Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
batsha movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 30 Apr 2024 11:27:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png batsha movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ Tue, 30 Apr 2024 11:27:03 +0000 https://touringtalkies.co/?p=41785 ரஜினி சூப்பர் ஸ்டார் ஹீரோவாக இருந்த போதும் அவரது படம் நஷ்டத்தையும் அப்போது சந்தித்திருந்த‌ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.1993-ஆம் ஆண்டில் ஆர்.பி. உதயகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா உள்ளிட்டோர் நடித்த ‘எஜமான்’ படம் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை ரஜினி அழைத்துப் பேசினார்.அதாவது படம் எவ்வளவு கலெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார்.ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் […]

The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.

]]>

ரஜினி சூப்பர் ஸ்டார் ஹீரோவாக இருந்த போதும் அவரது படம் நஷ்டத்தையும் அப்போது சந்தித்திருந்த‌ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.1993-ஆம் ஆண்டில் ஆர்.பி. உதயகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா உள்ளிட்டோர் நடித்த ‘எஜமான்’ படம் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை ரஜினி அழைத்துப் பேசினார்.அதாவது படம் எவ்வளவு கலெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார்.ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 20 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் என்று தியேட்டர் உரிமையாளர் கூறினார்.

வேறு என்னென்ன படங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்று ரஜினி கேட்டுள்ளார். நாசர், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் உருவான வரவு எட்டணா செலவு பத்தணா படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ன சொல்லி உள்ளார்.

அதோடு 20 லட்சம் போட்டு ஒரு கோடி வரை கிடைச்சிருக்கு என்று தியேட்டர் ஓனர் கூறினார். இதைக் கேட்டு ரஜினியே மிரண்டு போய் விட்டாராம். குறிப்பாக ஆட்டோக்காரனாக வடிவேலு நடித்த ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஓடும்போது தியேட்டர் வாசலில் இருவதற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்குமாம். இதனால் தான் அடுத்ததாக பாட்ஷா படத்தில் மாணிக்கம் கதாபாத்திரத்தில் ஆட்டோக்காரனாக ரஜினி நடித்தார் என்பதை இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் 1993இல் பிப்ரவரி மாதம் எஜமான் படம் வெளியான நிலையில் அடுத்த வருடம் 1994 இல் ஏப்ரல் மாதம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா படம் வெளியானது.

அதோடு பாட்ஷா படத்தில் முதலில் ரஜினியை பஸ் கண்டக்டராக நடிக்க வைக்க தான் சுரேஷ் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். ஆனால் பஸ்ஸை வைத்து எடுப்பதில் சிரமம் இருந்ததால் அதன் பின்பு ஆட்டோவே இருக்கட்டும் என மாற்றப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf/ Wed, 10 Apr 2024 07:54:48 +0000 https://touringtalkies.co/?p=40817 ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரின் வலது கரமாக செயல்பட்டார்.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மட்டும் இல்லாமல் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக திறம்பட திகழ்ந்தவர்.அரசியல்வாதியாக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராக மின்னிய ஆர்.எம்.வி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 98.அவர் தயாரித்த திரைப்படங்களில் பாட்ஷாவும் ஒரு மிக முக்கியமான திரைப்படம். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.திராவிட இயக்கங்களின் கருத்தியல் ஈர்ப்பால் தன்னை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது […]

The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆரின் வலது கரமாக செயல்பட்டார்.ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மட்டும் இல்லாமல் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக திறம்பட திகழ்ந்தவர்.அரசியல்வாதியாக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராக மின்னிய ஆர்.எம்.வி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 98.அவர் தயாரித்த திரைப்படங்களில் பாட்ஷாவும் ஒரு மிக முக்கியமான திரைப்படம்.

இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.திராவிட இயக்கங்களின் கருத்தியல் ஈர்ப்பால் தன்னை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது கரமாக இருந்தவர். எம்ஜிஆரை பார்க்க வேண்டுமென்றால் முதலில் ஆர்.எம்.வியைத்தான் பார்க்க வேண்டும் என்ற பேச்சு அப்போதைய அரசியல் காலத்தில் இருந்தது.

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தபோது முதலில் ஜானகி அணியில் இருந்தவர் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார்.பிறகு ஜெயலலிதா அணி அதிமுகவை முழுதாக கைப்பற்றிய பிறகு ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். எந்த அணியில் இருந்தாலும் தனதுஅரசியல் ஆளுமையை வலிமையை இழக்காமல் இருந்தார் ஆர்.எம்.வி .இதற்கிடையே எம்ஜிஆர் கழகம் என்ற ஒரு கட்சியையும் அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எம்.வீரப்பன் அரசியல்வாதியாக வலம் வந்தது மட்டும் இன்றி சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.எம்ஜிஆர் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது; அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஆர்.எம்.வியிடம்தான் வழங்கினார் எம்ஜிஆர். அதனை திறம்பட நிர்வகிக்கவும் செய்தார். அதனால் ஆர்.எம்.வியின் பெயர் சினிமா துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது.எம்ஜிஆர் பிக்சர்ஸில் தொழிலாளியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான தெய்வ தாய் படத்தை முதலில் தயாரித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.

தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால் , காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்‌ஷாக்காரன் மற்றும் இதயக்கனி உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இவர் எம்ஜிஆரை வைத்து மட்டும்தான் ஆர்.எம்.வி படங்கள் தயாரிப்பாரா என்று பலமாக கேள்வி எழுந்த பொழுது கமல் ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கி சட்டை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா, தங்கமகன் போன்ற படங்களையும் தயாரித்தார்.

ஆர்.எம்.வி தயாரித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. அதில் முக்கியமான படம் என்றால் பாட்ஷா தான். பாட்ஷா திரைப்படம் பிரமாண்டமாக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி விழாவில் ரஜினியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆர்.எம்.வி மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று பலரும் சொல்வார்கள். ஏனெனில் அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்று சொல்லிவிட்டார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா என்பதால் தான் ஆர்.எம்.வியின் அமைச்சர் பதவி ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டதாக தகவலும் உண்டு.

வயது முதிர்வு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து தள்ளியிருந்தார்.பின்னர் அவரது குடும்பத்திலிருந்து தியாகராஜ சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார் அதில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.

]]>
மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! https://touringtalkies.co/the-superstar-who-turned-the-knee-verse-into-mass/ Thu, 06 Oct 2022 11:57:45 +0000 https://touringtalkies.co/?p=24910 இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்  ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் 1995-ம் வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பாட்ஷா’. இப்படத்தில் ரஜினி பேசும், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் இப்போதுவரையிலும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் மேடைகளிலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ஒரு சேர இந்த டயலாக்கைச் […]

The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.

]]>

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்  ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் 1995-ம் வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘பாட்ஷா’.

இப்படத்தில் ரஜினி பேசும், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற பஞ்ச் டயலாக் இன்றும் பிரபலம். இந்த வசனத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும் இப்போதுவரையிலும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் மேடைகளிலும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் ஒரு சேர இந்த டயலாக்கைச் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், இந்த வசனம் முதலில் ஷூட்டிங்கிற்குத் தயாராகியிருந்தபோது இப்படியில்லை. படப்பிடிப்பின்போது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா சொன்னதே வேறு. “நான் ஒரு வாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி” என்றுதான் அவர் எழுதியிருந்தார். இந்த டயலாக்கை பலமுறை தனக்குள் பேசிப் பார்த்த ரஜினிக்கு இதில் ஏதோ ரிதம் குறைவதாகப் பட்டது. யோசித்த அவர், அதிலிருந்த ‘வாட்டி’ என்பதை ‘தடவை’ என மாற்றினார். பிறகுதான், “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற வசனம் பிறந்தது.

The post மொக்கை வசனத்தை மாஸாக மாற்றிய சூப்பர் ஸ்டார்! appeared first on Touring Talkies.

]]>
“பாட்ஷா’ படத்தின் கடைசிக் கட்டத்தில் கிடைத்த வாய்ப்பு…” – நடிகர் ஆனந்த்ராஜின் அனுபவம்..! https://touringtalkies.co/actor-anandrajs-working-experience-in-baatsha-movie/ Mon, 16 Nov 2020 08:33:53 +0000 https://touringtalkies.co/?p=10083 ‘ராஜாதிராஜா’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு நாள் நான் ஏ.ஆர்.எஸ். கார்டனில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ‘பாட்ஷா’ படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு சுரேஷ் கிருஷ்ணா ஸாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்கு முன்பேயே “பாட்ஷா’ படத்தில் தேவன், ரகுவரன், சரண்ராஜ் மூவரும் நடிக்கின்றனர். படமும் கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. இன்னும் 10 சதவிகித ஷூட்டிங்குதான் பாக்கியிருக்கிறது…” […]

The post “பாட்ஷா’ படத்தின் கடைசிக் கட்டத்தில் கிடைத்த வாய்ப்பு…” – நடிகர் ஆனந்த்ராஜின் அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>
‘ராஜாதிராஜா’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஒரு நாள் நான் ஏ.ஆர்.எஸ். கார்டனில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ‘பாட்ஷா’ படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு சுரேஷ் கிருஷ்ணா ஸாரிடம் இருந்து அழைப்பு வந்தது.

அந்த அழைப்புக்கு முன்பேயே “பாட்ஷா’ படத்தில் தேவன், ரகுவரன், சரண்ராஜ் மூவரும் நடிக்கின்றனர். படமும் கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. இன்னும் 10 சதவிகித ஷூட்டிங்குதான் பாக்கியிருக்கிறது…” என்கிற தகவலெல்லாம் எனக்குத் தெரியும். பின்பு எதற்கு நம்மை அழைக்கிறார்கள் என்ற யோசனையுடனேயே சுரேஷ் கிருஷ்ணா ஸாரை பார்க்க சென்றேன்.

மதிய வேளையில் இந்தப் படத்தில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு வாஹினியில் இருந்த பாட்ஷா படத்தின் செட்டுக்குப் போனேன். அங்கே மேக்கப் அறையில் ரஜினி, பாலகுமாரன், சுரேஷ் கிருஷ்ணா மூவரும் இருந்தனர். என்னிடம், “இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு. அதை இன்னும் எடுக்காமல் இருக்கோம். நீங்கதான் அதுல நடிக்கணும்…” என்றார் சுரேஷ் கிருஷ்ணா.

“என்ன கேரக்டர் ஸார்…” என்றேன். “ரஜினியை கட்டி வைச்சு அடிக்கணும்” என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. முதல் படமான ‘ராஜாதிராஜா’ல “டேய்.. வாடா.. போடா”ன்னு ரஜினி ஸாரை பேசிட்டேன். இப்போ, இந்தப் படத்துல அதையும் தாண்டி ‘கட்டி வைச்சே அடிக்கணும்’ன்றாங்களேன்னு “முடியாது.. ஆளை விடுங்க. நான் கிளம்புறேன்”னு எந்திரிச்சிட்டேன்.

அப்போ ரஜினி ஸார்.. “இருங்க.. இருங்க.. முழுசா கேளுங்க…” என்று சொல்லி உட்கார வைத்தார். பின்பு பாலகுமாரன் ஸார் என் கேரக்டர் முழுசையும் சொன்னார். அப்புறம்தான் நான் ‘ஓகே’ன்னு சொன்னேன். கிளம்பும்போது ரஜினி ஸார் காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டு “கண்டிப்பா நடிக்கிறேன் ஸார்”ன்னு சொல்லிட்டு வந்தேன்.

‘பாட்ஷா’ ஷூட்டிங்ல ஒரு நாள் சண்டை காட்சியை எடுத்து முடிச்ச பின்னாடி நான் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி மட்டும் பாக்கியிருந்தது. ரஜினி ஸார் எனக்கு முன்னாடியே கிளம்பி என்கிட்டயே ‘பை’ சொல்லிவிட்டு போனார்.

நான் அந்தக் காட்சியில் நடிக்க வேண்டி டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு நடிச்சேன். நான் அதுல பேசின ஒரு டயலாக்கை கேட்டுட்டு பின்னாடியிருந்து ஒரு குரல் பயங்கரமா சிரிச்ச சவுண்ட் கேட்டுச்சு.. பின்னாடி திரும்பிப் பார்த்தால் அது ரஜினி. கும்மிருட்டுல அடையாளம் தெரியாத மாதிரி நின்னுக்கிட்டிருந்தார்.

வீட்டுக்குப் போறேன்னு கிளம்புனவரு.. நான் நடிக்கிறதை பார்க்கணும்ன்னு இருந்து பார்த்துட்டு ரசிச்சிட்டு அதை பாராட்டிட்டும் போனாரு.. அந்தப் படம் ரஜினி ரசிகர்களிடத்தில் என்னை இன்னும் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்துச்சு..” என்றார் நடிகர் ஆனந்த்ராஜ்.

The post “பாட்ஷா’ படத்தின் கடைசிக் கட்டத்தில் கிடைத்த வாய்ப்பு…” – நடிகர் ஆனந்த்ராஜின் அனுபவம்..! appeared first on Touring Talkies.

]]>