Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
kaari movie – Touring Talkies https://touringtalkies.co Thu, 24 Nov 2022 09:37:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png kaari movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி https://touringtalkies.co/horse-racing-is-not-animal-cruelty-kari-film-producer-laxman-kumar-question/ Thu, 24 Nov 2022 09:36:32 +0000 https://touringtalkies.co/?p=27547 ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாத சில விலங்குகள் நல ஆர்வலர்களும், வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா […]

The post “குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாத சில விலங்குகள் நல ஆர்வலர்களும், வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர்.

கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்.

கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க கூடாது என தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.

இதன் தீர்ப்பு எந்த விதமாக வரும் என்கிற எதிர்பார்ப்பும் பரபரப்பும் தமிழகத்தில் உருவாகிவிட்டது. இந்தநிலையில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள காரி திரைப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளதால் ரசிகர்களிடம் இந்த படம் திடீர் கவனம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். சர்தார் என்கிற வெற்றி படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். வரும் நவம்பர் 25-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் துவங்கியுள்ள நிலையில், இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு எந்தவிதமாக இடம் பெற்றுள்ளது மற்றும் அது எப்படி நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சசிகுமார், இயக்குநர் ஹேமந்த், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், நாயகி பார்வதி அருண் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் ஹேமந்த் பேசும்போது, “படத்தில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேசமயம் இதில் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலும், அவற்றை ஜல்லிக்கட்டு மையப்புள்ளியாக இருந்து எப்படி இணைக்கிறது என்பதையும் பற்றி கூறியுள்ளோம்.

இந்தப் படத்தில் 18 வகையான காளைகள், அதேபோல 18 வகையான வீரர்கள் என ஒரு நிஜ ஜல்லிக்கட்டையே நடத்தியுள்ளோம். அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த விதிமுறைகளை கடைபிடித்து மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த காட்சிகளை படமாக்கினோம். நிச்சயமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைப்பதாக இருக்கும்.

இந்த படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வசனங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, யாருக்கும் எதிரான வசனங்கள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தை ஆர்ப்பாட்டமாக சொல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை மட்டும் கூறியிருக்கிறோம்.

கிராமத்தில் இன்றும் சில பிரச்சினைகளுக்கு பாரம்பரிய முறையில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வழிமுறையாக ஜல்லிக்கட்டும் இருக்கிறது என்பதை இந்த படத்தில் கூறியுள்ளோம். ஊர் மக்களின் நம்பிக்கை ஜல்லிக்கட்டு, திருவிழா இவற்றை சார்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நாம் என்ன செய்கிறோம், ஜல்லிக்கட்டு நமக்கு என்ன செய்கிறது என்பதை என்னுடைய பார்வையில் நான் கூறியுள்ளேன்

இதில் சசிகுமார் குதிரைப் பந்தய ஜாக்கியாகவும், ஆடுகளம் நரேன் குதிரைப் பந்தய பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். குறிப்பாக குதிரை பந்தயத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு நாயகன் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளோம்.” என்றார்.

நாயகன் சசிகுமார் பேசும்போது, “ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இது பற்றி நாம் விரிவாக பேசமுடியாது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நம் தமிழக அரசு சரியான முறையில் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எப்படியும் நமக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல, ஜல்லிக்கட்டை யாராலும் தடுக்க முடியாது. இந்த படம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான படம்.

மாடுகளில் இப்போதைக்கு எனக்கு பிடித்தது காரி காளை மாடுதான். அதேசமயம் படப்பிடிப்பின்போது எந்த ஜல்லிக்கட்டு காளையுடனும் நாம் நெருங்கி பழக முடியாது. காரணம் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடு நமக்கு எதிராக இருக்கும். அது எந்தப் பக்கம் போகும், நம் மீது பாயுமா என்பதெல்லாம் அந்த நொடியில்கூட கணிக்க முடியாது. சில மாடுகள் நம்மைத் தாண்டி சென்றுவிட்டு மீண்டும் தாக்குவது போல் திரும்பி வந்ததும் உண்டு..  அதேசமயம் முறைப்படி அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு காட்சிகளை படமாக்கியதால் இந்த படத்திற்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.” என்று கூறினார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “சில அமைப்புகள், திரையுலகை சேர்ந்த சிலர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாக இருக்குமே தவிர, ஒட்டு மொத்த திரையுலகின் கருத்து அல்ல..

ஜல்லிக்கட்டு என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை. ஜல்லிக்கட்டை யார் எதிர்த்தாலும் அவற்றை உயிராக நினைக்கும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். இந்த படத்தை நாங்கள் எடுத்து இருப்பதே அந்த நம்பிக்கையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் அதை விட்டுவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்றுதான். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். அதை இந்த படம் மூலம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

ஜல்லிக்கட்டு மட்டும்தான் மிருக வதையா? குதிரை பந்தயத்தில் அது இல்லையா? அதற்கு மட்டும் தடை விதிக்காமல் ஏன் ஜல்லிக்கட்டை மட்டுமே குறி வைக்கிறார்கள் என்றால், குதிரைப் பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு.. ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு.. அவ்வளவுதான் இதில் உள்ள அரசியல்…” என்றார்.

The post “குதிரை பந்தயம் மிருக வதை இல்லையா..?” – காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
“என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்” – சசிகுமார் அறிவிப்பு https://touringtalkies.co/i-will-continue-to-act-in-village-films-for-my-people-sasikumar-announced/ Mon, 21 Nov 2022 14:28:22 +0000 https://touringtalkies.co/?p=27355 பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் கே.லக்ஷ்மண் குமார், இயக்கம் – ஹேமந்த், இசை – டி.இமான், ஒளிப்பதிவு […]

The post “என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்” – சசிகுமார் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் கே.லக்ஷ்மண் குமார், இயக்கம் – ஹேமந்த், இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவநந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், நடன இயக்கம் – ஹரிகிரண், சண்டைப் பயிற்சி இயக்கம் – அன்பறிவு, தினேஷ் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, பாடல்கள் – லலிதானந்த், ஹேமந்த், ஆடை வடிவமைப்பு – பூர்த்தி பிரவீண், உடை அலங்காரம் – பெருமாள் செல்வம், ஒப்பனை – கலைமாமணி வி.சண்முகம், மக்கள் தொடர்பு – A.ஜான்.

வரும் நவம்பர் 25-ம் தேதி இந்த ‘காரி’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகனான சசிகுமார் பேசும்போது, “இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரே மாதிரி கதையில் நடிக்கிறீர்களே… அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம்தான் பண்ணுவேன்.. அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..?

என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன். ஆனால், அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.

அம்மு அபிராமி இந்த படத்தில் மிக அருமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னைக் கேட்டால் அவர் இதுபோன்று நிறைய கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால் இப்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்குத்தான் நடிகைகள் ரொம்ப குறைவாகவே இருக்கிறார்கள்.

இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஜேடி சக்கரவர்த்தி, நான் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு, என்னை அழைத்து முதலில் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் என அறிவுரை கூறினார்.

இந்த படத்தின் மூலம் ஒன்பதாவதாக புதிய இயக்குநரை அறிமுகப்படுத்துகிறேன். ஹேமந்த் நிச்சயமாக மிகப் பெரிய இயக்குநராக வருவார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார், இயக்குநர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதுதான். ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்.

ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. எதிர்ப்பவர்கள்தான் அதன் மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்தப் படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

முன்பெல்லாம் விஜயகாந்த் சார் படப்பிடிப்பிலும் அவரது அலுவலகத்திலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படும். அதை கேள்விப்பட்டு நான் என்னுடைய தயாரிப்பில் படங்கள் தயாரித்தபோது அதேபோல பின்பற்றினேன். நீண்ட நாளைக்கு பிறகு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் படப்பிடிப்பில் அதேபோன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன். காலம் கடந்தும் இது பேசப்படும்.

ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை என்று அதன் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில்கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை.. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை.

இது மக்களுக்காக எடுத்த படம். ஜல்லிக்கட்டு பற்றிய படம். அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்.. அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன்.. அதற்கான அறிவிப்பை இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்” என்றார்.

The post “என் மக்களுக்காக தொடர்ந்து கிராமத்து படங்களில் நடிப்பேன்” – சசிகுமார் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
சசிகுமாரின் ‘காரி’ படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகிறது https://touringtalkies.co/kaari-movie-will-release-on-nov-25/ Wed, 16 Nov 2022 09:37:01 +0000 https://touringtalkies.co/?p=27150 காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது. சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ படத்தை அறிமுக இயக்குநரான ஹேமந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். சசிகுமாருடன் […]

The post சசிகுமாரின் ‘காரி’ படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘காரி’. சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி உள்ளது.

சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ படத்தை அறிமுக இயக்குநரான ஹேமந்த் இயக்கியுள்ளார்.

படத்தின் கதாநாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தக் ‘காரிதிரைப்படம் வரும் வரும் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

The post சசிகுமாரின் ‘காரி’ படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் ‘காரி’ https://touringtalkies.co/kaari-movie-preview-news/ Mon, 04 Apr 2022 08:44:21 +0000 https://touringtalkies.co/?p=21552 கிராமத்துப் பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார். தற்போது கார்த்தி நடித்து வரும் ‘சர்தார்’ படத்தைத் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக, தனது 5-வது படைப்பாக தயாரிப்பாளர் எஸ்.லஷ்மண் குமார் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.  இந்தப் படத்தில் கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் ‘செம்பருத்திப் பூ’, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த ’21-ம் நூற்றாண்டு’ […]

The post சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் ‘காரி’ appeared first on Touring Talkies.

]]>
கிராமத்துப் பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார்.

தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார்’ படத்தைத் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக, தனது 5-வது படைப்பாக தயாரிப்பாளர் எஸ்.லஷ்மண் குமார் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 

இந்தப் படத்தில் கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப் பூ’, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த ’21-ம் நூற்றாண்டு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார்.

வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘ஆடுகளம்’ நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், ‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.

இசை – டி.இமான், ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A.பால் பாண்டியன், மக்கள் தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – ஹேமந்த்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் போஸ்டரே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்.

“காரி’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்திற்கு சசிகுமார் போன்ற பொருத்தமான நடிகர் அமைந்துவிட்டது சிறப்பான ஒன்று…” என்கிறது படக் குழு.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

The post சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் ‘காரி’ appeared first on Touring Talkies.

]]>