Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஸ – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Dec 2022 19:02:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஸ – Touring Talkies https://touringtalkies.co 32 32 அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் https://touringtalkies.co/rugget-boy-kaathal-music-album-news/ Mon, 12 Dec 2022 19:01:37 +0000 https://touringtalkies.co/?p=28483 ‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் […]

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளது.

இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘தரணி’, ‘அனுக்கிரகன்’, ‘கடப்புறா கலைக் குழு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கட்டம் போட்ட சட்டை’ என்கிற படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஸ்மிருதி வெங்கட். இவர் ‘மூக்குத்தி அம்மன்’, ‘வானம்’, ‘தீர்ப்புகள் விற்கப்படும்’, ‘மாறன்’, ‘மன்மத லீலை’, ‘தேஜாவு’ போன்ற படங்களில் நடித்திருப்பவர்.

இசை அமைத்திருப்பவர் டி.எம்.உதயகுமார். இவர் ‘பிரண்ட்ஷிப்’, ‘மை டியர் லிசா’ ஆகிய படங்களில் பணிபுரிந்தவர். அது மட்டுமல்ல குழலி’, ‘கார்முகில்’ போன்ற மியூசிக் ஆல்பங்களுக்கு இசையமைத்தவர்.

இந்த ஆல்பத்தில் பின்னணிப் பாடல் பாடி இருக்கும் பாடகி பிரியங்கா, ‘அவன் இவன்’, ‘உறியடி-2’, ‘பலூன்’, ‘நாச்சியார்’ போன்ற படங்களில் பாடியுள்ளார்.

இதில் பின்னணிப் பாடி இருக்கும் பாடகரான ஜித்தின் ராஜ் ‘பொன்னியின் செல்வன்’ மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.

ஆல்பத்தின் பாடலை எழுதியவர் ராஜா குருசாமி. இவர் ஏராளமான கிராமியப் பாடல்களை எழுதியுள்ளவர். ‘விழா’, ‘பிரண்ட்ஷிப்’, ‘ராஜ வம்சம்’, ‘பபூன்’ போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளவர்.

இந்த ஆல்பத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளவர் அருண்குமார்.ஆர். இவர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் பணியாற்றியவர்.

இந்த ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளவர் மணி டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரான எம்.மணிகண்டன். இவர் இதில் ஒரு நடன இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கலை இயக்கம் – கென்னடி, படத் தொகுப்பு – கணேஷ் குமார், டைட்டில் டிசைன்ஸ் – பிரபு மாணிக்கம், நிர்வாகத் தயாரிப்பு – சித்தார்த்தன் பாரதி, பத்திரிகை தொடர்பு – சக்தி சரவணன்.

இந்த இசை ஆல்பத்தை இயக்கியுள்ளவர் ஸ்ரீவித்தகன். இவர் இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’, ‘போராளி’, ‘வினோதய சித்தம்’ போன்ற படங்களில் பணிபுரிந்தவர்.

பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு. இது ஒரு கிராமத்துக் காதல் கதை. கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு பதின் பருவக் காதலால் புலி ஒன்று எப்படி பூனையாக மாறுகிறது என்பதுதான் இந்த ஆல்பத்தின் கதைக் கரு.

பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக் கருத்து.

திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த இசை ஆல்பத்தை நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார்.

அதன் பிறகு இந்த ஆல்பத்தின் மீதான கவனிப்பும், பரவலின் வீச்சும் அதிகமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது இந்த மியூஸிக் ஆல்பம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.  ஸ்டார் மியூசிக்கில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

The post அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
விரைவில் திரைக்கு வருகிறது ‘ஒவேலி’ திரைப்படம் https://touringtalkies.co/ooveli-movie-preview-news/ Tue, 22 Nov 2022 18:43:55 +0000 https://touringtalkies.co/?p=27468 கேமரா கண்களில் படாத மழைக் காடுகளை கொண்ட கூடலூர் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு முதன்முறையாக ஓவேலி என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை மேஜிக் கார்பெட் நிறுவனம் சார்பில்  அனிதா சுதர்சனம் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி பிரமோத், கிரீஷ், கிருஷ்ணகுமார், மஞ்சு, சல்மான், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.ஏ.சார்லி இசையமைக்கிறார். ஜி.கிருஷ்ணகுமார்,  அனிதா சுதர்சனம் மற்றும் சுனிதா ஷேர்லி ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளார்.  இளம் ஒளிப்பதிவாளர் நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி […]

The post விரைவில் திரைக்கு வருகிறது ‘ஒவேலி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
கேமரா கண்களில் படாத மழைக் காடுகளை கொண்ட கூடலூர் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு முதன்முறையாக ஓவேலி என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை மேஜிக் கார்பெட் நிறுவனம் சார்பில்  அனிதா சுதர்சனம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ஸ்ருதி பிரமோத், கிரீஷ், கிருஷ்ணகுமார், மஞ்சு, சல்மான், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வி.ஏ.சார்லி இசையமைக்கிறார். ஜி.கிருஷ்ணகுமார்,  அனிதா சுதர்சனம் மற்றும் சுனிதா ஷேர்லி ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளார்.  இளம் ஒளிப்பதிவாளர் நவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி – ஹாரிஸ் IDK,  படத் தொகுப்பு – வீர செந்தில் ராஜ், கலை இயக்கம் – ராகவா கண்ணன், ஒலிக் கலவை – ஆர்.ஜனார்த்தனன், பத்திரிகை தொடர்பு – ஆனந்த். நீலகிரி கூடலூரைச் சேர்ந்த சுல்ஃபி இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையின் முழு அழகையும் ஒருங்கே கொண்ட இடம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது ஓவேலி கிராமம். இந்த ஊரின் பின்னணியில் மண்ணின் மணத்தோடு க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

The post விரைவில் திரைக்கு வருகிறது ‘ஒவேலி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்தியாவின் முதல் ‘ஸ்நூக்கர்’ விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘சஞ்ஜீவன்’ https://touringtalkies.co/sajjeevan-movie-preview-news/ Thu, 29 Sep 2022 15:31:49 +0000 https://touringtalkies.co/?p=24743 மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சஞ்ஜீவன்’. இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத் தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர். கவனித்துள்ளார். நடனப் பயிற்சி இயக்கத்தை சாண்டி மாஸ்டர் கையாள, சண்டை பயிற்சி […]

The post தென்னிந்தியாவின் முதல் ‘ஸ்நூக்கர்’ விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘சஞ்ஜீவன்’ appeared first on Touring Talkies.

]]>
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சஞ்ஜீவன்’.

இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத் தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர். கவனித்துள்ளார். நடனப் பயிற்சி இயக்கத்தை சாண்டி மாஸ்டர் கையாள, சண்டை பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார்.

இப்படம் பற்றி இயக்குநர் மணிசேகர் பேசும்போது, “நான் இயக்குநர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. 

இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்நூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன். ஸ்நூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பண வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று இதுவும் ஒரு விளையாட்டு.

இளைஞர்களை வெகுவாக கவரக் கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மைய்யமாக வைத்துக் கொண்டு அதனை உருவாக்குவார்கள். இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்துவிதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும். 

இப்படத்தில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

படப்பிடிப்பில் முக்கியமான ஒகு காட்சியை படமாக்க மழை தேவைப்பட்டது. அதற்காக செயற்கை மழையை தயார் செய்ய முயற்சி செய்தோம். சில காரணங்களால் அதனை தயார் செய்ய முடியாமல் போனது. சரியாக படப்பிடிப்பு தொடங்க இருந்த சிறிது நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது.

இயக்குநர் பாலுமகேந்திரா சார் எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்து போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா சார் இயக்கிய ‘மூன்றாம் பிறை’ படத்தில் இதேபோன்று ஒரு நிகழ்வு நடந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாக தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள்…” என்றார்.

இந்த ‘சஞ்ஜீவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இப்படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

The post தென்னிந்தியாவின் முதல் ‘ஸ்நூக்கர்’ விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘சஞ்ஜீவன்’ appeared first on Touring Talkies.

]]>