Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kalaingar karunanidhi – Touring Talkies https://touringtalkies.co Thu, 18 Mar 2021 10:03:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kalaingar karunanidhi – Touring Talkies https://touringtalkies.co 32 32 “கலைஞரின் படத்தில் நடித்ததால் 2 வருடங்களுக்கு பட வாய்ப்பே கிடைக்கவில்லை” – நடிகர் வாகை சந்திரசேகரின் வருத்தம்..! https://touringtalkies.co/i-did-not-get-a-chance-for-2-years-because-i-acted-in-the-kalaingar-karunanidhis-film-actor-vaagai-chandrasekhar-interview/ Thu, 18 Mar 2021 10:01:37 +0000 https://touringtalkies.co/?p=13695 நடிகர் வாகை சந்திரசேகர் தற்போதைய தமிழக சட்டமன்றத்தில் வேளச்சேரி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் 1979-ம் வருடம் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்த மூன்று வருடங்களில் ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘ஒரு தலை ராகம்’, ’நிழல்கள்’, ‘கல்லுக்குள் ஈரம்’, ‘பாலைவனச் சோலை’, ‘சிவப்பு மல்லி’, ‘சுமை’, ‘அழகிய கண்ணே’ ஆகிய படங்களிலும் நடித்திருந்த நேரத்தில் ஒரு நாள் தி.மு.க. தலைவரான கலைஞர் மு.கருணாநிதியிடம் இருந்து அழைப்பு […]

The post “கலைஞரின் படத்தில் நடித்ததால் 2 வருடங்களுக்கு பட வாய்ப்பே கிடைக்கவில்லை” – நடிகர் வாகை சந்திரசேகரின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் வாகை சந்திரசேகர் தற்போதைய தமிழக சட்டமன்றத்தில் வேளச்சேரி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இவர் 1979-ம் வருடம் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்த மூன்று வருடங்களில் ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘ஒரு தலை ராகம்’, ’நிழல்கள்’, ‘கல்லுக்குள் ஈரம்’, ‘பாலைவனச் சோலை’, ‘சிவப்பு மல்லி’, ‘சுமை’, ‘அழகிய கண்ணே’ ஆகிய படங்களிலும் நடித்திருந்த நேரத்தில் ஒரு நாள் தி.மு.க. தலைவரான கலைஞர் மு.கருணாநிதியிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

கலைஞரை சந்திக்க மிகவும் ஆவலுடன் சென்றிருக்கிறார் நடிகர் சந்திரசேகர். அவரிடத்தில் கலைஞர் “நான் ஒரு சினிமாவுக்கு கதை, வசனம் எழுதப் போகிறேன். ‘தூக்கு மேடை’ என்ற அந்த சினிமாவில் நீதான் முக்கியக் கதாபாத்திரத்தில் என்னுடைய வசனங்களைப் பேசி நடிக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறு வயதில் இருந்தே தி.மு.க.காரராகவே வளர்ந்து வந்திருந்த சந்திரசேகருக்கு இதைக் கேட்டதும் மிகப் பெரிய சந்தோஷம். உடனேயே நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இருந்தாலும் கலைஞர் பொறுமையாக, “நீ நடிப்ப. எனக்கும் சந்தோஷம்தான். ஆனால், என் படத்தில் நடித்தால் உனக்கு மற்ற பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகும். அதனால் கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சிட்டு வா..” என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

நடிகர் சந்திரசேகர் அப்போது ‘பாலைவனச் சோலை’ மற்றும் ‘சிவப்பு மல்லி’, ‘சுமை’ ஆகிய படங்களின் வெற்றியினால் நிறைய படங்களுக்கு புக் ஆகியிருந்தார். அவருடைய கையில் சுமார் 22 படங்கள் இருந்திருக்கின்றன.

இத்தனை படங்கள் இருக்கிறதே என்ற நம்பிக்கையில் இரண்டே நாட்கள் இடைவெளியில் மீண்டும் கலைஞரை சென்று சந்தித்து “தூக்கு மேடை’ படத்தில் நடிக்கிறேன்…” என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அந்தப் படத்தில் கலைஞரின் இலக்கிய ரசனை வாய்ந்த தெள்ளு தமிழ் வசனங்களை மிக அழகான உச்சரிப்புடன் பேசி நடித்திருக்கிறார் நடிகர் சந்திரசேகர். படம் வெளிவந்து அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்குப் பிறகு தமிழை மிக அழகாக உச்சரிக்கும் நடிகர் என்ற பெயரை நடிகர் சந்திரசேகருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆனால், அதன் பின்பு நடந்ததுதான் மிகப் பெரிய டிவிஸ்ட். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பேயே கலைஞர் எச்சரித்ததுபோலவே இந்தப் படத்தில் நடித்த பின்பு சந்திரசேகருக்கு புதிய படங்களில் நடிக்க அழைப்பே வரவில்லையாம்.

ஒப்பந்தம் செய்திருந்த படங்களில்கூட இவரிடத்தில் கேட்காமல் வேறு நடிகரைப் போட்டு படத்தையே முடித்துவிட்டார்களாம்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பின்புதான் மீண்டும் தனக்குப் பட வாய்ப்புகள் கிடைத்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நடிகர் வாகை சந்திரசேகர்.

தமிழ்நாட்டில், அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாதுங்கோ..!

The post “கலைஞரின் படத்தில் நடித்ததால் 2 வருடங்களுக்கு பட வாய்ப்பே கிடைக்கவில்லை” – நடிகர் வாகை சந்திரசேகரின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் https://touringtalkies.co/alaigal-oyivathillai-movie-success-story/ Sun, 01 Nov 2020 13:10:49 +0000 https://touringtalkies.co/?p=9575 ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் பாரதிராஜா என்னும் மாபெரும் கலைஞனை தமிழ்த் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற படம். அந்தப் படத்தின் கதைக் கருவைவிட அந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சியை பாரதிராஜா கையாண்டிருந்தவிதம்தான் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர், கலைஞர் கருணாநிதி உட்பட பல அறிஞர் பெருமக்கள் அந்தப் படத்தைப் பாராட்டக் காரணமாக அமைந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம்  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அரை மணி […]

The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் பாரதிராஜா என்னும் மாபெரும் கலைஞனை தமிழ்த் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற படம்.

அந்தப் படத்தின் கதைக் கருவைவிட அந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சியை பாரதிராஜா கையாண்டிருந்தவிதம்தான் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர், கலைஞர் கருணாநிதி உட்பட பல அறிஞர் பெருமக்கள் அந்தப் படத்தைப் பாராட்டக் காரணமாக அமைந்தது.

அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம்  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அரை மணி நேரத்துக்கும் மேலாக பாரதிராஜாவைப் பாராட்டிய ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்., ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளையும், தொழில் நுணுக்கக் கலைஞர்களையும் பாராட்டுவதற்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலே ஒரு விழாவினை எடுத்தார்.

அந்த விழாவிலே அந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது ராசிக் கரங்களால் வெள்ளிக் கேடயங்கள் வழங்கினார் அவர்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டப்பட்ட ஒரே திரைப்படம் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ மட்டுமே.

இப்படி மிகச் சிறந்த பாராட்டுக்களை அவருக்குப் பெற்றுத் தந்த அந்தப் படத்தை உருவாக்கும்போது பாரதிராஜா சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். 

அதற்குக் கரணம் என்ன…?

‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஐந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர் பாரதிராஜா. அவருக்கு முன்பாக தொடர்ந்து அத்தனை வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகத்தில் எவரும் கொடுத்தது இல்லை.

அந்தத் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு பாரதிராஜாவுடன் அவரது முதல் படத்திலிருந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளரான நிவாசின் இயக்கத்திலே ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் ஒரு இயக்குநரின் கதாப்பாத்திரத்தில் நடித்தார் அவர். ஒரு கால கட்டத்தில் தெலுங்குப் பட உலகில் கோடி கட்டிப் பறந்த விஜயசாந்தியும், தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அருணாவும் அந்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்கள்தான். அந்தப் படம் வெற்றிப் படமாக அமையவில்லை. 

அப்படத்தைத் தொடர்ந்து அவர் தனது சொந்தப் பட நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில்தான்  மணிவண்ணனை கதை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துக்குப் பிறகு பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் நிவாஸ் பணியாற்றவில்லை. 

‘எனது கண்கள்’ என்று இன்றுவரை பாரதிராஜா போற்றிக் கொண்டாடுகின்ற ஒலிப்பதிவுக் கலைஞரான பி.கண்ணன் அந்தப் படத்தில்தான் பாரதிராஜவோடு முதன்முதலாக இணைந்தார்.

‘16  வயதினிலே’ படம் முதல்  பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியர் பாக்யராஜ்  ‘புதிய வார்ப்புகள்’ படம் முடிந்தவுடன் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி நடித்துக்  கொண்டிருந்ததால் அவரும் ‘நிழல்கள்’ படத்தில் பணியாற்றவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாஸ், பாக்யராஜ்  ஆகிய இருவருடைய பங்களிப்பும் இல்லாமல் வெளிவந்த ‘நிழல்கள்’ படம் பாராட்டுக்களைப் பெற்ற அளவிற்கு வசூலைப்  பெறவில்லை.

பாரதிராஜாவின் தொடர் வெற்றிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் பாரதிராஜாவின் வெற்றிகளுக்குக் காரணமே நிவாசும், பாக்கியராஜூம்தான் என்றும் அவர்கள் இல்லாததால்தான் ‘நிழல்கள்’ படத்தை பாரதிராஜாவால் வெற்றிப் படமாக தர முடியவில்லை என்றும்  ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.

அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்கின்றவிதமாக தனது அடுத்த படத்தைத் தரவேண்டிய கட்டாயத்திலிருந்தபோது பாரதிராஜா இயக்கிய படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை.’

பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான நாளிருந்தே தங்களுக்காக ஒரு படத்தை இயக்கித் தரும்படி இளையராவின் மூத்த சகோதரரான பாஸ்கர் கேட்டுக் கொண்டேயிருந்ததால், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை பாஸ்கரின்  ‘பாவலர் பிரதர்ஸ்’ நிறுவனத்திற்காக இயக்க முடிவு செய்தார் பாரதிராஜா.

மணிவண்ணன் கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் கதை ஒரு இஸ்லாமியப் பெண்ணை, பிராமண இளைஞன் ஒருவன் காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் படத்திலே இடம் பெற்ற ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே’ என்று தொடங்கும் பாடலின் பல்லவியில்கூட  ‘இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை..’ என்று எழுதியிருந்தார் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து.

பின்னர் இஸ்லாமிய சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுமோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் படத்தின் நாயகி பாத்திரம் மேரி என்ற கிருஸ்துவப் பெண்ணின் பாத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டது.

தனது இரண்டாவது படமான ‘கிழக்கே  போகும் ரயில்’ படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் புதுமுகங்களை அறிமுகம் செய்தது போல ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தார்  பாரதிராஜா.

புதுமுகத் தேர்வில் அவர் இருந்தபோது அவரைப் பார்க்க தனது தாயாரான சரசம்மாவோடு வந்தார் அம்பிகா. அப்போதே அம்பிகா நடித்து சில படங்கள் வெளிவந்திருந்ததால் அந்தப் படத்தில் அவரைப் பயன்படுத்த முடியாத நிலையில் “உனக்கு வேறு சகோதரிகள் இருக்கிறார்களா…?” என்று பாரதிராஜா அவரைப் பார்த்து கேட்டபோது, தனது கைப் பையிலிருந்து தங்கைகள் மல்லிகா, சந்திரிகா ஆகியோருடன் தானும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து நீட்டினார் அம்பிகா.

அதில் இருந்த சந்திரிகாவின் புகைப்படத்தை ஊடுருவிப் பார்த்த பாரதிராஜாவின் காமிரா கண்களுக்கு இந்தப் படத்திற்குக் கதாநாயகி ஆவதற்கு அவர்தான் சரியானவர் என்று அப்போதே தோன்றியிருக்க வேண்டும்.

அடுத்து  “இந்தப் பெண் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள்…?” என்று அம்பிகாவின் தாயாரிடம் பாரதிராஜா கேட்க, பத்தாவது படித்துக் கொண்டிருப்பதாக அவர் பதில் சொன்னார்.

அப்போது திருவனந்தபுரத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கல்லரா என்ற கிராமத்தில்தான் தங்கி படித்துக் கொண்டிருந்தார் சந்திரிகா.  அடுத்த வாரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் திருவனந்தபுரம் வர இருப்பதாகவும் அப்போது கல்லராவிற்கு வந்து சந்திரிகாவை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார்  பாரதிராஜா.

அவர் கல்லரா செல்வதற்கு முன்னாலேயே தனது மகள் சந்திரிகாவிடம் ‘ஒரு பெரிய டைரக்டர் உன்னைப் பார்க்க கல்லரா வரப் போகிறார்’ என்ற செய்தியை சொல்லியிருந்தார் சரசம்மா. ஆனால் அப்போது சந்திரிகாவிற்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்பதால் அவர் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

சொன்னபடி ஒரு வாரம் சென்றவுடன் தனது ஒளிப்பதிவாளரான பி.கண்ணனுடன் கல்லராவுக்கு பாரதிராஜா சென்றபோது மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. அந்த  நேரத்தில் அங்கே கரண்ட் கட்டாகிவிடவே  மெழுகுவர்த்தியின் விளக்கு வெளிச்சத்தில்தான் பாரதிராஜாவால் சந்திரிகாவைப் பார்க்க முடிந்தது.

அப்போது அவரது நடை, முகபாவம் இவற்றை எல்லாம் சரியாகப் பார்க்க முடியாமல் போனதாலோ என்பதாலோ என்னவோ தனக்கு அந்த வீட்டை சுற்றி காண்பிக்கச் சொன்னார் பாரதிராஜா.

ஒரு மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு பேய்ப் படங்களில்  நடப்பது போல சந்திரிகா முன்னால் நடக்க அவரது முக பாவத்தை கூர்ந்து  கவனித்தபடி அவருக்கு பின்னாலே சென்று கொண்டிருந்த பாரதிராஜா அந்த வீட்டை விட்டு கிளம்பும்போதே சந்திரிகாதான் நாயகி என்பதை  முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.

பின்னர் “அடுத்த வாரம் சென்னைக்கு  கூட்டி வாருங்கள். மேக்கப் போட்டு கொஞ்சம் ஸ்டில்கள் எடுத்துப் பார்ப்போம்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் பாரதிராஜா.

அப்போது அம்பிகா சென்னையில் ரஞ்சித் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலிலேயே சந்திரிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இளையராஜாவை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு பாரதிராஜாவுடன்  போனார் சந்திரிகா.

“இவர்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்  அறிமுகமாகப் போகும் கதாநாயகி…” என்று இளையராஜாவிடம் பாரதிராஜா சந்திரிகாவை அறிமுகப்படுத்தியதும் “ஓ… இவர்தான் அந்த கப்பக் கிழங்கா..?” என்று கேட்டார் இளையராஜா.

இளையராஜா அப்படிக் கேட்டதும் அவர் என் அப்படி அழைக்கிறார் என்று புரியாமல் முழித்தார் சந்திரிகா. இளையராஜா அப்படி அழைத்ததற்குக் காரணம் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாட்டு. அந்தப் படத்தின் நாயகன் நாயகியை கேலி செய்யும்விதமாக வாடி என் கப்பக் கிழங்கே…’ என்று தொடங்கும் பாடல், அந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததால்தான் அவரை அப்படி அழைத்தார் இளையராஜா.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமான ராதிகாவின் பெயர் ‘ஆர்’ என்று எழுத்தில் தொடங்கும் பெயராக அமைந்ததால்தான் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ பட நாயகி ‘ரதி’யாகவும் ‘நிழல்கள்’ பட நாயகி ‘ரோகிணி’யாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். அந்த ‘ஆர்’ வரிசையில் ‘ராதா’ என்று பெயர் சூட்டப்பட்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான ராதா முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னியானார்.

அந்தப் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக கார்த்திக் அறிமுகமானார் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால், அந்தக் கதாப்பாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் கார்த்திக்  இல்லை.

அவர் யார் என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்..!

(தொடரும்)

The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>