Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
bommai nayagi – Touring Talkies https://touringtalkies.co Thu, 02 Feb 2023 16:41:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png bommai nayagi – Touring Talkies https://touringtalkies.co 32 32 விமர்சனம்: பொம்மை நாயகி https://touringtalkies.co/bommai-nayagi-review/ Thu, 02 Feb 2023 16:31:39 +0000 https://touringtalkies.co/?p=30143 கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு. மனைவி மற்றும் 9 வயது மகள் பொம்மை நாயகி ஆகியோருடன் வசித்து வருகிறார். சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கின்றனர். மகளைத் தேடி வந்த யோகிபாபு, அந்த இருவரை விரட்டுகிறார். மகள் மயங்கிக் கிடக்கிறாள்… பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை. ஏழை குடும்பத்தலைவனாக யோகி பாபு.. மனைவியிடம் நேசமுள்ள கணவனாக, மகளிடம் பாசமுள்ள தகப்பனாக.. மொத்தத்தில் ஒரு குடும்பத் தலைவனை கண் […]

The post விமர்சனம்: பொம்மை நாயகி appeared first on Touring Talkies.

]]>
கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு. மனைவி மற்றும் 9 வயது மகள் பொம்மை நாயகி ஆகியோருடன் வசித்து வருகிறார். சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கின்றனர். மகளைத் தேடி வந்த யோகிபாபு, அந்த இருவரை விரட்டுகிறார். மகள் மயங்கிக் கிடக்கிறாள்…

பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

ஏழை குடும்பத்தலைவனாக யோகி பாபு.. மனைவியிடம் நேசமுள்ள கணவனாக, மகளிடம் பாசமுள்ள தகப்பனாக.. மொத்தத்தில் ஒரு குடும்பத் தலைவனை கண் முன் நிறுத்துகிறார். மகளை இருவர் பலாத்காரப் படுத்த முயல்கிற காட்சியைக் கண்டு பதறுவது, புகார் அளிக்க மறுத்து சராசரி மனிதனின் உணர்வை வெளிப்படுத்துவது, பிறகு அவரே ஆவேசம் கொண்டு நீதி மன்றத்தை நாடுவது, பிறகு விரக்தியில் பேசுவது.. என அற்புதமாக நடித்து உள்ளார்.

யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா, கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

யோகிபாபுவின் அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன் மற்றும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞராக ஹரி கிருஷ்ணன்,  யோகி பாபுவின் அப்பாவாக  ஜி.எம். குமார், சிறுமி பொம்மை நாயகியான ஸ்ரீமதி  உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு –அதிசயராஜின் ஒளிப்பதிவு, சுந்தரமூர்த்தியின் இசை, செல்வா ஆர்.கே.வின் கலை… அனைத்தும் படத்துடன் ஒன்ற உதவுகின்றன.

வசனங்கள் யதார்த்தம்.. சுடும் யதார்த்தம்.

‘பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற’

‘தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன்தான் சீரழியிறான்0’

‘போற உயிரு போராடியே போகட்டும்’  –  போன்ற வசனங்கள் நெஞ்சில் தைக்கின்றன.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பெரிய பதற்றத்தைக் கொடுக்கும் வேளையில் ‘பாரத மாதா யார்’ என்கிற கேள்விக்கு பொம்மை நாயகி சொல்லும் பதில் சிந்திக்க வைக்கிறது.

படத்தை பாடமாகவும் எடுத்துள்ளார் இயக்குநர். உதாரணம், குழந்தைகளை விசாரிக்கும்போது காவலர்கள் சீருடையில் வரக்கூடாது என்பதைச் சொல்லலாம். பலருக்கும் தெரியாத விசயம் இது.

அண்ணன் தம்பியாக இருந்தாலும் வாக்கு அரசியல் ஒருவரை எப்படி மாற்றுகின்றன என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷான்.
சாதி உணர்வுடன் செயல்படும் நபர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவும், சாதி உணர்வை தள்ளி வைத்து  அநீதிக்கு எதிராக போடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாகவும் காட்சிப் படுத்தி உள்ளார் இயக்குநர் ஷான்.

சமீப காலமாக தொடர்ந்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான திரைப்படங்களும் காட்சிகளும் அதிகரித்து வரும் சூழலில் இப்படம் மிக அவசியமானது. அனைவரும் பார்த்து ரசிக்க அல்ல.. உணர வேண்டிய படம்.



The post விமர்சனம்: பொம்மை நாயகி appeared first on Touring Talkies.

]]>
“காமெடி பண்ணவே விடலை!”: ஆதங்கப்பட்ட யோகி பாபு https://touringtalkies.co/bommai-nayagi-film-news-yogi-babu/ Sun, 29 Jan 2023 03:17:00 +0000 https://touringtalkies.co/?p=30047 இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில் நாயகன் யோகிபாபு பேசும்போது…… இந்தப்படத்தில் இயக்குநர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு […]

The post “காமெடி பண்ணவே விடலை!”: ஆதங்கப்பட்ட யோகி பாபு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’.

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

நிகழ்வில் நாயகன் யோகிபாபு பேசும்போது……

இந்தப்படத்தில் இயக்குநர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள்.

அந்தச்சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

இந்தப்படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். இந்த படத்திற்காக இயக்குநர் ஷான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க” என்று இளம் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்தார் யோகிபாபு.

 

The post “காமெடி பண்ணவே விடலை!”: ஆதங்கப்பட்ட யோகி பாபு appeared first on Touring Talkies.

]]>
அப்பா ஆனார் யோகிபாபு! https://touringtalkies.co/yogi-babu-became-a-father/ Mon, 23 Jan 2023 03:57:44 +0000 https://touringtalkies.co/?p=29800 ‘ஏற்கெனவேதான் யோகிபாபு  அப்பா ஆகிவிடடாரே’ என்கிறீர்களா4? தற்போது முதன் முதலாக, திரைப்படத்தில்  அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு.  பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ’பொம்மை நாயகி’ பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்து உள்ளனர். எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் […]

The post அப்பா ஆனார் யோகிபாபு! appeared first on Touring Talkies.

]]>
‘ஏற்கெனவேதான் யோகிபாபு  அப்பா ஆகிவிடடாரே’ என்கிறீர்களா4? தற்போது முதன் முதலாக, திரைப்படத்தில்  அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகிபாபு.

 பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ’பொம்மை நாயகி’ பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்து உள்ளனர்.

எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி.

யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அப்பா ஆனார் யோகிபாபு! appeared first on Touring Talkies.

]]>