Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
k.balachander – Touring Talkies https://touringtalkies.co Fri, 27 Oct 2023 01:45:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png k.balachander – Touring Talkies https://touringtalkies.co 32 32 கே.பாலசந்தருக்கு கிடைத்த  முதல் ரசிகர் கடிதம்.! https://touringtalkies.co/first-fan-letter-received-by-k-balachander/ Fri, 27 Oct 2023 01:45:18 +0000 https://touringtalkies.co/?p=37272 எம்.ஜி.ஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்குவசனம்எழுதிதனது திரைப்பயணத்தைதொடங்கினார் கே.பாலசந்தர்.நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் நாகேஷ். ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புற்று நோயாளியாக சேது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கலகலப்பான நோயாளியாக வலம்வரும் நாயகன். தலைமை மருத்துவரான மேஜர் சுந்தரராஜன் தனது மகள் டாக்டர் இந்திராவை (சௌகார் ஜானகி), மருத்துவ ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்ப நினைக்கிறார். ஆனால் அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வி.கோபாலகிருஷ்ணன் காதலிக்கிறார். இதனால் அமெரிக்கா செல்வதைத் […]

The post கே.பாலசந்தருக்கு கிடைத்த  முதல் ரசிகர் கடிதம்.! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்குவசனம்எழுதிதனது திரைப்பயணத்தைதொடங்கினார் கே.பாலசந்தர்.நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகர் நாகேஷ். ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புற்று நோயாளியாக சேது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கலகலப்பான நோயாளியாக வலம்வரும் நாயகன். தலைமை மருத்துவரான மேஜர் சுந்தரராஜன் தனது மகள் டாக்டர் இந்திராவை (சௌகார் ஜானகி), மருத்துவ ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்ப நினைக்கிறார்.

ஆனால் அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வி.கோபாலகிருஷ்ணன் காதலிக்கிறார். இதனால் அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கிறார். தனது இறுதி நாள் குறிக்கப்பட்டதை அறிந்த நாகேஷ்.

காதலர்களை சேர்த்து வைக்க நினைக்க ஆனால் அது நீர்க்குமிழி ஆகிறது என்பதுதான் படம்.

இது ஏழாம் நம்பர் வார்டின் கதை என்ற குரலோடு தான் படம் தொடங்குகிறது. சோகமான படத்தைக்கூட ஜாலியாக கொண்டு சென்று இறுதியில் ரசிகர்களை  கண்கலங்க வைத்துவிட்டார்.

துறுதுறு நாகேஷின் நடிப்பும் டைமிங் காமெடியும் இந்தப் படத்தின் பலம் சேர்த்தது.

 

1965-ஆம் ஆண்டு படம் வெளியாகி ஹிட் கொடுத்தது அதற்கு முன்பாகவே  பிராசஸிங்கில் படத்தைப் பார்த்த ஏவிஎம் செட்டியார், கே.பாலசந்தரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார். கே.பி.க்கு கிடைத்த முதல் ரசிகர் கடிதம் இதுதான்  என்பது குறிப்பிடத்தக்கது.

The post கே.பாலசந்தருக்கு கிடைத்த  முதல் ரசிகர் கடிதம்.! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம்:  கே.பி. சொன்னது என்ன? https://touringtalkies.co/director-k-balachander-says-about-negative-sides-of-rajini-and-kamal/ Sun, 30 Jul 2023 06:44:27 +0000 https://touringtalkies.co/?p=34854 இயக்குநர் சிகரம் என அழைக்கப்பட்டவர் பாலசந்தர். ரஜினியை அறிமுகப்படுத்தியவர், கமல் ஒரு ஹீரோவாக உருவாவதற்கு காரணமாக இருந்தவர். ஒருமுறை அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் “ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும். ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?” என்று கேட்டார். இதற்கு பாலசந்தர், “நான் இயக்கிய ‘நூற்றுக்கு நூறு’ படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை […]

The post ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம்:  கே.பி. சொன்னது என்ன? appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சிகரம் என அழைக்கப்பட்டவர் பாலசந்தர். ரஜினியை அறிமுகப்படுத்தியவர், கமல் ஒரு ஹீரோவாக உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.

ஒருமுறை அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் “ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் பல இருக்கும். ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு, அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?” என்று கேட்டார்.

இதற்கு பாலசந்தர், “நான் இயக்கிய ‘நூற்றுக்கு நூறு’ படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு, ‘இது என்ன’ என்று கேட்பார். லட்சுமி, ‘கறுப்புப் புள்ளி’ என்பார்.

நாகேஷ், ‘ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா’ என்பார்.

எங்கேயோ படித்ததைத்தான் இந்த காட்சியில் பயன்படுத்தி இருந்தேன். அப்படித்தான்,  மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் பார்க்கிறேன்” என்றார்.

அசத்தலான பதில்தானே!

The post ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம்:  கே.பி. சொன்னது என்ன? appeared first on Touring Talkies.

]]>
மூஞ்சில் ஊற்றிய சாசை நக்கிடு என சொன்ன  டைரக்டர்  https://touringtalkies.co/k-balachander-said-to-lick-the-sauce-that-is-poured-into-the-moong/ Sun, 09 Jul 2023 06:06:32 +0000 https://touringtalkies.co/?p=34196 கே.பி. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கியுள்ளார் என்பது நமக்குத் தெரியும். அதில் ஒன்று 1989ல்  வெளியான புதுப்புது அர்த்தங்கள். இப்படத்துக்காக றந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இப்படத்தில் ரகுமான், கீதா, சௌகார் ஜானகி, ஜெயசித்ரா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ரகுமான் பாடகர். இவரது  மனைவியாக கீதா நடித்திருப்பார்.  நடித்திருப்பார்.   பாடகனாய் விளங்கும் ரகுமான் மீது அதிக அன்பு செலுத்தும் ரசிகைகளின் செயலை விரும்பாது சந்தேக கண்ணோட்டத்தில் சிறப்புற நடித்திருப்பார் […]

The post மூஞ்சில் ஊற்றிய சாசை நக்கிடு என சொன்ன  டைரக்டர்  appeared first on Touring Talkies.

]]>
கே.பி. சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கியுள்ளார் என்பது நமக்குத் தெரியும். அதில் ஒன்று 1989ல்  வெளியான புதுப்புது அர்த்தங்கள். இப்படத்துக்காக றந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். இப்படத்தில் ரகுமான், கீதா, சௌகார் ஜானகி, ஜெயசித்ரா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் ரகுமான் பாடகர். இவரது  மனைவியாக கீதா நடித்திருப்பார்.  நடித்திருப்பார்.   பாடகனாய் விளங்கும் ரகுமான் மீது அதிக அன்பு செலுத்தும் ரசிகைகளின் செயலை விரும்பாது சந்தேக கண்ணோட்டத்தில் சிறப்புற நடித்திருப்பார் கீதா.

இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “ஆத்திரத்தில் ரகுமானுடன் சண்டை போடும் காட்சி. உணர்ச்சிவசப்பட்டு டேபிளில் இருந்த சாசை தூக்கி எறிந்து விட்டேன். அது ரகுமான் முகத்தில் தெளித்துவிட்டது.

உடனே இயக்குனர், ரகுமானுக்கு முத்தம் கொடுத்து விட்டு மீண்டும் முகத்தில் இருக்கும் சாசை நக்கி விடு என்றார். இதன் மூலம், என்னுடைய கோபம் மட்டுமின்றி, அது தணிந்ததும் தத்துரூபமாக தெரியும் என்றார். அதே போல் நடித்தேன். அந்தக் காட்சி வரவேற்பைப் பெற்றது. ஸ்பாட்டில் உடனே யோசித்து சிறந்த காட்சியை உருவாக்கும் கேபியின் திறமையைக் கண்டு அதிசயத்துப்போனேன்” என்றார்.

The post மூஞ்சில் ஊற்றிய சாசை நக்கிடு என சொன்ன  டைரக்டர்  appeared first on Touring Talkies.

]]>
கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் https://touringtalkies.co/producer-pl-thenappan-bought-1-lakh-rupees-from-k-balachandar-and-rajini/ Mon, 28 Nov 2022 14:32:19 +0000 https://touringtalkies.co/?p=27762 தமிழ்த் திரையுலகத்தில் கேஷியராக முதன்முதலாக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அதில் நம்பகத்தன்மை கிடைத்த சூழலில் தனது திறமையால் வளர்ந்து புரொடக்‌ஷன் இன்சார்க் ஆகிப் பல படங்களுக்குப் பணியாற்றி அதன் பின்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பி.எல்.தேனப்பன். நடிகர் ரஜினியின் நடிப்பில், கவிதாலயா நிறுவனம் தயாரிச்ச ‘முத்து’ படத்திலும் பி.எல்.தேனப்பன்தான் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். இந்த ‘முத்து’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரும், நடிகர் ரஜினியும் தலா 1 லட்சம் ரூபாயை பரிசாகக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் […]

The post கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தில் கேஷியராக முதன்முதலாக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அதில் நம்பகத்தன்மை கிடைத்த சூழலில் தனது திறமையால் வளர்ந்து புரொடக்‌ஷன் இன்சார்க் ஆகிப் பல படங்களுக்குப் பணியாற்றி அதன் பின்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பி.எல்.தேனப்பன்.

நடிகர் ரஜினியின் நடிப்பில், கவிதாலயா நிறுவனம் தயாரிச்ச ‘முத்து’ படத்திலும் பி.எல்.தேனப்பன்தான் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். இந்த ‘முத்து’ படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரும், நடிகர் ரஜினியும் தலா 1 லட்சம் ரூபாயை பரிசாகக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் பி.எல்.தேனப்பன். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அனைத்து படங்களுக்கும் நான்தான் தயாரிப்பு நிர்வாகி என்பதால் ‘முத்து’ படத்திலும் என்னையே தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்ற வைத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அந்தப் படத்தில் நிறைய நட்சத்திரங்கள். அதனால் எனக்குக் கீழே உதவியாளர்களை வைத்துக் கொண்டுதான் அத்தனை பேரையும் சமாளிக்க வேண்டியிருந்தது.

அதோடு சில காட்சிகளில் துணை நடிகர்களை நூற்றுக்கணக்கில் அழைத்து வர வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் மிகச் சிரமப்பட்டுத்தான் அவர்களை வரவழைத்து வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து பிரச்சினையில்லாமல் படத்தை முடித்துக் கொடுத்தேன். படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு நான்கு நாட்கள் கழித்து ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் அவரைப் பார்க்கச் சென்றேன்.

அப்போது அவர் என்னிடம், “நான் இதுவரைக்கும் 40-க்கும் மேல படங்களை தயாரிச்சிருக்கேன். ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கின்போதும் நடு ராத்திரி 12 மணிக்குக்கூட எனக்கு ஏதாவது ஒரு விஷயமா போன் வரும். ஆனால், இத்தனை வருஷ அனுபவத்துல.. இந்த ஒரு படத்தின் போதுதான் ஒரு போன்கூட எனக்கு வரலை. இத்தனை ஆர்ட்டிஸ்ட் படத்துல இருந்தும் ஒரு பிரச்சினையும் இல்லாம நீ பார்த்துக்கிட்ட.. உண்மையில் இது கிரேட் ஜாப். பாராட்டுக்கள்..” என்று சொல்லிவிட்டு எனக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்.

இது நடந்த சில நாட்கள் கழித்து நான் ‘பரம்பரை’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரஜினி ஸார் அழைப்பதாகச் சொன்னார்கள். நானும் அவரைப் பார்க்கப் போனேன். அவரும் என்னை ‘முத்து’ படத்தில் பிரச்சினையில்லாமல் பார்த்துக் கொண்டதற்காக என்னைப் பெரிதும் பாராட்டிவிட்டு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கவுரவப்படுத்தினார்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

The post கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் appeared first on Touring Talkies.

]]>
“சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்” – ‘மன்மத லீலை’ தலைப்பு விவகாரத்தில் கோரிக்கை https://touringtalkies.co/settle-on-peace-request-on-the-subject-of-manmatha-leela-title/ Thu, 20 Jan 2022 18:32:11 +0000 https://touringtalkies.co/?p=20345 ‘மன்மத லீலை’ பட டைட்டில் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்கார வடிவேலனின் தன்னிலை விளக்கத்தைத் தொடர்ந்து பதில் அளிக்கும்விதமாக கே.பாலசந்தர் ரசிகர் மன்றத்தின் செயலாளரான ‘கவிதாலயா’ பாபு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ‘கவிதாலயா’ பாபு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ‘மன்மத லீலை’ திரைப்பட பெயர் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் திரு.சிங்காரவேலன் அவர்கள் பேசிய ஆடீயோ பதிவை கேட்டோம். இதில் திரு.சிங்காரவேலன் அவர்கள் சொல்லியிருக்கும் தகவல் பொய்யானது. ‘இயக்குநர் சிகரம்’ அவர்கள், இயக்கிய திரைப்படங்களின் பெயர்கள், கதை, திரைக்கதை, […]

The post “சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்” – ‘மன்மத லீலை’ தலைப்பு விவகாரத்தில் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
‘மன்மத லீலை’ பட டைட்டில் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்கார வடிவேலனின் தன்னிலை விளக்கத்தைத் தொடர்ந்து பதில் அளிக்கும்விதமாக கே.பாலசந்தர் ரசிகர் மன்றத்தின் செயலாளரான ‘கவிதாலயா’ பாபு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

‘கவிதாலயா’ பாபு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ‘மன்மத லீலை’ திரைப்பட பெயர் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் திரு.சிங்காரவேலன் அவர்கள் பேசிய ஆடீயோ பதிவை கேட்டோம். இதில் திரு.சிங்காரவேலன் அவர்கள் சொல்லியிருக்கும் தகவல் பொய்யானது.

இயக்குநர் சிகரம்’ அவர்கள், இயக்கிய திரைப்படங்களின் பெயர்கள், கதை, திரைக்கதை, வசனம் என்கிற விசயங்களை, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் மரியாதை நிமித்தமாக முறைப்படி அனுமதி கேட்டு, உரிமை பெற்றுதான் இதுவரை மற்றவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

மேலும், இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் திரு.வெங்கட் பிரபு இது குறித்து ஏன் இதுவரையிலும் பேசவில்லை..?

கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பாளர் அவர்களிடம் மன்மத லீலை’ டைட்டில் உரிமையை முறைப்படி, இப்போது தயாரித்துள்ள தயாரிப்பாளரும், இயக்குநர் திரு.வெங்கட் பிரபு அவர்களும் பேசி, படத்தின் பெயர் உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

வெற்றி பெற்ற, பழைய திரைப்படங்களின் பெயர்களை, உரிமையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் கேட்க தேவையில்லை என்று திரு.சிங்காரவேலன் அவர்கள் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்…?

‘தில்லு முல்லு’ என்கிற திரைப்படத்தின் பெயரையும், கதையையும் உரிமை பெறாமல் மற்றொரு தயாரிப்பாளர் தயாரித்தபோது மறைந்த முன்னாள் இயக்குநர், அமரர் திரு.விசு சார் அவர்கள் மீடீயா மூலமாக பேசி வந்தது… நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எல்லாம் திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியாதா..?

உதாரணத்திற்கு, சமீபத்தில் திரு.பிரபுதேவா அவர்கள் நடித்து வெளிவரவுள்ள பொய்க்கால் குதிரை’ என்கிற திரைப்படத்தின் பெயரை, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் முறைப்படி பேசி உரிமை பெற்றுதான் அவர்கள் அந்த பெயரை பதிவு செய்து கொண்டனர்.

மேலும், நெற்றிக்கண், ‘எதிர் நீச்சல்’, ‘தில்லுமுல்லு’ என்கிற பெயர்களையும், கதைகளையும் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் முறைப்படி பேசித்தான் உரிமையை பெற்றுக் கொண்டனர் என்பதை திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

யார் வேண்டுமானாலும் பழைய வெற்றி விழா கண்ட பிரபலமான திரைப்படங்களின் பெயர்களையோ, கதைகளையோ வைத்துக் கொள்வதற்கு எந்தவிதத்திலும் உரிமையில்லை. உண்மையான தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. அதுதான் மனிதாபிமானம்.

சிந்தித்து நாம் நாமாக நல்லுணர்வோடு, மனசாட்சியோடு மரியாதை நிமித்தமாக சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேசி சமாதானமாக உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமே தவிர, தயாரிப்பாளர் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல என்பதை திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்…” என்று கூறியுள்ளார் கவிதாலயா’ பாபு.

The post “சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்” – ‘மன்மத லீலை’ தலைப்பு விவகாரத்தில் கோரிக்கை appeared first on Touring Talkies.

]]>
பூர்ணிமா பாக்யராஜ் தவறவிட்ட ‘புன்னகை மன்னன்’ திரைப்படம்..! https://touringtalkies.co/poornima-bhagyaraj-punnagai-mannan-story/ Tue, 03 Nov 2020 04:46:34 +0000 https://touringtalkies.co/?p=9619 ‘புன்னகை மன்னன்’ படத்தில் நடிக்க வைப்பதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரால் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்கிற ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது. ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் இயக்குநர் சித்ரா லட்சுமணனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இதனைக் கூறியுள்ளார். “நான் மும்பையில் 11-ம் வகுப்பு படிச்சிட்டிருக்கும்போதுதான் என்னை சென்னைக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்தார் கே.பி. அப்போது அவர் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தெலுங்குல எடுத்துக்கிட்டிருந்தார். அந்த செட்டுலதான் எனக்கும் மேக்கப் […]

The post பூர்ணிமா பாக்யராஜ் தவறவிட்ட ‘புன்னகை மன்னன்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
‘புன்னகை மன்னன்’ படத்தில் நடிக்க வைப்பதற்காக ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரால் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்கிற ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் இயக்குநர் சித்ரா லட்சுமணனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இதனைக் கூறியுள்ளார்.

“நான் மும்பையில் 11-ம் வகுப்பு படிச்சிட்டிருக்கும்போதுதான் என்னை சென்னைக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்தார் கே.பி. அப்போது அவர் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தெலுங்குல எடுத்துக்கிட்டிருந்தார். அந்த செட்டுலதான் எனக்கும் மேக்கப் டெஸ்ட் நடந்தது.

சுந்தரமூர்த்திதான் முதல் மேக்கப் போட்டார். கிரிஜா மாஸ்டர்தான் எனக்கு டான்ஸ் டெஸ்ட் எடுத்தார். ‘தப்புத் தாளங்கள்’ படத்துல வர்ற மூணு சீன்களைக் கொடுத்து டயலாக் படிச்சு நடிச்சுக் காண்பிக்கச் சொன்னார். எல்லாத்தையும் செஞ்சேன்.

‘கொஞ்சம் காத்திரும்மா.. நீதான் நடிக்குற.. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்’னு சொன்னார். ஆனால் கூப்பிடலை.. நானும் 2 வருஷமா வேற எந்தப் படத்துலேயும் கமிட் ஆகாமல் காத்திருந்தேன். அப்போ கமல் ஸாருக்கு 2 முறை காலில் பிராக்சர் ஆனதால், பட பிராஜெக்ட் தள்ளிப் போயிக்கிட்டே இருந்தது.

அந்தச் சமயத்துலதான் எனக்கு மலையாளத்துல ‘மஞ்சிள் விரிந்த பூக்கள்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதையும் கே.பி. ஸார்கிட்ட சொல்லிட்டு்த்தான் போய் நடிச்சேன்.

அந்தப் படம் மலையாளத்து பெரிய ஹிட்டானவுடனேயே அங்கயே நிறைய படங்கள் எனக்கு புக்காச்சு.. அப்படியே டைம் போயிருச்சு.. தமிழ்ல தொடர்ந்து அதுக்கப்புறம் நிறைய நடிக்க ஆரம்பிச்சிட்டேன். கடைசீல நான் கல்யாணம் பண்ணிட்டு போனப்புறம்தான் ‘புன்னகை மன்னன்’ படத்தையே கே.பி. ஸார் ஆரம்பிச்சார்.

அவரோட மோதிரக் கையால குட்டுப் பட்டுத்தான் திரையுலகத்துல பிரவேசம் செய்யணும்ன்னு நினைச்சேன். பட்.. முடியலை.

ஆனால், நான் வாங்கின முதல் பிலிம்பேர் அவார்டை அவர்தான் எனக்குக் கொடுத்தார். 1981-ம் வருடம் நான் நடிச்ச ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான விருதும், ‘ஓலங்கள்’ மலையாளப் படத்துக்காக சிறந்த மலையாள நடிகைக்கான விருதும் ஒரே மேடையில கிடைச்சது.

அப்போ அவார்டை என் கைல கொடுத்திட்டு.. ‘நான் மிஸ் பண்ணின பொண்ணு இவ..’ என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்தினார் கே.பி.” என்று சொல்லியிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்.

பூர்ணிமா பாக்யராஜின் திருமணம் 1984-ம் ஆண்டு நடந்தது. ‘புன்னகை மன்னன்’ திரைப்படம் 1986-ல்தான் தயாராகி வெளியானது. ஒருவேளை பூர்ணிமாவுக்கு அதுவரையிலும் திருமணமாகாமல் இருந்திருந்தால் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அவரே நடித்திருக்கலாம்..!

The post பூர்ணிமா பாக்யராஜ் தவறவிட்ட ‘புன்னகை மன்னன்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>