Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
hansika wedding – Touring Talkies https://touringtalkies.co Mon, 05 Dec 2022 18:16:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png hansika wedding – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகை ஹன்ஸிகாவின் திருமணப் புகைப்படங்கள் https://touringtalkies.co/actress-hansika-mothwanis-wedding-stills/ Mon, 05 Dec 2022 18:15:16 +0000 https://touringtalkies.co/?p=28086 The post நடிகை ஹன்ஸிகாவின் திருமணப் புகைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>

The post நடிகை ஹன்ஸிகாவின் திருமணப் புகைப்படங்கள் appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது https://touringtalkies.co/actress-hansika-motwani-is-getting-married-on-december-4/ Wed, 02 Nov 2022 11:50:16 +0000 https://touringtalkies.co/?p=26429 நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையச் சேர்ந்த தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை வரும் டிசம்பர் 4-ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்..! நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜெய்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் […]

The post நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையச் சேர்ந்த தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை வரும் டிசம்பர் 4-ம் தேதி திருமணம் செய்ய உள்ளார்..!

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜெய்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார்.

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது.

ஹன்சிகா மோத்வானியின் 11-வது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாக பழகி வருகின்றனர். இப்போது ஹன்சிகா மற்றும் சோஹேலின் குடும்பம் நண்பர்களாக இருந்து உறவுகள் என்ற வோறொரு புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்ந்து நடிக்க உள்ளார். ஒவ்வொரு தொழிலும் மதிப்பு மிக்கது என்பதை உறுதியாக நம்பும் ஹன்சிகா நிச்சயம் திருமணம் எந்தவொரு தொழிலுக்கும் தடையாக இருக்காது என்கிறார்.

தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இதில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டப் படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இன்னும் தலைப்பிடப்படாத இயக்குநர்கள் இகோர் மற்றும் கண்ணன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் சில நாட்களை ஒதுக்கியுள்ளார் ஹன்சிகா.

The post நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் டிசம்பர் 4-ம் தேதி நடக்கிறது appeared first on Touring Talkies.

]]>
ஹன்ஸிகாவுக்கு டிசம்பரில் கல்யாணமா..? https://touringtalkies.co/will-hansika-get-married-in-december/ Mon, 17 Oct 2022 07:48:34 +0000 https://touringtalkies.co/?p=25542 நடிகை ஹன்ஸிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து, விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இடையில் சிம்புவைக் காதலித்து வந்து சில மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாக அவர்களே தெரிவித்தனர். சமீப வருடங்களாக ஹன்ஸிகாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிலேயே அவர் நடித்து வந்தார். […]

The post ஹன்ஸிகாவுக்கு டிசம்பரில் கல்யாணமா..? appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஹன்ஸிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து, விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இடையில் சிம்புவைக் காதலித்து வந்து சில மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டதாக அவர்களே தெரிவித்தனர்.

சமீப வருடங்களாக ஹன்ஸிகாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிலேயே அவர் நடித்து வந்தார். இந்த நிலையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை ஹன்ஸிகா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி பரவியது. அப்போது அதை அவர் மறுத்தார். இந்நிலையில், அவருடைய திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை அரண்மனையில் ஹன்ஸிகாவின் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான வேலைகள் நடந்து வருவதாக பாலிவுட் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், இதை நடிகை ஹன்சிகாவின் தரப்பில் இருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை.

ஹன்சிகா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்து அந்தப் படத்தின் பூஜை நிகழ்விலும் ஹன்ஸிகா கலந்து கொண்டார். இந்த நிலையில் இன்றைக்கு இந்தத் திருமணச் செய்தியும் வெளிவந்திருக்கிறது.

என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..!

The post ஹன்ஸிகாவுக்கு டிசம்பரில் கல்யாணமா..? appeared first on Touring Talkies.

]]>