Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
director k.balachander – Touring Talkies https://touringtalkies.co Wed, 21 Apr 2021 14:18:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png director k.balachander – Touring Talkies https://touringtalkies.co 32 32 தமிழ்ச் சினிமா வரலாறு-44 – கே.பாலச்சந்தருக்கும், நாகேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் https://touringtalkies.co/tamil-cinema-history-44-clash-between-kb-with-nagesh/ Wed, 21 Apr 2021 14:17:12 +0000 https://touringtalkies.co/?p=14553 இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்-நாகேஷ் ஆகிய இருவரும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு நகமும் சதையும் போல இருந்தவர்கள். தன்னுடைய மிகச் சிறந்த நண்பராக இருந்த பாலச்சந்தர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் நாகேஷ். ‘சர்வர் சுந்தரம்’ நாடகம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் சினிமாவைப்  பற்றி பாலச்சந்தர் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அப்போது முதன் முதலாக  ஒரு காரை வாங்கியிருந்த நாகேஷ்  அந்தக் காரில் பாலச்சந்தரை ஏற்றிக் கொண்டு கதிட்ரல் சாலையில் 110 கி.மீட்டர் வேகத்தில்  பறந்தார். […]

The post தமிழ்ச் சினிமா வரலாறு-44 – கே.பாலச்சந்தருக்கும், நாகேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்-நாகேஷ் ஆகிய இருவரும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு நகமும் சதையும் போல இருந்தவர்கள். தன்னுடைய மிகச் சிறந்த நண்பராக இருந்த பாலச்சந்தர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் நாகேஷ்.

‘சர்வர் சுந்தரம்’ நாடகம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் சினிமாவைப்  பற்றி பாலச்சந்தர் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அப்போது முதன் முதலாக  ஒரு காரை வாங்கியிருந்த நாகேஷ்  அந்தக் காரில் பாலச்சந்தரை ஏற்றிக் கொண்டு கதிட்ரல் சாலையில் 110 கி.மீட்டர் வேகத்தில்  பறந்தார்.

“டேய் என்னடா இப்படி ஓட்டறே? மெள்ளப் போடா எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது” என்று  பாலச்சந்தர் சொன்னபோது “கவலைப்படாதே பாலு. இந்தக் கார்ல என் பக்கத்தில உட்கார்ந்துக்கிட்டிருக்கறது எதிர்காலத்தில இந்த சினிமா உலகை ஆட்டிப் படைக்கப் போகிற ஒப்பற்ற டைரக்டர்னு எனக்குத் தெரியும். அதனால உன்னை பொறுப்பா வீட்டில் கொண்டு போய் சேர்த்து விடுவேன்” என்றார் நாகேஷ்.

“சரிதான் போடா, உனக்கு எல்லாம் விளையாட்டுத்தான்” என்று கே.பாலச்சந்தர் அலுத்துக் கொள்ள “நான் சொன்னது பலிக்குதா இல்லையான்னு பாரு” என்று அப்போதே ஆணித்தரமாக சொன்னவர்தான்   நாகேஷ்.

தனது படங்களில் நாகேஷுக்காகவே வித்தியாசமான பாத்திரங்களை உருவாக்குவார் பாலச்சந்தர். அவர் படைக்கும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பார் நாகேஷ். அப்படி ஒரு புரிதல் அவர்கள் இருவருக்குமிடையே இருந்ததால்தான் பாலச்சந்தரின் படங்களில் மட்டும் நாகேஷின் பாத்திரப் படைப்புகள்  தனியாகத் தெரிந்தன.

‘வெள்ளி விழா’ திரைப்படத்தில் கட்சி விட்டு கட்சி தாவும் ஒரு அரசியல்வாதியின் பாத்திரத்தை நாகேஷுக்கென்று அற்புதமாக உருவாக்கியிருந்தார் பாலச்சந்தர். தன்னுடைய நடிப்பாற்றலால் அந்தப் பாத்திரத்தை நாகேஷ் எங்கேயோ கொண்டு சென்று விடுவார் என்பது  அவர் கணிப்பாக இருந்தது.

அப்போது நாகேஷ் மிகவும் பிசியான நடிகராக  இருந்ததால்  முன்னதாகவே அவரிடம் பேசி கால்ஷீட்டை மொத்தமாக வாங்கச் சொல்லியிருந்தார் பாலச்சந்தர். அதன்படி தயாரிப்பாளர்களும்  நாகேஷிடம் பேசி தேதிகளை உறுதிப்படுத்தியிருந்தனர்.

வாகினி ஸ்டுடியோவில் அன்று நடைபெறவிருந்த ‘வெள்ளி விழா’ படத்தின் படப்பிடிப்பிற்கு  கே.பாலச்சந்தர் வழக்கம் போல எட்டு மணிக்கே வந்து விட்டார். அவரைத் தொடர்ந்து மனோரமா வந்தார். அடுத்து படமாக்கப்பட வேண்டிய காட்சி பற்றி பாலச்சந்தர் ஒளிப்பதிவாளருக்கு சொல்ல அரங்கம் படப்பிடிப்பிற்கு தயாரானது.

ஆனால், மணி பதினொன்று ஆகியும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதற்குக் காரணம் அன்றைய காட்சியின் பிரதான நடிகரான நாகேஷ் அதுவரை ஸ்டுடியோவிற்குள்ளே  காலடி எடுத்து வைக்கவில்லை.

படத்தின் தயாரிப்பாளர்களைக் அழைத்த  பாலச்சந்தர், “என்னாச்சி..? ஏன் அவன் வரலே. கூப்பிட்டுக் கொண்டு வர யார் போயிருக்காங்க..?” என்று கேட்டார்.

அடுத்து நடக்கவிருந்த விபரிதம் தெரியாமல்  “புரொடக்ஷன் மேனேஜர் போயிருக்கார். இப்போது  கூட்டிக் கொண்டு  வந்து விடுவார்” என்று அப்பாவியாக பதிலளித்தார் அந்தத் தயாரிப்பாளர்.

அந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில் புரொடக்ஷன் மேனேஜர் வியர்க்க விறுவிறுக்க அங்கே வந்தார். “எங்கேய்யா நாகேஷ்..?” என்ற  பாலச்சந்தரின்  குரலில் உஷ்ணம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. “அவர் வர மாட்டார் சார். அவர் எம்.ஜி.ஆர் பட ஷுட்டிங்கிற்கு போய் விட்டார்” என்று அந்த மேனேஜர் சொன்னதும் பாலச்சந்தருக்கு கோபம் மண்டைக்கு ஏறியது.

காலை ஒன்பது மணி முதல் நாகேஷுக்காக காத்துக் கொண்டு இருந்ததால் ஆத்திரத்தின்  உச்சியில் இருந்த பாலச்சந்தர் “என்னய்யா சொல்றே? நீங்க முன்னாலேயே டேட் வாங்கியிருந்தீங்க இல்லே. இன்னிக்கு நம்ம கால்ஷீட்தானே? அப்புறம் எப்படி அவன் எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்கிற்கு போவான்…?” என்று பாலச்சந்தர் கேட்டபோது அந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நிலைமையை சமாளிக்காமல் எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றினார் அந்தத் தயாரிப்பு நிர்வாகி.

“அந்த எம்.ஜி.ஆர் படத்தின் டைரக்டரே நாகேஷைப் பார்க்க வந்திருந்தார் சார். அவரை என்கிட்ட காட்டி ‘இவர் யார் தெரியுமாடா. எம்.ஜி.ஆர் படத்தோட டைரக்டர். இப்ப சொல்லு. நான் யார் ஷுட்டிங்குக்கு போவேன்?’ என்று சொல்லிவிட்டு அவர்கூட காரில் ஏறிப் போய்விட்டார் சார்…” என்றார் அந்தத் தயாரிப்பு நிர்வாகி.

பாலச்சந்தரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாகேஷா அப்படி சொன்னான் என்ற கேள்வி அவர் மனதிற்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டேயிருந்தது.

“எம்.ஜி.ஆர் படத்திற்கு கால்ஷீட் கேட்டால்  மறுக்க முடியாது என்பது மொத்த சினிமா உலகத்திற்கும் தெரியும். அவருக்குத் தேதி கொடுத்து விட்டு, அந்தத் தேதிகள் மாறக் கூடியது என்பதால்கூட நாகேஷ் கலாகேந்திராவிற்கு அதே தேதிகளைக்  கொடுத்திருக்கலாம். பின்னர் அவர் தேதியில் மாற்றம் ஏதும் இல்லாததால் அந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம்கூட  அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஒரு நிலைமை என்றால் தயாரிப்பு நிர்வாகியைத் தனியாகக் கூப்பிட்டு நிலைமையை சொல்லியிருக்கலாமே. அதை விட்டுவிட்டு எம்.ஜி.ஆர் டைரக்டரே இங்கே வந்திருக்கிறார் என்று சொல்கிறான் என்றால்  இவனைக் கூப்பிட நான் வரவேண்டும் என்று  எதிர்பார்க்கிறானா..?” – இப்படி பல சிந்தனைகள் பாலச்சந்தரின் மனதிற்குள் ஓடத் தொடங்கின.

“அப்போ இவ்வளவு காலம் எங்கள் இருவருக்குமிடையே இருந்த நட்புக்கு என்ன அர்த்தம்…?” என்று தனக்குள்ளேயே அவர் கேள்வி கேட்டுக் கொண்டார்.

ஒன்றும் புரியாத அந்த  சூழ்நிலையில் மனோரமாவை அழைத்த அவர் “இன்று படப்பிடிப்பு ரத்து.. நீங்கள்  கிளம்பலாம்..” என்றார். மனோரமா கிளம்பியபோது அவரை மீண்டும் அழைத்து  “நாளைக்கு நிச்சயமாக படப்பிடிப்பு உண்டு” என்றார் கே.பி.

“நாளைக்கு படப்பிடிப்பு உண்டு” என்று சொன்னபோது அவரது குரலில் இருந்த தீர்மானம் பாலச்சந்தர் ஒரு முடிவெடுத்துவிட்டார் என்பதை மனோரமாவிற்குச்  சொல்லாமல் சொல்லியது.

அடுத்து தயாரிப்பாளர்களை அழைத்த  பாலச்சந்தர் “இனி இந்தப் படத்தில் நாகேஷ் இல்லை” என்றார். அதைக் கேட்ட அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

படப்பிடிப்பிற்கு வர முடியவில்லை என்றால் அதை இன்னும் கொஞ்சம் நாகரீகமாக சொல்லியிருக்கலாமே. அதை ஏன் நாகேஷ் செய்யவில்லை என்று தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, “என்ன செய்வீர்களோ தெரியாது. தேங்காய் சீனிவாசன் எங்கே இருக்கிறார் என்று தேடிப்  பிடியுங்கள். நாளை முதல் ஆறு நாளைக்கு ஷுட்டிங். வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. குறிப்பாக நாகேஷுக்கு சொல்லக் கூடாது” என்ற பாலச்சந்தர் அதோடு நிறுத்தவில்லை.

“நாகேஷை  சமாதானம் செய்கின்ற வேலையை எல்லாம் யாரும் செய்யக் கூடாது. அதேமாதிரி சமாதானம்ன்னு சொல்லிகிட்டு என்னையும்  யாரும் கூப்பிடக் கூடாது” என்றும் கண்டிப்பாகக் கூறிவிட்டு ஸ்டுடியோவைவிட்டு கிளம்பினார்.

இனி பாலச்சந்தர்-நாகேஷ் உறவு என்பது உடைந்த கண்ணாடி பாத்திரம்தான் என்பது தயாரிப்பாளர்களுக்கு தெளிவாகப் புரிந்தது.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டார் பாலச்சந்தர். அவர் வந்த பத்தாவது நிமிஷம் தேங்காய் சீனிவாசன் அங்கு வர  படப்பிடிப்பு வேகமாக நடந்தது.

படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று சொன்ன நாகேஷ் இரண்டாம் நாள் ஸ்டுடியோவிற்கு போன் போட்டு “ஷுட்டிங் நடக்கிறதா?” என்று கேட்டார்.  பதில் சொன்னவர் “ஷுட்டிங் நடக்கிறது” என்று மட்டும் சொல்லி நிறுத்தவில்லை. முதல் நாள்  நடந்தது முழுவதையும் அப்படியே சொன்னார்.

ஏறக்குறைய பத்தாண்டு காலம் நீடித்த நட்புக்கு குறுக்கே அழுத்தமான கோடு விழுந்துவிட்டது என்பது நாகேஷுக்கு புரிந்து போனது. அதற்கு பிறகு பாலச்சந்தருடன் அது குறித்து அவர் பேசவில்லை. பாலச்சந்தரும்,  நாகேஷைத் தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை.

அந்த மோதல் நடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு  நண்பர்கள் பலர் எடுத்த தீவிர முயற்சிகள்  காரணமாக ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அந்த ‘அபூர்வ ஜோடி’ மீண்டும் இணைந்தது.

The post தமிழ்ச் சினிமா வரலாறு-44 – கே.பாலச்சந்தருக்கும், நாகேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-13 – கே.பாலச்சந்தரை பயமுறுத்திய தயாரிப்பாளர் https://touringtalkies.co/kbalachander-ramaarangannal-friendshipt-story/ Tue, 13 Oct 2020 07:00:03 +0000 https://touringtalkies.co/?p=8703 ‘பச்சை விளக்கு’ தொடங்கி ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘நவக்கிரகம்’, ‘பூவா தலையா’, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்று தமிழ்ப்பட உலகம் என்றும் மறக்க முடியாத பல அற்புதமான படங்களைத் தயாரித்த இராம அரங்கண்ணல் கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர். அரசியலில் அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருக்கும் கலை உலகில்  சிவாஜி, கே பாலச்சந்தர் தொடங்கி பலருக்கும்  நெருங்கிய தோழராக இருந்தவர் அவர். அரங்கண்ணல் திரைப்படத் துறையில் லாபகரமாக செயல்பட்டது இயக்குநர் […]

The post சினிமா வரலாறு-13 – கே.பாலச்சந்தரை பயமுறுத்திய தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.

]]>

‘பச்சை விளக்கு’ தொடங்கி ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘நவக்கிரகம்’, ‘பூவா தலையா’, ‘அவள் ஒரு தொடர்கதை’ என்று தமிழ்ப்பட உலகம் என்றும் மறக்க முடியாத பல அற்புதமான படங்களைத் தயாரித்த இராம அரங்கண்ணல் கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்டவர்.

அரசியலில் அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருக்கும் கலை உலகில்  சிவாஜி, கே பாலச்சந்தர் தொடங்கி பலருக்கும்  நெருங்கிய தோழராக இருந்தவர் அவர்.

அரங்கண்ணல் திரைப்படத் துறையில் லாபகரமாக செயல்பட்டது இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களோடு இணைந்து படங்களை எடுக்கத் தொடங்கிய பிறகுதான். அதற்கு அச்சாரம் போட்டவர் அரங்கண்ணல் அவர்களின் நண்பரான கோட்டையூர் அண்ணாமலை என்ற நண்பர்.

சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட அவர் தனது நண்பரான அரங்கண்ணலின் கதை வசனத்தில்தான் படம்  எடுக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தார். அப்போது அரங்கண்ணல் ‘சலசலப்பு ஜானகி’ என்றொரு தொடர் கதை எழுதியிருந்தார். அந்தக் கதையையே சினிமாவுக்குத் தகுந்த மாதிரி மாற்றி அமைத்து ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் அரங்கண்ணல்.

அந்த சமயத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘நீர்க்குமிழி’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த பிரபல கதாசிரியரான ஏ.கே.வேலன் அரங்கண்ணலுக்கு அந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார். அந்தப் படம் அரங்கண்ணலை மிகவும் கவர்ந்தது. அதை விடவும் அரங்கண்ணளைக் கவர்ந்தது அந்தக் கதையை பாலச்சந்தர் திரையிலே சொல்லியிருந்தவிதம்.

ஆகவே ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்திற்கு பாலச்சந்தரையே இயக்குநராக ஒப்பந்தம் செய்ய விரும்பினார் அரங்கண்ணல். ஆனால் தயாரிப்பாளர் அண்ணாமலையோ, கிருஷ்ணன் பஞ்சுவை இயக்குநராகப் போட ஆசைப்பட்டார். இறுதியில், அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி பாலச்சந்தரை ஒப்பந்தம் செய்ய வைத்தார்  அரங்கண்ணல்.

‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் கதையை எழுதிய அரங்கண்ணல்தான் அந்தப் படத்தின் வசனங்களையும் எழுதினார் என்றாலும் அப்போது  அரங்கண்ணல் தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் வசனகர்த்தா என்ற முறையில் தினமும் படப்பிடிப்புக்கு அவரால் செல்ல முடியவில்லை.

அரங்கண்ணல் எழுதித் தந்திருந்த ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் காட்சிகள் பலவற்றில் மாற்றம் தேவைப்பட்ட போதெல்லாம்  அரங்கண்ணலின் அனுமதி இன்றி அவர் எழுதிய  வசனங்களில் பல மாற்றங்களைச் செய்து படமாக்கி விட்டார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடுத்தவரையிலான படத்தைப் போட்டுப் பார்க்க அரங்கண்ணல் வந்தார். ஆனால், இயக்குநரான பாலச்சந்தர் அந்தக் திரையீட்டுக்கு வரவில்லை.

அரங்கண்ணல் எழுதியிருந்த வசனத்தில் பல மாற்றங்களைத் தான்  செய்திருந்ததால் படத்தின் கதை, வசனகர்த்தாவாக  மட்டுமின்றி படத் தயாரிப்பாளராகவும் இருந்த அரங்கண்ணல் அந்த மாற்றங்களை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற தயக்கத்தில்தான் பாலச்சந்தர் அந்தத் திரையீட்டுக்கு வரவில்லை.  

படத்தைப் பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியே வந்த  அரங்கண்ணல் அருகில் நின்று கொண்டிருந்த தயாரிப்பு நிர்வாகியிடம் “பாலசந்தர் எங்கே..?” என்றுதான் முதலில்  கேட்டார். “அவர் வரவில்லை…” என்று அந்தத் தயாரிப்பு நிர்வாகி  சொன்னதும் ஆளை அனுப்பி பாலச்சந்தரை அழைத்து வரச் சொன்னார்.

அரங்கண்ணல் அழைத்து வரச் சொன்னார் என்ற செய்தியுடன் தயாரிப்பு நிர்வாகி வந்தபோது நிச்சயமாக இந்த படம் பிரச்னையில்தான் முடியப் போகிறது என்று எண்ணிக் கொண்டே காரில் ஏறினார் பாலச்சந்தர்.

திரை அரங்கிற்கு பாலச்சந்தர் வந்ததும்  “வசனங்கள்ல நிறைய மாற்றம் பண்ணியிருக்கீங்க  போல இருக்கு” என்று அரங்கண்ணல்  ஆரம்பித்த உடன், அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று பாலசந்தர் மட்டுமல்ல…  சுற்றியிருந்தவர்களும்  அமைதியாகிவிட்டார்கள். “இனி எடுக்கப் போகிற காட்சிகள் எல்லாவற்றிற்கும் நீங்களே வசனம் எழுதிவிடுங்கள்…” என்றார் அரங்கண்ணல்

அவர் அப்படிச் சொன்னதும் மிரண்டு போனார் பாலச்சந்தர். அவர் எழுதிய பல வசனங்களைத் தான்  மாற்றி எழுதிப் படமாக்கியதில் ஏற்பட்ட  கோபத்தில்தான்  அவர் அப்படிச்  சொல்கிறார்  என்ற எண்ணத்தில் சற்று கலக்கத்துடன் பாலச்சந்தர்  அரங்கண்ணலைப் பார்த்தபோதுதான் தான் சொன்னதை தவறான அர்த்தத்தில் பாலச்சந்தர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது அரங்கண்ணலுக்கு புரிந்தது.

உடனே உரக்க  சிரித்தபடியே “ நீங்க என்னுடைய வசனத்தை மாத்திட்டீங்களே என்ற கோபத்தில் நான் அப்படி சொல்லவில்லை.. உண்மையில் உங்க வசனங்கள் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு. இந்தக் கதைக்கு நான் எழுதிய  வசனங்களில் நீங்க செய்திருக்கும் மாற்றங்களும் ரொம்ப சரியாக இருக்கு. அதனால் உங்க வசனத்தை ரசித்துத்தான் அப்படி சொன்னேன்…” என்றார் அரங்கண்ணல். அவர் அப்படிச்   சொன்ன பிறகுதான் சமாதானம் ஆனார் பாலச்சந்தர்.

‘அனுபவி ராஜா அனுபவி’ படத்திற்குப் பிறகு எத்தனையோ படங்களை அரங்கண்ணல்  தயாரித்த போதிலும் வசனம் எழுத தனது பேனாவை ஒரு முறைகூட அவர்  திறக்கவேயில்லை.

அரங்கண்ணலுக்கு மரியாதை செய்கின்ற விதத்திலே ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தின் டைட்டிலில், நடிகர்கள் பெயருக்கு முன்னாலே ‘கதை-அரங்கண்ணல்’ என்று டைட்டில் போட்டார் பாலச்சந்தர்.

அந்தப் படத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து பாலச்சந்தர், அரங்கண்ணல் ஆகியோரது நட்பும் வளர்ந்தது. தனது அரசியல் நண்பர்கள் எல்லோரிடமும் “இவர்தான் பாலு. மிகப் பெரிய இயக்குனர்” என்று பெருமையோடு பாலச்சந்தரை அறிமுகம் செய்து வைப்பார் அரங்கண்ணல்.

‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தைத் தொடர்ந்து பாலச்சந்தர் உருவாக்கிய ‘எதிர் நீச்சல்’ படத்தை அப்போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவிற்குப் போட்டுக் காட்டலாம் என்று பாலச்சந்தரிடம் அரங்கண்ணல் சொன்னபோது “அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிற நேரத்தில் அவரைத் தொந்திரவுபடுத்த வேண்டாமே..” என்றார் பாலச்சந்தர்.

“இல்ல பாலு.. படம் பார்க்கறதுன்னா நிச்சயமாக அண்ணா ‘சரி’ என்று சொல்லிவிடுவார். தவிர, இந்த ‘எதிர் நீச்சல்’ நாடகமாக நடத்தப்பட்டபோது நாங்கள் இருவருமே அந்த நாடகத்தைப் பார்த்திருக்கிறோம்” என்று சொன்ன அரங்கண்ணல் பாலச்சந்தரை அண்ணாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

படத்தைப் பார்க்க ஒப்புக் கொண்ட அண்ணா படம் முழுவதையும் ரசித்துப் பார்த்துவிட்டு பாலச்சந்தரையும், நாகேஷையும் வெகுவாகப்  பாராட்டினார். அறிஞர் அண்ணா பார்த்த கடைசிப் படம் கே.பாலச்சந்தரின் கை வண்ணத்தில் உருவான  ‘எதிர் நீச்சல்’தான்.

BOX  MATTER

“நான் தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தயாரித்த ‘அவள் ஒரு தொடர் கதையின்’ தெலுங்குப் பதிப்பான ‘அந்துலேனி கதா’ படத்தை மூன்று மாதங்களுக்குள் படமாக்கி முடித்தார் கே.பாலச்சந்தர்.

அவர் மட்டும் அந்த உதவியைச் செய்யாமல் இருந்திருந்தால் இந்த சமுதாயத்தில் கடன் சுமையால் நான் அமுங்கிப் போய் இருந்திருப்பேன். என் வாழ்வில் நான் சந்தித்துக் கொண்டிருந்த பல தொல்லைகள் நீங்கிகியதற்கு பாலச்சந்தர் செய்த அந்த உதவிதான் காரணம்…”

‘அவள் ஒரு தொடர் கதை’ படத் தயாரிப்பாளர் ராம. அரங்கண்ணல் எழுதியது.

The post சினிமா வரலாறு-13 – கே.பாலச்சந்தரை பயமுறுத்திய தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.

]]>