Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
corona kumar – Touring Talkies https://touringtalkies.co Wed, 20 Sep 2023 01:41:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png corona kumar – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? https://touringtalkies.co/simbus-corona-kumar-case-rs-4-5-crore-or-rs-1-crore/ Wed, 20 Sep 2023 01:41:04 +0000 https://touringtalkies.co/?p=36415 வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021-ம் ஆண்டு அளிக்கப்பட்டது; பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் […]

The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021-ம் ஆண்டு அளிக்கப்பட்டது; பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், ‘கொரோனா குமார்’ படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலம்பரசன் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார். அவர், ‘கொரோனா குமார் படத்துக்காக கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 16-ம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில்,  ஓராண்டிற்குள் படம் தொடங்கவில்லை என்றால் முன் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆகவே ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. இந்த தகவலை மறைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  சிம்பு  மீது தவறு இல்லாத நிலையில் ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்த தேவையில்லை’ என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு, பதிலளிக்க வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அக்டோபர் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை நடிகர் சிலம்பரசன் தாக்கல் செய்ய வேண்டுமா என்பது குறித்து அன்றைய தினம் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

The post சிம்புவின் ‘கொரோனா குமார்’ விவகாரம்: 4.5 கோடியா ரூ.1 கோடியா? appeared first on Touring Talkies.

]]>
‘கொரோனா குமார்’: சிம்புவுக்கு பதில் யார்? https://touringtalkies.co/nobody-can-stop-corona-kumar-says-director-gokul-simbu/ Tue, 31 Jan 2023 07:36:27 +0000 https://touringtalkies.co/?p=30088 ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரவுத்திரம்’ படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தவர் இயக்குநர் கோகுல். தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜுங்கா’ உட்பட சில படங்களை இயக்கினார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கி வருகிறா். இந்நிலையில் இவர் அடுத்து இயக்க இருக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டார். அவர் நடிக்க இருந்த வேடத்தில்  பிரதீப் […]

The post ‘கொரோனா குமார்’: சிம்புவுக்கு பதில் யார்? appeared first on Touring Talkies.

]]>
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரவுத்திரம்’ படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தவர் இயக்குநர் கோகுல். தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜுங்கா’ உட்பட சில படங்களை இயக்கினார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கி வருகிறா்.

இந்நிலையில் இவர் அடுத்து இயக்க இருக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டார். அவர் நடிக்க இருந்த வேடத்தில்  பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இது குறித்து  இயக்குநர் கோகுல், “எனது அடுத்த படமான, ‘கொரோனா குமார்’ படம் பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன. அந்தப் படத்தில் சிம்பு நடிக்கவில்லை என்றும் படம் டிராப் என்றும் சொல்கிறார்கள்.

இது குறித்து நான்தான் சொல்ல வேண்டும். அந்தப் படம் டிராப் இல்லை. அதை யாராலும் நிறுத்த முடியாது.  ஆனால் அதில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக வரும் தகவல்கள் தவறு. யார் ஹீரோ என்பதை விரைவில் அறிவிக்கிறேன். அதுவரை பொய் தகவல்களை நம்ப வேண்டாம்” என்றார்.

The post ‘கொரோனா குமார்’: சிம்புவுக்கு பதில் யார்? appeared first on Touring Talkies.

]]>