Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
bollywood actress – Touring Talkies https://touringtalkies.co Tue, 27 Sep 2022 19:27:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png bollywood actress – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஹிந்தி நடிகை ஆஷா பரேக் ‘தாதா சாகேப் பால்கே’ விருதினை பெறுகிறார் https://touringtalkies.co/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%86%e0%ae%b7%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/ Tue, 27 Sep 2022 06:23:20 +0000 https://touringtalkies.co/?p=24716 பிரபல மூத்த ஹிந்தி திரையுலக நடிகையான ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் தந்தையாக கருதப்படும் தாத சாகேப் பால்கேவின் நினைவாக திரைத் துறையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட்டின் மூத்த நடிகையான ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக இன்றைக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நடிகையாக மட்டுமல்லாது இயக்குநராக, தயாரிப்பாளராகவும் இவர் […]

The post ஹிந்தி நடிகை ஆஷா பரேக் ‘தாதா சாகேப் பால்கே’ விருதினை பெறுகிறார் appeared first on Touring Talkies.

]]>
பிரபல மூத்த ஹிந்தி திரையுலக நடிகையான ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் தந்தையாக கருதப்படும் தாத சாகேப் பால்கேவின் நினைவாக திரைத் துறையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட்டின் மூத்த நடிகையான ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக இன்றைக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நடிகையாக மட்டுமல்லாது இயக்குநராக, தயாரிப்பாளராகவும் இவர் முத்திரை பதித்துள்ளார்.

மும்பையில் பிறந்து, வளர்ந்த ஆஷா பரேக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். ‘ஆஷா மா’(1952), ‘பாப் பேட்டி’(1954) ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

ஷம்மி கபூருக்கு ஜோடியாக ‘தில் தேகே தேகோ’(1959) என்ற திரைப்படத்தில்தான் ஆஷா பாலிவுட்டில் அறிமுகமானார். ‘ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை’(1961), ‘தீஸ்ரி மன்சில்’, ‘தோ படன்’(1966), ‘கடி படங்’(1970), ‘கேரவன்’(1971), ‘மெயின் துளசி தேரே ஆங்கன் கி’(1978) ‘கி படோசன்’, ‘பாக்யவான்’(1993), ‘கர் கி இஸத்’(1994), ‘அந்தோலன்’(1995) உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகத்தில் ஹிட் பட நாயகியாகவும், 1960-70 காலக்கட்டத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்தார் ஆஷா பரேக். ஹிந்தி மட்டுமல்லாது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இயக்குராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்த இவர் இந்திய திரைப்பட துறையின் தணிக்கை குழுவில் முதல் பெண் தலைவராக பதவி வகித்துள்ளார்.

இப்படி சினிமாவில் பல துறைகளில் சாதித்த ஆஷா பரேக்கிற்கு கடந்த 1992-ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இப்போது மற்றுமொரு கவுரவமாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த விருதை பிருத்விராஜ் கபூர், எல்.வி.பிரசாத், சத்யஜித் ரே, நாகிரெட்டி, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், திலீப் குமார், ராஜ்குமார், டி.ராமாநாயுடு, கே.விஸ்வநாத், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் என்று பல கலைஞர்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த விருது நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுகிறது.

The post ஹிந்தி நடிகை ஆஷா பரேக் ‘தாதா சாகேப் பால்கே’ விருதினை பெறுகிறார் appeared first on Touring Talkies.

]]>
கிடுகிடுவென உயரும் டாப்சியின் சம்பளம்..! https://touringtalkies.co/bollywood-actress-taapsees-salary-rising-sharply/ Sun, 20 Jun 2021 10:44:07 +0000 https://touringtalkies.co/?p=15655 போகிறபோக்கைப் பார்த்தால் நடிகை டாப்சி பாலிவுட்டில் முதலிடத்தைப் பிடித்துவிடுவார் போலிருக்கிறது. பாலிவுட் நடிகர்களின் சம்பளம் 100 கோடியைத் தாண்டி போனாலும் நடிகைகளின் சம்பளம் அதிகமே 10 கோடிக்குள்தான் இன்னமும் இருக்கிறது. ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராய்தான் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார். பின்பு அவரை ஓரங்கட்டிவிட்டு கரீனா கபூர் அந்த இடத்தைப் பிடித்தார். இவருக்குப் பின்பு தீபிகா படுகோனே முன்னுக்கு வந்தார். அவரை அடுத்து வந்த கங்கனா ரணாவத் அந்த இடத்தை எட்டிப் பிடித்தார். இப்போது […]

The post கிடுகிடுவென உயரும் டாப்சியின் சம்பளம்..! appeared first on Touring Talkies.

]]>
போகிறபோக்கைப் பார்த்தால் நடிகை டாப்சி பாலிவுட்டில் முதலிடத்தைப் பிடித்துவிடுவார் போலிருக்கிறது.

பாலிவுட் நடிகர்களின் சம்பளம் 100 கோடியைத் தாண்டி போனாலும் நடிகைகளின் சம்பளம் அதிகமே 10 கோடிக்குள்தான் இன்னமும் இருக்கிறது.

ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராய்தான் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார். பின்பு அவரை ஓரங்கட்டிவிட்டு கரீனா கபூர் அந்த இடத்தைப் பிடித்தார். இவருக்குப் பின்பு தீபிகா படுகோனே முன்னுக்கு வந்தார். அவரை அடுத்து வந்த கங்கனா ரணாவத் அந்த இடத்தை எட்டிப் பிடித்தார். இப்போது கங்கனாவுடன் போட்டிக்கு நிற்கிறார் டாப்சி.

பாலிவுட்டில் டாப்சி கடைசியாக நடித்திருந்த 6 இந்தி படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்திப் படவுலகின் தற்போதைக்கு ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார். மேலும் கால்ஷீட் குளறுபடி, காதல் தகராறுகள் என்று எதுவுமில்லாமல் டாப்சி நீ்ட்டாக இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்தமானவராக மாறிவிட்டார்.

இதனால் தன்னுடைய சம்பளத்தையும் தற்போது 5 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்த்திவிட்டாராம் டாப்சி. டாப்சி தற்போது ரேஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் வியாபாரமும் எதிர்பாராத அளவுக்கு ஹிட்டாகிவிட்டதால்தான் டாப்சி சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன.

இதே நேரம் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் தற்போதைக்கு கங்கனா ரனாவத், கரீனா கபூர், டாப்சி மூவரும் ஒரே அந்தஸ்தில்தான் உள்ளனர். இராமாயணக் கதையில் சீதையாக நடிக்க கரீனா கபூர் 12 கோடி கேட்டிருப்பதாக ஒரு செய்தி வந்திருந்தது. அது உண்மையானால் கரீனா இவர்களை மிக எளிதாகத் தாண்டிச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

The post கிடுகிடுவென உயரும் டாப்சியின் சம்பளம்..! appeared first on Touring Talkies.

]]>