Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Kalyan directed – Touring Talkies https://touringtalkies.co Fri, 24 Nov 2023 17:57:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Kalyan directed – Touring Talkies https://touringtalkies.co 32 32 பில்டப் திரைவிமர்சனம் https://touringtalkies.co/buildup-review/ Sat, 25 Nov 2023 00:48:38 +0000 https://touringtalkies.co/?p=38233 கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, நடிப்பில்  வெளியாகியிருக்கும் திரைப்படம் பில்டப். மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையில் ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை 1980-90களில் நடக்கிறது. ஜமீன் பரம்பரையான சுந்தர் ராஜனின் குடும்பம். இவரது மகனாக வருகிறார் ஆடுகளம் நரேன். இவருக்கு மகனாக வருகிறார் சந்தானம். சுந்தர் ராஜன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். பேரன் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். […]

The post பில்டப் திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, நடிப்பில்  வெளியாகியிருக்கும் திரைப்படம் பில்டப். மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையில் ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை 1980-90களில் நடக்கிறது. ஜமீன் பரம்பரையான சுந்தர் ராஜனின் குடும்பம். இவரது மகனாக வருகிறார் ஆடுகளம் நரேன். இவருக்கு மகனாக வருகிறார் சந்தானம். சுந்தர் ராஜன் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். பேரன் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்.

அவ்வபோது தாத்தாவிற்கும் பேரனுக்கும் செல்ல சண்டைகள் வரும். இந்நிலையில், சுந்தர் ராஜனின் வீட்டில் அரசர் காலத்து கத்தி ஒன்றில் புதையலுக்கான ரகசியம் இருக்கிறது. அதைப் பற்றி மன்சூர் அலிகான் டீம் தெரிந்து கொண்டு அதை கைப்பற்ற வருகிறது.

தாத்தாவான சுந்தர் ராஜனிடம் அதற்குபதிலாக வைரக்கற்கள் தருவதாக கூற, அது கற்கண்டு என்று அதை விழுங்கி விட, சுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.

இந்த சூழலில் நாயகி ராதிகா ப்ரீத்தி துக்கம் கேட்க குடும்பத்துடன் வருகிறார். இவரை பார்த்ததும் காதல் கொள்கிறார்.

கீரியும் பூனையுமாக எப்போதும் சண்டை போடும் சந்தானமும் அவரது தங்கையும் ஒரு சவால் விடுகின்றனர். தாத்தாவின் உடலை எடுப்பதற்குள் ராதிகாவை ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று தனது தங்கையிடம் சவால் விடுகிறார் சந்தானம்.

இந்த  சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் .

நடிகர் சந்தானம் கதைக்கு என்ன தேவையோ அதை அளவோடு கொடுத்திருக்கிறார். நகைச்சுவை கலந்த நடிப்பால் நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்.

நாயகி ராதிகா ப்ரீத்தி, பார்ப்பதற்கு அழகாகவும், கதைக்கு தகுந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். சந்தானத்திற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் ராதிகா.

இந்த படத்தின்  ஆனந்த ராஜ் மிகப் அற்புதமான நடிப்பை அர்பணிப்புடன் செய்திருக்கிறார் மற்றும் ஆடுகளம் நரேன்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலை எகிற வைக்கிறது குடிகாரனாக ஆடுகளம் நரேனும் பெண் வேடமிட்டு ஆனந்தராஜும் தங்களது காமெடி சரவெடியை சிதற விட்டிருக்கிறார்கள்.

மயில்சாமி, சாமிநாதன், மனோபால், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை இவர்களும் தங்களது பணிகளை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துற்கு கட்சிதமாக பொருந்துகின்றனர்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை இயக்கி வரும் கல்யாண் இந்த படத்தையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜிப்ரானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஈர்க்கிறது. சிரிக்கவும், ரசிக்கவும்,கலகலப்பாக வெளிவந்திருக்கும் பில்டப் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.

The post பில்டப் திரைவிமர்சனம் appeared first on Touring Talkies.

]]>