Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor kamalhasan – Touring Talkies https://touringtalkies.co Tue, 16 Mar 2021 07:32:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor kamalhasan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ஆளவந்தான்’ படம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே சொன்ன கலைஞர்..! https://touringtalkies.co/kalaingar-karunanidhi-told-aalavandham-movie-will-failture-on-before-the-movie-starts/ Tue, 16 Mar 2021 07:30:52 +0000 https://touringtalkies.co/?p=13629 தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் தொடக்க விழாவுக்கு 53 லட்சம் ரூபாய் செலவானது என்றால் அது ‘ஆளவந்தான்’ படத்திற்காகத்தான். நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமான செலவில் நடைபெற்றது தமிழ்த் திரையுலகத்தையே பிரமிக்க வைத்தது. ஆனால் மிகப் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் அந்த அளவுக்கு ஓடாததால் தயாரிப்பாளரான தாணுவுக்கு மிகப் பெரிய பொருளாதாரா நஷ்டத்தைத்தான் கொடுத்தது. கூடவே இந்தப் படத்தின்போது ஏற்பட்ட […]

The post ‘ஆளவந்தான்’ படம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே சொன்ன கலைஞர்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் தொடக்க விழாவுக்கு 53 லட்சம் ரூபாய் செலவானது என்றால் அது ஆளவந்தான்’ படத்திற்காகத்தான்.

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமான செலவில் நடைபெற்றது தமிழ்த் திரையுலகத்தையே பிரமிக்க வைத்தது.

ஆனால் மிகப் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் அந்த அளவுக்கு ஓடாததால் தயாரிப்பாளரான தாணுவுக்கு மிகப் பெரிய பொருளாதாரா நஷ்டத்தைத்தான் கொடுத்தது.

கூடவே இந்தப் படத்தின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தயாரிப்பாளர் தாணு, இப்போதுவரையிலும் கமல்ஹாசனுடன் பேசுவதே இல்லை என்பதும் இன்னொரு சோகமான விஷயம்.

ஆனால், இந்தப் படம் நிச்சயமாகத் தோல்வியடையும் என்று படத்தின் துவக்க விழாவுக்கு முன்பேயே ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் மு.கருணாநிதிதான்.

இது பற்றி தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் தயாரிப்பாளர் தாணு இது பற்றிச் சொல்லும்போது, “ஆளவந்தான்’ படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை எடுத்துக் கொண்டு கலைஞரிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக, அவரது ஆலிவர் ரோடு இல்லத்துக்குப் போனேன்.

மாடிப் படியில் இறங்கிக் கொண்டே பத்திரிகையை இரண்டு முறை திருப்பிப் பார்த்த கலைஞர், ‘`என்னய்யா, வில்லனா நடிக்கிறாராய்யா?’’ என்றார். ‘`ஒரு கேரக்டர் அண்ணன்; நல்லவன், இன்னொரு கேரக்டர் தம்பி; கெட்டவன் தலைவரே’’ எனச் சொன்னேன். ‘`படம் ஓடாதுய்யா’’ என்றார் கலைஞர். ‘`என்ன தலைவரே இப்படிச் சொல்றீங்க?’’ என்றேன்.

பக்கத்தில் இருந்த ராஜாத்தி அம்மாவும், ‘`தம்பி முதன்முதல்ல வந்து பத்திரிகையைக் கொடுக்குது. வாழ்த்து சொல்லாம இப்படிச் சொல்றீங்களே… இது என்ன நியாயம்..?’’ என்றார். ‘`அட, நான் உண்மையைச் சொல்றேன்மா. ‘நீரும் நெருப்பும்’னு ஒரு படம். எம்.ஜி.ஆர் வில்லனா நடிச்சாரு. படம் ஓடுச்சா…? எப்பவுமே ஒரு ஹீரோவா இருக்கிறவன் வில்லனா நடிக்கக் கூடாதும்மா’’ என்று ராஜாத்தி அம்மாளைப் பார்த்துச் சொன்னவர், என்னிடம் திரும்பி, ‘`நான் எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்யா… ஆனா, அதை மீறி படம் நல்லா வரட்டும்யா..’’ என்று சொல்லி என்னை வாழ்த்தி அனுப்பினார்…” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

The post ‘ஆளவந்தான்’ படம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே சொன்ன கலைஞர்..! appeared first on Touring Talkies.

]]>
“நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி https://touringtalkies.co/i-would-have-stepped-on-you-in-acting-radhakrishnan-challenged-kamal-haasan/ Sat, 20 Feb 2021 07:38:28 +0000 https://touringtalkies.co/?p=13208 நடிகர் ராதாரவிக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் இருக்கும் கோபதாபங்கள் கோடம்பாக்கம் அறிந்ததுதான். இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “கமல்தான் என்னை கே.பாலசந்தரிடம் சொல்லி ‘மன்மத லீலை’ படத்தில் அறிமுகம் செய்ய வைத்தார். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அப்போதெல்லாம் நானும் அவரும், ‘வாடா’.. ‘போடா’.. என்று பேசக் கூடிய அளவுக்கு நண்பர்களாகத்தான் இருந்தோம். இந்த நடிகர் சங்கப் […]

The post “நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ராதாரவிக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையில் இருக்கும் கோபதாபங்கள் கோடம்பாக்கம் அறிந்ததுதான்.

இந்தப் பிரச்சினை எதனால் எழுந்தது என்பது குறித்து நடிகர் ராதாரவி சமீபத்திய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “கமல்தான் என்னை கே.பாலசந்தரிடம் சொல்லி ‘மன்மத லீலை’ படத்தில் அறிமுகம் செய்ய வைத்தார். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அப்போதெல்லாம் நானும் அவரும், ‘வாடா’.. ‘போடா’.. என்று பேசக் கூடிய அளவுக்கு நண்பர்களாகத்தான் இருந்தோம்.

இந்த நடிகர் சங்கப் பிரச்சினையின்போதுதான் எனக்கும் அவருக்கும் இடையில் மனத்தாங்கல் ஏற்பட்டது. ஒரு விழா மேடையில் அவர் பேசும்போது, மேடையில் இருந்து அத்தனை பேரையும் அவர்கள் வகிக்கும் பதவியைச் சொல்லி அழைத்தார். ‘இயக்குநர்கள் சங்கத் தலைவர் அவர்களே’.. ‘பெப்சியின் தலைவர் அவர்களே’.. என்றெல்லாம் அழைத்துப் பேசியவர், என்னை மட்டும் ‘ராதாரவி அவர்களே’ என்று மட்டும் சொல்லி அழைத்தார்.

இதைக் கேட்டபோது எனக்குள் சுருக்கென்றானது. கோபம் வந்தது. அதே மேடையில் நான் பேசும்போது ‘சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே’.. ‘சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களே’ என்றெல்லாம் இருக்கிற நடிகர்களையெல்லாம் அவர்களுடைய பட்டப் பெயர் சொல்லி அழைத்துவிட்டு கமல்ஹாசனை மட்டும் ‘கமல்ஹாசன் அவர்களே’ என்று மட்டும் குறிப்பிட்டேன்.

அந்த விழா முடிந்து கீழே இறங்கும்போது கமல் என் கையைப் பிடித்து இழுத்து ‘மத்தவனெல்லாம் சூப்பர் ஸ்டாரு.. நான் மட்டும் கமல்ஹாசனா..?’ என்று கேட்டார். ‘அப்போ மத்தவனெல்லாம் சங்கத் தலைவருங்க.. நான் மட்டும் சாதாரண ராதாரவியா..?’ என்று கேட்டேன். ‘நான் உன் பிரெண்ட்டுடா’ என்றார். ‘அதுனாலதான் நானும் சாதாரணமா கூப்பிட்டேன்’ என்று சொல்லிவிட்டேன்.

இதற்குப் பிறகு கமலுடன் நான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கைக் குறைந்து, கடைசியாக நடிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. கமல்ஹாசனின் படங்களில் நாசர் நடித்த கேரக்டர்களில் நான்தான் நடித்திருக்க வேண்டும். ஆனால், கமலுடன் ஏற்பட்ட இந்தப் பிரச்சினைகளினால்தான் அவர் என்னை அழைத்து வாய்ப்புக் கொடுக்கவில்லை.

இதன் பிறகு ரோட்டரி கிளப் சார்பா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ‘சிவாஜி’ ராம்குமாரின் அழைப்பின்பேரில் நாங்களெல்லாம் மதுரைக்கு ரயிலில் சென்றோம். எங்களுடன் கமலும் வந்தார்.

அப்போது நானும் கமலும் மட்டும் கொஞ்ச நேரம் தனியா பேசினோம். அப்போது, “ஏன்.. ஒய்.ஜி.மகேந்திரனை இப்பல்லாம் கூப்பிடுறதே இல்லை. அவர் நல்ல நடிகர்ய்யா.. அவரைக் கூப்பிட்டு நடிக்க வைய்யா…” என்று கேட்டுக் கொண்டேன். அப்போது “என்னைய மட்டும் உன்கூட நடிக்க வைச்சுப் பாரு.. உன்னை ஏறி மிதிச்சிருவேன்…” என்று கமலிடம் அப்போதே சவால்கூட விட்டேன்.

ரஜினிதான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கொடுத்திருக்கார். கமல் கொடுக்கலை. ஆனாலும், கமலின் புகைப்படங்கள்தான் என் வீட்டில் அதிகமாக இருக்கும்.

கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர். சிவாஜிக்குப் பிறகு நான் பெரிதும் மதிக்கும் நடிகர்ன்னா அது கமல்தான். ஆனால் கமல் மட்டுமே தமிழ் சினிமாவுக்கு அத்தாரிட்டி கிடையாது. அவர் மட்டுமே தமிழ் சினிமாவுக்கான டிக்சனரி கிடையாது.. தமிழ்ச் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் அவ்வளவுதான்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

The post “நடிப்பில் உன்னை ஏறி மிதிச்சிருவேன்..” – கமல்ஹாசனிடம் சவால் விட்ட ராதாரவி appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு- 22 பாலுமகேந்திராவிற்கு கமல்ஹாசன் செய்த உதவி https://touringtalkies.co/kamalhasan-was-help-to-balu-mahendra-by-director-chance/ Fri, 23 Oct 2020 15:49:17 +0000 https://touringtalkies.co/?p=9169 சிறந்த ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த இயக்கத்திற்காகவும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள பாலு மகேந்திரா, “எனது நாற்பதாண்டு கால சினிமா பயணத்தில் நான் நினைத்த மாதிரி மூன்று படங்களைத்தான் என்னால் உருவாக்க முடிந்தது…” என்று சொல்லியிருக்கிறார். “விருதுகளைப் பொருத்தவரைக்கும் கலைஞர்களுக்கு அவைகள் ஒரு அங்கீகாரம். அவ்வளவுதான். அதனால்தான் அந்த விருதுகள் குறித்து நான் என்றும் கவலைப்படுவதில்லை. என்னுடைய ‘ஜுலி கணபதி’ திரைப்படம் விருதுக்கு அனுப்பப்படவே இல்லை. அது குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை” என்று கூறி இருக்கிறார் அவர்.                                 ஆரம்ப […]

The post சினிமா வரலாறு- 22 பாலுமகேந்திராவிற்கு கமல்ஹாசன் செய்த உதவி appeared first on Touring Talkies.

]]>

சிறந்த ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த இயக்கத்திற்காகவும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள பாலு மகேந்திரா, “எனது நாற்பதாண்டு கால சினிமா பயணத்தில் நான் நினைத்த மாதிரி மூன்று படங்களைத்தான் என்னால் உருவாக்க முடிந்தது…” என்று சொல்லியிருக்கிறார்.

“விருதுகளைப் பொருத்தவரைக்கும் கலைஞர்களுக்கு அவைகள் ஒரு அங்கீகாரம். அவ்வளவுதான். அதனால்தான் அந்த விருதுகள் குறித்து நான் என்றும் கவலைப்படுவதில்லை. என்னுடைய ‘ஜுலி கணபதி’ திரைப்படம் விருதுக்கு அனுப்பப்படவே இல்லை. அது குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை” என்று கூறி இருக்கிறார் அவர்.                                

ஆரம்ப காலம் முதலே தனது கதைகளுக்கான நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரே தவிர நடிகர்களுக்காக பாலு மகேந்திரா கதை எழுதியதே இல்லை.

அதே போன்று தமிழ்ப் படங்களில் இடம் பெறும் பாடல் காட்சிகளிலும் எப்போதும் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. “எந்த ஊரிலாவது நமது படங்களில் வருவதுபோல காதலர்கள் ஒரே மாதிரி ஸ்டெப் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்களா…? அவர்கள் போதாதென்று ஒரே மாதிரி உடையணிந்த முப்பது, நாற்பது பெண்கள் வேறு கூடவே ஆடுவார்கள்..” என்று தமிழ்ப் படப் பாடல் காட்சிகள் குறித்து விமர்சனம் செய்துள்ள பாலு மகேந்திரா கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆரம்பித்து சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சிகளைத் தொடரும் அபத்தத்தில் தனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை என்று பல முறை தெரிவித்திருக்கிறார்.

பாலுமகேந்திராவுக்கு மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவருமே பிடித்தமான நடிகர்கள். மம்முட்டியுடன் ‘யாத்ரா’ படத்தில் பணியாற்றிய அவர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தைகூட நடந்தது. ஆனால் அது கை கூடவில்லை.

தமிழ் நடிகர்களில் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். ‘ஒரு அனாயாசமான கலைஞன்’ என்று கமலைக் குறிப்பிடும் பாலு மகேந்திராவிற்கு மிக நெருக்கடியான ஒரு நேரத்தில் கமல் கை கொடுத்தார்.

‘மறுபடியும்’ படம் முடிந்தவுடன் உச்சக்கட்ட பண நெருக்கடியில் இருந்தார் பாலு மகேந்திரா. பலரிடம் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. இறுதியாக கமலிடம் கேட்கலாம் என்று அவரைத் தேடிப் போனார்.

உலக சினிமா தொடங்கி எல்லா விஷயங்களையும் பேசிய கமல்ஹாசனிடம் தான் அவரைப் பார்க்க வந்தது எதற்காக என்ற விஷயத்தை பாலு மகேந்திராவால் சொல்ல முடியவில்லை. தனது பிரச்னை பற்றி கமல்ஹாசனிடம் பேச வாய்ப்பே கிடைக்காத நிலையில் பெரும் ஏமாற்றத்துடன் பாலுமகேந்திரா கிளம்பியபோது “ஒரு நிமிடம் இருங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளே சென்ற கமல்ஹாசன் திரும்பியபோது அவரது கையில் ஒரு பெரிய கவர் இருந்தது. கமல்ஹாசனிடம் பாலு மகேந்திரா கேட்க நினைத்த தொகையைவிட பல மடங்கு அதிகமான தொகையை அவரிடம் தந்த கமல்ஹாசன் “எனது ராஜ்கமல் நிறுவனத்துக்கு நீங்க ஒரு படம் பண்ணித் தரணும். அதுக்கான முன் பணம்தான் இது…” என்று சொன்னார். அப்படி உருவான திரைப்படம்தான் ‘சதி லீலாவதி’.

“உதவி பெறுகிறோம் என்ற எண்ணம் எனக்குள் வராதபடி மிகவும் கவுரமாக என்னை கமல் நடத்தினார்” என்று அந்த நிகழ்வைப் பற்றி மிகுந்த நெகிழ்ச்சியுடன் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.

இளையராஜாவையும், அவரது இசையையும் மிகவும் நேசிக்கும் பாலு மகேந்திரா, அவரைத் தவிர வேறு யாரையும் எனது படத்தில் பயன்படுத்த மாட்டேன் என்று சூளுரைத்தவர்.

“மணிரத்னம், பாலசந்தர் எல்லாம் இளையராஜாவைவிட்டு ரஹ்மானுக்கு மாறிய பிறகும் நீங்கள் மட்டும் ஏன் மாறவில்லை… ரஹ்மானின் இசையில் உங்களுக்கு உடன்பாடில்லையா…?” என்ற கேள்விக்கு பாலுமகேந்திரா சொன்ன பதில் முக்கியமானது.

“எனக்கு இளையராஜாவை இப்போதும் பிடிக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனை இப்போதும் பிடிக்கிறது. அதேபோல்தான் சலீல் சௌத்ரி. எனக்கு இது போதும்…” என்று பதிலளித்திருந்தார் அவர்.

ரஹ்மானைப் பற்றிய கேள்விக்கு அப்படி பதில் சொன்ன பாலு மகேந்திராதான்  ‘ரோஜா’ திரைப்படத்தில் ரகுமானுக்கு தேசிய விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் என்பது மிகச் சிலரே அறிந்த ஒரு செய்தி.

தேசிய விருதுக்கான போட்டியில் ‘ரோஜா’ படம் கலந்து கொண்டபோது அந்தத் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் பாலுமகேந்திரா. அந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் இரண்டு பேர் சமமாக ஓட்டு வாங்கினார்கள். ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

தேர்வுக் குழுவின் தலைவர் என்ற முறையில் பாலுமகேந்திராவுக்கு இரண்டு ஓட்டுகள். இருவரும் சம ஓட்டு வாங்கிய நிலையில் பாலுமகேந்திரா யாருக்கு ஓட்டளிக்கிறாரோ அவருக்குத்தான் தேசிய விருது கிடைக்கும்.

“இரண்டுமே சிறந்த இசை. ஆனால், நான் யாருக்கு ஓட்டளிப்பது..? இளையராஜா ஒரு லெஜென்ட். அவருக்கு சரிசமமாக வந்து நிற்கிறான் ஒரு 22 வயது பையன். அவன் இனி எவ்வளவோ விருது வாங்கலாம். ஆஸ்கர்கூட வாங்கலாம். ஆனால் முதல் படத்துக்கு கிடைக்கிற அங்கீகாரம் தனியானது அல்லவா…? ஆகவே, நான் ரஹ்மானுக்கு ஓட்டளித்தேன்.

சென்னை வந்ததும் அதனை இளையராஜாவிடம் சொன்னேன்… அவர் எனது கையைப் பற்றி குலுக்கியபடி ’சரியாக செய்தீங்க’ என்று என்னைப் பாராட்டினார்…” என்று அந்தச்  சம்பவம் பற்றி கூறியிருக்கிறார் பாலு மகேந்திரா.

பாலுமகேந்திராவின் சீடர்களான பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் ஆகிய பலரும் தமிழ்ப் பட உலகம் பெருமைப்படுகின்ற அளவிலே பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள். இதில் பாலு மகேந்திராவின் முக்கியமான சீடரான பாலாவிற்கும், அவருக்கும் இருந்த உறவு மிக வித்தியாசமான உறவு. 

பாலாவை பாலுமகேந்திராவிடம் சேர்த்துவிட்டவர் கவிஞர் அறிவுமதி. அப்போது அறிவுமதியும் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தினமும் தன்னோடு பாலாவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் செல்வார் அறிவுமதி. படப்பிடிப்பிற்கு போனவுடன் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார் பாலா.

இப்படியே மாதங்கள் பல கடந்ததற்குப் பின், ஒரு நாள் பாலு மகேந்திராவின் வீட்டுக்கு பாலாவை நேரடியாக அழைத்துச் சென்ற அறிவுமதி, “இவனை உங்ககிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கணும்” என்று சொன்னபோது அவரை ஏற இறங்க பார்த்த பாலுமகேந்திரா “இதுக்கு முன்னாடி யாருகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தே..?” என்று கேட்க, பாலா சொன்ன பதில்தான் நகைச்சுவையின் உச்சம். “உங்ககிட்டதான்…!” என்று பதிலளித்தார் பாலா.

பாலு மகேந்திராவுக்கே தெரியாமல் ஐந்து படங்கள் அவரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்த பாலாவை பின்னர் படிப்படியாக, படம் படமாக வளர்த்து இணை இயக்குநர் ஆக்கினார் அவர்.

தனது வாழ்நாளில் ஒரு எஸ்டேட் வாங்க வேண்டும் என்றோ… ஒரு பென்ஸ் கார் வாங்கிவிட வேண்டும் என்றோ… வங்கிக் கணக்கில் இரண்டு மூன்று கோடிகளை சேர்த்துவிட வேண்டும் என்றோ பாலு மகேந்திரா ஆசைப்பட்டதில்லை. தனது எண்ணத்தில் இருந்த இரண்டு மூன்று கதைகளை படமாக்கிவிட வேண்டும் என்று மட்டுமே அவர் ஆசைப்பட்டார்.

“நாம் இரானியப் படங்களையும், கொரிய, ஜப்பானியப் படங்களையும் பார்த்து வாய் திறந்து வியப்பதைப் போல, இரானியர்களும், கொரியர்களும், ஜப்பானியர்களும் வியந்து பார்க்கின்ற அளவில் தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்” என்று அவர் பெரிதும் விரும்பினர்.

வட இந்தியாவில் பால்கே விருது வழங்குவது போல் தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவின் பிதாமகன் நடராஜ முதலியார் பெயரில் விருது வழங்கப்பட  வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

பழைய சினிமா படங்களைப் பாதுகாக்கவும் பல அரிய படங்களின் இழப்பை தவிர்க்கவும் ஒரு ஆவண  காப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.

அந்த அவரது ஆசைகள் நிறைவேறும் முன்னரே இயற்கை, ஈவு இரக்கமின்றி அந்த இணையில்லாத கலைஞனை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது .

The post சினிமா வரலாறு- 22 பாலுமகேந்திராவிற்கு கமல்ஹாசன் செய்த உதவி appeared first on Touring Talkies.

]]>
அக்‌ஷரா ஹாசனின் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டிரெய்லரை ‘உலக நாயகன்’ கமலஹாசன் வெளியிட்டார்..! https://touringtalkies.co/acham-madam-naanam-payierppu-movie-news/ Thu, 15 Oct 2020 05:30:50 +0000 https://touringtalkies.co/?p=8815 தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட படக் குழு அக்ச‌ரா ஹாசன் நடிக்கும் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படக் குழுதான். இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்க,  பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார்.  பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப் படக் குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ், கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் […]

The post அக்‌ஷரா ஹாசனின் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டிரெய்லரை ‘உலக நாயகன்’ கமலஹாசன் வெளியிட்டார்..! appeared first on Touring Talkies.

]]>

தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட படக் குழு அக்ச‌ரா ஹாசன் நடிக்கும் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படக் குழுதான்.

இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்க,  பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். 

பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப் படக் குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ், கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஷ்ரேயா தேவ் துபே, இசை – சுஷா, படத் தொகுப்பு – கீர்த்தனா முரளி, புரொடக்‌ஷன் டிசைன் – ஷஹானு முரளிதரன், உடை வடிவமைப்பு – தீமிஸ் வனேஷா, ஒலி வடிவமைப்பு – S.அழகியகூத்தன் & சுரேன்.G, விளம்பர வடிவமைப்பு – கபிலன், லைன் புரொடியூசர் – கிரன் கேஷவ்,  க்ரியேட்டிவ் புரொடியூசர் – வித்யா சுகுமாரன், பாடல்கள் – மதன் கார்க்கி.

முன்னதாக விஜய் சேதுபதி இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் டீஸரை வெளியிட்டு அசத்தினார். இதனால் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படக் குழுவினர்.

மேலும், தற்போதைய அடுத்த  நிகழ்வால் படக் குழு பேரின்ப நிலையை அடைந்திருக்கிறது. ட்ரெண்ட் லவுட்(Trend Loud) நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படத்தின் டிரெய்லரை அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில் ‘உலக நாயகன்’ கமலஹாசன் வெளியிட்டது படக் குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து பேசும்போது, “எனது வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம் இதுதான். இதைவிட வாழ்வில் வேறென்ன பெரிய ஆசிர்வாதம் வேண்டும்..? இந்திய சினிமாவின் மிகப் பெரும் ஆளுமையான உலக நாயகன் கமலஹாசன், எங்களின் கோரிக்கையை ஏற்று டிரெய்லரை வெளியிட்டது,

எங்கள் மொத்தக் குழுவையும் பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், ஒரு சிறப்பாக அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில் டிரெய்லர் வெளியானது இன்னும் சந்தோஷம் தரும் நிகழ்வாகும். ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’  படக் குழு கொண்டாட்டத்தில் ஈடுபட மேலும் ஒரு காரணமும் இப்போது சேர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் நடைபெறும் மதிப்புமிக்க இந்திய  திரைப்பட விழாவான Caleidoscope Indian Film Festival Boston-க்கு ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நல்ல விமர்சனங்களை பெற்ற ‘கேடி’ படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே தமிழ்  திரைப்படம்  ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் பாஸ்டன் (Boston) நகர திரையரங்குகளில் நவம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை திரையிடப்படுகிறது.

டிரெயலர் மற்றும் டீஸர் இரண்டும் ஒரே கதையின் சிறு, சிறு பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெய்லரை பார்ப்பவர்கள் மீண்டும் டீஸரை ஒரு முறை கண்டிப்பாக  பார்ப்பார்கள்.

டிரெய்லரின் முக்கிய நோக்கம், பவித்ரா கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை ரசிகர்களை யூகிக்க தூண்டுவதே ஆகும். பவித்ராவின் உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இந்த டிரெய்லர். பவித்ரா உலகம் எத்தகையது,

அவளை சுற்றிய உறவுகள், பாத்திரங்கள் ஆகியவற்றை உணரச் செய்வதாக டிரெய்லர் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் அனைத்து பெண்களும் தன்னுள் சிறிதளவேனும் பவித்ராவை உணர்வார்கள்.

இது ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ முக்கிய சிறப்பம்சமாக, படத்தை பார்க்க முக்கிய காரணியாக இருக்கும்…” என்றார்.

The post அக்‌ஷரா ஹாசனின் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டிரெய்லரை ‘உலக நாயகன்’ கமலஹாசன் வெளியிட்டார்..! appeared first on Touring Talkies.

]]>