Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
balachander – Touring Talkies https://touringtalkies.co Sun, 02 Apr 2023 03:18:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png balachander – Touring Talkies https://touringtalkies.co 32 32   இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? https://touringtalkies.co/the-film-that-caused-the-clash-between-ilayaraja-and-balachander/ Sun, 02 Apr 2023 03:18:38 +0000 https://touringtalkies.co/?p=31190 80 களில் இயக்குநர்பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் இளையராஜாவின் இசை தான் இடம்பெற்றிருக்கும். சிந்து பைரவி படத்தின் மூலமாக இளையராஜா, பாலசந்தர் கூட்டணி இணைந்த நிலையில், இளையராஜாவுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பாலசந்தர் இயக்கிய 6 படங்களுக்கு தொடர்ச்சியாக இளையராஜா இசையமைத்தார். மேலும் பாலச்சந்தர் தயாரித்த 14 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் காம்போ படங்கள் வெளியாகாமல் போனதையடுத்து பாலசந்தரும் இசையமைப்பாளர்கள் […]

The post   இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
80 களில் இயக்குநர்பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் இளையராஜாவின் இசை தான் இடம்பெற்றிருக்கும்.

சிந்து பைரவி படத்தின் மூலமாக இளையராஜா, பாலசந்தர் கூட்டணி இணைந்த நிலையில், இளையராஜாவுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பாலசந்தர் இயக்கிய 6 படங்களுக்கு தொடர்ச்சியாக இளையராஜா இசையமைத்தார். மேலும் பாலச்சந்தர் தயாரித்த 14 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் காம்போ படங்கள் வெளியாகாமல் போனதையடுத்து பாலசந்தரும் இசையமைப்பாளர்கள் கீரவாணி, ஏ ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரை தமிழ் சினிமாவில் களமிறக்கினார் பாலச்சந்தர்.

இதற்குக் காரணம் இருக்கிறது..

1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. ரஹ்மான், கீதா உள்ளிட்டோர் நடித்த இப்படம் காதல், செண்டிமெண்ட் என உருவாகி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு  மாநில விருதையும் பெற்றது.

இப்பட உருவாக்கத்தின் போது,  படத்தின் பின்னணி இசை வேலைகள் மட்டும் முடியாமல் இருந்துள்ளது.

இளையராஜாவிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் மேலும் 5 படங்களுக்கு இசையமைக்க வேண்டியுள்ளது. இப்படத்தின் பின்னணி இசையையை இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து முடித்து தருவதாக கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். அதற்கு இளையராஜா தீபாவளிக்கு வேண்டாம் வேறு நாளில் ரிலீஸ் பண்ணுங்கள் என கூறிவிட்டாராம்.

இதனால் வருத்தமான பாலசந்தர் ஏற்கனவே இவரது படங்களில் உள்ள பின்னணி இசையை தனியாக எடுத்து, ஒரு இசையமைப்பாளரை வைத்து, படத்தில் அந்த பின்னணி இசைகளை வைத்து இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார். பின்னர் இப்படத்தை பார்த்த இளையராஜா பாலசந்தர் மீது கடும் கோபத்தில் இருந்தாராம். மேலும் இந்த படம் தான் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த கடைசி படமாகும்.

அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை.

  • இந்தத் தகவலை பத்திரிகையாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

The post   இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கவிஞர் வாலியை ஆத்திரப்பட வைத்த கே.பி.! https://touringtalkies.co/director-balachander-hurt-the-feelings-of-vaali-in-press-meet/ Mon, 23 Jan 2023 03:54:10 +0000 https://touringtalkies.co/?p=29788 தமிழ்  திரையுலகில்  நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி அசத்தியவர் வாலி.  பக்தி, தத்துவ, பாச பாடல்களுடன் காதல் பாடல்களில் கலக்கியவர். அதனால்தான் வாலிப கவிஞர் என புகழப்பட்டார். ஆனால் அவரும் மனம் நொந்த சம்பவம் நடந்தது.இயக்குநர் கே.பாலச்சந்தர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில், “காட்சிக்கு பொருத்தமான பாடல்களை எழுதுவதை விட, பிரபலமடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் பாடல்களை எழுதுவார் வாலி” என்று கூறிவிட்டார். பதிலுக்கு வேறு ஒரு பேட்டியில், “காட்சிக்குப் பொருத்தமான பாடல்கள் எழுதவில்லை என்றால் இத்தனை […]

The post கவிஞர் வாலியை ஆத்திரப்பட வைத்த கே.பி.! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்  திரையுலகில்  நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி அசத்தியவர் வாலி.  பக்தி, தத்துவ, பாச பாடல்களுடன் காதல் பாடல்களில் கலக்கியவர். அதனால்தான் வாலிப கவிஞர் என புகழப்பட்டார்.

ஆனால் அவரும் மனம் நொந்த சம்பவம் நடந்தது.
இயக்குநர் கே.பாலச்சந்தர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில், “காட்சிக்கு பொருத்தமான பாடல்களை எழுதுவதை விட, பிரபலமடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் பாடல்களை எழுதுவார் வாலி” என்று கூறிவிட்டார்.

பதிலுக்கு வேறு ஒரு பேட்டியில், “காட்சிக்குப் பொருத்தமான பாடல்கள் எழுதவில்லை என்றால் இத்தனை வருடங்களாக திரையுலகம் என்னை ஏற்றுக்கொண்டிருக்குமா?”  பாலசந்தருக்கு கண்டனம் தெரிவித்தார் வாலி.

இது குறித்து  டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் கூறிய நடிகர் சித்ரா லட்சுமணன், “ஆனாலும், இந்த கருத்து மோதல்களால் எங்களுக்குள் பிளவு ஏற்படவில்லை. என்னை முதன் முதலில் பொய்க்கால் குதிரை படத்தில் நடிக்க வைத்தவர் பாலசந்தர்தான்.
 

அதுமட்டுமல்ல… “பொய்க்கால் குதிரை” படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது பாலச்சந்தரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார் வாலி. அதுதான் இருவரின் சிறப்பு” என நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் சித்ரா லட்சுமணன்.

சித்ரா லட்சுமணன் வழங்கும் மேலும் பல சுவாரஸ்ய திரைச் செய்திகளை அறிய… touring talkies  யுடிப் சேனலை பாருங்கள்.

The post கவிஞர் வாலியை ஆத்திரப்பட வைத்த கே.பி.! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியால் தன்னைத் தானே திட்டிக்கொண்ட பாலசந்தர்! https://touringtalkies.co/balachander-talked-about-scold-superstar-rajinikanth-in-avargal/ Sun, 08 Jan 2023 01:47:11 +0000 https://touringtalkies.co/?p=29272 1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுஜாதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அவர்கள்”. இதன் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் ஒரு குழந்தையை கொஞ்சுவது போன்ற ஒரு காட்சி..  பாலச்சந்தர் எதிர்பார்த்தது போல் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. பல டேக்குகள் ஆகிவிட்டன. டென்சன் ஆன பாலச்சந்தர்,  “இவனுக்கு நடிப்பே வராது, பேசாம ஜெய்கணேஷை கூப்பிட்டு வாங்க”  என்று திட்டிவிட்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார். பிறகு ஒருவழியாக படப்படிப்பு நடந்து முடிந்தது. வெகுகாலம் கழித்து,  […]

The post ரஜினியால் தன்னைத் தானே திட்டிக்கொண்ட பாலசந்தர்! appeared first on Touring Talkies.

]]>
1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுஜாதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அவர்கள்”.

இதன் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் ஒரு குழந்தையை கொஞ்சுவது போன்ற ஒரு காட்சி..  பாலச்சந்தர் எதிர்பார்த்தது போல் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. பல டேக்குகள் ஆகிவிட்டன.




டென்சன் ஆன பாலச்சந்தர்,  “இவனுக்கு நடிப்பே வராது, பேசாம ஜெய்கணேஷை கூப்பிட்டு வாங்க”  என்று திட்டிவிட்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார். பிறகு ஒருவழியாக படப்படிப்பு நடந்து முடிந்தது.

வெகுகாலம் கழித்து,  ஒரு திரைப்பட விழாவில்,  ரஜினிகாந்த்திடம் பாலச்சந்தர் பல கேள்விகள் கேட்பது போல் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பாலச்சந்தர் “நான் டைரக்ட் பண்ணும்போது இவர் கிட்ட இப்படி மாட்டிக்கிட்டோமே என நினைத்தது உண்டா?” என நகைச்சுவையாக கேட்டார்,

அதற்கு ரஜினிகாந்த் “நிறைய முறை நினைத்திருக்கிறேன்..” என்ற ரஜினி,  அந்த பழைய சம்பவம் நினைவில் இருப்பதாகவும் கூறினார்.

 
அதன் பின் பேசிய பாலச்சந்தர்  “அன்னைக்கு நான் ரொம்ப திட்டிட்டேன். அதன் பின் எத்தனையோ நாள் நான் அதை நினைச்சி வருத்தப்பட்டிருக்கேன். அதுவும் நீ பெரிய நட்சத்திர நடிகராக வளர வளர எப்போதும் எனக்கு அதுதான் நினைவுக்கு வரும். இப்படி ஒரு பெரிய நட்சத்திரத்தை  கடுமையா திட்டிட்டியேடா என்று என்னை நானே திட்டிக்குவேன்” என மிகவும் பெருந்தன்மையோடு கூறியது அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

The post ரஜினியால் தன்னைத் தானே திட்டிக்கொண்ட பாலசந்தர்! appeared first on Touring Talkies.

]]>
மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/ Fri, 17 Sep 2021 05:22:35 +0000 https://touringtalkies.co/?p=18039 The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>

The post மோகனுக்கு வாய்ப்பு தேடி அலைந்தேன்- Stills Ravi | Chai with Chithra | Part – 1 appeared first on Touring Talkies.

]]>