Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Ajith – Touring Talkies https://touringtalkies.co Mon, 06 May 2024 12:15:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Ajith – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Mon, 06 May 2024 12:15:01 +0000 https://touringtalkies.co/?p=42312 விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும், இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று இன்றுவரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஏனோ , சில காரணங்களால் இருவரும் அதைத் தவிர்த்தார்கள்.இந்நிலையில், இயக்குனர் சரணுடன் இணைந்து விஜய்யின் படத்தை அஜித் ரகசியமாக பார்ததாக தகவல் வெளியாகியுள்ளது . இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் அஜீத்தும் விஜய்யும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள்.அதேபோல், தற்போதைய நிலையை அடைய இருவரும் பல […]

The post ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… appeared first on Touring Talkies.

]]>
விஜய்யும் அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர்.அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும், இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று இன்றுவரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஏனோ , சில காரணங்களால் இருவரும் அதைத் தவிர்த்தார்கள்.இந்நிலையில், இயக்குனர் சரணுடன் இணைந்து விஜய்யின் படத்தை அஜித் ரகசியமாக பார்ததாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் அஜீத்தும் விஜய்யும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள்.அதேபோல், தற்போதைய நிலையை அடைய இருவரும் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்கள். விஜய்யை உருவ கேலி கிண்டல் மற்றும் தமிழில் சரியாக பேசத் தெரியாதவர் எனவும் அஜித்தை உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கத் தெரியாதவர், நடனமாடவில்லை என்று விமர்சித்து கேலி செய்தார்கள்.

அவர்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு சாதாரணமாக வரவில்லை. அவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த அயராது உழைத்ததால் தான் இருவரும் இப்போது சூப்பர் ஸ்டார்களாகிவிட்டனர். இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது.

அஜித்துடன் மங்காத்தா படத்தை பார்த்த பிறகும் விஜய் வெங்கட் பிரபுவிடம் பேசியபோது நீங்கள் சொல்லியிருந்தால் அர்ஜுன் வேடத்தில் நான் நடித்திருப்பேன் என்றார். இதை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த சமயத்தில் அஜித் விஜய் படத்தை ரகசியமாக பார்த்தது தெரியவந்திருக்கிறது.விஜய் நடித்த வில்லு படத்தை; தன்னுடைய ஃபேவரைட் இயக்குநர் சரணுடன் சேர்ந்து சென்னையில் ஒரு தியேட்டரில் மாறு வேடத்தில் சென்று பார்த்தாராம். பார்த்ததோடு மட்டுமின்றி படம் பார்க்கையில் சில காமெடி சீன்களுக்கு விழுந்து விழுந்து சிரித்து என்ஜாய் செய்தார் என்று இயக்குநர் சரண் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

The post ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… appeared first on Touring Talkies.

]]>
வலியில துடிச்சாலும் அந்த படத்த முடிச்சுட்டு தான் ஆப்ரேஷன்-கே போனாரு… அஜித் பற்றி நெகிழ்ந்த சுந்தர் சி… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ Mon, 06 May 2024 11:21:18 +0000 https://touringtalkies.co/?p=42297 அரண்மனை 4 திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் மே 3ந் தேதி வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலையே பெற்றுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, உன்னைத் தேடி படத்தை இயக்கிய போது அஜித்துடன் இருந்த அனுபவத்தையும் அவரின் உடல் நிலை குறித்து பல விஷயத்தையும் மிகவும் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டார்.இதுவரை அரண்மனை மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது. பேய், […]

The post வலியில துடிச்சாலும் அந்த படத்த முடிச்சுட்டு தான் ஆப்ரேஷன்-கே போனாரு… அஜித் பற்றி நெகிழ்ந்த சுந்தர் சி… appeared first on Touring Talkies.

]]>

அரண்மனை 4 திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் மே 3ந் தேதி வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது.கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலையே பெற்றுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, உன்னைத் தேடி படத்தை இயக்கிய போது அஜித்துடன் இருந்த அனுபவத்தையும் அவரின் உடல் நிலை குறித்து பல விஷயத்தையும் மிகவும் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டார்.
இதுவரை அரண்மனை மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது. பேய், மர்மங்கள் என கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர்.

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, உன்னைத் தேடி படத்தை எடுத்த போது நாங்கள் நியூசிலாந்தில் பாடல் காட்சிக்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அப்போது அவருக்கு முதுகுவலி பிரச்சனையாக இருந்தது. இதனால், முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.அப்போது அவர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் இன்னும் ஏழு நாளில் வெளிநாட்டில் செட்டில் ஆக போகிறார். அதற்குள் நான் ஆப்ரேஷன் செய்து ஆக வேண்டும் என்றார். அதுமட்டுமில்லாமல் அறுவை சிகிச்சைக்கு பின் உட்காரக்கூட முடியாத நிலை ஏற்படலாம், இதனால், இருக்கும்போதே அனைத்து காட்சிகளையும் எடுத்துவிடுங்கள் என்று கூறினார்.

இதை பற்றி தயாரிப்பு தரப்பிடம் கூறினால், அவர்கள் சம்மதித்தாலும், இல்லை என்றாலும் அடுத்தடுத்த இழப்புகள் ஏற்படும். இதனால் அஜித் சார் என்னிடம், கூறியதால், படப்பிடிப்பை விரைவாக முடிக்க திட்டமிட்டேன். நியூசிலாந்தில் அந்த நேரத்தில் 22 மணிநேரம் சூரிய வெளிச்சம் இருந்ததால், இரவு பகல் பார்க்காமல், ஒரே வாரத்தில் அஜித்தின் பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு அவரை அறுவை சிகிச்சைகாக அனுப்பி வைத்தோம் என்றார்.

அவர் பட்ட வலி எனக்கு அவர் சொல்லும் போது புரியவும் இல்லை தெரியவும் இல்லை. ஆனால், அவருக்கு முதுகில் இருக்கும் பிரச்சனையால், கால்களில் உணர்ச்சியே இல்லை. ரோட்டில் நடந்தால் அடுத்த அடுத்த கால்களால் அடியெடுத்து வைத்து நடந்து கொண்டே இருப்போம். ஆனால், அவர், தரையை பார்த்து தான் அவர் அடுத்த காலடியை எடுத்து வைப்பார். ஏனெனில் அவர் கால்களை எங்கு வைத்தோம் என்ற உணர்ச்சியே இருக்காது. அவரின் வாழ்க்கை பல வேதனைகளை கடந்தது. ஆனால், அந்த வேதனைகளை கடந்து சாதனை படைத்தார் அவர் என சுந்தர் சி நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்,

The post வலியில துடிச்சாலும் அந்த படத்த முடிச்சுட்டு தான் ஆப்ரேஷன்-கே போனாரு… அஜித் பற்றி நெகிழ்ந்த சுந்தர் சி… appeared first on Touring Talkies.

]]>
ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5/ Tue, 30 Apr 2024 12:57:23 +0000 https://touringtalkies.co/?p=41842 தமிழ் சினிமாவில் தற்போது “ரீமேக்” படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ‘கில்லி’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின. இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ […]

The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தற்போது “ரீமேக்” படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ‘கில்லி’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின.

இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ செய்யப்படவுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது, அவர் நடித்த 2012ஆம் ஆண்டு வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய 2 படங்களும் விரைவில் ‘மறுவெளியீடு’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.

]]>
ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… https://touringtalkies.co/%e0%ae%86%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9/ Tue, 30 Apr 2024 09:49:59 +0000 https://touringtalkies.co/?p=41771 நடிகர் அஜித் குமாரின் புதிய படமான ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இதுவரை சுமார் 70% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசர்பைஜானில் தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு அங்கேயே முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டு சென்னைக்கு திரும்பியுள்ளது. இதனால், அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், படப்பிடிப்பை முன்கூட்டியே மே 10ஆம் தேதி முதல் தொடங்க […]

The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித் குமாரின் புதிய படமான ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இதுவரை சுமார் 70% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசர்பைஜானில் தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு அங்கேயே முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டு சென்னைக்கு திரும்பியுள்ளது.

இதனால், அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், படப்பிடிப்பை முன்கூட்டியே மே 10ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.

அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் இணையலாம் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், பெரிய தொகைக்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்திற்கு சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட் இருப்பதால், அவரது படத்தின் வெளிநாட்டு உரிமை விற்றிருப்பது பெரிய விஷயம் அல்ல என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.

]]>
‘வாவ் வெரி க்யூட்’ ஜோடி! 24ம் ஆண்டு திருமண நாளை விமர்சையாக கொண்டாடிய அஜித்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-24%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/ Thu, 25 Apr 2024 06:00:38 +0000 https://touringtalkies.co/?p=41336 நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் இனிமையான நாளான திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்ங தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாள் மற்றும் மகனின் பிறந்தநாள்ளை கொண்டாடினார். சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டார் ஓட்டலில் தனது மனைவியுடன் 24வது ஆண்டு திருமண நாளை அஜித்குமார் கொண்டாடியுள்ளார்.அந்த ஓட்டலுக்கு அவர் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதேப்போல இந்த […]

The post ‘வாவ் வெரி க்யூட்’ ஜோடி! 24ம் ஆண்டு திருமண நாளை விமர்சையாக கொண்டாடிய அஜித்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் இனிமையான நாளான திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்ங தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாள் மற்றும் மகனின் பிறந்தநாள்ளை கொண்டாடினார்.

சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டார் ஓட்டலில் தனது மனைவியுடன் 24வது ஆண்டு திருமண நாளை அஜித்குமார் கொண்டாடியுள்ளார்.அந்த ஓட்டலுக்கு அவர் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதேப்போல இந்த திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் குமார் உட்கார்ந்து இருப்பது போலவும் அவர் மடிமீது ஷாலினி சாய்ந்து கொண்டு போஸ் கொடுப்பது போலவும் ஒரு ஃபோட்டோ வெளியானது அந்த ஃபோட்டோவை கண்ட ரசிகர்கள் சோ க்யூட் என தங்கள் மகிழ்ச்சிகளையும் திருமண நாள் வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

வருகின்றன வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினமன்று நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.இம்முறை அஜித் குமாரின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட அவர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.அடிக்கடி அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

The post ‘வாவ் வெரி க்யூட்’ ஜோடி! 24ம் ஆண்டு திருமண நாளை விமர்சையாக கொண்டாடிய அஜித்… appeared first on Touring Talkies.

]]>
அஜித்துக்கு நோ சொல்லி டாட்டா காட்டிய இயக்குனர்… வச்சு செய்த பாலிவுட்… https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%be/ Wed, 24 Apr 2024 12:24:45 +0000 https://touringtalkies.co/?p=41316 தற்போது தமிழ் நடிகர்கள் மற்ற மொழிகளில் நடிக்கவும் மற்ற மொழி நடிகர்கள் தமிழ் மொழியில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதைப்போல இங்குள்ள இயக்குனர்களும் பிறமொழி படங்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் இயக்குனர் ஒருவர் சல்மான் கானை நம்பி பாலிவுட் பக்கம் சென்றார் ஆனால் அவருக்கு நேர்ந்த கதியோ அய்யோ பாவம் என்றளவுக்கு ஆகிவிட்டது. சல்மான்கானை நம்பி சென்ற நிலையில்‌ சல்மான் கான் வேறு ஒரு இயக்குனரை கமிட் செய்துவிட்டாதால் படம் இல்லாமல் திணறிக்கொண்டு கையோடு […]

The post அஜித்துக்கு நோ சொல்லி டாட்டா காட்டிய இயக்குனர்… வச்சு செய்த பாலிவுட்… appeared first on Touring Talkies.

]]>
தற்போது தமிழ் நடிகர்கள் மற்ற மொழிகளில் நடிக்கவும் மற்ற மொழி நடிகர்கள் தமிழ் மொழியில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதைப்போல இங்குள்ள இயக்குனர்களும் பிறமொழி படங்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் இயக்குனர் ஒருவர் சல்மான் கானை நம்பி பாலிவுட் பக்கம் சென்றார் ஆனால் அவருக்கு நேர்ந்த கதியோ அய்யோ பாவம் என்றளவுக்கு ஆகிவிட்டது.

சல்மான்கானை நம்பி சென்ற நிலையில்‌ சல்மான் கான் வேறு ஒரு இயக்குனரை கமிட் செய்துவிட்டாதால் படம் இல்லாமல் திணறிக்கொண்டு கையோடு இருக்கிறார் அஜித்துக்கு பில்லா என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் சல்மான்கான்-ஐ வைத்து படம் எடுக்கலாம் என்று பாலிவுட் பக்கம் சென்றார்‌.அப்போது விடாமுயற்சி படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில் அஜித் இயக்குனர் விஷ்ணுவர்தனை அணுகியிருக்கிறார்.ஆனால் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் பிஸியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார்.

தற்போது ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணி போட்ட சல்மான் கான் கடைசியில் கிரீன் சிக்னல் காட்டியது ஏஆர் முருகதாஸ்க்கு தான். சிவகார்த்திகேயனின் SK23 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இப்போது சல்மான் கானின் சிக்கந்தர் படத்திற்கான வேலையிலும் இறங்கி உள்ளார்.

மேலும் சல்மான் கானின் கால்ஷுட் கையில் இருக்கிறது என கெத்தாக சுற்றிய விஷ்ணுவர்தன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருக்கிறாராம். இப்போது தமிழ் நடிகர்கள் படத்தில் நடிக்க பெரிதாக யாரும் முன் வரவில்லை.கடைசியாக பாலிவுட்டிலேயே வேறு யாராவது நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post அஜித்துக்கு நோ சொல்லி டாட்டா காட்டிய இயக்குனர்… வச்சு செய்த பாலிவுட்… appeared first on Touring Talkies.

]]>
தயார் நிலையில் அஜித்! வேகமெடுக்குமா விடா முயற்சி? காத்திருப்பில் ஆதிக்… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95/ Tue, 23 Apr 2024 10:05:13 +0000 https://touringtalkies.co/?p=41194 நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்தின் குட் பேட் அக்லி என்ற அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதத்தால் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது.எப்படியாவது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்க மும்முரமாக உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். கடைசியாக அஜித் நடித்த துணிவு படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி […]

The post தயார் நிலையில் அஜித்! வேகமெடுக்குமா விடா முயற்சி? காத்திருப்பில் ஆதிக்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்தின் குட் பேட் அக்லி என்ற அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதத்தால் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது.எப்படியாவது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்க மும்முரமாக உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

கடைசியாக அஜித் நடித்த துணிவு படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. அதோடு அந்த படத்தின் படப்பிடிப்பு பற்றிய எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.இந்தநிலையில் தற்போது வரும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி பற்றிய அப்டேட் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டின் இறுதியில்தான் அஜர்பைஜானில் துவங்கப்பட்ட இந்த சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த சூழலில் காலநிலை மாற்றத்தால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

அதேபோல் மற்ற படப்பிடிப்பு லொகேஷன்களில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டது. ஆனால் அசர்பைஜானில் மீண்டும் சூட்டிங்கிற்கான இயற்கை சூழல் சிறப்பாக உள்ளதால் மீண்டும் அங்கேயே அடுத்தக்கட்ட சூட்டிங்கை விரைவில் நடத்த இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.வரும் மே மாதம் முதல் வாரத்தில் விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தின் மீதி படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது தயாராகவுள்ளதாகவும் இரு வாரங்களுக்குள் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடிக்க மகிழ் திருமேனி திட்டமிட்டு இருக்கிறார்.தற்போது லேட்டஸ்டாக அஜித் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

The post தயார் நிலையில் அஜித்! வேகமெடுக்குமா விடா முயற்சி? காத்திருப்பில் ஆதிக்… appeared first on Touring Talkies.

]]>
மே ஒன்றாம் தேதியும் மூன்று அப்டேட்களும்! தவமாய் தவமிருக்கும் அஜித் ரசிகர்கள்! https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%87-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/ Mon, 22 Apr 2024 10:55:05 +0000 https://touringtalkies.co/?p=41137 உழைப்பாளர்கள் தினத்தன்று பிறந்த நடிகர் அஜித் மிகச்சிறந்த உழைப்பாளர்.மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினமாக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அன்று தல தினம் தான். நள்ளிரவு 12 மணி முதலே சமூக ஊடகங்களின் ட்ரெண்ட்-ஐ தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து பிறந்தாள் வாழ்த்துக்களின் மூலம் அவர்களது அன்பை தெறிக்கவிடுவார்கள். அஜித் ரசிகர்கள். கடந்த வருடம் அஜித் பிறந்தாள் அன்று மகிழ் திருமேனி இயக்ககத்தில் அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியாகி விருந்தாக அமைந்தது.அத்தோட அப்படத்தின் எந்தவொரு […]

The post மே ஒன்றாம் தேதியும் மூன்று அப்டேட்களும்! தவமாய் தவமிருக்கும் அஜித் ரசிகர்கள்! appeared first on Touring Talkies.

]]>
உழைப்பாளர்கள் தினத்தன்று பிறந்த நடிகர் அஜித் மிகச்சிறந்த உழைப்பாளர்.மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினமாக இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அன்று தல தினம் தான். நள்ளிரவு 12 மணி முதலே சமூக ஊடகங்களின் ட்ரெண்ட்-ஐ தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து பிறந்தாள் வாழ்த்துக்களின் மூலம் அவர்களது அன்பை தெறிக்கவிடுவார்கள். அஜித் ரசிகர்கள்.

கடந்த வருடம் அஜித் பிறந்தாள் அன்று மகிழ் திருமேனி இயக்ககத்தில் அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியாகி விருந்தாக அமைந்தது.அத்தோட அப்படத்தின் எந்தவொரு அறிவிப்பும் தற்போது வரை வராத நிலையில் வருகின்ற மே 1ம் தேதி அவரின் பிறந்தாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் மட்டுமின்றி மேலும் இரண்டு சம்பவங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இப்படத்தின் 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் மீதி காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம் விரைவில் உருவாக உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் 2024 இல் பொங்கல் பண்டிகையை குதூகலப்படுத்த திரைக்கு வரவுள்ளது.

மேலும் இப்போது விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸாகி தியேட்டரில் வசூல் வேட்டை நடத்தி கொண்டு இருக்கிறது அதற்கு போட்டியாக வெங்கட் பிரபு மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான மங்காத்தா படம் மே 1ம் தேதி ரீ ரிலீசாக உள்ளது.இப்படி அப்டேட்கள் கொண்டாட்டங்களாக மே 1ம் தேதி நிறைய உள்ளதை எண்ணி காத்துகிடக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

The post மே ஒன்றாம் தேதியும் மூன்று அப்டேட்களும்! தவமாய் தவமிருக்கும் அஜித் ரசிகர்கள்! appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி பைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-4/ Sat, 06 Apr 2024 06:17:32 +0000 https://touringtalkies.co/?p=40769 ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக […]

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>

விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

  • ஜோடியாய் ஜிம்-ல் கலக்கும் சூரியா மற்றும் ஜோதிகா!

ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

  • காதலர் தினம் படத்தில் நடிக்க வேண்டியது இவரா?

இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தவர் குணால் கிடையாதாம் ஷாம் தானாம்.ஹீரோவாக நடிக்க ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்டாராம் ஆனால், ஸ்க்ரீன் டெஸ்ட் முடிந்தவுடன் இப்படத்திற்கு ஷாம் செட் ஆகமாட்டார் என இயக்குனர் கதிர் கூறிவிட்டார் என நடிகர் ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

  • விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் விடாமுயற்சி படிப்பிடிப்பின் போது அஜித் கார் ஓட்டி சென்று ஏற்பட்ட விபத்து வீடியோக்களை சில தினங்களுக்கு முன் வலைதளத்தில் வெளியிட்டார் சுரேஷ் சந்திரா.இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் பதறிவிட்டனர்.இந்த விபத்து நடந்த உடன் அஜித் மற்றும் ஆரவ் மருத்துவ பரிசோதனை செய்து காயம் இல்லை என்றவுடன் விபத்து நடந்த மூன்று மணிநேரத்திற்குள் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்கள் என்றுள்ளார்.

  • இனி நான் குண்டு இல்ல… ஃபிட்…. ஆர்த்தி

நகைச்சுவை ரோலின் மூலம் தனக்கென தனி பெயரை சம்பாதித்த நடிகை ஆர்த்தி படு குண்டாக காணப்பட்ட நிலையில் தற்போது கடுமையான டயட்ம் மற்றும் ஃபிட்னஸ்-ல் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இது வெளிப்படுத்தும் விதமாக அவர் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் நல்ல மாற்றம் இது வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வாழ்த்தி வருகிறார்கள்.

  • விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 250 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. அப்படி விஜய்க்கு ரூ. 250 கோடி கிடைத்தால் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள விஜய் அந்த தேர்தலுக்கான வேலைகளுக்கு தளபதி 69 பட சம்பள பணத்தை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
அஜித்தின் ‘விடா முயற்சி’ எப்போது திரைக்கு வரும்? https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e/ Wed, 27 Mar 2024 10:56:20 +0000 https://touringtalkies.co/?p=40338 லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் பல நாட்கள் நடந்தது. வெளிநாடு என்பதாலும், அதிக நாட்கள் படப்பிடிப்பு என்பதாலும் பட்ஜெட் அதிகமானதால் படக்குழு ஒரு கட்டத்தில் சென்னை திரும்பியது. மறுபடியும் எப்போது படப்பிடிப்பு என்பதை அஜித்குமாருக்கு தெரிவிக்கவில்லை. இதனால், அஜித்குமார் பைக் டூர் சென்றார். […]

The post அஜித்தின் ‘விடா முயற்சி’ எப்போது திரைக்கு வரும்? appeared first on Touring Talkies.

]]>
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம், ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் பல நாட்கள் நடந்தது. வெளிநாடு என்பதாலும், அதிக நாட்கள் படப்பிடிப்பு என்பதாலும் பட்ஜெட் அதிகமானதால் படக்குழு ஒரு கட்டத்தில் சென்னை திரும்பியது. மறுபடியும் எப்போது படப்பிடிப்பு என்பதை அஜித்குமாருக்கு தெரிவிக்கவில்லை. இதனால், அஜித்குமார் பைக் டூர் சென்றார்.

‘விடாமுயற்சி’ படத்தின் எடுத்த காட்சிகள் வரை எடிட் செய்து போட்டு பார்த்த இயக்குனர் மகிழ் திருமேனி இன்னும் இருபத்தி ஏழு நாட்கள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்க வேண்டும் என்பதை தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் அஜித்துக்கு தெரிவிக்கப்பட்டதும் படப்பிடிப்பிற்கு தேதி கொடுத்த அஜித், வெளிநாடு செல்லும் முன் உடல் பரிசோதனைக்கு சென்றார். அப்போது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் சின்ன பிரச்சினை இருந்ததால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அஜித்குமார் அறுவை சிகிச்சைக்கு தயாரானார். இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. உடல்நிலை தேறி வந்ததும் கடந்த வாரம் அஜித்குமார் அஜர்பைஜான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

பதினைந்து நாட்கள் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து அவரது காட்சிகளை முடித்துக் கொடுக்கும் அஜித், சென்னை திரும்பியதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘குட் பேட் அக்லி’ படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் அந்தப் படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த ஆண்டில் அஜித்குமார் நடிக்கும் இரண்டு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அஜித்தின் ‘விடா முயற்சி’ எப்போது திரைக்கு வரும்? appeared first on Touring Talkies.

]]>