Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
atharvaa – Touring Talkies https://touringtalkies.co Fri, 25 Nov 2022 20:01:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png atharvaa – Touring Talkies https://touringtalkies.co 32 32 பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/pattaththu-arasan-movie-review/ Fri, 25 Nov 2022 11:00:38 +0000 https://touringtalkies.co/?p=27571 கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது. இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, […]

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘பட்டத்து அரசன்’ படம், அதே கபடி விளையாட்டில் நாம் இதுவரை அறிந்திருக்காத ஒரு முகத்தைக் காட்டுகிறது.

இயக்குநர் ஏ.சற்குணம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், செந்தி, மீனாள், ஜானகி, சிந்து, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், கன்னட நடிகர் காளே, தெலுங்கு நடிகர் சதுரு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இராமநாதபுரம் ஜில்லாவில் இருக்கும் காளையார்கோவில் கிராமத்தில் உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்து கொண்டாடும் அளவுக்கு மிகப் பெரிய கபடி வீரரான ராஜ்கிரண், மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார்கள். சொத்துப் பிரச்சினையால் ராதிகாவையும், அதர்வாவையும் ராஜ்கிரணும் அவரது குடும்பத்தாரும் ஒதுக்கி வைத்துள்ளனர். தனது தாய் ராதிகாவின் எதிர்ப்பையும் மீறி அதர்வா மட்டும் எப்படியாவது தாத்தா குடும்பத்துடன் சேர்ந்துவிட வேண்டும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே ராஜ்கிரணின் மற்றொரு பேரனும், ராஜ்கிரணின் பால்ய காலத்து தோழனும், தற்போதைய பஞ்சாயத்துத் தலைவருமான ரவி காளேவின் மகனும் ஒன்றாக அதே ஊரின் கபடி டீமில் இடம் பெற்று விளையாடி வருகிறார்கள். ராஜ்கிரணின் பேரன் மட்டும் தமிழக கபடி டீமிற்கு தேர்வாகிவிட்டதை தெரிந்து கொண்ட காளேவின் மகன் தந்திரமாக சிலவைகளை செய்து ராஜ்கிரணின் பேரனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறான்.

இப்போது ஊரே கொண்டாடிய ராஜ்கிரணின் குடும்பம் ஊருக்கு துரோகம் செய்துவிட்டதாக பழி சுமத்தி அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் ஊருக்கான கபடி அணியில் விளையாட கூடாது என்று தடையும் விதிக்கிறார்கள்.

இப்போது கபடி விளையாடவே தெரியாத அதர்வா தன் தாத்தா குடும்பத்தின் மீது விழுந்த பழியை போக்க களத்தில் இறங்குகிறார். கபடி விளையாட்டில் தன் ஊர் அணியை தன் குடும்ப அணி வெல்லும் என்று சவால்விட்டு பிரிந்த, குடும்பத்தை ஒன்று சேர்த்து ஊர் அணிக்கு எதிராக கபடி விளையாடத் தயாராகிறார் அதர்வா.

அந்தச் சவாலில் ராஜ்கிரணின் குடும்பம் வெற்றி பெற்றதா..? இல்லையா? என்பதை விறுவிறுப்பான கபடி விளையாட்டோடு, குடும்ப செண்டிமெண்டையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.

கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா விளையாட்டு வீரருக்கான வேடத்தில் வழக்கம்போல கச்சிதமாக பொருந்துகிறார். கபடி களத்தில் காளையாக பாய்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் ரசிக்கும்படி அளவாக நடித்தும், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவரவும் வைக்கிறார். 

அதர்வாவுக்கு தாத்தாவாக, கதையின் உண்மையான நாயகனாக பொத்தாரி’ என்ற கபடி வீரரின் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரண், மூன்றுவிதமான கெட்டப்புகளில் தனது வித்தியாசத்தை நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 70 வயதில் ஒருவரால் கபடி விளையாட முடியுமா என்ற கேள்விக்குத் திரையில் கபடி விளையாடியே காண்பித்திருக்கிறார் ராஜ்கிரண்.

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத்திற்கு குடும்ப பாங்கான முகம். கபடி வீராங்கனையாக நடித்திருப்பவர் காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பு மூலம் ஜொலித்திருக்கிறார். நாயகி தொடை தெரியும் அளவுக்கு உடையணிந்திருப்பது சற்குணத்தின் இயக்கத்தில் இதுதான் முதல் படமாகும்.

ராஜ்கிரணின் மூத்த மகனாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அதர்வாவிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், மகனை இழந்த ஆற்றாமையில் தவிக்கும் காட்சிகளிலும், இறுதியில் நிலைமை புரிந்து அதர்வாவுடன் இணைந்து கபடியில் மல்லுக்கட்டும் காட்சியிலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ராஜ்கிரணின் இளைய மகனான துரை சுதாகரும் தன் பங்குக்கு உரிய நடிப்பினை காண்பித்திருக்கிறார். சிங்கம் புலி வீட்டு மாப்பிள்ளையாக வலம் வந்தாலும் கிடைக்கும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் நடிப்பிலும், கபடி விளையாட்டிலும் சரி பாராட்டும்படி நடித்திருக்கிறார். ராதிகா தன் பங்குக்குத் தனது தனித் திறமையை பதிவு செய்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ரவி காளே, பால சரவணன் என்று பலரும் தங்களது கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து முடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தில் லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது. விளையாட்டு போட்டிகளை விறுவிறுப்பாக காட்டுவது மட்டுமல்ல.. பல்வேறு வயதுகளில் இருக்கும் தாத்தா, மகன், பேரன் என்று மூன்று தலைமுறையினர் கொண்ட ஒரு குடும்ப அணி கபடி விளையாடுவதை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் கேமிரா அந்த வெற்றிலை கொடி தோட்டத்திற்குள் நுழைந்து பயணிக்கும் காட்சியை இதுவரையிலும் தமிழ்த் திரை ரசிகர்கள் கண்டதில்லை. அவ்வளவு அழகுடன் அதைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பொதுவாக சற்குணத்தின் படமென்றால் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சிறப்பாகத்தான் இருக்கும். இந்தப் படத்திலும் அதுவே நடந்திருக்கிறது. பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, முணுமுணுக்கவும் வைக்கிறது. இன்னொரு பக்கம் பின்னணி இசை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருந்தாலும், குடும்ப செண்டிமெண்டோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சற்குணம், அதை முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

அதிகப்படியான பெரிய நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கிராமத்து, குடும்பக் கதையை சொல்வதே மிகப் பெரிய சவால் என்றாலும், அந்த சவாலை சாமர்த்தியமாக சமாளித்திருக்கும் இயக்குநர் சற்குணம், காதல், ஆக்‌ஷன், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்தையும் கலந்து அளவாகவே கொடுத்திருக்கிறார்.

ஒட்டு மொத்தமாய் இன்றைய இளைஞர்களுக்கான படமாக மட்டுமின்றி, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ‘பாசமலர்’ டைப் படமாகவும் இந்தப் ‘பட்டத்து அரசன்’ அமைந்துள்ளது.

RATING : 3.5 / 5

The post பட்டத்து அரசன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
டிரிக்கர் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/trigger-movie-review/ Mon, 26 Sep 2022 08:05:49 +0000 https://touringtalkies.co/?p=24668 இந்தப் படத்தை பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் ஆகிய  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அதர்வா நாயகனாகவும், தான்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீதா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, ராகுல்தேவ் ஷெட்டி, அன்புதாசன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – ஜிப்ரான், சண்டை பயிற்சி இயக்கம் – திலீப் சுப்பராயன், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – ராஜேஷ், பத்திரிகை தொடர்பு – […]

The post டிரிக்கர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் ஆகிய  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அதர்வா நாயகனாகவும், தான்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீதா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, ராகுல்தேவ் ஷெட்டி, அன்புதாசன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – ஜிப்ரான், சண்டை பயிற்சி இயக்கம் – திலீப் சுப்பராயன், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – ராஜேஷ், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன், எழுத்து, இயக்கம் – சாம் ஆன்டன்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான அதர்வா கள்ளத் துப்பாக்கிளை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கப் போன இடத்தில் மேலிட உத்தரவையும் மீறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டதால் வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார்.

அதர்வாவின் திறமையை இழக்க விரும்பாத போலீஸ் கமிஷனர் அழகம்பெருமாள் அவரை போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்குள்ளேயே உள்ளடி வேலை பார்க்கும் இன்டர்னல் சீக்ரெட் டீமில் ஒரு ஆளாக சேர்த்துவிடுகிறார். போலீஸ் துறைக்குள் இருக்கும் பெருச்சாளிகளை அடையாளம் கண்டு உயரதிகாரிகளுக்குப் போட்டுக் கொடுப்பதுதான் இந்த சீக்ரெட் கம்பெனியின் ரெகுலர் வேலை.

இந்த வேலையில் அதர்வாவுடன் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் ஆகியோரும் இருக்கின்றனர். லஞ்சம் வாங்குபவர்கள், பாலியல் தொழில் புரோக்கர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், மனித உரிமையை மீறுபவர்கள், சட்டத்தை மதிக்காதவர்கள் என்று பல போலீஸாரையும் இந்தக் கும்பல் மேலிடத்திற்குக் காட்டிக் கொடுக்க பலரும் சஸ்பெண்ட்டாகிறார்கள்.

இந்த நேரத்தில்தான் குழந்தை கடத்தல் சம்பவம் ஒன்று அதர்வாவின் கண் முன்னே நடக்கிறது. குழந்தையைக் காப்பாற்றப் போய் நேரடி தாக்குதலில் அதர்வா ஈடுபட அது துப்பாக்கி சண்டையில் போய் முடிகிறது. மேலும் இது தொடர்பாக விசாரிக்க, விசாரிக்க புதைகுழியில் பல பயங்கரங்கள் இருப்பது அதர்வாவுக்குத் தெரிய வருகிறது.

இந்தக் கடத்தல்காரர்களுக்கும், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தனது நினைவுகளை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரியான அதர்வாவின் அப்பா அருண் பாண்டியனுக்கும் இருக்கும் தொடர்பு கடைசியாக தெரிய வருகிறது.

அதர்வா இந்தக் கூட்டத்தை அடியோடு ஒழிக்க களத்தில் இறங்குகிறார். கடத்தல் கும்பலின் தலைவன் மைக்கேல் நேரடியாக அதர்வாவுடன் மோதுகிறான். கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள். இந்தக் குழந்தை கடத்தலின் மூலாதாரம் என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை.

அதர்வாவுக்கு ஆக்ரோஷமான நடிப்புதான் மிக இயல்பாய் வருகிறது. அடிதடி, சண்டை காட்சிகளில் பராக்கிரமம் பொங்க அடித்து ஆடியிருக்கிறார். லேசாக காதல் வாடையையும் வீசுகிறார். ஆனால் அது கொஞ்சமே என்பதால் எந்தக் கெமிஸ்ட்ரியையும் யாருக்குள்ளும் உருவாக்கவில்லை.

நாயகியான தான்யா ரவிச்சந்திரனுக்கு மிகக் குறைந்த காட்சிகளே.. படத்தில் அவ்வப்போது திரைக்கதைக்கு தொடர்பு கொடுப்பதற்காகவே அவரது கேரக்டரை வைத்திருக்கிறார்கள் போலும்.

படத்தில் நமது கவனத்தை ஈர்த்திருப்பது வில்லனான மைக்கேல்’ கேரக்டரில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ஷெட்டிதான். கொஞ்சம் ‘மாஸ்டர்’ பட விஜய் சேதுபதி, கொஞ்சம் ‘பகவதி’ பட ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோரின் கலவையாக காட்சியளிக்கிறார்.

இவர் கடத்தலுக்குப் போடும் திட்டங்கள் பலே என்றாலும் வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் பயம் கொள்ள வைக்கவில்லை என்பதால் தமிழில் புது வில்லன் நடிகர்ப்பா என்ற பெருமையை மட்டும் தட்டிச் சென்றுள்ளார்.

அதர்வா டீமில் இருக்கும் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்புதாசன், அறந்தாங்கி நிஷா நால்வரும்கூட சீரியஸாகவே நடித்துள்ளனர். அதிலும் சின்னி ஜெயந்த் இரண்டு காட்சிகளில் மனதைத் தொடும் அளவுக்கு நடித்திருக்கிறார். கடைசியில் “என் மகனிடம் என்னைப் பற்றிச் சொல்லிவிடு…” என்று சொல்லிவிட்டு மரணத்துடன் மோதுவது டச்சிங்கானது.

அதர்வாவின் அப்பாவாக அருண் பாண்டியன். 1993-ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் ரெக்கார்டு அறைக்கு தீ வைத்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தான் இன்னார் என்பதையே மறந்திருக்கும் அப்பாவி போலீஸ்காரர். அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால், இவரால்தான் படம் முடியப் போகிறது என்பதை மட்டும் முன்னமேயே ஊகிக்க முடிந்தது இயக்குநரின் தவறுதான்.

அலுவலக வேலையில் பாசத்தைப் பொழிய கமிஷனர் அழகம்பெருமாளும், வீட்டில் பாசத்தைக் காட்ட அம்மா சீதாவுமாக காட்சியளித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருக்கிறது. இரவு நேரக் காட்சிகளையே பகல் நேரக் காட்சிகளாகவும் அமைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. பெரிய பட்ஜெட் படம். நிச்சயமாக பல வசதிகளை செய்து கொடுத்திருப்பார்கள். அப்படியிருந்தும் பகல் நேரக் காட்சிகளில் லைட்டே இல்லாததுபோல டிம்மாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தான்யாவை குளோஸப்பில் காட்டும்போது மேக்கப் கலைஞர் இல்லாமலேயே நடித்தாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சண்டை பயிற்சி இயக்குநரின் திறமையைத்தான். திலீப் சுப்பராயனின் ஆக்ஷன் வெறியில் சிக்கி உழன்றிருக்கிறார் அதர்வா. ஆனால், அதற்காக உடலில் 2 குண்டுகளை வாங்கியும் தெம்பாக சண்டை போடுவதெல்லாம் டூ மச்சான விஷயம் இ்ல்லையா ஸார்..?

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் எதுவும் புரியவில்லை. இசையும் கேட்கும் ரகமாக இல்லாதது வருத்தத்திற்குரியது. பின்னணி இசையில் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளித்திருக்கிறார் ஜிப்ரான். படத் தொகுப்பாளர் ரூபன் காட்சிகளை நெருக்கமாகத் தொகுத்து திரைக்கதையை பரபரவென இருக்க வைக்க முயன்றிருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் வன்முறை சம்பவத்திற்கும், அருண் பாண்டியனுக்கும் இருக்கும் தொடர்பும், அந்தத் தொடர்பை வரவழைக்க வீட்டில் அருண் பாண்டியனின் அறையில் அந்தச் சம்பவம் தொடர்பான பேப்பர்களை தொங்க விட்டிருப்பதும், அதை கடைசியில் திரைக்கதைக்கு உதவுவதும் பிரில்லியண்ட் ஐடியாதான்.

ஆனால் அதற்காக போலீஸில் இல்லாத ஒரு டிபார்ட்மெண்ட்டான இன்டெர்னல் டிபார்ட்மெண்ட்டை இருப்பதாகக் காட்டி அதன் மூலமாக அதர்வாவை போலீஸுடன் தொடர்புபடுத்தி வைத்திருப்பது பெரும் சறுக்கல்தான். அதற்குப் பதிலாக சஸ்பெண்ட்டில் இருந்தபடியே அவர் செய்வதுபோல திரைக்கதையை வைத்திருந்தால்கூட அது நம்பகமாக இருந்திருக்கும்.

அன்புதான் ஹோட்டலில் தன் அறையிலேயே ஒட்டு மொத்த சிட்டியையும் கன்ட்ரோல் செய்வதும், கண்காண்பிப்பதும் கொஞ்சமாவது பொறுத்தமாக இருக்கிறதா இயக்குநரே.? அதிலும் கன்டெய்னர் லாரியையே ஹேக் செய்வதெல்லாம் காமெடி ஸாரே..!

இதுவரையிலும் சொல்லப்படாத குழந்தைகள் தத்தெடுத்தலின் பின்னால் இருக்கும் மறைமுக கடத்தல் விஷயம் ஒன்றுக்காக மட்டுமே இயக்குநரை நாம் பாராட்டியாக வேண்டும். மற்றபடி அதர்வாவுக்கு எப்படியோ… தமிழ்ச் சினிமாவுக்கு சுமாரான ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படமாக இது வந்திருக்கிறது.

RATING : 3 / 5

The post டிரிக்கர் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
அதர்வா-தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிரிக்கர்’ படம் https://touringtalkies.co/trigger-movie-press-meet-news/ Mon, 12 Sep 2022 07:32:25 +0000 https://touringtalkies.co/?p=24464 பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டிரிக்கர்’. இதன் நாயகன் – அதர்வா. நாயகி – தான்யா ரவிச்சந்திரன். இசை – ஜிப்ரான். இயக்கம் – சாம் ஆன்டன். வரும் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்த ‘டிரிக்கர்’ படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி பேசும்போது,  “பிரபு தேவா நடித்த ‘லஷ்மி’, மாதவன் நடித்த ‘மாறா’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் […]

The post அதர்வா-தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிரிக்கர்’ படம் appeared first on Touring Talkies.

]]>
பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டிரிக்கர்’. இதன் நாயகன் – அதர்வா. நாயகி – தான்யா ரவிச்சந்திரன். இசை – ஜிப்ரான். இயக்கம் – சாம் ஆன்டன்.

வரும் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இந்த டிரிக்கர்’ படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி பேசும்போது,  “பிரபு தேவா நடித்த ‘லஷ்மி’, மாதவன் நடித்த ‘மாறா’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் தயாரித்துள்ள படம் இது.

எங்களுடைய முந்தையப் படங்களை மென்மையான கதைக் களத்தோடு தயாரித்தோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தப் படம் சண்டை காட்சிகளோடு கதையோடு கூடிய கமர்ஷியம் படம்.

தனிப்பட்ட விதத்தில் எனக்கு சண்டை படங்கள் அதிகம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்புக்காக கதைகளை கேட்டபோது இயக்குநர் சாம் ஆன்டன் சொல்லிய இந்தக் கதை பிடித்திருந்ததால் அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளோம்.

இந்தப் படம் அதர்வாவின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமையும். படத்தில் அதர்வா தனது கடினமான உழைப்பைக் கொடுத்தார். சண்டைக் காட்சிகள் அதர்வாவுக்கு பொருந்திப் போகும் அளவுக்கு கச்சிதமாக இருக்கும். இந்த டிரிக்கர்’ படம், சண்டை படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்…” என்றார்.

இயக்குநர் சாம் ஆன்டன் பேசும்போது, “தயாரிப்பாளர் ஸ்ருதி மேடத்தை முதன்முறையாக சந்திக்கும் போது அவருடைய அணுகுமுறை மிகவும் மென்மையாக இருந்தது. அவரிடம் எப்படி சண்டை படத்தின் கதையை சொல்வது என்று யோசித்தேன். அதே வேளையில் அவர்கள் நிறுவனம் இந்தியில் வெளியான ‘கமாண்டோ சீரிஸ்’ தயாரிப்புகளில் பங்கு வகித்ததை அறிந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, “நாம் இந்தப் படத்தை தயாரிக்கலாம்” என்றார்.

குழந்தை கடத்தல் கதை என்பது தமிழ் சினிமாவுக்கு புதியது அல்ல. ஆனால் யதார்த்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த மாதிரியான சம்பவங்கள்  தொடர்பு உடையதாக இருக்கிறது என்பதை உண்மைத் தன்மையோடு சொல்லி இருக்கிறோம். கதைக்காக பல ஆய்வுகளை செய்தோம். கடத்தப்படும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை உளவியல் பார்வையில் சொல்லி உள்ளோம்.

படத்தில் போலீஸ் துறையில் பணியாற்றும் அன்டர் கவர் ஆபீஸராக வருகிறார் அதர்வா. அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். அப்பா மகன் கதையான இதில் அருண் பாண்டியன் சார் அப்பா கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அதர்வா சண்டைக் காட்சிக்காக அதிக மெனக்கடல் எடுத்தார். ஐந்து சண்டைக் காட்சிகள். ஒவ்வொன்றறையும் வித்தியாசமான கோணத்தில் சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் கம்போஸ் பண்ணிக் கொடுத்தார். ஜிப்ரானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக இருக்கும். கிருஷ்ணன் வசந்த் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நான் பணியாற்றியவர்களில் மிகச் சிறந்த தயாரிப்பாளர் ஸ்ருதி மேடம்தான். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இந்தப் படத்துக்கு என்று ஒரு பட்ஜெட் இருந்தது. ஆனால், படம் எடுக்கும்போது கூடுதல் பட்ஜெட் தேவைப்படும் என்று தெரிந்தது.

தயாரிப்பாளர் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதால் முழு சுதந்திரம் கொடுத்து அதிக முதலீடு செய்தார். அந்த வகையில் ஸ்ருதி மேடம், படக் குழுவைச் சேர்ந்த கோகுல் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

தயாரிப்பு நிறுவனத்தினர் என் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்தார்கள், அதற்கு நியாயம் செய்திருப்பதாக நினைக்கிறேன். இது சண்டை படமாக இருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் இருக்கும்.

படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்..” என்றார்.

The post அதர்வா-தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிரிக்கர்’ படம் appeared first on Touring Talkies.

]]>
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய தமிழ்ப் படம்…! https://touringtalkies.co/tamil-movie-praised-by-kannada-superstar-sivaraj-kumar/ Tue, 13 Jul 2021 07:51:37 +0000 https://touringtalkies.co/?p=16141 இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அட்ரஸ்’ திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்தப் படத்தினை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதைதான் இந்த ‘அட்ரஸ்’ திரைப்படம். இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட  சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது […]

The post கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய தமிழ்ப் படம்…! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அட்ரஸ்’ திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்தப் படத்தினை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கிறார்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழக கேரளா எல்லைக்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு அட்ரஸ் இல்லாமல் பல காலமாய் தவித்த ஒரு கிராமத்தின் கதைதான் இந்த அட்ரஸ்’ திரைப்படம்.

இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட  சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின்  டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குநர் இராஜமோகன் பேசும்போது, “நான் இயக்குநர் விஜய் மில்டனிடம் பல திரைப்படங்களில் உதவியாளராக வேலை பார்த்தவன். திரையுலகில் அவர்தான் என் குரு. இயக்குநராக மாறிய பின்னரும் அவர் அழைக்கும்போது அவர் படங்களில் வேலை பார்ப்பேன்.

விஜய் மில்டன் சார் இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அவர்களை வைத்து, படம் இயக்கி கொண்டிருக்கிறார். அதில் நானும் வேலை பார்த்தேன். எனக்கு சிவராஜ் குமார் அவர்களை முன்பிருந்தே தெரியும்.

அவர் என்னை குறித்து விசாரித்தபோது, என் படத்தின் டீஸரை காட்டினேன். ஆச்சர்யப்பட்டு படத்தை குறித்து அனைத்து விசயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். என்னை வெகுவாக பாராடியதோடு படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடத்திலும் இந்த படம் குறித்து பாரட்டி பேசினார்.

ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு மெனக்கெடலுடன் அனைவர் முன்னிலையிலும் பாரட்டியது பெரும் மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அவர் அத்தோடு நில்லாமல் டீஸரை கேட்டு வாங்கி அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும், படத்தையும் படக் குழுவினரையும் பாராட்டி ஒரு வீடியோ பதிவு செய்து கொடுத்து, “இதை வெளியிடுங்கள்…” என்றும் கேட்டுக் கொண்டார். மிக உச்சத்தில் இருக்கும் நடிகர், எங்கள் படத்தை இந்தளவு பாராட்டியது எங்களுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்துள்ளது.

எங்களது அட்ரஸ்’ படத்தின் டீஸருக்கு ரசிகர்களிடமிருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஜனரஞ்சகமான படைப்பாக இருக்கும்…” என்றார்.

The post கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய தமிழ்ப் படம்…! appeared first on Touring Talkies.

]]>