Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
fahath fazil – Touring Talkies https://touringtalkies.co Fri, 06 May 2022 09:08:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png fahath fazil – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்த ஜாக்பாட்..! https://touringtalkies.co/jackpot-price-gets-kamalhaasans-vikram-movie/ Fri, 06 May 2022 08:56:01 +0000 https://touringtalkies.co/?p=21862 நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துள்ள புதிய படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜூடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்கிறார் என்ற உடனேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் […]

The post கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்த ஜாக்பாட்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரித்துள்ள புதிய படம் ‘விக்ரம்’.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜூடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்கிறார் என்ற உடனேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்தது. அதன் பின்னர் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் இணைந்தவுடன் படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் கூடுதலானது.

படம் முழுவதும் முடிவடைந்துவிட்டது. வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி விற்பனையில் மிகப் பெரிய தொகைக்கு இந்த விக்ரம் படம் விற்பனையாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விக்ரம்’ படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியுள்ளது.

படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு படத்தை ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கும் சேர்த்துதான் இந்த விலையாம்.

இந்த விக்ரம்’ படம் 100 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக 25 கோடி ரூபாயும் தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பேயே கிடைத்துவிட்டதால், இனி வரப் போகும் தியேட்டர் வசூல் இந்தப் படத்திற்கான கூடுதல் லாபமாகத்தான் இருக்கப் போகிறது.

The post கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்த ஜாக்பாட்..! appeared first on Touring Talkies.

]]>