Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Corono Lockdown-2 – Touring Talkies https://touringtalkies.co Fri, 14 May 2021 07:22:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Corono Lockdown-2 – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் https://touringtalkies.co/ott-never-compete-with-cinema-theatres-says-abrami-ramanathan/ Fri, 14 May 2021 07:19:38 +0000 https://touringtalkies.co/?p=15074 தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. இந்தத் தருணத்தில் ஓடிடி தளங்கள் தியேட்டர்களுக்கு என்றுமே போட்டியில்லை என்கிறார் அபிராமி மால் தியேட்டர் உரிமையாளரும், தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன். அவர் இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில், “ஒரு படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு 100 கோடி, 200 கோடி வசூல் என்று விளம்பரம் தருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.  ஆனால் எந்த ஓடிடி அவ்வளவு பெரிய தொகைக்கு படங்களை வாங்குகிறது..? […]

The post “ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் appeared first on Touring Talkies.

]]>
தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

இந்தத் தருணத்தில் ஓடிடி தளங்கள் தியேட்டர்களுக்கு என்றுமே போட்டியில்லை என்கிறார் அபிராமி மால் தியேட்டர் உரிமையாளரும், தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன்.

அவர் இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில், “ஒரு படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு 100 கோடி, 200 கோடி வசூல் என்று விளம்பரம் தருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.  ஆனால் எந்த ஓடிடி அவ்வளவு பெரிய தொகைக்கு படங்களை வாங்குகிறது..?

இப்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியாத சூழல் இருப்பதால்… பொருளாதார நட்டத்தைத் தவிர்ப்பதற்காக குறைந்த லாபம் கிடைத்தாலும் போதும் என்றெண்ணி படத்தை ஓடிடிக்குக் கொடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

டிவி எப்படி தியேட்டருக்கு போட்டி கிடையாதோ அது மாதிரிதான் ஓடிடியும் தியேட்டர்களுக்கு போட்டி கிடையாது. தற்போதைய நிலையில் புதிய படங்களை வெளியிட தியேட்டர்களால் முடியவில்லை. ஓடிடியால் முடிகிறது. அவ்வளவுதான் விஷயம்.

ஓடிடி கிள்ளிதான் கொடுக்கும். ஆனால் தியேட்டர்களோ அள்ளிக்கொடுக்கும். ஸ்கிரீன் அனுபவம் என்பது வேறு. ஓடிடியில் ஒரே படத்தை ஏழு நாள் பார்க்கும் சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் தியேட்டர் அனுபவமோ, செயின் ஸ்மோக்கர்ஸைகூட இரண்டரை மணி நேர படத்தை ஒரே இடத்தில் பார்க்க வைத்துவிடும்.

ஓடிடியில் அடல்ட் காட்சி வந்தால் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்ற பயத்துடன் பார்த்தாக வேண்டும். தியேட்டர்களில் அப்படியில்லை. பிரம்மாண்டமான ஸ்கிரீன், டால்பி சவுண்ட் சிஸ்டமெல்லாம் ஓடிடியில் இல்லை.

ஆனால், தற்சமயம் ஓடிடி தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகிறது. அது நல்ல விஷயம்தான். ஏனெனில் தயாரிப்பாளர்கள் அழிந்துவிட்டால் தியேட்டர்களின் நிலைமை என்னாகும் என்று சொல்ல முடியாதே.. அதனால் தயாரிப்பாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள தற்போதைக்கு ஓடிடியில் பட வெளியீடு தவிர்க்க முடியாததாக இருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார் அபிராமி ராமநாதன்.

The post “ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார் appeared first on Touring Talkies.

]]>