Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
aha ott – Touring Talkies https://touringtalkies.co Fri, 18 Nov 2022 17:12:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png aha ott – Touring Talkies https://touringtalkies.co 32 32 பேட்டைக்காளி – வெப் சீரீஸ் – விமர்சனம் https://touringtalkies.co/pettaikkaali-web-series-review/ Fri, 18 Nov 2022 17:11:35 +0000 https://touringtalkies.co/?p=27262 ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத் தொடர் என்ற பெருமையை இந்தப் ’பேட்டைக்காளி’ பெற்றுள்ளது. ’மேற்கு தொடர்சி மலை’ அந்தோணி இந்த இணையத் தொடரில் கதாநாயகனாக, தன்னுடைய திறமையான நடிப்பை இதில் கொடுத்துள்ளார். ஷீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், கிஷோர், வேலா ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குநர் La. ராஜ்குமார் இந்த நிகழ்ச்சியை நடத்துபவராகவும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் வழி நடத்துபவராகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். […]

The post பேட்டைக்காளி – வெப் சீரீஸ் – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத் தொடர் என்ற பெருமையை இந்தப் ’பேட்டைக்காளி’ பெற்றுள்ளது.

’மேற்கு தொடர்சி மலை’ அந்தோணி இந்த இணையத் தொடரில் கதாநாயகனாக, தன்னுடைய திறமையான நடிப்பை இதில் கொடுத்துள்ளார். ஷீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், கிஷோர், வேலா ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் La. ராஜ்குமார் இந்த நிகழ்ச்சியை நடத்துபவராகவும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் வழி நடத்துபவராகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். ஆஹா ஓடிடி தளத்தில் இந்த இணையத் தொடர் வெளியாகியுள்ளது.

காளைகளை அடக்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் பலவற்றை இந்தப் ‘பேட்டைக்காளி’ காண்பிக்கிறது.

ஜல்லிக்கட்டும் தமிழர்கள் வாழ்வும் பிரிக்க முடியாத ஒன்று. அதைத் தரமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால் அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம்.

ஜல்லிக்கட்டு கதை என்றால் அது மதுரையைச் சுற்றிதானே நடக்கும். இந்தக் கதையும் மதுரையைக் களமாக கொண்டதுதான். சீரிஸின் முதல் எபிசோடில் நடிகர் கிஷோர் நிறைய மாடுகளை தன்னகப்படுத்துகிறார். மேலும் பலி தீர்க்கும் பொருட்டு ஒரு கொலையும் செய்கிறார். அவரது பாயிண்ட் ஆப் வீவ்யூவில் கதை துவங்குகிறது.

அதன்படி கிஷோரின் அக்கா மகனான கலையரசன் மாடுபிடி வீரன். அவரின் பெரும் லட்சியமே எல்லா மாடுகளையும் அடக்க வேண்டும் என்பதுதான். தாய் மாமன் மகள் மீது காதலோடும், ஜல்லிக்கட்டு போட்டிகளோடு வாழ்வு எனவும் சுற்றித் திரிகிறார்.

பக்கத்து ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி பெருஞ்சேர்மன். அவரது சுயநல விருப்பத்தால் ஒரு இளம் பெண்ணை மனைவியாக்கி கொண்டுள்ள அவர், ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவரது மாடு களம் இறங்கும் போது  கலையரசன் ஊரைச் சேர்ந்தவர்கள் களத்தில் இறங்க கூடாது என்பதை விதியாக வைத்திருக்கிறார்.

வேல ராமமூர்த்தி தன்னைவிடவும் தன் மகன்கூட பெயர் வாங்கி விடக்கூடாது என்று நினைப்பவர். அதனால் அவரது மகனுக்கு, அப்பா மீது வெறுப்பும் விரோதமும் வளர்கிறது. கலையரசன் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வேல ராமமூர்த்தி காளையை அடக்கும்படி தூண்டப்படுகிறார். அதனால் பெரும் விபரீதம் நடைபெறுகிறது.

மேலும் ஆற்று நீரில் தானாக ஒரு கன்று வந்து ஷீலாவின் கைகளுக்குள் வருகிறது. அந்தக் கன்றுக்கு ‘பேட்டக்காளி’ என்று பெயர் வைக்கிறார்கள். அந்தக் கன்று ஜல்லிக்கட்டு காளையாக வளர்க்கப்படுகிறது.

இந்தப் பேட்டக்காளி எப்படி முன் நடந்த சம்பவங்களோடு லிங் ஆகிறான்? வேல ராமமூர்த்தி, கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தியின் மகன், ஷீலா, வேல ராமமூர்த்தியின் இளம் மனைவி ஆகியோரின் பங்களிப்பு என்னென்ன என்பதே இந்த பேட்டைக்காளியின் அடுத்தடுத்த எபிசோட்கள் சொல்லவிருக்கும் கதை.

துடிப்பும், துள்ளலுமாக என வீறு நடை போட்டு நடித்துள்ளார் கலையரசன். வெள்ளந்தி மனிதனாகவும், வீரனாகவும், பாசக்காரனாகவும் அவர் காட்டியிருக்கும் பெர்பாமன்ஸ் ரசிக்க வைக்கிறது.

பொறுப்புள்ள தாய் மாமனாகவும், ஆவேசமிக்க சுயமரியாதைக்காரனாகவும் ரொம்பவே ஈர்க்கிறார் கிஷோர். படத்தின் கதையாழத்தை தன் நடிப்பாலே நமக்கு உணர்த்துகிறார் கிஷோர்.

வேல ராமமூர்த்தியின் வில்லத்தனம் ஒரு சில இடங்களில் செயற்கையாக தெரிந்தாலும் பல இடங்களில் நன்றாகவே எடுபட்டுள்ளது. அவரின் இளம் மனைவியாக வருபவரும் நல்ல நடிப்பு. வேல ராமமூர்த்தியின் மகன் கேரக்டர் நச் என வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார். ஷீலா மூன்றாம் எபிசோடில் அறிமுகம் ஆனாலும் மனதில் பதிந்து போகிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் காட்டப்படும் கேமரா கோணங்கள் எல்லாமே அபாரம். குறிப்பாக ‘பேட்டக்காளி’ காளையை அறிமுகம் செய்யும் காட்சியில் கேமராமேன் பம்பரமாகச் சுழன்றிருக்கிறார்.

இசை அமைப்பாளர் பின்னணி இசையில் பல இடங்களில் மாஸ் கூட்டியிருக்கிறார். காளை அடக்கும் காட்சிகளில் நல்ல அதிர்விசையை அடித்து உற்சாகம் காட்டுகிறார். சீரிஸ் என்பதால் படத் தொகுப்பாளர் சுதந்திரமாக செயல்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு எல்லா வீரர்களுக்கும் பொதுவான விளையாட்டு என்ற பொதுப் பார்வை தவறு, வீரத்தை நிரூபிப்பதிலும் ஜாதி பாகுபாடு இருக்கிறது என்பதை இயக்குநர் பொட்டில் அடித்தாற்போல் புரிய வைத்துள்ளார்.

பல இடங்களில் பட்ஜெட் குறைபாடுகள் தெரிகின்றன. முதல் இரண்டு எபிசோடுகள் நம்மை முழுமையாக கதைக்குள் இழுக்கவில்லை. ஆனால், நாமறியாத நமது கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் இப்படியான படைப்புகள் அவசியம்.

இதுவரை நான்கு எபிசோட்கள் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. விரைவில் அடுத்தடுத்த எபிசோட்ஸ் வரவிருக்கின்றன.

பார்க்கலாம்தான்..!

The post பேட்டைக்காளி – வெப் சீரீஸ் – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு விளையாட்டின் உண்மைக் கதையைச் சொல்லும் ‘பேட்டைக்காளி’ வெளியானது https://touringtalkies.co/pettai%e0%ae%95kali-which-tells-the-true-story-of-jallikattu-game-was-released/ Tue, 25 Oct 2022 09:08:18 +0000 https://touringtalkies.co/?p=26006 ‘ஆஹா’ தமிழ் OTT தளத்தின் பிரம்மாண்டமான படைப்பான ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர், மாணவியர் முன்னிலையில் நடந்தது. இதன் டிரெயிலர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் டைட்டில் பாடல் பார்வையாளர்கள் மத்தியில் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் ‘பேட்டைக்காளி’யின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், […]

The post ஜல்லிக்கட்டு விளையாட்டின் உண்மைக் கதையைச் சொல்லும் ‘பேட்டைக்காளி’ வெளியானது appeared first on Touring Talkies.

]]>
ஆஹா’ தமிழ் OTT தளத்தின் பிரம்மாண்டமான படைப்பான ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர், மாணவியர் முன்னிலையில் நடந்தது.

இதன் டிரெயிலர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் டைட்டில் பாடல் பார்வையாளர்கள் மத்தியில் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் ‘பேட்டைக்காளி’யின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், ‘பேட்டைக்காளி’யின் உலகத்திற்குள்ளே பார்வையாளர்களை அழைத்து செல்லும் விதமாக ஃப்ர்ஸ்ட் க்ளிம்ப்ஸ்ஸூம் அங்கு திரையிடப்பட்டது.

இந்தப் பேட்டைக்காளி’ இணையத் தொடர் ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி முதல் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோட் வெளியாக உள்ளது. இனி வரும் வாரங்களில் வெளியாகும் எபிசோட்கள் அனைத்தும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்ததாக அமையும்.

ஆஹா’ தமிழ் OTT தளத்தின் உறுதிப்படி 100% தமிழ் கண்டெண்ட் என்ற வகையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை இந்த முறையில் கையில் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் வெப் சீரிஸ் இதுவாகும்.

இந்தப் ‘பேட்டைக்காளி’ உலகம் காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் வரலாற்றுப் பிரிவு போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது.

வளர்ப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பும் முக்கிய உணர்ச்சிகளாக ’பேட்டைக்காளி’யில் இருப்பதால், ஜல்லிக்கட்டு விளையாட்டுக் குறித்தான அனுபவத்தை நிச்சயம் பார்வையாளர்களுத் தரும்.

நடிகர்கள் கலையரசன், கிஷோர், வேலன் ராமமூர்த்தி, ஷீலா மற்றும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி ஆகியோரின் திறமையான நடிப்பு முன்னோட்டக் காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

La. ராஜ்குமார் இயக்க, தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு வேல்ராஜ் மற்றும் சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் இயக்குநர் ராஜ்குமார், “ஆரம்ப காலத்தில் மனிதர்கள் காடுகளில் சுற்றித் திரிந்தனர். காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் விவசாயம் மற்றும் வளர்ப்பு பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர்.

எனவே, காளைகள் மக்களின் வாழ்வில் வந்த பிறகுதான் கலாச்சாரத்தின் வருகை ஏற்பட்டது. முற்கால மனிதர்கள் காளைகளை அடக்கியவிதம் இன்றும் விளையாட்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில் மட்டும்தான் நடக்கிறது.

நமது கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் சொல்லப்படாத கதைகளை ஆராய்வதற்காகவும் இந்த இணையத் தொடரை உருவாக்கி உள்ளோம்” என்றார்.

The post ஜல்லிக்கட்டு விளையாட்டின் உண்மைக் கதையைச் சொல்லும் ‘பேட்டைக்காளி’ வெளியானது appeared first on Touring Talkies.

]]>
ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியான ‘பேட்டைக்காளி’யின் டிரெயிலர்..! https://touringtalkies.co/the-trailer-of-pettaikali-released-with-jallikattu/ Wed, 12 Oct 2022 07:25:44 +0000 https://touringtalkies.co/?p=25283 ‘ஆஹா’ ஓடிடி தளத்தின் புதிய படைப்பான ’பேட்டைக்காளி’யின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த டிரெயிலர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. ‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 […]

The post ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியான ‘பேட்டைக்காளி’யின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.

]]>
‘ஆஹா’ ஓடிடி தளத்தின் புதிய படைப்பான ’பேட்டைக்காளி’யின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த டிரெயிலர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது.

‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு இது சென்னையில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா’ தளம் முன்பே சொன்னது போல, 100% தமிழ் கண்டெண்ட் என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதற்கான உண்மையான ஒரு நிகழ்வுதான் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டோடு இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது.

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத் தொடர் என்ற பெருமையை இந்தப் ’பேட்டைக்காளி’ பெற்றுள்ளது.

’மேற்கு தொடர்சி மலை’ அந்தோணி இந்த இணையத் தொடரில் கதாநாயகனாக, தன்னுடைய திறமையான நடிப்பை இதில் கொடுத்துள்ளார். ஷீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், கிஷோர், வேலா ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் La. ராஜ்குமார் இந்த நிகழ்ச்சியை நடத்துபவராகவும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் வழி நடத்துபவராகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

காளைகளை அடக்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் பலவற்றை இந்தப் ‘பேட்டைக்காளி’ காண்பிக்க இருக்கிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால் அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம்.

இதை இந்தப் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடர் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வின் இயக்குநரான La. ராஜ்குமார் ‘பேட்டைக்காளி’ உருவாக்கம் குறித்து பகிர்ந்து கொண்டார், “முன்பெல்லாம் மனிதர்கள் காடுகளில் அலைந்து திரிந்தனர். அதன் பிறகு காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் அவர்கள் விவசாயத்தையும், காளைகள் வளர்ப்பது குறித்தும் கற்றுக் கொண்டனர்.

எனவே, காளைகள் வந்த பிறகுதான் மனிதர்களின் வாழ்வில் கலாச்சாரம் மெல்ல வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் மனிதர்கள் காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது.

நம்முடைய கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

இந்தப் ’பேட்டைக்காளி’ நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

The post ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியான ‘பேட்டைக்காளி’யின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் வழங்கும் பேட்டைக்காளி வெப் சீரீஸ் https://touringtalkies.co/pettaikkaali-web-series-news/ Sun, 02 Oct 2022 11:12:58 +0000 https://touringtalkies.co/?p=24768 ஆஹா தமிழ் ஓடிடி தளத்துடன்  இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜல்லிக்கட்டு’ உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான ‘பேட்டைக்காளி’, ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது. சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான […]

The post வெற்றிமாறன் வழங்கும் பேட்டைக்காளி வெப் சீரீஸ் appeared first on Touring Talkies.

]]>
ஆஹா தமிழ் ஓடிடி தளத்துடன்  இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜல்லிக்கட்டு’ உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான ‘பேட்டைக்காளி’, ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது.

சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான  வெற்றிமாறன் படைப்பாக வரும் இந்த இணைய தொடரில் மக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு ஜல்லிக்கட்டு உலகத்தை பார்ப்பார்கள்.

ஏற்கனவே ‘பேட்டைக்காளி’ என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே ‘யாரந்த பேட்டைக்காளி’ என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது.

இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்ற தொழில் நுட்பக் குழுவை கொண்டது.

இயக்குநர் வெற்றி மாறன் இதன் ஷோ-ரன்னராக இருந்தாலும் ‘பேட்டைக்காளி’ படத்தை வெற்றி மாறனின் நீண்ட கால உதவி இயக்குநரான ராஜ்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

The post வெற்றிமாறன் வழங்கும் பேட்டைக்காளி வெப் சீரீஸ் appeared first on Touring Talkies.

]]>
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதை ஓடிடிக்காக படமாகிறது..! https://touringtalkies.co/writer-jayamohans-short-story-kaithigal-is-being-filmed-for-ott/ Wed, 07 Sep 2022 16:38:39 +0000 https://touringtalkies.co/?p=24386 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் திரு.அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ‘ஆஹா தமிழும்’  இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள்.  இத்திரைப்படத்தை டர்மெரிக் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திருமதி.அனிதா மகேந்திரன் தயாரிக்கிறார். ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் புகழ் பெற்ற, மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண் கடல்’ சிறுகதைத் […]

The post எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதை ஓடிடிக்காக படமாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் திரு.அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ‘ஆஹா தமிழும்’  இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள். 

இத்திரைப்படத்தை டர்மெரிக் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திருமதி.அனிதா மகேந்திரன் தயாரிக்கிறார். ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படம் புகழ் பெற்ற, மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண் கடல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது.

சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும், ரசனைக்கும் ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக ஜெயமோகன் அவர்களின் மூலக் கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இது குறித்து ஆஹா ஓடிடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அஜித் தாக்கூர் பேசும்போது, “மிக நேர்த்தியான கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள்,  உறுதியாக பார்வையாளர்களின் உள்ளத்தை  சென்றடையும், இக்கோட்பாட்டை உண்மையாக்கும் வகையில் செயல்பட்டுவரும் 

தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா  உடன் கரம் கோர்ப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,  மேலும் சிறப்புமிக்க தனித்தன்மை வாய்ந்த திரைப்படங்கள் தயாரிப்பதை  தங்கள் பாணியாக கொண்ட டர்மெரிக் மீடியாவும் நாங்களும் சேர்ந்தது, தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளரான திரு. ஜெயமோகன் அவர்களுடைய படைப்பை தழுவிய திரைப்படத்தை, எங்களது ஆஹா ஓடிடி ஒரிஜினலில் வெளியிட நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இத்திரைப்படம்  ஆஹா ஒடிடி நேயர்களுக்கு ஒரு மிக தரமான படமாக அமையும்  என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

தயாரிப்பாளர் திருமதி. அனிதா மகேந்திரன் பேசும்போது, “அனைத்து தரப்பு மக்களை மகிழ்விக்கும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள்,வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களை வழங்கும் ஆஹா தமிழ்  ஓடிடி, 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு  முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது.

அந்நிறுவனத்தின் அமைப்பாளரும் தெலுங்கு திரைப்படத்துறை மூத்த தயாரிப்பாளருமான திரு.அல்லு அரவிந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

டர்மெரிக் மீடியா படைப்பூக்கத்தை தரமான, வெற்றிகரமான திரைப்படமாக மாற்ற முடியுமென்பதில் சமரசமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்தப் படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் படமாக அமையுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.

The post எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதை ஓடிடிக்காக படமாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
“ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தால் எல்லா பேய்களையும் பார்க்கலாம்” – எஸ்.ஜே.சூர்யா பேச்சு https://touringtalkies.co/s-j-suriya-speech-in-web-series-function/ Thu, 23 Jun 2022 16:56:27 +0000 https://touringtalkies.co/?p=22816 தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து,  தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல்  இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ்  இத்தொடரை தயாரித்துள்ளது. வரும் ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள […]

The post “ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தால் எல்லா பேய்களையும் பார்க்கலாம்” – எஸ்.ஜே.சூர்யா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து,  தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம்.

ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல்  இணைய தொடர்.

இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ்  இத்தொடரை தயாரித்துள்ளது.

வரும் ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு படக் குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் S.J.சூர்யா பேசும்போது, “அல்லு அரவிந்தின் வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான நபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்தது எனக்கு பெருமையான விஷயம்.

ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா  இருவரும் இந்த தொடருக்கு பொருத்தமான தேர்வு, இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது. எழுத்தாளரை தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி “பேயை பார்க்க ஆசை…” என்றார். ஒரு தோல்வி படத்தைக் கொடுத்துப் பாருங்க.. எல்லா பேயையும் பார்த்து விடலாம். ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத் தரும். ‘பாகுபலி’ போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. பெரும் திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடர் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

The post “ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தால் எல்லா பேய்களையும் பார்க்கலாம்” – எஸ்.ஜே.சூர்யா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
குடிக்கு அடிமையான போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்தியிருக்கும் அமலா பால்..! https://touringtalkies.co/amala-paul-in-the-role-of-a-police-officer-addicted-to-alcohol/ Mon, 19 Jul 2021 11:18:07 +0000 https://touringtalkies.co/?p=16338 இளம் கனவு நாயகி எனும் பதத்தை உடைத்து, சவால்மிக்க கதாப்பாத்திரங்களில், முதிர்ச்சியான நடிப்பால் மிளிர்ந்து வருகிறார் நடிகை அமலா பால். பெண் கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும், சவால் மிகுந்த படைப்புகளை தேடி, தேடி, நடித்து வருகிறார் அமலா பால். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘பிட்ட கதலு’ தெலுங்கு இணைய தொடர் பெரும் பாராட்டுக்களை குவித்தது. தற்போது பிரபல  கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் வடிவில் உருவாகியிருக்கும் ‘Kudi Yedamaithe’ தெலுங்கு இணைய […]

The post குடிக்கு அடிமையான போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்தியிருக்கும் அமலா பால்..! appeared first on Touring Talkies.

]]>
இளம் கனவு நாயகி எனும் பதத்தை உடைத்து, சவால்மிக்க கதாப்பாத்திரங்களில், முதிர்ச்சியான நடிப்பால் மிளிர்ந்து வருகிறார் நடிகை அமலா பால்.

பெண் கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும், சவால் மிகுந்த படைப்புகளை தேடி, தேடி, நடித்து வருகிறார் அமலா பால்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பிட்ட கதலு’ தெலுங்கு இணைய தொடர் பெரும் பாராட்டுக்களை குவித்தது.

தற்போது பிரபல  கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் வடிவில் உருவாகியிருக்கும் ‘Kudi Yedamaithe’ தெலுங்கு இணைய தொடரில், குடிக்கு அடிமையான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக, நடிப்பில் கலக்கியுள்ளார் அமலா பால்.

இந்த இணைய தொடர் 2021 ஜூலை 16 Aha தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் அமாலா பாலின் கதாபாத்திரம்  ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

ந்தத் தொடரில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் பேசும்போது, “நான் திரைத் துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் ஓய்வே இல்லாமல், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறேன்.

நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். எனது தனிவாழ்வில் நிறைய பிரச்சனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். சினிமா எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் இருப்பது மகிழ்ச்சியே. இனி எனக்கு சவால் தரும் பாத்திரங்களிலும், மிக நல்ல படைப்புகளிலும் நடிக்கவே விரும்புகிறேன்.

தற்போது என்னை நானே புதிப்பித்து கொண்டிருக்கிறேன். எனது நடிப்பிற்காக, தனித்த முறையில்  பாராட்டுக்கள்  கிடைத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மிகுந்த கவனத்துடன் தான், நான் நடிக்கும் படைப்புகளை தேர்வு செய்து வருகிறேன். இப்போது நிறைய நல்ல வாய்ப்புகள் என்னை தேடி வந்து கொண்டிருக்கிறது.

பிட்ட கதலு’ தொடர் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் இயக்குநர் நந்தினி மூலம்தான், இயக்குநர்  பவன் குமார் அறிமுகமும், இந்த வாய்ப்பும் கிடைத்தது. “சிக்கலில் சிக்கிக் கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரி என்பதையும் தாண்டி, இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது..?” எனக் கேட்டேன்,  

இந்த துர்கா எனும் காவல் அதிகாரி பாத்திரம், குடிக்கு அடிமையாகி மீளத் துடிக்கும் பாத்திரம். அது எனக்கு இன்னும் சுவாரஸ்யமாக, சவால்கள் நிறைந்ததாக இருந்தது.

பவன் குமார் மிகச் சிறந்த படைப்பாளி. அவரின் எழுத்தும் அதை அவர் திரைக்கு மாற்றும் வித்தையும் அபாரமானதாக இருக்கிறது. முடிந்தவரை அனைத்தும் இயல்பாக, தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ரசிகர்களை வசப்படுத்தும் வித்தை அவருக்கு தெரிந்து இருக்கிறது.

இந்தத் தொடரில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கிறது. இது டைம் லூப் சயின்ஸ் பிக்சன்,  ரசிகர்களுக்கு ஒரு புதிதான அனுபவமாக இருக்கும். இதுவரையிலும் இந்த் தொடரை பார்த்த ரசிகர்கள் என் கதாப்பத்திரத்தை கொண்டாடி வருவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி.

தற்போது  பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிப்பில், பாலிவுட் 1970 என்ற காதல் கதையில் நடித்திருக்கிறேன். அந்த தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.

மேலும், எனது சொந்த தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் Cadaver’ திரைப்படமும் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இனி என்னை, நிறைய புதுமையான பாத்திரங்களில் ரசிகர்களால் பார்க்க முடியும்…” என்றார்.

The post குடிக்கு அடிமையான போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்தியிருக்கும் அமலா பால்..! appeared first on Touring Talkies.

]]>