Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director m – Touring Talkies https://touringtalkies.co Sun, 17 Jan 2021 09:41:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director m – Touring Talkies https://touringtalkies.co 32 32 “இந்தப் படத்துல நான் எதுக்கு ஸார்?” – மணிரத்னத்திடம் கேள்வி கேட்ட ஆர்.ஜே.பாலாஜி https://touringtalkies.co/why-am-i-in-this-picture-sir-rj-balaji-questioned-mani-ratnam/ Sun, 17 Jan 2021 09:34:28 +0000 https://touringtalkies.co/?p=12211 இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. “மணிரத்னம் ஸார் இந்தியாவிலேயே அதிகம் போற்றப்படும் இயக்குநர். அவருடைய படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர், நடிகைகள் எண்ணுகிறார்கள். அப்பேர்ப்பட்டவரின் படத்தில் நடிக்க எனக்கும் இந்தக் ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலமாக வாய்ப்பு வந்தது. இந்தப் படத்திற்காக அவுட்டோர் போயிருந்தபோது நான், கார்த்தி, […]

The post “இந்தப் படத்துல நான் எதுக்கு ஸார்?” – மணிரத்னத்திடம் கேள்வி கேட்ட ஆர்.ஜே.பாலாஜி appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

“மணிரத்னம் ஸார் இந்தியாவிலேயே அதிகம் போற்றப்படும் இயக்குநர். அவருடைய படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர், நடிகைகள் எண்ணுகிறார்கள். அப்பேர்ப்பட்டவரின் படத்தில் நடிக்க எனக்கும் இந்தக் ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலமாக வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்திற்காக அவுட்டோர் போயிருந்தபோது நான், கார்த்தி, அதிதி, மணிரத்னம் ஸார் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம்.

அந்தப் படத்தில் நானும் ஒரு டாக்டராக நடித்திருந்தேன். அங்கேயிருந்த 15 நாட்களும் நான் கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருந்தேன். படம் முழுவதுமே நான் வருவேன். ஆனால் என்ன நடித்தேன் என்றுதான் தெரியவில்லை.  என்னுடைய கதாபாத்திரம் எப்படி.. நான் எப்படிப்பட்டவன் என்பதெல்லாம் தெரியாமலேயே நடித்து முடித்தேன்.

நான் ஒரு முறை மணி ஸாரிடம் “ஸார்.. இது அப்பாஸ் நடிக்க வேண்டிய கேரக்டர்.. நான் எதுக்கு ஸார்?..”ன்னு கேட்டேன். அவர் அதிர்ச்சியாகி “என்ன…?” என்று திருப்பிக் கேட்டார்.. உடனேயே ஜகா வாங்கி “ஒண்ணுமில்ல ஸார்..”ன்னு ஓடிட்டேன்.

அப்புறம் ஒரு காட்சில ஷாட்ன்னு சொன்னவுடனேயே சட்டுன்னு முகத்தைத் திருப்பிட்டேன். “ஏன் அப்படி செஞ்சீங்க?”ன்னு கேட்டார் மணி ஸார். “இல்ல ஸார்.. எல்லா சினிமாலேயும் இதைத்தான் செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்றேன். “அதில்ல.. ஷாட் என்றால் கண்ணைத்தான் பார்க்கணும்..” என்று சொல்லிக் கொடுத்தார்.

ஒரு காட்சியில் ஒரு டயலாக்கை “ஸார் இதை இப்படி மாத்திக்கலாமா..?” என்று கேட்டேன். “அது ஒண்ணும் பைபிள் இல்லை. தாராளமா மாத்திக்கலாம்..” என்றார் மணிரத்னம்.

எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிக்கும்போது நான் “டயலாக்கை கொஞ்சம் மாத்திக்கலாமான்னு..?” கேட்டப்போ “அதெல்லாம் முடியாது”ன்னு சொன்ன இயக்குநர்களும் இருக்காங்க. ஆனால், மணிரத்னம் அதுக்கு ஓகேன்னு சொன்னதை நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருந்துச்சு..” என்கிறார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.

The post “இந்தப் படத்துல நான் எதுக்கு ஸார்?” – மணிரத்னத்திடம் கேள்வி கேட்ட ஆர்.ஜே.பாலாஜி appeared first on Touring Talkies.

]]>
நான்கு இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்’ https://touringtalkies.co/victin-movie-preview-news/ Sun, 08 Nov 2020 06:45:07 +0000 https://touringtalkies.co/?p=9821 ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்.’ தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப் பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 2014-ல் ஆரம்பித்த இத்தயாரிப்பு நிறுவனம் வெகு அழகான தரமிக்க படங்களை தந்து வருகிறது. ‘மரகத நாணயம்’, IMDB தளத்தில் இந்திய படங்களின் வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் ‘ராட்சசன்’ மற்றும் 2020-ல் மிகப் பெரும் ப்ளாக் […]

The post நான்கு இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்’ appeared first on Touring Talkies.

]]>
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் விக்டிம்.’

தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப் பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

2014-ல் ஆரம்பித்த இத்தயாரிப்பு நிறுவனம் வெகு அழகான தரமிக்க படங்களை தந்து வருகிறது.

மரகத நாணயம்’, IMDB தளத்தில் இந்திய படங்களின் வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் ‘ராட்சசன்’ மற்றும் 2020-ல் மிகப் பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ஓ மை கடவுளே’ என தொடர்ந்து கருத்திலும், சுவையிலும் கலக்கும்  படங்களை இந்நிறுவனம் தந்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்  மூன்று படங்களை தயாரித்து வருகிறது. மூன்று படங்களும் தயாரிப்பின்  வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் நிலையில், தற்போது ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன்  இணைந்து நான்கு  கதைகள் கொண்ட விக்டிம்’ எனும் ஆந்தாலஜி படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் நான்கு வெவ்வேறு கதைகளை, இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு இயக்குகிறார்கள்.

இந்த விக்டிம்’ ஆந்தாலஜி திரைப்படத்தில் தமிழின் சிறந்த நடிகர்களான நாசர், தம்பி ராமையா, பிரசன்னா, அமலா பால், நட்டி (எ) நடராஜ் சுப்பிரமணியம், கலையரசன் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் கதையில் R. சரவணன் ஒளிப்பதிவாளராகவும், சாம் C.S. இசையமைப்பாளராகவும், லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இயக்குநர்  ராஜேஷ்.M இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சேகர் இசையமைப்பாளராகவும், ஆகாஷ் தாமஸ் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் கதையில் தமிழ் A.அழகன் ஒளிப்பதிவாளராகவும், தென்மா இசையமைப்பாளராகவும், செல்வா.R.J. படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் கதையில் சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராகவும், பிரேம் ஜி  இசையமைப்பாளராகவும், வெங்கட் ராஜன் படத் தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

ஆக்சஸ்  ஃபிலிம்  ஃபேக்டரி நிறுவன தயாரிப்பாளர் G.டில்லி பாபு இந்தப் படம் குறித்து பேசும்போது, “எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான படங்களை தருவது மட்டும்தான். எங்கள் படங்களுக்கு ரசிகர்கள் தரும் பெரும் வரவேற்பும், பேராதரவும் எங்களுக்கு  பெரும் பொறுப்புனர்வை தந்திருக்கிறது,  தொடர்ந்து அவர்கள் கொண்டாடும் வகையிலான படங்களை தர நாங்கள் பாடுபடுவோம்.

அந்த வகையில் இப்போது நாங்கள் உருவாக்கும் இந் விக்டிம்’ ஆந்தாலஜி திரைப்படததை  ரசிகர்கள் விரும்பும்வகையில்  இயக்குநர்கள் சிம்பு தேவன் , ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் உருவாக்கித் தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

விக்டிம்’ என்பது ஒரு குற்றசெயல் நடக்கும்போது அதில்  உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படும் நபரை குறிக்கும் சொல்லாகும். குற்றச் செயலால் ஒருவர் அடையும் உடல் பாதிப்பைவிட, மனதளவிலும் ஏற்படும் பாதிப்பென்பது மிகவும் கொடியதாகும்.

நம்மை நாம் கேள்வி கேட்டுக் கொண்டால் வாழ்வில் நாமும்  ஒரு முறை   ‘விக்டிமாக’ இருந்திருப்போம். காரணங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம், ஆனால் குற்றச் செயலால் நாம் அடையும் அழுத்தம், பயம், பதட்டம் அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றாகவே ஏற்பட்டிருக்கும். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் கரு இந்த விக்டிமை மையப்படுத்தியதே ஆகும்.

தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளாக திகழும் இயக்குநர்கள் சிம்பு தேவன், ராஜேஷ் M, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் விக்டிம் கருவை அடிப்படையாக வைத்து தங்கள் பார்வையில் நான்கு ‘விக்டிம்’  கதைகளை அழகான வடிவில் தரவுள்ளார்கள்…” என்றார்.

The post நான்கு இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்’ appeared first on Touring Talkies.

]]>