தலைமுறையினரிடத்தில் இல்லை’ என்றேன். அந்த சவாலை நான் பின்னோக்கி சொன்னதற்கு காரணம், இதிலிருந்து வரும் தலைமுறை இன்னும் மேம்பட வேண்டும் என்பது […]

The post “எங்களுக்கு முன் இப்படி நட்பு கொண்டவர் எவரும் இல்லை!: ரஜினி குறித்து கமல்! appeared first on Touring Talkies.

]]>
துபாயில் ‘சீமா விருது விழா2023’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் (விக்ரம்), சிறந்த பின்னணி பாடகர் (பத்தல பத்தல) விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற பின் பேசிய நடிகர் கமல்ஹாசன் “நான் 13, 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் கூறினேன்.

‘ரஜினியைப்போலவும், என்னைப்போலவும் நட்பு கொண்டவர்கள் இதற்கு முன்பு இருந்த தலைமுறையினரிடத்தில் இல்லை’ என்றேன். அந்த சவாலை நான் பின்னோக்கி சொன்னதற்கு காரணம், இதிலிருந்து வரும் தலைமுறை இன்னும் மேம்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய ரசிகர் (லோகேஷ் கனகராஜ்), என்னுடைய நண்பருக்கு (ரஜினி) படம் பண்ணுவது எனக்குத் தானே பெருமை. அது யாருக்கும் புரியவில்லை.  எங்களுக்குள் இருக்கும் போட்டி ஆரோக்கியமானது” என்றார்.

The post “எங்களுக்கு முன் இப்படி நட்பு கொண்டவர் எவரும் இல்லை!: ரஜினி குறித்து கமல்! appeared first on Touring Talkies.

]]>