The post அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! appeared first on Touring Talkies.
]]>விமானநிலையத்தில் இருந்து இவர்கள் அசர்பைஜான் புறப்பட்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அசர்பைஜானில் அஜித், அர்ஜூன் இணைந்த கார் சேஸிங் காட்சிகளின் சூட்டிங் படமாக்கப்பட்டன. இதன்போது நடிகை திரிஷா சென்னை திரும்பினார். டொவினோ தாமசுடன் திரிஷா இணைந்துள்ள படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்றார். இந்த சூட்டிங்கின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகக்ளை உற்சாகப்படுத்தியுள்ளன. இதையடுத்து ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்கில் திரிஷா இணையவுள்ளார்.
இதனிடையே புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அஜித்தும் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிலிருந்து கேப் எடுத்துக் கொண்டு லண்டன் சென்றுள்ளார். அவரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அசர்பைஜான் சூட்டிங்கின்போது அஜித் மற்றும் திரிஷா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக ஸ்லிம் லுக்கில் அஜித் மாறியுள்ள நிலையில் இந்த ஜோடி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நடிகை திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இந்தப் படங்களின் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் திரிஷா கமிட்டாகி வருகிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் திரிஷா, அடுத்ததாக டொவினோ தாமசுடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டிலும் சல்மான் கான் -விஷ்ணு வர்தன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திலும் கமிட்டாகியுள்ளார். தன்னுடைய ரீ என்ட்ரியை மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார் திரிஷா.
The post அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! appeared first on Touring Talkies.
]]>