Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dasavatharam-2 movie – Touring Talkies https://touringtalkies.co Sat, 14 May 2022 13:01:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dasavatharam-2 movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “தசாவாதாரம்-2’ வருமா.. வராதா..?” – ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பதில் https://touringtalkies.co/will-dasavataram-2-come-or-not-answer-given-by-ks-ravikumar-at-the-google-kuttappa-function/ Sat, 14 May 2022 13:00:39 +0000 https://touringtalkies.co/?p=22040 “தசாவாதாரம்’ படத்தின் 2-ம் பாகம் வருமா.. வராதா?” என்ற கேள்விக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார். அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ‘வேற லெவல் ஹிட்டப்பா’ என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்து கொண்டார். ‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் […]

The post “தசாவாதாரம்-2’ வருமா.. வராதா..?” – ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பதில் appeared first on Touring Talkies.

]]>
தசாவாதாரம்’ படத்தின் 2-ம் பாகம் வருமா.. வராதா?” என்ற கேள்விக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார்.

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா’ என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என். கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காலை கலந்து கொண்டார்.

‘கூகுள் குட்டப்பா’ மிக விரைவில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ள நிலையில், கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓ.டி.டி தளம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக விசிலடித்து ஆர்ப்பாட்டமாக இக்குழுவினரை வரவேற்ற நிலையில் அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், “உங்கள் ஆரவாரத்தைப் பார்க்கும்போது எனக்கு என் கல்லூரி காலங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

அப்போதெல்லாம் என் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திரு.பாலையா உட்பட பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்வேன். சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவேன். ஆனால், உங்களைப் போல் இவ்வளவு சத்தமாக விசில் அடிக்க மற்றும் கற்றுக் கொள்ளவில்லை.

எனக்கு விசில் அடிக்கும்போது வெறும் சத்தம் மட்டும்தான் வரும். ஆனால் நடிகை குஷ்பூ எங்களோடு இங்கு வந்திருந்தால் உங்களைவிட சிறப்பாக விசில் அடிப்பார். படத்தில் நான் விசில் அடிக்கும்படியாக காட்சி வந்தால் நான் வெறுமனே வாயை மட்டும் அசைக்க எனக்காக அவர்தான் விசில் அடிப்பார்.

உங்களை இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கும்போது எனக்கும் புது எனர்ஜி தொற்றிக் கொண்டுவிட்ட வகையில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த நேரத்தில் உங்களை அட்வைஸ் என்று எதுவும் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. அப்படி சொன்னா மட்டும் கேக்குற வயசா இது..? ஆனால் இது வாழ்வின் முக்கியமான பருவம். வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணுங்க. ஆனா ஜஸ்ட் பாஸ் ஆகுற அளவுக்காவது படிக்க வேண்டியதும் ரொம்ப முக்கியம்…” என்றார்.

அடுத்து மாணவ, மாணவியர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கமலுடன் ‘தசாவதாரம்’ படத்தில் நடந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக் கூடியவர். NO PAIN NO GAIN என்பதுதான் அவரது பாலிசி. தசாவதாரம்’ படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார்.  சில தினங்களுக்கு முன் “தசாவாதாரம் ரிலீஸாகி 12 வருஷம் ஆச்சா?” என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார்.

சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம்’ போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே ‘தசாவதாரம்-2’க்கு வாய்ப்பே இல்லை.

ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது.

அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அண்மையில் வெளியான எங்கள் ‘கூகுள் குட்டப்பா’வை திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். அப்படிப் பார்க்காதவர்கள் விரைவில்  வெளியிடப்படவிருக்கும்  ஆஹா ஓ.டி.டி. தளத்தில் பாருங்கள்..” என்றார்.

The post “தசாவாதாரம்-2’ வருமா.. வராதா..?” – ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பதில் appeared first on Touring Talkies.

]]>