Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kajal agarwal – Touring Talkies https://touringtalkies.co Wed, 03 Apr 2024 06:42:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kajal agarwal – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமலின் இந்தியன்-2 ரிலீஸ் எப்போது? https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-2-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e/ Wed, 03 Apr 2024 06:42:28 +0000 https://touringtalkies.co/?p=40675 1996-ல் ‘இந்தியன்’ படத்தில் கூட்டணி அமைத்த நடிகர் கமலஹாசனும், இயக்குனர் ஷங்கரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘இந்தியன் 2’ இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்கா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இரண்டாம் பாகத்துக்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகம் எடுக்கும் போதே இந்தியன் மூன்றாம் பாகத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. […]

The post கமலின் இந்தியன்-2 ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
1996-ல் ‘இந்தியன்’ படத்தில் கூட்டணி அமைத்த நடிகர் கமலஹாசனும், இயக்குனர் ஷங்கரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘இந்தியன் 2’ இந்தப் படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்கா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இரண்டாம் பாகத்துக்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகம் எடுக்கும் போதே இந்தியன் மூன்றாம் பாகத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், , ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் ‘இந்தியன்’ இரண்டாம் பாகம் உஐவாகியுள்ளது. இந்தப் படம் மே மாதம் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது

The post கமலின் இந்தியன்-2 ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் ‘கோஸ்டி’ படம் https://touringtalkies.co/kajal-agarwal-act-as-heroine-in-ghosty-movie/ Tue, 01 Nov 2022 11:33:35 +0000 https://touringtalkies.co/?p=26370 சீட் பிக்சர்ஸ் (Seed pictures) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோஸ்டி’(Ghosty). இந்தப் படத்தில் கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மதன் பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இயக்குநர் – கல்யாண், ஒளிப்பதிவு – ஜாக்கப் ரத்தினராஜ், படத் தொகுப்பு […]

The post காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் ‘கோஸ்டி’ படம் appeared first on Touring Talkies.

]]>
சீட் பிக்சர்ஸ் (Seed pictures) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோஸ்டி’(Ghosty).

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மதன் பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இயக்குநர் – கல்யாண், ஒளிப்பதிவு – ஜாக்கப் ரத்தினராஜ், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, இசை – சாம் சி.எஸ்., கலை இயக்கம் – கோபி, சண்டைப் பயிற்சி இயக்கம் – பில்லா ஜெகன், VFX மேற்பார்வை – V.தினேஷ் குமார், எக்ஸிக்யூடிவ் புரொடியூசர் – குமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா (D’One)

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காமெடி இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தக் ‘கோஸ்டி’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கிறது. கதையில் சஸ்பென்ஸ், காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களையும் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இறுதியில் நடிகர் யோகிபாபுவுக்கும் படத்தில் வரும் குழந்தைக்கும் இடையில் வரக்கூடிய வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்த வகையில் அமையும். படம் விரைவில் திரையரங்குகளில்  வெளியாகும்.

The post காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் ‘கோஸ்டி’ படம் appeared first on Touring Talkies.

]]>
துல்கர் சல்மான்-காஜல் அகர்வால் நடிப்பில் நட்பைப் பாராட்டும் ‘தோழி’ பாடல் https://touringtalkies.co/hey-sinamika-movie-thozhi-song-news/ Thu, 27 Jan 2022 14:26:51 +0000 https://touringtalkies.co/?p=20460 எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா மாஸ்டர், தற்போது ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார்.  ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – பிரீத்தா ஜெயராமன், இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – ராதா ஸ்ரீதர், எழுத்து & பாடல்கள் – மதன் கார்க்கி, கலை […]

The post துல்கர் சல்மான்-காஜல் அகர்வால் நடிப்பில் நட்பைப் பாராட்டும் ‘தோழி’ பாடல் appeared first on Touring Talkies.

]]>
எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா மாஸ்டர், தற்போது ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார். 

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – பிரீத்தா ஜெயராமன், இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – ராதா ஸ்ரீதர், எழுத்து & பாடல்கள் – மதன் கார்க்கி, கலை இயக்கம் – எஸ்.எஸ்.மூர்த்தி, செந்தில் ராகவன், சண்டை இயக்கம் –  அஷோக், நிர்வாக தயாரிப்பு – ஃபிராங்க் மைக்கேல், ரஞ்சனி ரமேஷ், எஸ்.பிரேம், இணை தயாரிப்பு – குளோபல் ஒன் ஸ்டூடியோஸ், தயாரிப்பு – ஜியோ ஸ்டூடியோஸ், இயக்கம் – பிருந்தா.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பைக் கொண்டாடும் ‘தோழி’ பாடல் காட்சி  மிகவும் அழகாக படமாக்க்ப்பட்டுள்ளது.

மதன் கார்க்கியின் மந்திர வரிகளில், கோவிந்த் வசந்தாவின் ஆத்மார்த்தமான இசையமைப்பில், பிரதீப் குமாரின் இனிமையான குரலுடன் உருவாகியுள்ள இந்த பாடல் மெல்லிசை மற்றும் உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக உள்ளது.

இந்தப் பாடலைப் பற்றி படத்தின் இயக்குநரான பிருந்தா மாஸ்டர் கூறுகையில், “இந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் ஒரு உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ உங்களை உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். இந்த பாடல் மிகவும் அழகாக உருவெடுத்துள்ளது. கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் மிகவும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்…” என்றார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கூறுகையில், “இந்தப் படத்தில் மட்டுமல்ல, என்னுடைய கேரியரிலும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று ‘தோழி’. இதன் படப்பிடிப்பிற்கு 6 மாதங்களுக்கு முன்பு பிருந்தா மாஸ்டரைச் சந்தித்தபோது, ஒரு நல்ல மெலடியை விரும்புவதாக சொன்னார். இந்த பாடலை அவர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் அருமை. பிரதீப் குமார் இப்பாடலை மிக அழகாகப் பாடியிருக்கிறார்..” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறும்போது, “பனித்துளி போல தூய்மையான, அழகான நட்பின் பாடல்தான் ‘தோழி’. இதை கேட்பவர்கள் ஆழமான நட்பை அனுபவிக்க முடியும்…” என்றார்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் இந்த ‘ஹே சினாமிகா’ திரைப்படம், வரும் பிப்ரவரி 25-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The post துல்கர் சல்மான்-காஜல் அகர்வால் நடிப்பில் நட்பைப் பாராட்டும் ‘தோழி’ பாடல் appeared first on Touring Talkies.

]]>
நாயகிகளை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கும் ‘கருங்காப்பியம்’ திரைப்படம் https://touringtalkies.co/karungkaappiyam-movie-preview-news/ Sat, 17 Jul 2021 07:59:36 +0000 https://touringtalkies.co/?p=16278 இயக்குநர் டிகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. இந்தப் படம் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான ‘கருங்காப்பியம்’ படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் டிகே. இந்தக் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இத்திரைப்படம் முழுக்க, முழுக்க நாயகிகளை மையப்படுத்திய ஹாரர் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, […]

The post நாயகிகளை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கும் ‘கருங்காப்பியம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் டிகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. இந்தப் படம் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான கருங்காப்பியம்’ படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் டிகே.

இந்தக் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி. இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க நாயகிகளை மையப்படுத்திய ஹாரர் படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ரைசா, கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஈரான் நடிகை நொய்ரிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக விக்கி, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், படத் தொகுப்பாளராக விஜய் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘கருங்காப்பியம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன.

The post நாயகிகளை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கும் ‘கருங்காப்பியம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>