Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
athulya ravi – Touring Talkies https://touringtalkies.co Thu, 27 Apr 2023 06:13:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png athulya ravi – Touring Talkies https://touringtalkies.co 32 32 அதுல்யா ரவியின் அழகு புகைப்படங்கள்! https://touringtalkies.co/athulya-ravi-cute-in-saree-1/ Thu, 27 Apr 2023 06:13:18 +0000 https://touringtalkies.co/?p=31957 The post அதுல்யா ரவியின் அழகு புகைப்படங்கள்! appeared first on Touring Talkies.

]]>

The post அதுல்யா ரவியின் அழகு புகைப்படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
அதுல்யா ரவி அசத்தல் போட்டோஸ்! https://touringtalkies.co/athulya-ravi-hot-pictures/ Mon, 03 Apr 2023 02:35:59 +0000 https://touringtalkies.co/?p=31235  

The post அதுல்யா ரவி அசத்தல் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
 

The post அதுல்யா ரவி அசத்தல் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
எண்ணித் துணிக – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/yenni-thuniga-movie-review/ Sun, 07 Aug 2022 07:21:11 +0000 https://touringtalkies.co/?p=23634 ஐ.டி. துறையில் பணியாற்றும் நாயகனான கதிர் என்னும் ஜெய் தனது கல்லூரி தோழியான நர்மதாவை தற்செயலாக சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னால் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய நர்மதா மீது கதிருக்கு ஒரு காதல் இருக்கிறது. இந்தக் காதலை வளர்த்தெடுக்க அவர் நினைக்கிறார். இன்னொரு பக்கம் நர்மதா சுற்றுச் சூழல், மது ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடும் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனாலும் ஜெய்யின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு […]

The post எண்ணித் துணிக – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஐ.டி. துறையில் பணியாற்றும் நாயகனான கதிர் என்னும் ஜெய் தனது கல்லூரி தோழியான நர்மதாவை தற்செயலாக சந்திக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தன்னால் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய நர்மதா மீது கதிருக்கு ஒரு காதல் இருக்கிறது. இந்தக் காதலை வளர்த்தெடுக்க அவர் நினைக்கிறார்.

இன்னொரு பக்கம் நர்மதா சுற்றுச் சூழல், மது ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்காக களத்தில் இறங்கிப் போராடும் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனாலும் ஜெய்யின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார் அதுல்யா.

இந்த நேரத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இருக்கும் சர்வதேச நகைக் கடத்தல் கும்பலின் தலைவன் 2000 கோடி மதிப்புள்ள 10 வைரக் கற்களை பறிகொடுத்துவிட்டான். இந்த வைரக் கற்கள் தற்போது தமிழ்நாட்டில் மாநில அமைச்சராக இருக்கும் சுனில் ரெட்டியிடம் இருப்பதாகத் தெரிய வருகிறது.

சுனில் ரெட்டியோ அந்த வைர நகைகளை அவரது பினாமி நடத்தும் நகைக்கடையில் பத்திரமாக வைத்திருக்கிறார். இந்தத் தகவலும் அந்த சர்வதேச கொள்ளையருக்குத் தெரிகிறது. உடனேயே சென்னையில் இருக்கும் வம்சி கிருஷ்ணாவின் தலைமையில் ஒரு டீமை அமைத்து அந்த நகைக்கடையைக் கொள்ளையடித்து வைரக் கற்களை கொண்டு வரும்படி சொல்கிறார்.

இந்த கொள்ளையர் டீம் நகைக் கடைக்குள் வரும்போது அங்கே தனது கல்யாணத்திற்கு நகை வாங்குவதற்காக அதுல்யாவும் வந்திருக்கிறார். அதேபோல் தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக தனது நகையை விற்க வந்திருக்கிறார் இன்னொரு நாயகியான அஞ்சலி நாயர்.

நகைக் கடையில் நடக்கும் கொள்ளையடிப்பு சம்பவத்தில் அதுல்யாவும், அஞ்சலி நாயரின் கணவரும் கொல்லப்படுகிறார்கள். அஞ்சலி நாயர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைக்கிறார்.

இவர் உயிர் பிழைத்தால் மட்டுமே கொள்ளையர்கள் பற்றிய முழு தகவலும் தெரிய வரும் என்பதால் இவரை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சையளிக்கிறார் அமைச்சர் சுனில் ரெட்டி.

இன்னொரு பக்கம் போலீஸை நம்பினால் இதில் எதுவும் நடக்காது என்று நி்னைக்கும் ஜெய் தானே இந்த வழக்கில் துப்பறிய இறங்குகிறார். அமைச்சர் ஒரு பக்கம் தனது வைரக் கற்களுக்காக மல்லுக்கட்ட.. உயிர் பிழைக்கும் அஞ்சலி நாயர் தனது குழந்தையைக் காப்பாற்ற நினைக்க.. தனது காதலியை கொன்றவனை பழி வாங்க ஜெய் துடிக்க.. யாருடைய எண்ணம் நிறைவேறியது என்பதுதான் இந்த ‘எண்ணித் துணிக’ படத்தின் திரைக்கதை.

‘எண்ணித் துணிக’ என்ற இப்படத்தின் தலைப்பு திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டதாகும். எண்ணித் துணிக கர்மம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு…’ என்ற அற்புதமான குறளை மையப்படுத்திய படம் இது,  

ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானல் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறள்.

இதை மையப்படுத்திதான் இப்படத்தின் கதாநாயகன் கதிரின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையிலும் எளிதான காதல் நாயகனாகவே நடிக்க வைக்கப்பட்டிருந்த நடிகர் ஜெய்க்கு இந்தப் படத்தில் முழு நீள ஆக்சனை கொடுத்து ஆக்சன் ஹீரோவாக்கியிருக்கிறார்கள்.

ஜெய் தனது வழக்கமான நடிப்பையே பதிவு செய்திருக்கிறார். சண்டை காட்சிகளில் வேகத்தைக் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். சிரிக்கவும், காதலிக்கவும் வரும் அவரது முகம் சோகத்திற்கும், கோபத்திற்கும் மட்டுமே ஒத்துழைக்க மறுக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது. இன்னும் வித்தியாசமான வில்லனாக இவரைக் காட்டியிருக்கலாம். அதுல்யா காதல் காட்சிகளுக்காகவும், டூயட் பாடலுக்காகவும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

வித்யா பிரதீப் வில்லி கதாபாத்திரத்தில் தனது உருண்ட விழிகளை உருட்டியே நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர் சென்டிமெண்ட் காட்சிகள் முழுவதிலும் தனது ஆளுமையைக் காட்டி படத்தின் பெரும் பாரத்தை தானே சுமந்திருக்கிறார்.

திருட்டு அமைச்சராக சுனில் ரெட்டி தனது டயலாக் டெலிவரியில் பின்னியெடுத்திருக்கிறார். போலீஸ் உயரதிகாரியை அவர் வார்த்தைகளால் படுத்தும்பாடு உச்சக்கட்ட கேவலம். வில்லத்தனம் கலந்த நகைச்சுவையான நடிப்பில் இறுதியில் அவர் ஈர்க்கிறார்.

பாசமான அப்பாவாக மாரிமுத்துவும், கண்டிப்பான அப்பாவாக கோபி கண்ணதாசனும் தத்தமது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் என்றாலும் பாடலுக்கான இசை அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. குர்டிஸ் ஆண்டனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

‘ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா?’ என்ற வசனத்தை இன்னும் எத்தனை வருடத்திற்குத்தான் தமிழ்ச் சினிமாவில் கேட்பது. இதற்கொரு எண்ட் கார்டு போடக் கூடாதா..? மற்றபடி அமைச்சர் சுனில் ரெட்டி பேசும் பல வசனங்கள் புத்திசாலித்தனமாக, கோர்வையாக, கதைக்கு உதவுவதைப் போலவே இருக்கிறது.

படத்தின் முதல் பாதியை எடுத்துக் கொண்டால், நகைகளை கொள்ளையடிக்கும் காட்சி விறுவிறுப்புடனே நடக்கிறது. ஆனாலும், அந்த நகைக்கடை இருக்கும் சாலைகளில் சிசிடிவி கேமிராவே இல்லையா..? அதை வைத்து கண்டறியலாமே..? இதை மட்டும் திரைக்கதையாசிரியர் தன் வசதிக்காக சொல்லாமலேயே மறைத்துவிட்டார்.

இடைவேளைக்குப் பின்புதான் படத்தின் திரைக்கதை வேகமெடுக்கிறது. முதல் பாதியை ஒப்பிடும்போது, இரண்டாம் பாதி சற்று ஆறுதலைத் தருகிறது. இடைவேளைக்குப் பின்பு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக திரைக்கதை பறந்து கொண்டே போவதால் படம் இடைவேளைக்குப் பின்புதான் அதிக அலப்பறையாக இருக்கிறது.

கடைசியாக அந்த வைரக் கற்களை வைத்தே வில்லனின் கதையை முடிக்கும் திரைக்கதைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!

மொத்தத்தில் இந்த ‘எண்ணி்த் துணிக’ படத்தைப் பார்க்கலாம்தான்…!

RATING : 3.5 / 5

The post எண்ணித் துணிக – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஹரீஷ் கல்யாண்-அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவங்கியது https://touringtalkies.co/harish-kalyan-athulya-ravi-movie-news/ Mon, 13 Dec 2021 19:53:10 +0000 https://touringtalkies.co/?p=19839 SP CINEMAS நிறுவனம் THIRD EYE ENTERTAINMENT நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் இன்று துவங்கியது. இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாணும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். நடிகர் யோகிபாபுவும் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஶ்ரீதர் (பரியேறும் பெருமாள் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். S.S.முர்த்தி (ஆர்யாவின்  கேப்டன் மற்றும்  ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் புகழ் ) கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுஜித் சுதாகரன் ( […]

The post ஹரீஷ் கல்யாண்-அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
SP CINEMAS நிறுவனம் THIRD EYE ENTERTAINMENT நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் இன்று துவங்கியது.

இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாணும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். நடிகர் யோகிபாபுவும் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் D.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ்ரீதர் (பரியேறும் பெருமாள் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். S.S.முர்த்தி (ஆர்யாவின்  கேப்டன் மற்றும்  ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் புகழ் ) கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுஜித் சுதாகரன் ( மோகன்லாலின் லூஸிபர் படப் புகழ் ) உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

ஜீவி பிரகாஷ் நடித்த ‘அடங்காதே’ படத்தை இயக்கிய இயக்குநரான சண்முகம் முத்துசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படம் காதல் ஆக்சன் டிராமா திரைப்படமாக உருவாகவுள்ளது. ஹரிஷ் கல்யாண் முழுக்க, முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படத்தில்  நடிப்பது இதுவே முதல் முறை, மேலும் அவர் இப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக முரட்டுத்தனமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படம் இன்று காலை சென்னையில் எளிமையான சடங்குகளுடன் இனிதே துவங்கியது. இயக்குநர் வெற்றி மாறன் படத்தின் முதல் ஷாட்டுக்கு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார்.

இந்தத் துவக்க விழாவில் விஜய் சேதுபதி, ஜீ.வி.பிரகாஷ், ஐஷ்வர்யா ராஜேஷ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரெக்க’ மற்றும் ‘வா டீல்’ படப் புகழ் இயக்குநர் ரத்ன சிவா, ‘எங்கிட்ட மோதாதே’ படப் புகழ் ராமு செல்லப்பா ‘டோரா’ படப் புகழ் இயக்குநர் தாஸ் ராமசாமி உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படம் வெற்றி பெற படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, வட சென்னை பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைபெறவுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு துவங்கவுள்ளது.

The post ஹரீஷ் கல்யாண்-அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>