Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor udhayanidhi stalin – Touring Talkies https://touringtalkies.co Fri, 06 Nov 2020 07:20:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor udhayanidhi stalin – Touring Talkies https://touringtalkies.co 32 32 மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிக்கும் புதிய படம் https://touringtalkies.co/udhayanidhi-stalin-maghiz-thirumeni-movie-news/ Fri, 06 Nov 2020 07:19:46 +0000 https://touringtalkies.co/?p=9749 பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கின்றது. இந்தப் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். நிதி அகர்வால் நாயகியாக நடிக்கிறார். ‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. தயாரிப்பு – […]

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தை பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கின்றது.

இந்தப் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். நிதி அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.

தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ், இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை, இயக்கம் – மகிழ் திருமேனி, இசை – அரோல் கரோலி, ஒளிப்பதிவு – K.தில்ராஜ், கலை – T.ராமலிங்கம், படத் தொகுப்பு – ்ரீகாந்த் NB, பாடல்கள் – மதன் கார்க்கி, தயாரிப்பு நிர்வாகம் – E.ஆறுமுகம், விநியோக நிர்வாகம் – ராஜா.C, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளரும், நாயகனுமான உதயநிதி ஸ்டாலின், நாயகி நிதி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பல தொழில் நுட்பக் கலைஞர்களும் பங்கு கொண்டனர்.

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! https://touringtalkies.co/udhayanidhi-stalin-maghia-thirumeni-combo-movie-will-starts-on-november-4/ Thu, 29 Oct 2020 10:16:31 +0000 https://touringtalkies.co/?p=9419 பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையிலும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் பின்பு கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும், மு.மாறனின் இயக்கத்தில் ‘ஏஞ்செல்’ படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்கிடையில் மூன்றாவதாக இப்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ‘முன் தினம் பார்த்தனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, […]

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
பரபரப்பான அரசியல் வேலைகளுக்கிடையிலும் ஷூட்டிங்கிற்குக் கிளம்பிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

இதுவரையிலும் 12 திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதியின் கடைசி திரைப்படம் ‘சைக்கோ’. மிஷ்கின் இயக்கிய இத்திரைப்படம் படைப்பு ரீதியாக பெரிய அளவில் பேசப்பட்டது.

இதன் பின்பு கே.எஸ்.அதியமானின் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும், மு.மாறனின் இயக்கத்தில் ‘ஏஞ்செல்’ படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இதற்கிடையில் மூன்றாவதாக இப்போது இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

‘முன் தினம் பார்த்தனே’, ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் 5-வது திரைப்படம் இது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 4-ம் தேதி துவங்குகிறது.

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம் சம்பந்தமான பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் நவம்பர் 4-ல் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா, உதயநிதி ஸ்டாலின்..?! https://touringtalkies.co/director-bala-next-movie-news/ Thu, 29 Oct 2020 06:28:37 +0000 https://touringtalkies.co/?p=9406 “இயக்குநர் பாலா என்றொருவர் இருந்தாரே.. அவர் இப்போது என்ன செய்கிறார்..?” என்ற கேள்வி பல பத்திரிகையாளர்களிடத்தில் சினிமா ரசிகர்களால் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாலா கடைசியாக இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் சமீபத்தில்தான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியதால் பாலாவுக்கும், விக்ரமுக்குமான பல வருட நட்பு சட்டென்று முறிந்தது. தன்னால் வளர்ந்த விக்ரம், தயாரிப்பாளருடன் சேர்ந்து தன்னைப் புறக்கணித்ததை பாலாவால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த தனது அடுத்த ஸ்கிரிப்ட்டை தூக்கியெறிந்த […]

The post பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா, உதயநிதி ஸ்டாலின்..?! appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் பாலா என்றொருவர் இருந்தாரே.. அவர் இப்போது என்ன செய்கிறார்..?” என்ற கேள்வி பல பத்திரிகையாளர்களிடத்தில் சினிமா ரசிகர்களால் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாலா கடைசியாக இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் சமீபத்தில்தான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியதால் பாலாவுக்கும், விக்ரமுக்குமான பல வருட நட்பு சட்டென்று முறிந்தது. தன்னால் வளர்ந்த விக்ரம், தயாரிப்பாளருடன் சேர்ந்து தன்னைப் புறக்கணித்ததை பாலாவால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

இதையடுத்து விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த தனது அடுத்த ஸ்கிரிப்ட்டை தூக்கியெறிந்த பாலா.. வேறொரு கதையை தற்போது தயார் செய்துவிட்டாராம். நடிகர்கள் தலையசைத்துவிட்டால் ஷூட்டிங்கிற்குப் போகலாம் என்று நினைக்கிறார்.

ஆனால் நடிகர்கள்..?

தற்போதைக்கு தன்னை குருவாக நினைத்து மரியாதை காட்டும் அதர்வாவிடம் இது பற்றிப் பேசியிருக்கிறாராம் பாலா. கூடவே படத்தில் உதயநிதி ஸ்டாலினும் இருக்கப் போகிறார் என்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் வேடத்திற்கு முன்பு ஆர்யா மற்றும் சூர்யாவிடம் பேசிப் பார்த்தார்களாம். அவர்கள் மறுத்துவிடவே உதயநிதியிடம் சான்ஸ் போயிருக்கிறது.

பாலாவின் திரைப்படம் என்றால் படம் முடியவே ஒரு வருடத்திற்கு மேலாகும்.. கெட்டப்பை மாற்றவே முடியாது என்பதால் கைவசம் இருக்கும் படங்களையெல்லாம் முடித்துவிட்டு வருவதாக அதர்வா சொல்லியிருப்பதாகத் தகவல். இந்தப் படத்தை நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கப் போவதாகவும் கூடுதல் தகவல்.

எப்படி, எந்த ரூபத்தில், எந்தக் கோலத்தில் வந்தாலும் பாலாவின் ரசிகர்கள் அவரை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

The post பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா, உதயநிதி ஸ்டாலின்..?! appeared first on Touring Talkies.

]]>