Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
jeevaa – Touring Talkies https://touringtalkies.co Sun, 10 Oct 2021 11:02:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png jeevaa – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் https://touringtalkies.co/kolmaal-movie-poojai-news/ Sun, 10 Oct 2021 11:01:35 +0000 https://touringtalkies.co/?p=18616 ‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அதிக பொருட் செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் […]

The post ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அதிக பொருட் செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

இசை – அருள் தேவ், ஒளிப்பதிவு – எஸ்.சரவணன், படத் தொகுப்பு – டான் போஸ்கோ, கலை இயக்கம் – சிவா, பாடல்கள் – மதன் கார்க்கி, விவேகா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – எம்.நரேஷ் ஜெயின், நிர்வாகத் தயாரிப்பு – எம்.செந்தில், தயாரிப்பு வடிவமைப்பு – டூனி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், தயாரிப்பாளர்கள் –  ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின்.

இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன் குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், “இந்தக் கோல்மால் படம் முழு நீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும். ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்.

ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும்பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும். முழு படமும் மொரீஷியலில் படமாக்கப்படவுள்ளது.

நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும்..” என்றார்.

The post ஜீவா-மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் ‘கோல்மால்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>