Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
barhana – Touring Talkies https://touringtalkies.co Fri, 12 May 2023 01:31:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png barhana – Touring Talkies https://touringtalkies.co 32 32 விமர்சனம்: பர்ஹானா https://touringtalkies.co/barhana-review/ Fri, 12 May 2023 01:31:11 +0000 https://touringtalkies.co/?p=32380 மதச்சடங்குகளை தீவிரமாகப் பின்பற்றும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஃபர்ஹானா.  கணவர் அனுமதியுடன் கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார்.  இதற்கிடையே குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, பணத்தேவைக்காக கம்பெனிக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு மாறுகிறார். அங்கு சென்ற பின்னர்தான் தெரிகிறது, அது ஆண்கள் தங்களுடைய இச்சைத்தேவைக்காக பேசும் இடம் என்பது. இதை தெரிந்து கொண்ட ஃபர்ஹானா உடனே அங்கிருந்து மாற வேண்டும் நினைக்கும் போது, யாரோ ஒரு நபர்  அவருக்கு கால் செய்கிறார். வழக்கமானவர்கள் போல் இல்லாமல் […]

The post விமர்சனம்: பர்ஹானா appeared first on Touring Talkies.

]]>
மதச்சடங்குகளை தீவிரமாகப் பின்பற்றும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஃபர்ஹானா.  கணவர் அனுமதியுடன் கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார்.  இதற்கிடையே குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, பணத்தேவைக்காக கம்பெனிக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு மாறுகிறார்.

அங்கு சென்ற பின்னர்தான் தெரிகிறது, அது ஆண்கள் தங்களுடைய இச்சைத்தேவைக்காக பேசும் இடம் என்பது. இதை தெரிந்து கொண்ட ஃபர்ஹானா உடனே அங்கிருந்து மாற வேண்டும் நினைக்கும் போது, யாரோ ஒரு நபர்  அவருக்கு கால் செய்கிறார்.

வழக்கமானவர்கள் போல் இல்லாமல் அன்பாக, ஆதரவாக பேசுகிறார். அவர் மீது ஃபர்ஹானாவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவரது விருப்பப்படி, சந்திக்கச் செல்கிறாள்.

இந்த நிலையில், அவளைப்போலவே பணி புரியும் பெண் ஒருத்தி கொல்லப்படுகிறார்கள். இதனால் அந்த நபரை சந்திக்காமல் திரும்புகிறார்.

அதன் பிறகு அந்த மர்மநபர், பர்ஹானாவின் முகவரி முதற்கொண்டு தெரிந்துவைத்துக்கொண்டு மிரட்டுகிறான்.

அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.

ஃபர்ஹானா என்கிற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருவித தயக்கத்தோடே வேலைக்கு ஒத்துக்கொள்வது, மர்ம நபர் குரலில் கொஞ்சம் கொஞ்சமாக லயிப்பது, வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ என பதற்றப்படுவது… அற்புத நடிப்பு.

அவரது கணவராய் வரும் ஜித்தன் ரமேஷ். இவருக்குள் இத்தனை அற்புதமான நடிகர் இத்தனை நாளாக ஒளிந்திருக்கிறார். இனி இதே போல் சிறப்பான வேடங்கள் கிடைக்க வேண்டும். அசரடித்துவிட்டார் மனிதர்.

நெல்சன் வெங்கடேசன் ஒரு சிம்பிளான கதையை இஸ்லாம் குடும்பப்பெண்ணையும், அவளது வாழ்வியல் நெறிமுறைகளையும் கலந்து சொல்லியிருக்கிறார். அந்தக்கலவை இந்தக்கதைக்கு நன்றாகவே கை கொடுத்து இருக்கிறது.

முதல் பாதி கொஞ்சம் நீளம் போன்ற உண்ர்வைக்கொடுத்தாலும், க்ரிப்பான திரைக்கதையும், செல்வராகவன் பேசும் வசனங்களும் நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றன.

ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.

இஸ்லாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவளுக்கு இப்படி நடக்கிறது என்பதை காட்சிகளின் நம்பகத்தன்மை செவ்வென ஒரு பக்கம் கடத்த, இன்னொரு பக்கம் ஜஸ்டினின் இசை கனகச்சிதமாக கடத்தி இருக்கிறது. இறுதியாக ஃபர்ஹானா அவரை சந்திக்கும் இடத்தை கிளைமேக்ஸாக வைத்தது சிறப்பு.

The post விமர்சனம்: பர்ஹானா appeared first on Touring Talkies.

]]>