Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
beast movie – Touring Talkies https://touringtalkies.co Sun, 16 Oct 2022 17:01:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png beast movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பீஸ்ட்’ படம் பற்றி அப்படத்தின் வில்லன் நடிகர் சொன்ன அதிர்ச்சியான கமெண்ட்..! https://touringtalkies.co/shocking-comment-about-the-film-beast-by-the-villain-of-the-film/ Sun, 16 Oct 2022 17:00:53 +0000 https://touringtalkies.co/?p=25516 இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. திரைக்கதை சரியில்லை என்றும், விஜய்க்கு வில்லனாக கவனம் ஈர்க்கும் நடிகரை போடவில்லை என்றும் விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட் அடித்திருந்தனர். இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் எதிர்பாராதவிதமாக மெகா ஹிட்டானது. இந்த சமயத்தில் நெல்சனை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு மட்டும் தோல்வி படத்தைக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி திட்டித் தீர்த்தனர். “ஒரு இயக்குநர் […]

The post ‘பீஸ்ட்’ படம் பற்றி அப்படத்தின் வில்லன் நடிகர் சொன்ன அதிர்ச்சியான கமெண்ட்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட்’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

திரைக்கதை சரியில்லை என்றும், விஜய்க்கு வில்லனாக கவனம் ஈர்க்கும் நடிகரை போடவில்லை என்றும் விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட் அடித்திருந்தனர்.

இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் எதிர்பாராதவிதமாக மெகா ஹிட்டானது. இந்த சமயத்தில் நெல்சனை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு மட்டும் தோல்வி படத்தைக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி திட்டித் தீர்த்தனர். “ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது இயல்புதான். அதற்காக நெல்சன் எல்லை மீறி விமர்சிக்கப்படுகிறார்” என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர்.

இதன் பின்பு இதே ‘பீஸ்ட்’ படத்தில் வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகரான சாக்கோ சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி திரையுலகத்தில் விவாதமாகியுள்ளது.

தனியார் TV சேனல் ஒன்றுக்கு சாக்கோ அளித்த பேட்டியில், “பீஸ்ட் படம் தமிழிலேயே வெற்றி பெறவில்லை. எனக்கும் நல்ல அறிமுகமாக அமையவில்லை. நான் இன்னும் அந்த பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களையும், ட்ரோல்களையும்தான் பார்த்திருக்கிறேன்.

ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வருபவர் தான் சிரமப்படுவதை தன்னுடைய முகத்தில் ரியாக்ஷனாக காண்பிக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் ஏதோ ஒரு பேப்பரை அசால்ட்டாகத் தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார்.

இதுவெல்லாம் சேர்ந்துதான் படத்திற்கு நிறைய விமர்சனங்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இதற்காக விஜய் சாரை குறை சொல்ல முடியாது. படக் குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

நடிகர் சாக்கோவின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையையும், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘பீஸ்ட்’ படம் பற்றி அப்படத்தின் வில்லன் நடிகர் சொன்ன அதிர்ச்சியான கமெண்ட்..! appeared first on Touring Talkies.

]]>
‘பீஸ்ட்’ பட புகைப்படத்தினால் ஒரே நாளில் புகழடைந்திருக்கும் நடிகை https://touringtalkies.co/actress-who-became-famous-in-one-day-by-beast-movie-photo/ Tue, 30 Nov 2021 12:23:31 +0000 https://touringtalkies.co/?p=19654 பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் பற்றிய ஏதாவது ஒரு துண்டு செய்தி வெளியானால்கூட அது மிகப் பெரிய பரபரப்பாகும். சமூக இணையத் தளங்களில் டிரெண்டாகும். அடுத்த 2 நாட்களுக்கு விஜய் மட்டுமே இங்கே தெரிவார். ஆனால், முதல்முறையாக இந்தக் கதை அப்படியே உல்டாவாகியிருக்கிறது. விஜய் தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 100 ஆவது நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி அந்தப் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் ஒன்றை அந்தப் படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் தனது டிவீட்டர் பக்கத்தில் […]

The post ‘பீஸ்ட்’ பட புகைப்படத்தினால் ஒரே நாளில் புகழடைந்திருக்கும் நடிகை appeared first on Touring Talkies.

]]>
பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் பற்றிய ஏதாவது ஒரு துண்டு செய்தி வெளியானால்கூட அது மிகப் பெரிய பரபரப்பாகும். சமூக இணையத் தளங்களில் டிரெண்டாகும். அடுத்த 2 நாட்களுக்கு விஜய் மட்டுமே இங்கே தெரிவார். ஆனால், முதல்முறையாக இந்தக் கதை அப்படியே உல்டாவாகியிருக்கிறது.

விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட்’ திரைப்படத்தின் 100 ஆவது நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி அந்தப் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் ஒன்றை அந்தப் படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய் ஸ்டைலாக ‘டிரம்ஸ்’ வாசித்து கொண்டு இருக்க, நாயகியான நடிகை பூஜா ஹெக்டே பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர்களும் இசை வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குநர் நெல்சனும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். நடிகர் விஜய்யின் ‘ஸ்டைலிஷ் லுக்’ ரசிகர்களிடையே அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. விஜய் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை ட்ரெண்ட்டாக்கத் துவங்கினார்கள்.

இந்த நிலையில்தான் அந்தப் புகைப்படத்தில் விஜய்க்கு அடுத்தப்படியாக அதிகம் கவனம் ஈர்த்தது கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம். மாடர்ன் லுக்கில் இருந்த அந்தப் பெண்ணை நடிகர் ரெடின் கிங்ஸ்லி பார்த்துக் கொண்டிருப்பார்.

அந்தப் பெண், நடிகை அபர்ணா தாஸ். மலையாளத்தில் ‘ஞான் பிரகாஷன்’, ‘மனோகரம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த பீஸ்ட்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இதுதான் அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படமாகும்.

இந்த நிலைமையில் அந்தப் புகைப்படத்தில் அவருடைய தோற்றம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருப்பதால், அபர்ணா தாஸ் தற்போது சமூக இணையத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறார்.

கூகிள் சர்ச்சில் நேற்றும் இன்றும் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபர்ணா தாஸூம் ஒருவராகிவிட்டார்.

எப்போதும் தான் நடிக்கும் படங்களில் விஜய் மட்டுமே பேசுபொருளாக இருந்து வந்த சூழலில், ஒரு அறிமுக நடிகை தற்போது விஜய்யையும் தாண்டி புகழ் பெற்றிருப்பது ஆச்சரியமானதுதான்..!

The post ‘பீஸ்ட்’ பட புகைப்படத்தினால் ஒரே நாளில் புகழடைந்திருக்கும் நடிகை appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யை சந்தித்தார் தோனி https://touringtalkies.co/actor-vijay-meets-dhoni-in-the-shooting-spot/ Thu, 12 Aug 2021 11:33:49 +0000 https://touringtalkies.co/?p=16982 நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார். நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார். அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு […]

The post நடிகர் விஜய்யை சந்தித்தார் தோனி appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார்.

நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார்.

அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் கார்வரையிலும் அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது.

விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..! 

Thalapathy Vijay

Thalapathy Vijay
Thalapathy Vijay
Thalapathy Vijay

Thalapathy Vijay

The post நடிகர் விஜய்யை சந்தித்தார் தோனி appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? https://touringtalkies.co/actor-vijays-next-movie-title-was-beast/ Mon, 21 Jun 2021 13:46:16 +0000 https://touringtalkies.co/?p=15678 நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். விஜய்க்கு நாளை பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்றைக்கு இந்தத் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்திற்கு ‘டார்கெட்’ […]

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் நடித்தும் வரும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலப் பெயரை வைத்திருக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படம் விஜய்யின் 65-வது படமாகும். விஜய்க்கு நாளை பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்றைக்கே அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இன்றைக்கு இந்தத் தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்திற்கு ‘டார்கெட்’ என்று பெயர் வைக்கப் போவதாக சில செய்திகளை இணையத்தில் கசிய விட்டிருந்தார்கள். ஆனால் இப்போது மாறுபட்ட ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’, ‘புலி’, ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’ என்று கவன ஈர்ப்புடன் கூடிய பெயர்களையே கடந்த சில படங்களுக்கு சூட்டி வந்த விஜய், இந்தப் படத்திலும் அதே மாதிரியான பெயரை ஆனால் ஆங்கிலத்தில் அப்படியே வைத்திருக்கிறார். ‘பீஸ்ட்’ என்றால் தமிழில் ‘மிருகம்’ என்று அர்த்தம். ‘மிருகம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஆதி நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருப்பதால் அதே தலைப்பை வைக்க விருப்பமில்லாமல் ஆங்கிலப் பெயரையே வைத்து விட்டார்கள்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – கிரண், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – ஜானி, உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், வி.சாய், ஒப்பனை – பி.நாகராஜன், வி.எஃப்.எக்ஸ் சூப்பர்வைஸர் – அற்புதராஜ், மக்கள் தொடர்பு – ரியாஸ் அஹமது, புகைப்படங்கள் – மானெக்சா, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, நிர்வாகத் தயாரிப்பு – ஆர்.உதயகுமார், எழுத்து, இயக்கம் – நெல்சன் திலீப்குமார்.

இந்தப் பெயர் விஜய் ரசிகர்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா, பிடிக்கிறதா.. பிடிக்கவில்லையா என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியும்.

The post நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பெஸ்ட் ஆகுமா..? appeared first on Touring Talkies.

]]>