Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director lokesh kanagaraj – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Mar 2024 07:26:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director lokesh kanagaraj – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினிக்காக ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்கும் லோகேஷ் https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae/ Thu, 28 Mar 2024 07:26:16 +0000 https://touringtalkies.co/?p=40389 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. கமல்ஹாசனுடன் இணைந்து “விக்ரம்” என்ற மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கிய லோகேஷ், ரஜினிகாந்துடன் தனது புதிய படமும் சமமாக இருக்கும் என்று சபதம் செய்துள்ளார். விஜய்யுடன் இணைந்த “லியோ” படத்தின் பிற்பகுதி விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட லோகேஷ், ரஜினிகாந்தின் படத்துக்கு வலிமையான திரைக்கதை அமைக்கும் வேளையில் அதிக நாள் செலவிடுகிறாராம். […]

The post ரஜினிக்காக ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்கும் லோகேஷ் appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

கமல்ஹாசனுடன் இணைந்து “விக்ரம்” என்ற மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கிய லோகேஷ், ரஜினிகாந்துடன் தனது புதிய படமும் சமமாக இருக்கும் என்று சபதம் செய்துள்ளார்.

விஜய்யுடன் இணைந்த “லியோ” படத்தின் பிற்பகுதி விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட லோகேஷ், ரஜினிகாந்தின் படத்துக்கு வலிமையான திரைக்கதை அமைக்கும் வேளையில் அதிக நாள் செலவிடுகிறாராம்.

ரஜினியின் படம் உண்மையிலேயே மறக்கமுடியாத படமாக தனக்கு இருக்கும் என்று கூறியுள்ள லோகேஷ், ரஜினிகாந்தின் பாத்திரம் முற்றிலும் தனித்துவமானதாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

The post ரஜினிக்காக ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்கும் லோகேஷ் appeared first on Touring Talkies.

]]>
ஹரிஷ் கல்யாணின் ’பார்க்கிங்’ பாராட்டிய லோகேஷ் கனகராஜ்.! https://touringtalkies.co/lokesh-kanagaraj-praised-harish-kalyans-parking/ Sat, 04 Nov 2023 00:46:32 +0000 https://touringtalkies.co/?p=37525 பாக்ஸ் ஆஃபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தைப் பாராட்டியுள்ளார்! பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் ’பார்க்கிங்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள பாராட்டிற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து […]

The post ஹரிஷ் கல்யாணின் ’பார்க்கிங்’ பாராட்டிய லோகேஷ் கனகராஜ்.! appeared first on Touring Talkies.

]]>
பாக்ஸ் ஆஃபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தைப் பாராட்டியுள்ளார்!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் ’பார்க்கிங்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள பாராட்டிற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்க படத்தினை பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் ‘பிளாக்பஸ்டர் இயக்குநரான’ லோகேஷ் கனகராஜ் படம் வெற்றிப் பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ’’பார்க்கிங்’ படம் பற்றி நிறைய நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். மேலும், படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளது. சினிஷ், சுதன் சுந்தரம், ராம்குமார் பாலகிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது சகோதரர்களான சாம் சிஎஸ் மற்றும் எடிட்டர் பிலோமின் ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுLokesh Kanagaraj praised Harish Kalyan’s ‘Parking’

The post ஹரிஷ் கல்யாணின் ’பார்க்கிங்’ பாராட்டிய லோகேஷ் கனகராஜ்.! appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..! https://touringtalkies.co/theatre-owners-and-distributors-were-waiting-for-master-movie-only-on-theatres/ Mon, 30 Nov 2020 17:17:15 +0000 https://touringtalkies.co/?p=10572 கடந்த வாரம் வெளியான ஒரேயொரு துணுக்குச் செய்தி தமிழ்த் திரையுலகத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது. ‘மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று சிலரும், ‘அமேஸான் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று மற்றொரு தரப்பும் செய்தியை பரப்புரை செய்தன. இதனால் ‘மாஸ்டர்’ படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வைரலாகி பரவ.. விஜய்யின் ரசிகர்களிடையேயும், தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. மிக அதிக விலை கொடுத்து ‘மாஸ்டரை’ வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும், […]

The post ‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..! appeared first on Touring Talkies.

]]>
கடந்த வாரம் வெளியான ஒரேயொரு துணுக்குச் செய்தி தமிழ்த் திரையுலகத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது.

மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று சிலரும், ‘அமேஸான் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று மற்றொரு தரப்பும் செய்தியை பரப்புரை செய்தன.

இதனால் ‘மாஸ்டர்’ படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வைரலாகி பரவ.. விஜய்யின் ரசிகர்களிடையேயும், தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.

மிக அதிக விலை கொடுத்து ‘மாஸ்டரை’ வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும், இந்தாண்டில் வரலாறு காணாத அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்திருக்கும் தியேட்டர்காரர்களும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நடுங்கித்தான் போனார்கள்.

செய்தி வதந்திதான் என்றாலும் இதில் பாதி உண்மை.. மீதி பொய்யுரைதான். ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால் நெட்பிளிக்ஸிற்கு அல்ல. அமேஸான் பிரைம் வீடியோ தளத்திற்கு.

கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயைத் தொட்டுவிட்ட படத்தின் பட்ஜெட்டை வெறுமனே 100 கோடிக்குள் விற்பனை செய்து முடித்துவிட முடியாது. ஏனெனில் விஜய் டாப் ஸ்டார்களில் ஒருவர். தியேட்டர் வசூலில் மொக்கையான படமாக இருந்தாலும் 100 கோடியை அலட்சியமாகத் தாண்டக்கூடிய பந்தயக் குதிரை. ஆகவே அவர் மூலம் கிடைக்கவிருக்கும் தியேட்டர் வசூலை இழப்பதற்கு தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ, தியேட்டர்காரர்களோ தயாராக இல்லை.

எனவே ‘மாஸ்டர்’ படத்தை தியேட்டருக்குக் கொண்டு வருவதற்கு மூன்று தரப்பினரும் முனைப்புடன் இருக்கிறார்கள். விஜய் படம் என்றால் அவரது ரசிகர்கள், அடுத்தது குடும்பத்தினர் அனைவருக்கும் தியேட்டருக்கு வந்து குவிந்தால் வசூலும் கூடும். அப்படியே அடுத்தடுத்த படங்களுக்கும் மக்கள் கூட்டம் கூட வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

ஆனால், இன்னொரு பக்கம் அவர்களில் ஒரு சிலரே அந்த நம்பிக்கைக்கு விரோதமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் யார் படம் போட்டாலும் அவ்வளவு கூட்டம் வராது. கொரோனா பயத்தில் மக்கள் குடும்பமாக கண்டிப்பாக வர மாட்டார்கள். விஜய்யின் ரசிகர்கள் மட்டுமே வர முடியும்.

அப்படியே வந்தாலும் 50 சதவிகித இருக்கைகளுக்குதான் அனுமதி என்பதால் ஒவ்வொரு தியேட்டரும் அட்வான்ஸ் தொகையாக விநியோகஸ்தர்களிடத்தில் கொடுத்திருக்கும் தொகையை மீண்டு எடுப்பதற்கு கண்டிப்பாக 6 அல்லது 8 வாரங்களாகும்.

ஒருவேளை ‘மாஸ்டர்’ திரைப்படம் மேக்கிங்கில் நன்றாக இல்லை என்ற செய்தி வெளியானால் ‘புலி’ படத்தின் நிலைமைதான் இதற்கும் வரும்.

புலி’ படம் வெளியானபோது படத்தின் இடைவேளையோடு ரசிகர்கள் எழுந்து வெளியேறியதை வீடியோ எடுத்து சிலர் வெளியிட.. அது வைரலாகி.. கடைசியில் ‘படம் நல்லாயில்லை’ என்று நினைத்து குடும்பத்தினரும் ஒட்டு மொத்தமாய் புறக்கணிக்க படம் தோல்வியடைந்தது.

அப்படியொரு சூழல் வருமானால் ‘மாஸ்டர்’ படத்திற்குக் கிடைக்கும் வசூல் ‘புலி’ படத்தில் இருந்து கிடைத்த வசூலில் பாதியாகத்தான் இருக்கும். இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இதனாலேயே ‘திக் திக்’ மன நிலையில் தவிப்புடன் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும்.

மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் என்னதான் தியேட்டரில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று சொன்னாலும், இந்த களேபரங்களை மனதில் வைத்து அனைத்துத் தரப்பினரும் இதனை சந்தேகக் கண்ணுடனேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வதந்திகளையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி. படத்தின் நாயகனான விஜய் மாஸ்டர் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு விசிட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுதான். அவர் இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒரு ரவுண்டு வந்தால் கொரோனா பயமில்லாமல் ரசிகர்களும், அவர்களது குடும்பத்தினருக்கும் தியேட்டர்களைத் தேடி, ஓடி வருவார்கள்.

விஜய் மட்டும் அல்ல. அனைத்து ஹீரோக்களும் இதை பாலோ செய்தால் அவரவர் ரசிகர்களும் கொரோனா பயமி்லலாமல் தியேட்டருக்கு வருகை தருவார்கள். மறந்து போன தியேட்டர் பழக்கத்தை மக்களிடையே மீண்டும் கொண்டு வருவதற்கு, இதைவிட்டால் வேறு வழியில்லை..

செய்வாரா விஜய் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி..!

The post ‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..! appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் https://touringtalkies.co/master-movie-teaser/ Sat, 14 Nov 2020 12:39:07 +0000 https://touringtalkies.co/?p=10045 Master – Starring Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj, Arjun Das Written & Directed by Lokesh Kanagaraj Produced by Xavier Britto Co-Produced by Lalit Kumar & Jagadish Palanisamy Music – Anirudh Ravichander DOP – Sathyan Sooryan Art Director – Sathees Kumar Editor – Philomin Raj Lyrics – Arunraja Kamaraj, Vigneshshivn, Vishnu […]

The post ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>
Master – Starring Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj, Arjun Das Written & Directed by Lokesh Kanagaraj Produced by Xavier Britto Co-Produced by Lalit Kumar & Jagadish Palanisamy Music – Anirudh Ravichander DOP – Sathyan Sooryan Art Director – Sathees Kumar Editor – Philomin Raj Lyrics – Arunraja Kamaraj, Vigneshshivn, Vishnu Edavan, Arivu Stunts – Stunt Silva Choreography – Dinesh, Sathish Executive Producer – R Udayakumar Managers – KTS.Swaminathan, Balamurugan, Viswanathan, Jeyaprakash, Suresh Kanagaraj Sound Design – Sync Cinema Sound Mix – Kannan Ganpat Costume Designer – Pallavi Singh Chief Make-Up Artist – P.Nagaraj & Preethi Sheel Costumer – V.Sai DI – Igene VFX – Unifi Media DI Colorist – Ranga Publicity Design – Gopi Prasannaa Stills – Maneksha PRO – Riaz K Ahmed Music on – Sony Music Entertainment Asso. Directors – Magesh Balasubramaniam, Santhosh Krishnan, Sathya, Venki, Logi, Vishnu Edavan #MasterOfficialTeaser #ThalapathyVijay #SunTV

The post ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>