Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director m.j.ramanan – Touring Talkies https://touringtalkies.co Sat, 14 May 2022 16:48:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director m.j.ramanan – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிவாஜியின் பேரன் துஷ்யந்த் நாயகனாக நடிக்கும் ‘ஷூட்டிங் ஸ்டார்’ படம் https://touringtalkies.co/shooting-star-starring-shivajis-grandson-dushyant/ Sat, 14 May 2022 14:33:40 +0000 https://touringtalkies.co/?p=22059 ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எம்.ஜெ.ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஷூட்டிங் ஸ்டார்’. இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘சக்ஸஸ்’, ‘மச்சி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். ‘மீன் குழம்பும், மண் பானையும்’, ‘ஜெகஜ்ஜால கில்லாடி’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரும்கூட..! சில தமிழ் படங்களில் முன்னணி நாயகியாக நடித்த […]

The post சிவாஜியின் பேரன் துஷ்யந்த் நாயகனாக நடிக்கும் ‘ஷூட்டிங் ஸ்டார்’ படம் appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எம்.ஜெ.ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஷூட்டிங் ஸ்டார்’.

இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘சக்ஸஸ்’, ‘மச்சி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். ‘மீன் குழம்பும், மண் பானையும்’, ‘ஜெகஜ்ஜால கில்லாடி’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரும்கூட..!

சில தமிழ் படங்களில் முன்னணி நாயகியாக நடித்த மாஷூம் சங்கர் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். மற்றும் விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர் சீனிவாச ரெட்டி, இந்தி நடிகர் ரவி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் பல பிரபல இந்தி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களும் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதீஷ்குமார் கவனிக்க, பிரபல ஹிந்தி இசையமைப்பாளர்கள் அம்ஜத்-நதிம்-ஆமீர் இசையமைக்க, கலை இயக்குநராக சேத்தன் பாடக், படத் தொகுப்பாளராக சசிக்குமார், சண்டை பயிற்சி இயக்குநராக கனல் கண்ணன், நடன இயக்குராக விஷ்ணு தேவா ஆகியோர் இப்படத்தில் பணிபுரிகிறார்கள். 

ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த எம்.ஜெ.ரமணன் இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு இயக்கவும் செய்கிறார்.

வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்த ஒருவனை, அவனை சுற்றியுள்ளவர்கள் எப்படி, மென்மேலும் அவனை ஏமாளி ஆக்குகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதுதான் இப்படத்தின் கதை. 

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் தயாராகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கி சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கஜுராஹோ பகுதிகளில் நடைபெற இருக்கிறது. 

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்தத் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகை குஷ்பூ, நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

The post சிவாஜியின் பேரன் துஷ்யந்த் நாயகனாக நடிக்கும் ‘ஷூட்டிங் ஸ்டார்’ படம் appeared first on Touring Talkies.

]]>