Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
animal welfare board – Touring Talkies https://touringtalkies.co Thu, 24 Nov 2022 09:51:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png animal welfare board – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் https://touringtalkies.co/animal-welfare-board-sent-a-notice-to-vaarisu-movie-producer/ Thu, 24 Nov 2022 09:50:23 +0000 https://touringtalkies.co/?p=27551 விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கு இப்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கி பெரும் பிரச்சினையாகி, இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கைதாகியுள்ளனர். மேற்கொண்டு […]

The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கு இப்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

இந்தப் படத்திற்காக பூவிருந்தவல்லி அருகே நேற்றைக்கு நடந்த ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அனுமதியின்றி அந்த யானைகள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனால் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே மக்களிடம் நேர்காணல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை செய்தியாளர்களை தாக்கி பெரும் பிரச்சினையாகி, இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கைதாகியுள்ளனர். மேற்கொண்டு படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதால் புதிய பிரச்னை ஒன்றும் உருவாகியுள்ளது.

Notice

அனுமதியின்றி யானைகள் கொண்டுவரப்பட்டது தொடர்பாக ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு விலங்குகள் நல வாரியம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், “விலங்குகளை பயன்படுத்தும் முன்பு விதி 31ன்படி விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். வாரியத்தின் அனுமதியின்றி பயன்படுத்துவது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 26ன் கீழ் குற்றமாகும். வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை-1ன் கீழ் யானைகள் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். மற்றும் விதி 7(2)இன்படி, திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம். அதேபோல் பயன்படுத்தும் விலங்கு வகை, விலங்குகளின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்தும் முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். எனவே அனுமதி பெறாமல்  5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி ‘வாரிசு’ படத்துக்கு தொடர்ந்து எழும் சிக்கல்களால் படக் குழு பெரிதும் கவலையடைந்துள்ளது.

The post ‘வாரிசு’ படக் குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் appeared first on Touring Talkies.

]]>