Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director vetri maaran – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Apr 2024 10:30:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director vetri maaran – Touring Talkies https://touringtalkies.co 32 32 தளபதி69 படத்தை இயக்குவது நானா? வெற்றிமாறன் சொன்ன பதில்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf69-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8/ Thu, 25 Apr 2024 10:30:34 +0000 https://touringtalkies.co/?p=41385 வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடந்துவந்தது.இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.இதனால் சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலுக்கு செல்ல முடிவெத்துள்ளார்அதேசமயம் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றநிலையில் அந்தப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக இருக்கிறது. தற்போது நடித்து வரும் கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், […]

The post தளபதி69 படத்தை இயக்குவது நானா? வெற்றிமாறன் சொன்ன பதில்… appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடந்துவந்தது.இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.இதனால் சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலுக்கு செல்ல முடிவெத்துள்ளார்அதேசமயம் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றநிலையில் அந்தப் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக இருக்கிறது.

தற்போது நடித்து வரும் கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர்.முதன்முறையாக விஜய் வெங்கட் பிரபு கூட்டணி அமைத்திருப்மதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம் தான்.

இதுமட்டுமின்றி விஜய்யின் தளபதி 69 படத்தை குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை இயக்கபோவது வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, ஹெச்.வினோத் ஆகிய நான்கு பேரில் ஒருவர் என சொல்லப்பட்டு வந்தநிலையில் வெற்றிமாறன் தான் நிச்சயம் இயக்குவார் என பேசப்பட்டது ஆனால் கடைசியில் அதிகாரபூர்வமாக சொல்லப்படமால் இருந்தாலும் ஹெச்.வினோத் தான் இப்படத்தை இயக்க போகிறார் என தகவல் வந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் வெற்றிமாறன் கலந்துகொண்ட ஒருநிகழ்ச்சியில் தொகுப்பாளர் வெற்றிமாறனிடம், நீங்கள் தளபதி 69 படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வருகின்றனவே அதைப்பற்றி ஏதாவது கூற முடியுமா என கேட்க அதற்கு வெற்றிமாறனோ, அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை என்று கூறினார் இதை வைத்து பார்க்கும் போது விஜய் வெற்றிமாறன் கூட்டணி இப்போதைக்கு இணையவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கருத்துப்படுகிறது.

The post தளபதி69 படத்தை இயக்குவது நானா? வெற்றிமாறன் சொன்ன பதில்… appeared first on Touring Talkies.

]]>
இறுதிக் கட்ட படப்பிடிப்பில் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படம்..! https://touringtalkies.co/viduthalai-movie-shooting-news/ Sat, 21 May 2022 13:34:38 +0000 https://touringtalkies.co/?p=22198 இயக்குநர் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் இருந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ’கோ’, ‘யாமிருக்க பயமே’ போன்ற உள்ளடக்கத்தில் சிறந்த  பிளாக் பஸ்டர் படங்களைத் தயாரித்து அளித்த  RS Infotainment Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரால் தயாரிக்கப்படும், ‘விடுதலை’ திரைப்படம், இந்தியாவின் அனைத்து முன்னணி மொழிகளிலும் வெளியாக தயாராகி வருகிறது. இந்த ‘விடுதலை’ படத்தில் விஜய் […]

The post இறுதிக் கட்ட படப்பிடிப்பில் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் இருந்து வருகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா’, ’கோ’, ‘யாமிருக்க பயமே’ போன்ற உள்ளடக்கத்தில் சிறந்த  பிளாக் பஸ்டர் படங்களைத் தயாரித்து அளித்த  RS Infotainment Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரால் தயாரிக்கப்படும், ‘விடுதலை’ திரைப்படம், இந்தியாவின் அனைத்து முன்னணி மொழிகளிலும் வெளியாக தயாராகி வருகிறது.

இந்த ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், சேத்தன் மற்றும் மிகவும் பிரபலமான  நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேஸ்ட்ரோ இளையராஜா இந்த படத்திற்கு இசையமைப்பது இத்திரைப்படத்திற்கு மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் கலை இயக்குர் ஜாக்கி இருவரும் இணைந்து இந்தப் படத்தினை இன்னும் அழகுபடுத்தியுள்ளனர்.

உலகத் தரத்தில் இணையற்ற படைப்புகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநரான  வெற்றி மாறன் இத்திரைப்படத்தை இயக்குவதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் கவனம் குவிந்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் சத்தியமங்கலம் அருகேயிருக்கும் கடம்பூரில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டது, அதன் பிறகு இரண்டாவது ஷெட்யூல் செங்கல்பட்டிலும், மூன்றாவது ஷெட்யூல் சிறுமலையில் என  முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

தற்போது, திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் 50 நாட்கள் ஒரே கட்டமாக நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்பில் படக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த 50 நாட்களாக இப்படத்தினை சார்ந்த  450 படக் குழுவினர் சிறுமலை மலைப்பகுதியில் தங்கியுள்ளனர்.

கலை இயக்குநர் ஜாக்கி, சிறுமலையின் மேலேயிருக்கும் மலைப் பகுதியில் ஒரு பெரிய கிராமப் புற செட்டை  அமைத்திருப்பது மிகவும் சுவாரஸ்யமான அம்சமாகும். மிக தத்ரூபமாக ஒரிஜினல் கிராமம் போலவே இந்த செட் அமைக்கப்பட்டுள்ளது. 

நடிகர்  விஜய் சேதுபதி பங்கேற்கும் முக்கிய அதிரடி  சண்டைக் காட்சிகளில் ஒன்று இங்கு படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சியில் விஜய் சேதுபதி டூப் இல்லாமல் தானே நேரடியாக நடித்தார். நடிகர் விஜய் சேதுபதி 30 நாட்கள் தொடர்ந்து தனது முழு பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.

சூரி மற்றும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் ஜூன் 10-ம் தேதிக்குள் முடிவடையும்.

விஷப் பாம்புகள், காட்டெருமைகள், காட்டு நாய்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகளைக் கடந்து படக் குழுவினர்கள் வனப் பகுதிக்குள் தொலைதூர இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதால், படப்பிடிப்பின்போது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக 24×7 மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் உடன் இருப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த 4-ம் கட்ட படப்பிடிப்பில் 3 முக்கிய அதிரடி காட்சிகள் மற்றும் ஒன்றிரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக் குழு தெரிவித்துள்ளது.

The post இறுதிக் கட்ட படப்பிடிப்பில் வெற்றி மாறனின் ‘விடுதலை’ படம்..! appeared first on Touring Talkies.

]]>