Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
100 crore – Touring Talkies https://touringtalkies.co Mon, 10 Apr 2023 03:15:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png 100 crore – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ https://touringtalkies.co/rrr-collected-rs-100-crore-in-japan/ Sun, 09 Apr 2023 03:14:32 +0000 https://touringtalkies.co/?p=31407 ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது, சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் ஆர்.ஆர்.ஆர் படம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் ஆர்.ஆர்.ஆர் […]

The post ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ appeared first on Touring Talkies.

]]>
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது, சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் ஆர்.ஆர்.ஆர் படம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்து வந்தது.

ஜப்பானில் மட்டும் ஆர்.ஆர்.ஆர் படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற பிறகு ஜப்பானில் இன்னும் அதிகமானோர் ஆர்.ஆர்.ஆர் படத்தை காண ஆர்வம் காட்டுவதால் அதிக தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்

The post ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் பேட்ட வில்லன் ரூ.100 கோடி கேட்டு  வழக்கு! https://touringtalkies.co/actor-sues-ex-wife-brother-for-rs-100-crore-compensation/ Tue, 28 Mar 2023 14:10:17 +0000 https://touringtalkies.co/?p=31077 பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னையும், குழந்தைகளையும் வீட்டுக்குள் விட நவாசுதீன் சித்திக் மறுப்பதாக அவரது முன்னாள் மனைவி ஆலியா சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.  இந்தநிலையில் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நவாசுதீன் சித்திக் முன்னாள் மனைவி ஆலியா மற்றும் தனது தம்பி சமாசுதீன் சித்திக் மீது மும்பை […]

The post ரஜினியின் பேட்ட வில்லன் ரூ.100 கோடி கேட்டு  வழக்கு! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் தன்னையும், குழந்தைகளையும் வீட்டுக்குள் விட நவாசுதீன் சித்திக் மறுப்பதாக அவரது முன்னாள் மனைவி ஆலியா சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.  இந்தநிலையில் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நவாசுதீன் சித்திக் முன்னாள் மனைவி ஆலியா மற்றும் தனது தம்பி சமாசுதீன் சித்திக் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தன்னை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூற ஆலியா மற்றும் சமாசுதீன் சித்திக்கிற்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் எனவும், எழுத்துப்பூர்வமாக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நவாசுதீன் சித்திக் மனுவில் கூறியுள்ளார்.

மேலும் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமாசுதீன் சித்திக்கை 2008-ம் ஆண்டு எனது மேலாளராக நியமித்தேன். அவரை நம்பி பணப்பரிவர்த்தனை பொறுப்புகளையும் ஒப்படைத்தேன். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அவர் என்னிடம் மோசடியில் ஈடுபட்டு, அந்த பணம் மூலம் சொத்துக்களை வாங்கினார். இது தெரியவந்தவுடன் நான் அவரிடம் கேட்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் எனது முன்னாள் மனைவி ஆலியாவை எனக்கு எதிராக புகார் அளிக்க தூண்டினார். ஆலியா மற்றும் சமாசுதீன் சித்திக் என்னிடம் இருந்து ரூ.21 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதை திருப்பி கேட்டதால் அவர்கள் என்னை பற்றி மலிவான வீடியோக்கள், கருத்துகளை சமூகவலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்” –  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை வருகிற 30-ந் தேதி நீதிபதி ரியாஸ் சாக்லா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.

The post ரஜினியின் பேட்ட வில்லன் ரூ.100 கோடி கேட்டு  வழக்கு! appeared first on Touring Talkies.

]]>