Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
2000 movie – Touring Talkies https://touringtalkies.co Fri, 24 Sep 2021 07:34:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png 2000 movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 “நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு https://touringtalkies.co/actor-vijay-is-afraid-to-speak-out-against-the-central-government-producer-k-rajan-attacked/ Fri, 24 Sep 2021 07:32:51 +0000 https://touringtalkies.co/?p=18231 இயக்குநர் ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால்  சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான். ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பாக சிறிய விமர்சனத்தை […]

The post “நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று நடைபெற்றது.

புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால்  சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான். ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன் வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள்.

நெய்வேலியில்  படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்தப் படத்திற்கு பிறகு  மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை…விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம்.

நீதிமன்றக் காட்சியில் அம்பேத்கர் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தணிக்கைக் குழு கூறியதாக இயக்குநர் கூறினார். திருமாவளவன், சீமான், வேல்முருகனிடம் இது பற்றி கூறி போராட்டம் நடத்த வேண்டும். திரைப்படங்களில் தவறான வார்த்தைகளையே அனுமதிப்பவர்கள் அம்பேத்கர் படத்தையும், திருக்குறளையும் படத்தில் காட்டக் கூடாது.. சொல்லக் கூடாது என்று கூறுவது சரியா..?

பா.ஜ.க. திரைத்துறையினருக்கு எதிராக சட்டங்களை திருத்தி அக்கிரமம் செய்து வருகிறது. காயத்ரி ரகுராம் போல தெருவில் திரிந்த பலருக்கு சினிமாக்காரர்கள் என்பதாலேயே பாஜகவில்  பொறுப்பு தந்தார்கள். அது இப்போது வள்.. வள்… என குரைக்கிறது…” என்று காரமாகவே பேசினார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

The post “நடிகர் விஜய் மத்திய அரசை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்” – தயாரிப்பாளர் கே.ராஜன் தாக்கு appeared first on Touring Talkies.

]]>
‘2000’ என்ற படத்திற்கு சென்சாரில் 105 வெட்டுக்கள்..! https://touringtalkies.co/105-cuts-in-sensor-for-2000movie/ Sun, 01 Aug 2021 07:57:47 +0000 https://touringtalkies.co/?p=16656 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் […]

The post ‘2000’ என்ற படத்திற்கு சென்சாரில் 105 வெட்டுக்கள்..! appeared first on Touring Talkies.

]]>
1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று இரவில் மத்திய அரசு அறிவித்தது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.

தயாரிப்பாளர் கோ.பச்சியப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ருத்ரன் பராசு நாயகனாகவும் சர்னிகா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் ‘கராத்தே’ வெங்கடேசன், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் இந்திய ஒன்றிய அரசை நேரடியாக விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர்.

இதனால் இத்திரைப்படம் மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. நடிகை கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் இப்படத்தை பார்த்துவிட்டு, 105 இடங்களில் காட்சிகளை நீக்கும்படி தெரிவித்தனர்.

இதன் பின்பு வெட்டுகள் கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் ஆதாரங்களும், ஆவணங்களும் கொடுக்கப்பட்டதால், நீக்கப்பட வேண்டியவை 24 காட்சிகளாகக் குறைக்கப்பட்டன.

இதையடுத்து இத்திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

The post ‘2000’ என்ற படத்திற்கு சென்சாரில் 105 வெட்டுக்கள்..! appeared first on Touring Talkies.

]]>