Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor vidharth – Touring Talkies https://touringtalkies.co Tue, 30 Mar 2021 09:16:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor vidharth – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகர் விதார்த் நடிக்கும் 25-வது திரைப்படம் ‘கார்பன்’ https://touringtalkies.co/actor-vidharth-25th-movie-carbon/ Tue, 30 Mar 2021 09:14:36 +0000 https://touringtalkies.co/?p=14005 நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் 25-வது படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை Benchmark Films சார்பில் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன் மற்றும் சீனிவாசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘கார்பன்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, ‘மூணார்’ ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், பிச்சைக்காரன் மூர்த்தி, டவுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல […]

The post நடிகர் விதார்த் நடிக்கும் 25-வது திரைப்படம் ‘கார்பன்’ appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் 25-வது படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை Benchmark Films சார்பில் தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் ஜோதி முருகன் மற்றும் சீனிவாசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘கார்பன்’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, ‘மூணார்’ ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், பிச்சைக்காரன் மூர்த்தி, டவுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – விவேக் ஆனந்த், கலை இயக்கம் – ஜெயச்சந்திரன் B.F.A., படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – சாம்.சி.எஸ்., சண்டை இயக்கம் – கனல் கண்ணன், எழுத்து, இயக்கம் – சீனிவாசன்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சீனிவாசன் பேசும்போது, “ஒரு புதுமையான களத்தில் வித்தியாசமான திரில்லர் டைப்பில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை 6 இரவுகள் மற்றும் 7 பகல் பொழுதுகளில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குப்பை தொட்டி, குப்பை பொருட்கள், குப்பை லாரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

படத்தில் விதார்த் ஏற்றிருக்கும் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப் பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால்… படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென்பதால் இத்தலைப்பே வைக்கப்பட்டுள்ளது..” என்றார்.

படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது.

The post நடிகர் விதார்த் நடிக்கும் 25-வது திரைப்படம் ‘கார்பன்’ appeared first on Touring Talkies.

]]>
கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் https://touringtalkies.co/endraavathu-oru-naal-movie-news/ Fri, 20 Nov 2020 03:29:00 +0000 https://touringtalkies.co/?p=10194 சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும்விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து உருவாகியிருக்கிறது ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம். ‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். […]

The post கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன.

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும்விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து உருவாகியிருக்கிறது என்றாவது ஒரு நாள்’ திரைப்படம்.

‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் தங்களுடைய முதல் படி என்று நம்புகிறார்கள்.

யதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த், இதில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான, தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ‘சேதுபதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளை கொண்ட ராகவன் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முகசுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், படத் தொகுப்பாளராக காசி விஸ்வநாதனும் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இந்தப் படத்துக்கு திறம்பட கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் வெற்றி துரைசாமி, முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் யாரிடமும் இதுவரையிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சில குறும் படங்களை இயக்கிய அனுபவம் மட்டுமே கொண்டவர்.

பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

கிராமப்புற மக்களின் எளிய வாழ்க்கை முறைகளைப் பற்றியும், கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றியும் பேசுகிறது இத்திரைப்படம்.

மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலக மயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் படத்தின் இயக்குநர்.

கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணலாம். அங்குள்ள வட்டார மொழியை அனைத்து நடிகர்களும் தப்பில்லாமல் பேசி நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>